search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆந்திரப்பிரதேசம்"

    ஆந்திரா மாநிலத்தின் ஸ்ரீகாகுளம், விஜயநகரம் மாவட்டங்களில் டிட்லி புயல் தாக்கியதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். முக்கிய நகரங்களை இணைக்கும் சாலைகள் துண்டிக்கப்பட்டு சேதமடைந்துள்ளது. #TitliCyclone
    ஐதராபாத்:

    வங்கக் கடலில் கடந்த திங்கட்கிழமை குறைந்த காற்றழுத்தம் தோன்றியது. நேற்று முன்தினம் அது வலுப்பெற்று புயலாக மாறியது. அந்த புயலுக்கு “டிட்லி” என்று பெயர் சூட்டப்பட்டது. இந்தியில் ‘டிட்லி’ என்றால் “வண்ணத்துப் பூச்சி” என்று அர்த்தமாகும். இந்த ஆண்டு உருவான புயல்களில் டிட்லி புயல்தான் அதிக வலுவான புயல் என்று வானிலை இலாகா அறிவித்தது.

    டிட்லி புயல் அதிதீவிரமாக மாறிய நிலையில் வடக்கு நோக்கி நகர்ந்ததால் தமிழகம் புயல் ஆபத்தில் இருந்து தப்பியது. நேற்று மாலை டிட்லி புயல் ஒடிசாவின் கோபால்பூர் மற்றும் ஆந்திராவின் கலிங்கப்பட்டினம் இடையே வங்கக் கடலில் சுமார் 200 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டிருந்தது.

    டிட்லி புயல் ஆந்திராவின் வடக்கு, ஒடிசாவின் தெற்கு கடலோர மாவட்டங்களை மிக கடுமையாக தாக்கும் என்றும் அப்போது மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்றும் அறிவிக்கப்பட்டது. அந்த புயல் வியாழக்கிழமை (இன்று) அதிகாலை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

    இந்நிலையில், இன்று அதிகாலை 4.30 மணிக்கு டிட்லி புயல் ஒடிசா மற்றும் ஆந்திரா மாநிலங்களுக்கு இடையே கரையை கடந்தது. அப்போது மணிக்கு சுமார் 140 கி.மீ. முதல் 150 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசியது. 

    இதையடுத்து ஆந்திராவின் விசாகப்பட்டினம், விஜயநகரம், ஸ்ரீகாகுளம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் புயல் கரையை கடந்து கொண்டிருந்தபோது அது மேலும் வடக்கு திசை நோக்கி நகர்ந்தது. இதனால் ஒடிசா கடலோர பகுதிகளில் குறிப்பாக கோயில்பூர் பகுதியில் புயல் தாக்கம் ஏற்பட்டது.



    மிக பலத்த மழை காரணமாக ஆந்திராவின் வடக்கு பகுதியிலும் ஒடிசாவின் தென் பகுதியிலும் ஏராளமான இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்து விட்டன. மின் கம்பங்களும் சரிந்து கிடக்கின்றன.

    ஆந்திராவின் ஸ்ரீகாகுளம், விஜயநகரம் ஒடிசாவின் கஞ்சம், பூரி, குந்தா, ஜெகத்சசிங்பூர், கேந்திராபாரா ஆகிய 6 மாவட்டங்களையும் டிட்லி புயல் துவம்சம் செய்துவிட்டது.

    ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மற்றும் விஜயநகரம் மாவட்டங்களில் டிட்லி புயலுக்கு 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நகரங்களை இணைக்கும் முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டன.

    இந்த மாவட்டங்களில் இருந்து சுமார் 3 லட்சம் பேர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    டிட்லி புயலால் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவிகள் மற்றும் மீட்புப் பணிகளை செய்ய தேசிய பேரிடர் மீட்புக்குழுவின் 19 கம்பெனி படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு படகுகளில் சென்று அவர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். #TitliCyclone 
    ஆந்திரப்பிரதேச மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில் தொழிலாளர்கள் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 5 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    கர்னூல் :

    ஆந்திரப்பிரதேச மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. சுமார் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வரும் இந்த குவாரியில், திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. 

    இதில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், படுகாயம் அடைந்த 5 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

    கல்குவாரி வெடிவிபத்தினால் ஏற்பட்ட அதிர்வு காரணமாக சுற்றுவட்டாரத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. 

    அதிக அளவிலான டெட்டனேட்டர்கள் மற்றும் ஜெலட்டின் குச்சிகள் பயன்படுத்தியதே வெடி விபத்திற்கு காரணம் எனவும், விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
    ஆந்திர மாநிலத்தில் இரும்பு ஆலையை அமைத்துத் தரக்கோரி உண்ணாவிரதம் இருந்து வந்த தெலுங்கு தேசம் கட்சி எம்.பி ரமேஷ் உண்ணாவிரதத்தை சந்திரபாபு நாயுடு இன்று முடித்து வைத்தார். #AndhraPradesh #TDP #Ramesh
    ஐதராபாத்:

    ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கானாவை பிரித்தபோது ஆந்திராவுக்கு என சில வாக்குறுதிகளை மத்திய பா.ஜ.க அரசு அறிவித்து இருந்தது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, ஒருங்கிணைக்கப்பட்ட இரும்பு ஆலை போன்ற பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்த நிலையில், எந்த வாக்குறுதியையும் மத்திய அரசு நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது.

    இதையடுத்து, ஆந்திராவுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு மத்திய அரசுக்கு தெலுங்கு தேசம் கட்சி நெருக்கடி கொடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, ஒருங்கிணைந்த இரும்பு ஆலையை அமைத்து தரக்கோரி, தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த எம்.பி ரமேஷ் கடப்பா மாவட்டத்தில் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.

    இதற்கிடையே, அவரது உண்ணாவிரதம் இன்று 11-வது நாளாக நீடித்தது. இதனால் ரமேஷின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக கூறப்பட்டது.

    இந்நிலையில், கடப்பா மாவட்டத்தில் உண்ணாவிரதம் இருந்து வரும் எம்.பி. ரமேஷை ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு இன்று பிறபகல் சந்தித்தார். அவரது வலியுறுத்தலின் பேரில் எம்.பி. ரமேஷ் உண்ணாவிரதத்தை கைவிட்டார். அவருக்கு பழரசம் கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். இதைத்தொடர்ந்து அவருக்கு தேவையான முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.
    #AndhraPradesh #TDP #Ramesh
    ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 4 பொறியியல் மாணவர்களின் உடல்களை மீட்புப்படையினர் மீட்டுள்ளனர்.

    ஐதராபாத்:

    ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் கிருஷ்ணா மாவட்டத்திற்குட்பட்ட காஞ்சிகசர்லா பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று உள்ளது. இந்த கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் ஐந்து மாணவர்கள் நேற்று, அருகில் உள்ள கிருஷ்ணா ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். 

    அப்போது அவர்களில் ஒருவர் ஆற்றில் தவறி விழுந்துள்ளார். இதையடுத்து மற்ற மூன்று பேரும் ஆற்றுல் குதித்து அவரை காப்பாற்ற முயற்சித்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக நான்கு பேரும் நீரில் அடித்து செல்லப்பட்டனர். இதையடுத்து இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த போலீசார் மீட்புப்பணிகளை தொடங்கினர். இந்திய கடற்படையை சேர்ந்த வீரர்களும் இந்த மீட்புப்பணியில் ஈடுபட்டனர். 



    இதையடுத்து இன்று நான்கு பேரின் உடல்களையும் மீட்புப்படையினர் மீட்டனர். உயிரிழந்தவர்கள் கிருஷ்ணா சய்தன்யா ரெட்டி, ஸ்ரீநாத், ராஜ் குமார் பில்லா, பிரவீன் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு வருத்தம் தெரிவித்துள்ளார். 

    இன்ப சுற்றுலா சென்ற இடத்தில் நான்கு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். #BoatCapsize #GodavariRiver
    ஐதராபாத்:

    ஆந்திரப்பிரதேச மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் தேவிபட்டணத்திலிருந்து கொண்டமொதலு நோக்கி நேற்று முன்தினம் மாலை ஒரு படகு சென்று கொண்டிருந்தது. அந்த படகில் ஒரு திருமண வீட்டார் உள்பட 40 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது பலத்த மழையுடன் காற்று வீசியதால் படகு திடீரென ஆற்றில் கவிழ்ந்து விழுந்தது.

    இந்த விபத்தில் படகில் பயணம் செய்த சிலர் நீந்தி கரை திரும்பினர். 15-க்கு மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டனர். முதல் கட்டமாக இந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர் என்றும், 10 பேர் மாயமாகி உள்ளனர் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

    மீட்புப் பணிகளை பார்வையிட்ட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்தார்.

    இந்நிலையில், கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் கார்த்திகேய மிஸ்ரா கூறுகையில், இன்று நடந்த தேடுதல் வேட்டையில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது. இதையடுத்து, ஆற்றில் படகு கவிழ்ந்து பலியானோர் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. இறந்தவர்களில் 4 குழந்தைகள், 11 பெண்களும் அடங்குவர். மேலும் காணாமல் போன ஒருவரை தேடும் பணி நடந்து வருகிறது என்றார். #BoatCapsize #GodavariRiver
    ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளதோடு, 10 பேர் மாயமாகி உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். #BoatCapsize #GodavariRiver #AndhraPradesh

    விஜயவாடா:

    ஆந்திரப்பிரதேச மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் தேவிபட்டணத்திலிருந்து கொண்டமொதலு நோக்கி நேற்று முன்தினம் மாலை ஒரு படகு சென்று கொண்டிருந்தது. அந்த படகில் ஒரு திருமண வீட்டார் உட்பட 40 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. கோதாவரி ஆற்றில் படகு சென்று கொண்டிருந்த போது கடும் மழையுடன் காற்று வீசியுள்ளது. இதனால் படகு ஆற்றில் கவிழ்ந்தது.

    படகில் பயணித்த சிலர் பேர் நீந்தி கரை திரும்பிய நிலையில், பிறரை மீட்கும் பணி துரிதமாக நடந்து வருகின்றன. இதுவரை 17 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளதோடு, 10 பேர் மாயமாகி உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆறு பேரின் உடலை மீட்புப்படையினர் மீட்டனர். அந்த படகை மீட்புப்படையினர் ஆற்றில் இருந்து கிரேன் மூலம் வெளியே எடுத்தனர். அதில் 8 பேரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இன்னும் 10 பேரின் நிலைமை என்னவென்று தெரியவில்லை எனவும், அவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 



    அங்கு மேற்கொள்ளப்பட்டுவரும் மீட்புப்பணிகளை முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று பார்வையிட்டார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். உடனடியாக ரூ.1 லட்சம் வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். #BoatCapsize #GodavariRiver #AndhraPradesh
    ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 23 பேர் மாயமாகி உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். #BoatCapsize #GodavariRiver #AndhraPradesh

    விஜயவாடா:

    ஆந்திரப்பிரதேச மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் தேவிபட்டணத்திலிருந்து கொண்டமொதலு நோக்கி நேற்று மாலை ஒரு படகு சென்று கொண்டிருந்தது. அந்த படகில் ஒரு திருமண வீட்டார் உட்பட 40 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. கோதாவரி ஆற்றில் படகு சென்று கொண்டிருந்த போது கடும் மழையுடன் காற்று வீசியுள்ளது. இதனால் படகு ஆற்றில் கவிழ்ந்தது.

    படகில் பயணித்த சிலர் பேர் நீந்தி கரை திரும்பிய நிலையில், பிறரை மீட்கும் பணி துரிதமாக நடந்து வருகின்றன. இதுவரை 17 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுடன் பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு காணாமல் போனவர்களை தேடும் பணிகளை துரிதப்படுத்த வலியுறுத்தினார். விஜயவாடாவிலிருந்து இரண்டு தேசிய பேரிடர் மீட்பு படை சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது.



    இந்நிலையில், மற்ற 23 பேரின் நிலைமை என்னவென்று தெரியவில்லை எனவும், அவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #BoatCapsize #GodavariRiver #AndhraPradesh
    ஆந்திரப்பிரதேசத்தில் புதிய மாநில பா.ஜ.க. தலைவராக முன்னாள் மந்திரி கண்ணா லக்‌ஷ்மிநாராயணா நியமிக்கப்பட்டுள்ளார். #KannaLakshminarayana #BJPstatepresident #APBJP

    ஐதராபாத்:

    ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க. தலைவராக விஷாகப்பட்டிணத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரான ஹரிபாபு இருந்து வந்தார். இந்நிலையில் ஆந்திரப்பிரதேச மாநில பா.ஜ.க.வின் புதிய தலைவராக முன்னாள் மந்திரி கண்ணா லக்‌ஷ்மிநாராயணா நியமிக்கப்பட்டுள்ளார்.

    காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் ஐந்து முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார். 


    சோமூ வீர்ராஜூ

    ஆந்திரப்பிரதேச மாநில பா.ஜ.க. தேர்தல் கட்டுப்பாடு கமிட்டி தலைவராக சட்டமன்ற மேல்சபை உறுப்பினர் சோமு வீர்ராஜூ நியமிக்கப்பட்டிள்ளார். இந்த தகவலை பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் அர்ஜுன் சிங் தெரிவித்தார். #KannaLakshminarayana #BJPstatepresident #APBJP
    ×