என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
நிலக்கோட்டை அருகே 50 கிலோ புகையிலையுடன் வாலிபர் கைது
- சிலுக்குவார்பட்டி பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
- பிள்ளையார்நத்தத்தை சேர்ந்த வாலிபரிடம் 50 கிலோ புகையிலை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே சிலுக்குவார்பட்டி பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மயில்ராஜ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்டனர்.
இதில் பிள்ளையார்நத்தத்தை சேர்ந்த சுரேஷ்(32) என்பவர் 50 கிலோ புகையிலை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சுரேசை கைது செய்து திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.
Next Story