search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒய்.எஸ்.ஷர்மிளா"

    • முதல்வர் சந்திரசேகர ராவ் இல்லத்தை நோக்கி ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சியின் பேரணி சென்றது
    • டிஆர்எஸ் கட்சி எம்எஎல்ஏ பெட்டி சுதர்ஷன் ரெட்டியை ஷர்மிளா கடுமையாக தாக்கி பேசினார்.

    தெலுங்கானாவில் ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சியின் தலைவரும், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஷர்மிளா, ஆளும் சந்திரசேகர ராவ் அரசுக்கு எதிராக பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். இதுவரை சுமார் 3500 கிமீ பயணம் மேற்கொண்டுள்ள அவர் நேற்று தனது ஆதரவாளர்களுடன் ஆர்ப்பாட்ட பேரணியில் பங்கேற்றார். இந்த பேரணி முதல்வரின் இல்லத்தை நோக்கி சென்றுகொண்டிருந்தது.

    அப்போது, ஷர்மிளா தனது காரில் புறப்பட்டுச் சென்றபோது, வாகனத்தை இழுத்துச்செல்லும் கிரேனை போலீசார் கொண்டு வந்து, அவரது வாகனத்தை இழுத்துச் சென்றனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. கிரேன் காரை இழுத்துச் செல்லும்போது அவர் காரில் அமர்ந்திருப்பதையும், அவரது ஆதரவாளர்களும் செய்தியாளர்களும் அவர்களுடன் ஓடுவதையும் காண முடிகிறது.

    நேற்று வாராங்கல் பகுதியில் உரையாற்றிய ஷர்மிளா, அந்த தொகுதியின் டிஆர்எஸ் கட்சி எம்எஎல்ஏ பெட்டி சுதர்ஷன் ரெட்டியை கடுமையாக தாக்கி பேசினார். இதனால் ஆத்திரமடைந்த டிஆர்எஸ் கட்சியினர், ஷர்மிளாவின் காரை தாக்கினர். பின்னர் ஷர்மிளாவின் ஆதரவாளர்களும் பதிலடி கொடுத்தனர். இது தொடர்பாக சிலரை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

    இந்த மோதலைத்தொடர்ந்து ஷர்மிளாவின் பாத யாத்திரைக்கான அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. ஷர்மிளாவை போலீஸ் பாதுகாப்புடன் ஐதராபாத் அனுப்பி வைத்தனர்.

    ×