search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "young man arrested"

    • தக்காளி வியாபாரம் செய்து வருகிறார்
    • வியாபாரியிடம் பணத்தை பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்

    திருச்சி:

    திருச்சி கீழ தேவதானம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம் (வயது 50) இவர் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் தக்காளி வியாபாரம் செய்து வருகிறார். சம்பவத்தன்று தக்காளி வியாபாரம் செய்து கொண்டிருக்கும் பொழுது அந்த வழியாக வந்த ஒரு வாலிபர் செல்வத்திடம் ரூ. 500 பணத்தை பறித்துக் கொண்டு ஓடிவிட்டார். இது குறித்து செல்வம் கோட்டை போலீஸ் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தேகத்துக்கிடமான ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்திய போது அவர் பெயர் மோகன்ராஜ் (வயது 23)அதே பகுதியை சேர்ந்தவர் என்பதும், அவர்தான் செல்வத்திடம் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்து சென்றார் என தெரியவந்தது. இதை யடுத்து கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மோகன்ராஜ்யை கைது செய்துள்ளனர்.

    • தம்பதியை தாக்கி மிரட்டிய வாலிபர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
    • புகாரின் பேரில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    கம்பம்:

    கம்பம் அருகே உள்ள 11-வது வார்டு உதயம் நகரைச் சேர்ந்தவர் பாண்டியன் (வயது 35). இவரது மனைவி நித்யா (28). இவர்கள் கேரளாவில் கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். அவ்வப்போது தங்கள் வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம்.

    அந்த சமயங்களில் தாத்தப்பன் குளத்தைச் சேர்ந்த கண்ணன் மகன் ஹரிஹரன் (23) என்பவர் நித்யாவிடம் தவறான முறையில் பேசி வந்துள்ளார். இது குறித்து கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கவே அவர்கள் ஹரிஹரனை எச்சரித்து அனுப்பினர்.

    இந்நிலையில் சம்பவத்தன்று மீண்டும் நித்யாவிடம் ஹரிஹரன் தவறான முறையில் பேசினார். இதனை தட்டிக் கேட்ட அவரது கணவரையும் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினார்.

    மேலும் பீர் பாட்டிலை உடைத்து அவர்களை குத்த வந்தார். இது குறித்து கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கவே போலீசார் ஹரிஹரனை கைது செய்தனர்.

    • குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் அடிக்கடி பணம் கேட்டு தனது தாயிடம் தகராறு செய்து வந்தார்.
    • கோடாரியை எடுத்து எனக்கு பணம் தராத நீ உயிருடன் இருக்க வேண்டாம் எனக்கூறி சரமாரியாக வெட்டினார்.

    தேவதானப்பட்டி:

    தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே மஞ்சளாறு அணை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஜோதிலட்சுமி. மகன்கள் விருமாண்டி, மருதுபாண்டி, சிவபாண்டி.

    இதில் 2-வது மகனான மருதுபாண்டி வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். மேலும் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் அடிக்கடி பணம் கேட்டு தனது தாயிடம் தகராறு செய்து வந்தார். நேற்று காலை மருதுபாண்டி குடிபோதையில் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது ஜோதிலட்சுமி மதுகுடிக்காமல் வேலைக்கு செல்லுமாறு அறிவுரை வழங்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மருதுபாண்டி தனது தாயிடம் மேலும் பணம் கேட்டுள்ளார்.

    அதற்கு அவர் தர மறுத்ததுடன் குடிபோதையில் வந்ததையும் கண்டித்துள்ளார். அருகில் இருந்த கோடாரியை எடுத்து எனக்கு பணம் தராத நீ உயிருடன் இருக்க வேண்டாம் எனக்கூறி சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த ஜோதிலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஒன்றுதிரண்டு அவரை மீட்டு தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மருதுபாண்டியை கைது செய்தனர்.

    • திருமணத்திற்கு மறுத்த காதலியின் அண்ணனை வெட்டி கொன்றதாக கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
    • போலீசார் அவரை கைது செய்து செய்து சிறையில் அடைத்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே காசம்பட்டியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் ஜோதி(27). வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த இவர் தனது தங்கை திருமணத்திற்காக சொந்த ஊர் வந்தார். அழகர்கோவில் மலையடிவாரத்தில் உள்ள தோட்டத்து வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது ஜோதி கொலை செய்யப்பட்டார்.

    இதுகுறித்து நத்தம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் கொலையாளியை தேடி வந்தனர். இந்தநிலையில் அதேபகுதியை சேர்ந்த பிரபாகரன்(30) என்பவர் ஜோதியை கொலை செய்தது தெரியவந்தது. இதனைதொடர்ந்து போலீசார் பிரபாகரனை மடக்கிபிடித்து கைது செய்தனர். போலீசில் அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது,

    ஜோதியின் தங்கையும், தேங்காய் வெட்டும் தொழிலாளியான நானும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்தோம். ஆனால் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் எங்கள் திருமணத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது. இதனைதொடர்ந்து ஜோதி தனது தங்கைக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வருகிற 5-ந்தேதி மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை சேர்ந்த வாலிபருக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடைபெற்றது.

    இந்த நிலையில் தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த ஜோதியை சந்தித்து பேசினேன். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்து வெட்டி கொலை செய்தேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த கொலை சம்பவத்தால் திருமணம் நின்றுவிட்டது. இதனால் இருவீட்டாரும் கடும் சோகத்தில் உள்ளனர்.

    • 14 வயது சிறுமியிடம் காதலிப்பதாக கூறி கற்பழித்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
    • பாதிக்கப்பட்ட சிறுமியை காப்பகத்தில் சேர்த்து சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகே உள்ள விளாம்பட்டிையச் சேர்ந்தவர் கருப்பையா (வயது 24). கூலித் தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியிடம் காதலிப்பதாக கூறி பழகி வந்துள்ளார்.

    பின்னர் அவரை தனியாக சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளார். இதில் சிறுமி கர்ப்பமானார். இந்த விபரம் அவரது பெற்றோருக்கு தெரியவரவே மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்துக்கு புகார் தெரிவித்தனர்.

    குழந்தை பாதுகாப்பு அதிகாரி ஷியாமளா இது குறித்து விளாம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் கருப்பையா மீது போக்சோ சட்டத்தின் கீழ் இன்ஸ்பெக்டர் வனிதா வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தார்.

    பாதிக்கப்பட்ட சிறுமியை காப்பகத்தில் சேர்த்து சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    • படியில் நின்று இடையூறு ஏற்படுத்தியவரை தட்டி கேட்டதால் கண்டக்டரை வாலிபர் சரமாரியாக தாக்கினார்.
    • கம்பம் வடக்கு போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து வாலிபரை கைது செய்தனர்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் தேனி அரசு போக்குவரத்து கழக கிளையில் கண்டக்ட ராக வேலைபார்த்து வருகிறார். நேற்று குமுளி யில் இருந்து திண்டுக்கல் செல்லும் பஸ்சில் பணியில் இருந்தார். கம்பம் சிக்னல் அருகே பயணிகளை ஏற்றி இறக்கி கொண்டிருந்தார்.

    அப்போது கூடலூர் சுக்காங்கல்பட்டியை சேர்ந்த வசந்த்(25) என்பவர் படியில் நின்று இடையூறு ஏற்படுத்தி கொண்டிருந்தார். அவரை பஸ்சுக்குள் வருமாறு கண்டக்டர் அழைத்துள்ளார். ஆனால் வரமறுத்ததுடன் ஆத்திரமடைந்த வசந்த், கிருஷ்ணமூர்த்தியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.

    இதுகுறித்து கம்பம் வடக்கு போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து வசந்தை கைது செய்தனர்.

    • வெளிமாநிலங்களில் இருந்து மது மொத்தமாக வாங்கி வந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். மேலும் கஞ்சா, ரேசன் அரிசி ஆகியவற்றை கடத்தி வருகின்றனர்.
    • கர்நாடகா மாநிலத்தில் இருந்து மது கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்து 17 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    குள்ளனம்பட்டி:

    தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் மது பிரியர்கள் அதிகளவில் மதுபானங்களை வாங்கி வைத்து வருகின்றனர். சிலர் வெளிமாநிலங்களில் இருந்து மது மொத்தமாக வாங்கி வந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். மேலும் கஞ்சா, ரேசன் அரிசி ஆகியவற்றை கடத்தி வருகின்றனர்.

    போலீசார் இவற்றை கண்காணிக்க தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், கொடைரோடு உள்ளிட்ட முக்கிய ரெயில்நிலையங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பிளாட்பாரம், ரெயில்களில் சோதனை நடத்தப்பட்டு பயணிகளின் உடமைகளையும் சோதித்தபின்னரே அனுப்பு கின்றனர்.

    பழனி ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளைச்சாமி, சப்-இன்ஸ்பெக்டர் பொன்னுச்சாமி தலைமையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சென்னை சென்ட்ரலில் இருந்து பாலக்காடு சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் சோதனையிட்டனர்.

    இதில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை சேர்ந்த மூக்கையா(35) என்பவர் கர்நாடகா மாநிலத்தில் இருந்து மது கடத்தி வந்தது தெரியவந்தது. இதனைதொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து 17 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • சிலுக்குவார்பட்டி பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
    • பிள்ளையார்நத்தத்தை சேர்ந்த வாலிபரிடம் 50 கிலோ புகையிலை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகே சிலுக்குவார்பட்டி பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மயில்ராஜ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்டனர்.

    இதில் பிள்ளையார்நத்தத்தை சேர்ந்த சுரேஷ்(32) என்பவர் 50 கிலோ புகையிலை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சுரேசை கைது செய்து திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.

    • வேடசந்தூர் காக்காதோப்பு பிரிவில் ஒரு கார் சந்தேகத்திற்கிடமாக நீண்டநேரம் நின்று கொண்டிருந்தது.
    • பொள்ளாச்சியில் இருந்து காரை திருடி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் காக்காதோப்பு பிரிவில் ஒரு கார் சந்தேகத்திற்கிடமாக நீண்டநேரம் நின்று கொண்டிருந்தது. அப்ேபாது அந்த வழியாக ரோந்து சென்ற போலீசார் அந்த காரையும், காருக்குள் இருந்த ஒரு வாலிபரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

    அவர் முன்னுக்குபின் முரணான பதில் அளித்தார். மேலும் அவர் போதையில் இருந்ததால் சந்தேகமடைந்த போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். அவரிடமிருந்த அடையாள அட்டைகளை வைத்து பார்த்தபோது அந்த வாலிபர் கோவை மாவட்டம் பீளமேடு பகுதிைய சேர்ந்த விஜய்(22) என தெரியவந்தது.

    பி.எஸ்.சி ஐ.டி படித்து வந்த இவர் பாதியில் படிப்பை நிறுத்தியுள்ளார். கஞ்சா மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமையான விஜய் அதன்பிறகு லாரி டிரைவராக வேலைக்கு சென்றுள்ளார். அப்போது சொந்த வீடு கட்டுவதற்காக ரூ.8லட்சம் வங்கி கடன் வாங்கினார்.

    நிரந்தர வருமானம் இல்லாததால் வங்கியில் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் கஷ்டப்பட்டு வந்தார். அதன்பிறகு பொள்ளாச்சி மகாலிங்கபுரத்திற்கு வேலை தேடி சென்றார். அங்கு வாகனங்கள் கன்சல்டிங் ஏஜென்சி நிறுவனத்தில் வேலை பார்த்தார்.

    அங்கிருந்த பதிவு செய்யப்படாத புதிய மாருதி காைர திருடி அதை விற்பதற்காக கொடைக்கானல் எடுத்து வந்தார். கொடைக்கானலுக்கு செல்ல வழி தெரியாததால் திண்டுக்கல்லில் இருந்து வேடசந்தூர் செல்லும் சாலையில் சென்றார். காக்காதோப்பு பிரிவில் கார் வந்தபோது பெட்ேரால் இல்லாமல் நின்றுவிட்டது. அப்போது என்ன செய்வது என்று தெரியாமல் தனக்கு தெரிந்த நண்பர்களிடம் போன் செய்து உதவி கேட்டுள்ளார். அப்போதுதான் போலீசாரிடம் விஜய் சிக்கி கொண்டார்.

    இந்த கார் பொள்ளாச்சியில் இருந்து திருடிவந்ததையடுத்து உரிமையாளரை வரவழைத்து அவரிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் விஜய் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    • கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி மது குடிக்க பணம் கேட்டு பாக்கெட்டில் இருந்த பணத்தை வாலிபர் பறித்துச்சென்றார்..
    • புகாரின் பேரில் கத்தியை காட்டி மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    வடமதுரை:

    வடமதுரை அருகில் உள்ள தும்மணக்குண்டு பகுதியை சேர்ந்தவர் விவேகானந்தன் (வயது 25). இவர் நேற்று தனது வீட்டு அருகே நடந்துசென்று கொண்டிருந்தார்.

    அப்போது தெற்கு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சரவணபாண்டியன் (27) என்பவர் கழுத்தில் கத்தியை வைத்து மது குடிக்க பணம் தருமாறு கேட்டார்.

    அவர் பணம் தர மறுக்கவே விவேகானந்தன் பாக்கெட்டில் இருந்த ரூ.900 பணத்தை பறித்துக் கொண்டார். அவர் சத்தம் போடவே அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இதனால் பணத்தை திருடிய அந்த வாலிபர் தான் வந்த பைக்கை அதே இடத்தில் விட்டு விட்டு ஓடிவிட்டார்.

    இது குறித்து வடதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணபாண்டி யனை கைது செய்தனர்.

    • வாலிபர் 17 வயதுடையை தனது உறவுக்கார பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
    • தகவல் அறிந்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள வீரசின்னம்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் ராஜா (வயது 35). இவர் கடந்த வருடம் 17 வயதுடையை தனது உறவுக்கார பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

    தற்போது அவர் கர்ப்பிணியான நிலையில் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவரது வயதை சரிபார்த்தபோது மைனர் பெண்ணுக்கு திருமணம் நடந்தது உறுதி செய்யப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து சமூக நலத்துறை அதிகாரிகள் சாணார்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் ஜான்சன்ஜெயக்குமார், மகளிர் ஆய்வாளர் திலகா ஆகியோர் விசாரணை நடத்தினர்.

    இதனைத் தொடர்ந்து ராஜாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • பிளஸ்-2 மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி வாலிபர் கடத்திச்சென்றார்.
    • போக்சோ சட்டத்தின்கீழ் வாலிபர் மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகில் உள்ள சாலம்பட்டியை சேர்ந்தவர் நிவின்குமார்(21). இவர் தென்னம்பட்டியில் உள்ள ஒரு வெல்டிங் பட்டறையில் வேலை பார்த்து வந்தார். அப்போது அதேபகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவியை காதலிப்பதாக கூறி பழகி வந்தார்.

    பின்னர் அவரை ஆசைவார்த்தை கூறி கடத்திச்சென்றார். தனது மகளை காணாமல் அவரது பெற்றோர் வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். நிவின்குமாரின் செல்போன் எண்ணை வைத்து அவர் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்தது தெரியவரவே போலீசார் அங்கு சென்று அவர்களை மீட்டு வந்தனர்.

    மாணவியை காப்பகத்தில் ஒப்படைத்தனர். வடமதுரை இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன், மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராணி ஆகியோர் போக்சோ சட்டத்தின்கீழ் நிவின்குமார் மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

    ×