என் மலர்

  நீங்கள் தேடியது "andhrapradesh"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜெகன் மோகன் ரெட்டி இன்று சலூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து தனது பாதயாத்திரையை மீண்டும் தொடங்க உள்ளதாக அக்கட்சியின் கவுரவ தலைவர் விஜயம்மா தெரிவித்துள்ளார். #JaganmohanReddy #Yatra
  ஐதராபாத்:

  ஆந்திர மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருப்பவர் ஜெகன் மோகன் ரெட்டி. இவர் கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் 6ம் தேதி கடப்பா மாவட்டம் புலிவெந்தலா பகுதியில் இருந்து பொதுமக்களுடன் பாதயாத்திரையை தொடங்கினார். தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களுக்கு பாதயாத்திரை மேற்கொண்டார்.
   
  கடந்த அக்டோபர் 25-ம்  தேதி ஜெகன் மோகன் ரெட்டி விசாகப்பட்டினம் விமான நிலையத்துக்கு வந்தபோது, ஒரு வாலிபர் ‘செல்பி’ எடுப்பது போல் நடித்து அவரை கத்தியால் குத்தினார். இதில் காயம் அடைந்த ஜெகன் மோகன் ரெட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். அவரை கத்தியால் குத்திய விமான நிலைய ஓட்டல் ஊழியரான சீனிவாஸ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.  இதற்கிடையே, ஜெகன் மோகன் ரெட்டி நவம்பர் 12-ம் தேதி மீண்டும் சலூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து தனது பாதயாத்திரையை தொடங்கினார்.

  இந்நிலையில், ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் இச்சாபுரம் பகுதியில் தனது பாதயாத்திரையை இன்று நிறைவு செய்தார்.

  இதுவரை அவர், சுமார் 341 நாட்களில் 13 மாவட்டங்களில் உள்ள 134 சட்டசபை தொகுதிகளில் சுமார் 3 ஆயிரத்து 648 கிலோமீட்டர் தூரம் நடந்துள்ளார்.  

  கடந்த சில ஆண்டுகளில் இதுபோல் 3 ஆயிரம் கி.மீ. தொலைவு நடந்தவர்களில் ஜெகன்மோகன் ரெட்டி முதல் அரசியல்வாதி என்பது குறிப்பிடத்தக்கது. #JaganmohanReddy #Yatra 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெய்ட்டி புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக விவாதிக்க ஆந்திரப்பிரதேசம் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு இன்று தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினார். #BeityCyclone #HeavyRain #ChandrababuNaidu
  அமராவதி:

  ஆந்திரா மாநிலத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் அருகில் பெய்ட்டி புயல் இன்று கரையை கடந்தது. கரையை கடந்தபோது 80 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. 

  இதனால் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் புயல், மழை காரணமாக மரங்கள், மின்கம்பங்கள் விழுந்துள்ளது. அதனை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

  புயல் ஆபத்தைத் தொடர்ந்து கடலோர மாவட்டங்கள் வழியாக செல்லும் 22 பயணிகள் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நிறைய ரெயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. புயல் தாக்கும் பகுதிகளில் மீட்புப்பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு குழு உள்பட மீட்புக் குழுக்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன.   விசாகப்பட்டினம், கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, கிருஷ்ணா, குண்டூர் ஆகிய மாவட்டங்களில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த மாவட்டங்களில் மீட்புக்குழுவினர் மற்றும் அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர்.

  இந்நிலையில், பெய்ட்டி புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக விவாதிக்க ஆந்திரப்பிரதேசம் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு இன்று தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினார். புயலால் பாதிப்பு அடைந்துள்ள மக்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை விரைவில் செய்துதர வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். #BeityCyclone #HeavyRain #ChandrababuNaidu
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆந்திரா மாநிலத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் அருகில் பெய்ட்டி புயல் இன்று கரையை கடந்தது. கரையை கடந்தபோது 80 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. #MeteorologicalCenter #beitycyclone #heavyrain
  ஐதராபாத்:

  வங்கக் கடலின் தென் கிழக்கு பகுதியில் கடந்த சனிக்கிழமை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இரு நாட்களில் அது வலுப்பெற்று புயல் சின்னமாக மாறியது.

  அந்த புயல் சின்னத்துக்கு தாய்லாந்து நாடு தேர்வு செய்து வழங்கிய ‘‘பெய்ட்டி’’ எனும் பெயர் சூட்டப்பட்டது. அந்த புயல் சின்னம் வடக்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வந்தது. அந்த புயல் சின்னம் கடந்த வார மத்தியில் புயலாக உருவெடுத்தது.

  அதன் நகர்வை கணித்த போது முதலில் அது சென்னை அருகே கரையை கடக்கும் என்று கூறப்பட்டது. இதனால் தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் கணிசமான அளவுக்கு மழை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன் திசை ஆந்திரா நோக்கி நகர்ந்ததால் தமிழ்நாட்டுக்கு மழை கிடைக்காமல் போய் விட்டது.

  என்றாலும் பெய்ட்டி புயலின் கடும் சீற்றம் காரணமாக கடந்த 3 நாட்களாக தமிழக கடலோரப் பகுதிகளில் பலத்த தரைக்காற்று வீசியது. கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. சுமார் 4 மீட்டர் உயரம் வரை கடல் அலைகள் மேல் எழுந்து ஆர்ப்பரித்தன.

  இதனால் தமிழக மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல அனுமதிக்கப்படவில்லை. பெய்ட்டி புயலின் நகர்வு மணிக்கு 11 கி.மீ வேகத்திலேயே இருந்ததால் கடல் கொந்தளிப்பு நீடித்தது. சில இடங்களில் கடல் தண்ணீர் ஊருக்குள் புகுந்தது.

  இந்த நிலையில் நேற்று பெய்ட்டி புயல் தீவிரமான நிலையில் இருந்து அதிதீவிர புயலாக மாறியது. நேற்று காலை அந்த புயல் சென்னைக்கு கிழக்கு, தென், கிழக்கு திசையில் சுமார் 430 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்தது.

  நேற்று மாலை அது 380 கி.மீ. தொலைவுக்கு வந்தது. இதனால் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் குளிர்ந்த காற்று வீசியது. வானம் மேகமூட்டத்துடன் இருந்தது.

  இதனால் பலத்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மழை பெய்யாமல் குளிர்ந்த காற்று மட்டும் மிக அதிகமாக வீசியது.

  இன்று அதிகாலை சென்னையை நோக்கிய திசையில் இருந்து பெய்ட்டி புயல் விலகிச் சென்றது. இன்று காலை 8 மணி நிலவரப்படி சென்னையில் இருந்து வடக்கு, வடகிழக்கு திசையில் சுமார் 300 கி.மீட்டர் தொலைவில் பெய்ட்டி புயல் மையம் கொண்டிருந்தது. 8 மணிக்கு பிறகு பெய்ட்டி புயலில் வேகம் அதிகரித்தது.

  16 கி.மீ வேகத்தில் இருந்து 23 கி.மீ. வேகமாக புயலில் சீற்றம் ஏற்பட்டது. இன்று மதியம் அதிதீவிர நிலையில் ஆந்திரா கடலோரத்தை பெய்ட்டி புயல் நெருங்கியது. இதனால் ஆந்திரா கடலோர மாவட்டங்களில் பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்தது.

  காலை 10 மணியளவில் பெய்ட்டி புயல் மசூலிப்பட்டினத்தில் இருந்து 150 கி.மீ. தொலைவில் இருந்தது. காக்கிநாடாவில் இருந்து சுமார் 193 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டிருந்தது. அது மேலும் வடக்கு நோக்கி நகர்ந்து கரையை நெருங்கும் போது புயல் சற்று வலு குறையும் என்று கணிக்கப்பட்டிருந்தாலும் பலத்த சூறைக்காற்று வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் இன்று மதியம் பெய்ட்டி புயல் பலத்த காற்றுடன் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கரையை கடந்தது. பல்வேறு இடங்களில் புயல், மழை காரணமாக மரங்கள், மின்கம்பங்கள் விழுந்துள்ளது. அதனை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. புயல் காற்றுடன் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

  இதன் காரணமாக இன்று வடக்கு ஆந்திரா, ஒடிசா, தெற்கு சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் மாநிலங்களில் மிதமான மற்றும் பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

  இதைத் தொடர்ந்து ஆந்திரா கடலோர மாவட்டங்களில் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

  புயல் ஆபத்தைத் தொடர்ந்து ஆந்திரா கடலோர பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடலோர மாவட்டங்கள் வழியாக செல்லும் 22 பயணிகள் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நிறைய ரெயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

  புயல் தாக்கும் பகுதிகளில் மீட்புப்பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு குழு உள்பட மீட்புக் குழுக்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. உணவு பொருட்கள், குடிநீரையும் அதிக அளவில் ஆந்திர மாநில அரசு கை இருப்பு வைத்துள்ளது.

  விசாகப்பட்டினம், கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, கிருஷ்ணா, குண்டூர் ஆகிய மாவட்டங் களில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த மாவட்டங்களில் மீட்பு குழுவினர் மற்றும் அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர்.

  ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு இன்று மாலை விசாகப்பட்டினத்தில் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட உள்ளார். #MeteorologicalCenter #beitycyclone #heavyrain
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். #BoatCapsize #GodavariRiver
  ஐதராபாத்:

  ஆந்திரப்பிரதேச மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் தேவிபட்டணத்திலிருந்து கொண்டமொதலு நோக்கி நேற்று முன்தினம் மாலை ஒரு படகு சென்று கொண்டிருந்தது. அந்த படகில் ஒரு திருமண வீட்டார் உள்பட 40 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது பலத்த மழையுடன் காற்று வீசியதால் படகு திடீரென ஆற்றில் கவிழ்ந்து விழுந்தது.

  இந்த விபத்தில் படகில் பயணம் செய்த சிலர் நீந்தி கரை திரும்பினர். 15-க்கு மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டனர். முதல் கட்டமாக இந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர் என்றும், 10 பேர் மாயமாகி உள்ளனர் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

  மீட்புப் பணிகளை பார்வையிட்ட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்தார்.

  இந்நிலையில், கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

  இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் கார்த்திகேய மிஸ்ரா கூறுகையில், இன்று நடந்த தேடுதல் வேட்டையில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது. இதையடுத்து, ஆற்றில் படகு கவிழ்ந்து பலியானோர் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. இறந்தவர்களில் 4 குழந்தைகள், 11 பெண்களும் அடங்குவர். மேலும் காணாமல் போன ஒருவரை தேடும் பணி நடந்து வருகிறது என்றார். #BoatCapsize #GodavariRiver
  ×