search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விதை விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு
    X

    விதை விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

    • ஈரோடு மாவட்ட விதை விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
    • ஆவணங்கள் இல்லாத விதைகளை விற்க தடை விதிக்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று விதை ஆய்வு துணை இயக்குனர் சுமதி உத்தரவின் பேரில் ஈரோடு மாவட்ட விதை விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    அதன்படி கோபிசெட்டி பாளையம், காசியூர், காஞ்சிக்கோவில், பெருந்துறை பகுதிகளில் விதை ஆய்வாளர்கள் விஜயா, நவீன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    ஆய்வின் போது 10-க்கும் மேற்பட்ட தனியார் விதை விற்பனை நிலையங்கள் மற்றும் நாற்று பண்ணைகளில் சோதனை நடத்தி அதில் முறையான ஆவணங்கள் இல்லாத 12 குவிண்டால் அளவிலான நெல், வீரிய மக்காச்சோளம் மற்றும் காய்கறி விதைகளை விற்க தடை விதிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ 1,24,034 ஆகும்.

    ஒவ்வொரு விதை விற்பனை மற்றும் நாற்று பண்ணை உரிமையா ளர்கள், விலைப்பட்டியல் அடங்கிய பதாகைகளை விவசாயிகளின் பார்வைக்கு வைக்க வேண்டும்.

    மேலும் விதை இருப்பு பதிவேடு, கொள்முதல் பதிவேடு, விற்பனை பட்டியல், பதிவு சான்றிதழ், முளைப்புத்திறன் அறிக்கை, காலாவதி பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும்.

    இதை தவறும் பட்சத்தில் அவர்கள் மீது எவ்வித பாரபட்சமின்றி விதை சட்டம் 1966 மற்றும் 1983-கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,

    விவசாயிகள் விதைகள் மற்றும் நாற்றுகள் வாங்கும் போது விதை உரிமம் எண், குவியல் எண், காலாவதி நாள் குறிப்பிட்ட ரசீதுகளை விற்பனையாளர்களிடம் இருந்து பெற்று பயன்பெறு மாறு ஆய்வின் போது தெரிவித்தனர்.

    Next Story
    ×