search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "YS Sharmila"

    • ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை ஒய்.எஸ்.சர்மிளா ஆவார்.
    • இவர் ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சி என்ற பெயரில் தனிக்கட்சி நடத்தி வருகிறார்.

    ஐதராபாத் :

    ஆந்திர மாநில முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை ஒய்.எஸ்.சர்மிளா ஆவார். இவர் தெலுங்கானா மாநிலத்தில், ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சி என்ற பெயரில் தனிக்கட்சி நடத்தி வருகிறார்.

    இவர் பெண்கள் தினத்தையொட்டி, மாநிலத்தில் பெண்கள் மீது நடந்து வருகிற தாக்குதல்களைக் கண்டித்து ஐதராபாத் நகரில் டேங்க் பண்ட் பகுதியில் நேற்று தர்ணா போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தார்.

    அவர் அதன்படி, ராணி ருத்ரமா தேவி மற்றும் சக்காளி அய்லம்மா சிலைகளுக்கு மரியாதை செய்து விட்டு தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து அழைத்துச்சென்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சந்திரசேகர ராவ் சொன்னபடி தலித் ஒருவரை முதல்வராக்க வேண்டும்.
    • சந்திரசேகரராவ் தேர்தலின் போது பல வாக்குறுதிகளை அளித்து முதல்வரானார்.

    திருப்பதி:

    தெலுங்கானா ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவரும், ஜெகன் மோகன் ரெட்டி தங்கையுமான ஷர்மிளா தனது தாயுடன் சேர்ந்து தெலுங்கானா முழுவதும் பாதயாத்திரை நடத்தி வந்தார்.

    அப்போது முதலமைச்சர் சந்திரசேகர ராவ் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார்.

    இந்த நிலையில் கடந்த மாதம் பாதயாத்திரை சென்ற ஷர்மிளா மீது முதலமைச்சர் சந்திரசேகர ராவை அவதூறாக பேசியதாக கூறி அவரது பிரச்சார வாகனத்தின் மீது கற்களை வீசினர்.

    பின்னர் பிரசார வாகனத்திற்கு தீ வைத்து எரித்தனர். இதனால் பாதயாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று முதல்-அமைச்சர் சந்திரசேகர ராவுக்கு ஒரு ஜோடி ஷூக்களை அனுப்ப உள்ளதாக ஐதராபாத்தில் நிருபர்களிடம் ஷர்மிளா கூறினார்.

    தனது ஆட்சி அற்புதமாக இருப்பதாக முதலமைச்சர் சந்திரசேகர ராவ் கூறி வருகிறார். தெலுங்கானாவில் எந்த பிரச்னையும் இல்லை என நிரூபித்தால் நான் அரசியலில் இருந்து விலகுகிறேன்.

    இது உண்மை இல்லை என்றால் சந்திரசேகர ராவ் மக்களிடம் மன்னிப்பு கேட்டு முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும்.

    சந்திரசேகர ராவ் சொன்னபடி தலித் ஒருவரை முதல்வராக்க வேண்டும். சந்திரசேகரராவ் தேர்தலின் போது பல வாக்குறுதிகளை அளித்து முதல்வரானார்.

    ஆனால், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. சந்திரசேகர ராவுக்கு தைரியமும், ஆட்சியில் நம்பிக்கையும் இருந்தால் ஒரு நாள் பாத யாத்திரைக்கு என்னுடன் வர வேண்டும்.

    இதற்காக தான் ஒரு ஜோடி ஷூக்களை முதலமைச்சர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கிறேன். ஷூ சைஸ் சரியாக இல்லாவிட்டால் எக்ஸ்சேஞ்ச் செய்து கொள்ள பில் கூட அனுப்புகிறேன்.

    தொப்பி அணிந்து கொண்டு தனி விமானத்தில் சுற்றி வராமல் தங்களது கட்சிக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்த மக்களை பற்றி சிந்திக்க வேண்டும். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சியில் மக்கள் குறைகள் இன்றி வாழ்ந்தனர்.

    பொதுமக்கள் முதல்வரை சந்தித்து குறைகளை தெரிவித்தனர். ஆனால் தற்போது முதலமைச்சரை பொதுமக்கள் யாரும் சந்திக்க முடியாத சூழ்நிலை உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதல்வர் சந்திரசேகர ராவ் இல்லத்தை நோக்கி ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சியின் பேரணி சென்றது
    • டிஆர்எஸ் கட்சி எம்எஎல்ஏ பெட்டி சுதர்ஷன் ரெட்டியை ஷர்மிளா கடுமையாக தாக்கி பேசினார்.

    தெலுங்கானாவில் ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சியின் தலைவரும், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஷர்மிளா, ஆளும் சந்திரசேகர ராவ் அரசுக்கு எதிராக பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். இதுவரை சுமார் 3500 கிமீ பயணம் மேற்கொண்டுள்ள அவர் நேற்று தனது ஆதரவாளர்களுடன் ஆர்ப்பாட்ட பேரணியில் பங்கேற்றார். இந்த பேரணி முதல்வரின் இல்லத்தை நோக்கி சென்றுகொண்டிருந்தது.

    அப்போது, ஷர்மிளா தனது காரில் புறப்பட்டுச் சென்றபோது, வாகனத்தை இழுத்துச்செல்லும் கிரேனை போலீசார் கொண்டு வந்து, அவரது வாகனத்தை இழுத்துச் சென்றனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. கிரேன் காரை இழுத்துச் செல்லும்போது அவர் காரில் அமர்ந்திருப்பதையும், அவரது ஆதரவாளர்களும் செய்தியாளர்களும் அவர்களுடன் ஓடுவதையும் காண முடிகிறது.

    நேற்று வாராங்கல் பகுதியில் உரையாற்றிய ஷர்மிளா, அந்த தொகுதியின் டிஆர்எஸ் கட்சி எம்எஎல்ஏ பெட்டி சுதர்ஷன் ரெட்டியை கடுமையாக தாக்கி பேசினார். இதனால் ஆத்திரமடைந்த டிஆர்எஸ் கட்சியினர், ஷர்மிளாவின் காரை தாக்கினர். பின்னர் ஷர்மிளாவின் ஆதரவாளர்களும் பதிலடி கொடுத்தனர். இது தொடர்பாக சிலரை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

    இந்த மோதலைத்தொடர்ந்து ஷர்மிளாவின் பாத யாத்திரைக்கான அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. ஷர்மிளாவை போலீஸ் பாதுகாப்புடன் ஐதராபாத் அனுப்பி வைத்தனர்.

    ×