என் மலர்

  செய்திகள்

  பெய்ட்டி புயல் பாதிப்பு - ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அவசர ஆலோசனை
  X

  பெய்ட்டி புயல் பாதிப்பு - ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அவசர ஆலோசனை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெய்ட்டி புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக விவாதிக்க ஆந்திரப்பிரதேசம் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு இன்று தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினார். #BeityCyclone #HeavyRain #ChandrababuNaidu
  அமராவதி:

  ஆந்திரா மாநிலத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் அருகில் பெய்ட்டி புயல் இன்று கரையை கடந்தது. கரையை கடந்தபோது 80 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. 

  இதனால் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் புயல், மழை காரணமாக மரங்கள், மின்கம்பங்கள் விழுந்துள்ளது. அதனை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

  புயல் ஆபத்தைத் தொடர்ந்து கடலோர மாவட்டங்கள் வழியாக செல்லும் 22 பயணிகள் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நிறைய ரெயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. புயல் தாக்கும் பகுதிகளில் மீட்புப்பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு குழு உள்பட மீட்புக் குழுக்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன.   விசாகப்பட்டினம், கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, கிருஷ்ணா, குண்டூர் ஆகிய மாவட்டங்களில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த மாவட்டங்களில் மீட்புக்குழுவினர் மற்றும் அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர்.

  இந்நிலையில், பெய்ட்டி புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக விவாதிக்க ஆந்திரப்பிரதேசம் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு இன்று தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினார். புயலால் பாதிப்பு அடைந்துள்ள மக்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை விரைவில் செய்துதர வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். #BeityCyclone #HeavyRain #ChandrababuNaidu
  Next Story
  ×