search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அன்வர் எம்எல்ஏ"

    • அன்வர் மீது எர்ணாகுளத்தை சேர்ந்த பிஜூ நோயல் என்பவர் மன்னார்காடு முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் புகார் செய்தார்.
    • அன்வர் எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்த கோர்ட் உத்தரவிட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் நீலம்பூர் தொகுதி இடதுசாரி ஜனநாயக முன்னணியின் எம்.எல்.ஏ. அன்வர். இவர் பாலக்காடு மக்களவை தொகுதியில் போட்டியிடும் இடதுசாரி ஜனநாயக முன்னணி வேட்பாளர் விஜயராகவனை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்தபோது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பற்றி மிகவும் அவதூறாக பேசினார்.

    அதாவது காந்தி என்ற குடும்ப பெயருடன் அழைக்க தகுதியற்ற நான்காம் தர குடிமகனாக ராகுல் காந்தி மாறிவிட்டார். காந்தி என்ற குடும்ப பெயரை விடுவித்து ராகுல் என்று தான் அவரை அழைக்க வேண்டும். ராகுலின் டி.என்.ஏ.வை ஆய்வு செய்யவேண்டும் என்று பேசினார்.

    அவரது இந்த பேச்சு காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அன்வர் எம்.எல்.ஏ. மீது தேர்தல் ஆணையத்தில் கேரள மாநில காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் ஹாசன் புகார் செய்தார். மேலும் அவர் மீது எர்ணாகுளத்தை சேர்ந்த பிஜூ நோயல் என்பவர் மன்னார்காடு முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் புகார் செய்தார்.

    அதனை விசாரித்த கோர்ட்டு, அன்வர் எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்த உத்தரவிட்டது. அதன்பேரில் அன்வர் எம்.எல்.ஏ. மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் 153(1) ஏ மற்றும் 125 ஆகிய 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

    • ராகுல் காந்தி தனது பிரசாரத்தின் போது கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை அதிகமாக தாக்கி பேசினார்.
    • காந்தி என்ற குடும்ப பெயருடன் அழைக்க தகுதியற்ற நான்காம் தர குடிமகனாக ராகுல் காந்தி மாறிவிட்டார் என அன்வர் எம்.எல்.ஏ. பேசினார்.

    திருவனந்தபுரம்:

    தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள், கேரள மாநிலத்தில் தற்போதைய மக்களவை தேர்தலில் தனித்தனியாக போட்டியிடுகின்றன. அவர்கள் அனைத்து தொகுதிகளிலும் இரு கூட்டணிகளாக இருந்து களம் காணுகின்றனர்.

    வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி போட்டியிடும் நிலையில், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா போட்டியிடுகிறார். இதனால் இரு கட்சியினரும் எதிரும் புதிருமாக இருந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்கள்.

    மேலும் இரு கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி பிரசாரம் செய்தார்கள். ராகுல் காந்தி தனது பிரசாரத்தின் போது கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை அதிகமாக தாக்கி பேசினார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.

    இந்நிலையில் கேரள மாநிலம் நீலம்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வான அன்வர் தேர்தல் பிரசாரத்தின் போது ராகுல் காந்தி பற்றி அவதூறு கருத்துக்களை தெரிவித்தார். காந்தி என்ற குடும்ப பெயருடன் அழைக்க தகுதியற்ற நான்காம் தர குடிமகனாக ராகுல் காந்தி மாறிவிட்டார். காந்தி என்ற குடும்ப பெயரை விடுவித்து ராகுல் என்று தான் அவரை அழைக்க வேண்டும். ராகுலின் டி.என்.ஏ.வை ஆய்வு செய்யவேண்டும் என்று பேசினார்.

    அவரது இந்த பேச்சுக்கு முதல்-மந்திரி பினராயி விஜயன் ஆதரித்திருக்கிறார். மேலும் அவர், 'ராகுல் முதிர்ச்சியற்றவர், சுதந்திரமாக சிந்திக்க முடியாதவர். உள்ளூர் தலைவர்களின் வார்த்தைகளை திரும்பத் திரும்ப சொல்கிறார். அதனால் தான் தனது பெயரை பயன்படுத்தி மக்களை ஏமாற்ற வேண்டாம் என்று ராகுலிடம் கேட்டுக்கொண்டேன்' என்றார்.

    இந்நிலையில் அன்வர் எம்.எல்.ஏ. மீது தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது. ராகுல் காந்தி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக கருத்து தெரிவித்த அன்வர் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள மாநில காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் ஹாசன் புகாரில் கேட்டுக்கொண்டுள்ளார்.

    மேலும் அவர் தனது புகாரில், 'மகாத்மா காந்தியை படுகொலை செய்த கோட்டேவின் மறு அவதாரம் அன்வர். கோட்சேவின் தோட்டாக்களை விட அன்வரின் வார்த்தைகள் பெரிய ஆபத்தை விளைவிப்பதாக உள்ளது. அன்வரின் கருத்துக்கள் பினராயி விஜயனின் ஆதரவுடன் கூறப்பட்டவை. ராகுல் காந்தியை அவமதித்தது மட்டுமின்றி ராஜீவ்காந்தியின் தியாகத்தையும் அவர் அவமதித்துள்ளார்' என்று கூறியிருக்கிறார்.

    ×