search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிகாரிகள் திடீர் ஆய்வு"

    • தனியார் ஓட்டல் ஒன்றில் கடந்த 16-ந் தேதி ஷவர்மா உள்ளிட்ட உணவை வாங்கி சாப்பிட்ட 44 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர்.
    • இதைத்தொடர்ந்து நாமக்கல் கலெக்டர் உமா ஆஸ்பத்திரிகளுக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

    நாமக்கல்:

    நாமக்கல் பரமத்தி ரோட்டில் பழைய நகராட்சி அலுவலகம் அருகில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் கடந்த 16-ந் தேதி ஷவர்மா உள்ளிட்ட உணவை வாங்கி சாப்பிட்ட 44 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர்.

    மாணவி இறந்தார்

    இதில் நாமக்கல் கோட்டை நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்த மாணவி கலையரசி (14) என்பவர் உயிரிழந்தார்.

    இதைத்தொடர்ந்து நாமக்கல் கலெக்டர் உமா ஆஸ்பத்திரிகளுக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

    மேலும், சம்மந்தப்பட்ட கடைக்கு நேரில் சென்று சோதனை நடத்தி அந்த கடையை மூடி சீல் வைக்க உத்தரவிட்டார்.

    4 பேர் கைது

    மேலும் இது தொடர்பான புகாரின் பேரில் கடை உரிமையாளர் நவீன்குமார், ஓட்டலின் சமையல் தொழிலாளர்கள் 2 பேர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் ஓட்டலுக்கு கோழி இறைச்சி சப்ளை செய்த ராமாபுரம்புதூர் பகுதியில் உள்ள கறிக்கோழிக் கடையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    இதில் சுகாதாரமற்ற முறையில் இறைச்சி விற்பனை செய்ததாக உரிமையாளர் சீனிவாசன் என்பவரை நேற்று கைது செய்தனர். அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    விற்பனைக்கு தடை

    இந்த சம்பவத்தை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள ஓட்டல்களில் சவர்மா, கிரில் சிக்கன், தந்தூரி சிக்கன் உணவு வகைகள் தயாரித்து விற்பனை செய்வதற்கு கலெக்டர் தடை விதித்துள்ளார். மேலும் மாவட்டத்தில் உள்ள ஓட்டல்கள், பாஸ்ட் புட் உணவகங்கள், மீன் இறைச்சி கடைகள், கறிக்கோழிக் கடைகள் உள்ளிட்ட கடைகளை சோதனையிடவும் உத்தரவிட்டார்.

    அதனை தொடர்ந்து நேற்று முதல் சுகாதார மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மாவட்டத்தில் உள்ள ஓட்டல்களில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    குமாரபாளையம்

    குமாரபாளையம் பகுதியில் உள்ள ஓட்டல்களில் நகராட்சி ஆணையர் சரவணன், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் (பொறுப்பு) சதீஷ், சுகாதார ஆய்வாளர்கள் சந்தான கிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.

    இதில் 9 கிலோ கிரில் சிக்கன், குளிர் சாதன பெட்டியில் பாக்கெட் செய்து வைக்கப்பட்ட 4 கிலோ பிரியாணி, 25 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து அழித்தனர். அபராதமாக ரூ.7 ஆயிரம் விதிக்கப்பட்டது. இந்த ஆய்வு தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருச்செங்கோடு

    திருச்செங்கோடு சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஷவர்மா கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், சுகாதாரத் துறை அதிகாரிகள் இணைந்து திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் 2 ஓட்டல்களில் இருந்து பிரிட்ஜில் வைக்கப்பட்டிருந்த கெட்டுப் போன சுமார் 250 கிலோ எடையுள்ள பழைய இறைச்சி, மீன் துண்டுகள், ஆகியவை கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது. ஓட்டல் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப் பட்டது.

    இதேபோல் நகரப் பகுதிகளில் உள்ள அனைத்து ஓட்டல்களிலும் அதிகாரிகள் அதிரடி சோதனை செய்தனர். இந்த ஆய்வு பணிகளில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் சிங்கார வேலன், நகர துப்புரவு அலுவலர் வெங்கடாசலம் உள்ளிட்ட நகராட்சி அலுவலர்கள் ஈடுபட்டனர்.

    பரமத்திவேலூர்

    பரமத்திவேலூர் பகுதியில் உள்ள 21 ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரி முத்துசாமி தலைமையிலான குழுவினர் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். இதில் உரிமம் பெறாமல் இயங்கிய 2 ஓட்டல்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் உணவு பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்குமாறு ஓட்டல்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்த ஆய்வின்போது உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துசாமி, வேலூர் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் குருசாமி, துப்புரவு மேற்பார்வையாளர் ஜனார்த்தனன் உடன் இருந்தனர்.

    பள்ளிப்பாளையம்

    பள்ளிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அசைவ ஓட்டலில் நேற்று ஈரோடு உணவு பாதுகாப்பு துறை அலுவலர் குழந்தைவேல் தலைமையில் அதிகாரிகள் மற்றும் பள்ளிப்பாளையம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட சுகாதார பணியாளர்கள் அடங்கிய குழு ஆய்வு மேற்கொண்டனர்.

    இதில் மொத்தம் 19 அசைவ ஓட்டிலில் ஆய்வு மேற்கொண்டு 3 ஓட்டலில் கெட்டுபோன 7½ கிலோ கோழி இறைச்சி குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனை அதிகாரிகள் பினாயில் ஊற்றி அழித்தனர். மேலும் சம்மந்தப்பட்ட 3 ஓட்டலுக்கும் தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

    இதேபோல் இன்றும் சேந்தமங்கலம், ராசிபுரம், கொல்லிமலை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.  

    • ஈரோடு மாவட்ட விதை விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
    • ஆவணங்கள் இல்லாத விதைகளை விற்க தடை விதிக்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று விதை ஆய்வு துணை இயக்குனர் சுமதி உத்தரவின் பேரில் ஈரோடு மாவட்ட விதை விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    அதன்படி கோபிசெட்டி பாளையம், காசியூர், காஞ்சிக்கோவில், பெருந்துறை பகுதிகளில் விதை ஆய்வாளர்கள் விஜயா, நவீன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    ஆய்வின் போது 10-க்கும் மேற்பட்ட தனியார் விதை விற்பனை நிலையங்கள் மற்றும் நாற்று பண்ணைகளில் சோதனை நடத்தி அதில் முறையான ஆவணங்கள் இல்லாத 12 குவிண்டால் அளவிலான நெல், வீரிய மக்காச்சோளம் மற்றும் காய்கறி விதைகளை விற்க தடை விதிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ 1,24,034 ஆகும்.

    ஒவ்வொரு விதை விற்பனை மற்றும் நாற்று பண்ணை உரிமையா ளர்கள், விலைப்பட்டியல் அடங்கிய பதாகைகளை விவசாயிகளின் பார்வைக்கு வைக்க வேண்டும்.

    மேலும் விதை இருப்பு பதிவேடு, கொள்முதல் பதிவேடு, விற்பனை பட்டியல், பதிவு சான்றிதழ், முளைப்புத்திறன் அறிக்கை, காலாவதி பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும்.

    இதை தவறும் பட்சத்தில் அவர்கள் மீது எவ்வித பாரபட்சமின்றி விதை சட்டம் 1966 மற்றும் 1983-கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,

    விவசாயிகள் விதைகள் மற்றும் நாற்றுகள் வாங்கும் போது விதை உரிமம் எண், குவியல் எண், காலாவதி நாள் குறிப்பிட்ட ரசீதுகளை விற்பனையாளர்களிடம் இருந்து பெற்று பயன்பெறு மாறு ஆய்வின் போது தெரிவித்தனர்.  

    • லேபிள் ஒட்டாத 3 கிலோ பொருட்கள் பறிமுதல்
    • 4 கடைகளுக்கு அபராதம் விதிப்பு

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அறிவுரையின்படி, வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் வி.செந்தில் குமார் மற்றும் வாணியம்பாடி நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் எம். பழனிசாமி ஆகியோர் வாணியம்பாடி பஸ் நிலையம் பகுதி களில் உள்ள கடைகள், பேக்கரி, சுவீட்ஸ்டால், ஓட்டல்களில் ஆய்வு செய்தனர்.

    அப்போது உரிமம் புதுப்பிக்கப்படாமல் இருந்த ஒரு கடைக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அளிக்கப்பட் டது. மூன்று இனிப்பகத்தில் இனிப்புகளுக்கு அதிகப்படியாக வண்ணம் சேர்க்கப்பட்டிருந்தது. அந்த கடைகளுக்கு முன் னேற்ற அறிக்கை அளிக்கப்பட்டது. இரண்டு கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர் இருந்ததால் தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இரண்டு கடைகளில் லேபிள் ஒட்டாத 3 கிலோ பொருட்களை பறிமுதல் செய்து அழித்தனர். இரண்டு கடைகளுக்கும் தலா ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் போண்டா, பஜ்ஜி போன்றவற்றை வாழை இலை மற்றும் மந்தாரை இலை, சில்வர் பிளேட்டில் வழங்க அறிவுறுத்தப்பட்டது.

    • மாவட்ட கலெக்டர் ஷஜீவனா உத்தரவின் பேரில் தேனி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ராகவன் தலைமையில் அலுவலர்கள் போடி பஸ் நிலையம் அருகே உள்ள பள்ளி வளாக கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
    • காலாவ தியான ஐஸ்கிரீம் பாக்கெட்டுகள், மெகுழு பூசப்பட்ட பழங்கள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப், கவர் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்களுக்கு ரூ.4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள், காலாவதியான உணவுகள் விற்கப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து மாவட்ட கலெக்டர் ஷஜீவனா உத்தரவின் பேரில் தேனி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ராகவன் தலைமையில் அலுவலர்கள் போடி பஸ் நிலையம் அருகே உள்ள பள்ளி வளாக கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    போடி வட்டார உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் சரண்யா, தேனி மாவட்ட உணவு பாதுகாப்பு த்துறை அலுவலர்கள் சுரேஷ், மணிகண்டன், அகமது உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய குழுவினர் 25-க்கும் மேற்பட்ட கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது காலாவ தியான ஐஸ்கிரீம் பாக்கெட்டுகள், மெகுழு பூசப்பட்ட பழங்கள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப், கவர் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்களுக்கு ரூ.4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.

    • கும்பாபிஷேகம் நடத்த உரிய முறையில் நிதி ஒதுக்கீடு செய்ய பொதுமக்கள் மனு
    • ஐம்பொன் சிலைகள் பாதுகாப்பாக உள்ளதா? என சோதனை

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் பகுதியில் லட்சுமி நாராயணன் பெருமாள் கோவில், வீரகோவில், ராமநாதீஸ்வரர் கோயில்களில் புதிய அறங்காவலர் குழுவினர் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளது.

    திருவண்ணாமலை மாவட்ட அறங்காவலர் குழு துணை தலைவர் பாண்டுரங்கன், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் முத்துசாமி, செயல் அலுவலர் சிவாஜி ஆகியோர் நேரில் வந்து ஆய்வு செய்தனர்.

    ஆய்வின் போது கண்ணமங்கலம் பேரூராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி கோவர்த்தனன், முன்னாள் தலைவர் கோவர்த்தனன், துணை தலைவர் குமார், வார்டு உறுப்பினர்கள் விஜய் அமிர்தராஜ் உள்பட பலர் உடனிருந்தனர்.

    இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வீரகோவிலில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகள் தற்போது நிலவரம் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    மேலும் பல ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடைபெறாமல் உள்ள லட்சுமி நாராயணன் பெருமாள் கோவிலை ஆய்வு செய்தனர்.

    விரைவில் கும்பாபிஷேகம் நடத்த உரிய முறையில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    இதில் மாவட்ட அறங்காவலர் குழு துணை தலைவர் பாண்டுரங்கன் முன்னிலையில், இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் கோவில்களில் உள்ள ஐம்பொன் சிலைகள் பாதுகாப்பாக உள்ளதா? என ஆய்வு செய்தனர்.

    • அமைச்சர் சேகர்பாபு சம்பந்தப்பட்ட நிதியை மீண்டும் ஒதுக்குவதுடன் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்
    • திருப்பணிகள் தொடர்ந்து மேற்கொள்ள சுமார் 30 லட்சம் மதிப்பீட்டில் திட்ட அறிக்கை அளிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டவுடன் திருப்பணிகள் சில மாதத்திற்குள் முடிக்கப்படும்

    காரிமங்கலம்,

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் மலை குன்றின் மீது ஸ்ரீ அபித குஜாம்பாள் சமேத அருணேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

    பழமை வாய்ந்த இக்கோவிலை புனரமை க்கவும் திருப்பணி மேற்கொள்ளவும் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சுமார் 82 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    ஒதுக்கப்பட்ட நிதியில் சுமார் 8 லட்சம் ரூபாயை அரசுக்கு அதிகாரிகள் திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது.

    மேலும் கடந்த பல மாதங்களாக திருப்பணி களும் மேற்கொள்ள ப்படவில்லை. இது குறித்து கே.பி. அன்பழகன் எம்.எல்.ஏ. சட்டசபையில் கேள்வி எழுப்பியுடன் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    அதற்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு சம்பந்தப்பட்ட நிதியை மீண்டும் ஒதுக்குவதுடன் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    இதை தொடர்ந்து நேற்று அறநிலையத்துறை சேலம் இணை ஆணையர் மங்கையர்க்கரசி மற்றும் அதிகாரிகள் அருணேஸ்வரர் கோவிலில் நடந்து வரும் திருப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    திருப்பணிகள் தொடர்ந்து மேற்கொள்ள சுமார் 30 லட்சம் மதிப்பீட்டில் திட்ட அறிக்கை அளிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டவுடன் திருப்பணிகள் சில மாதத்திற்குள் முடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஆய்வின்போது உதவி ஆணையர் உதயகுமார், செயல் அலுவலர் சிவக்குமார், அர்ச்சகர் புருஷோத்தமன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • குமாரபாளையம் நகராட்சி பகுதிகளில் பல கடைகளில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட பொறியாளர் மணிவண்ணன், குமாரபாளையம் நகராட்சி சுகாதார அலுவலர் ராமமூர்த்தி தலைமையில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
    • இதில் கேரிபேக், பிளாஸ்டிக் டம்ளர்கள் உள்ளிட்ட தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 8 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சி பகுதிகளில் உள்ள சாலையோர கடைகள், தினசரி காய்கறி மார்க்கெட், பூக்கடைகள், பழக்கடைகள், ஓட்டல், பேக்கரி, மளிகை, உள்ளிட்ட பல கடைகளில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட பொறி யாளர் மணிவண்ணன், குமாரபாளையம் நகராட்சி சுகாதார அலுவலர் ராமமூர்த்தி தலைமையில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

    இதில் கேரிபேக், பிளாஸ்டிக் டம்ளர்கள் உள்ளிட்ட தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 8 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவற்றை விற்பனைக்கு வைத்திருந்த கடைகளுக்கு ரூ.4 ஆயிரத்து 200 அபராதம் விதிக்கப்பட்டது.

    இந்த ஆய்வு தினசரி தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஆய்வின்போது நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் செல்வராஜ், சந்தான கிருஷ்ணன், ஜான்ராஜா, மாசுக்கட்டுபாட்டு வாரியம் உதவி பொறி யாளர்கள் சந்தானம், விஜயன் உள்பட பலர் சென்றனர்.

    • தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் அனைத்து ஆவணங்களும் தமிழில் மட்டுமே பராமரிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
    • ஆவணங்கள் அனைத்தும் தமிழில் உள்ளதா? புகார்கள் தமிழில் பெறப்படுகிறதா என்றும் சோதனை நடத்தினர்.

    வடமதுரை:

    தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், போலீஸ் நிலையங்கள், சார்பதிவாளர், வருவாய்த்துறை அலுவலகங்களில் அனைத்து ஆவணங்களும் தமிழில் மட்டுமே பராமரிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

    அரசு அலுவலகங்களுக்கு புகார் தெரிவிக்க வருபவர்கள் தமிழில் மட்டுமே புகார் அளிக்க வேண்டும். அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், பராமரிக்கப்படும் ஆவணங்களின் தன்மை ஆகியவற்றையும் தமிழ்வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

    அதன்படி இன்று வடமதுரை போலீஸ் நிலையத்திற்கு வந்த தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் இளங்கோ தலைமையிலான அதிகாரிகள் அங்கு பராமரிக்கப்படும் ஆவணங்களின் நிலை குறித்து ஆய்வு செய்தனர். ஆவணங்கள் அனைத்தும் தமிழில் உள்ளதா? புகார்கள் தமிழில் பெறப்படுகிறதா என்றும் சோதனை நடத்தினர்.

    இதேபோல அனைத்து அலுவலகங்கள் மற்றும் போலீஸ் நிலையங்களில் திடீர் சோதனை நடத்தப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

    ×