search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Villianur"

    வில்லியனூர் அருகே வீட்டில் இருந்த மாணவியை யாரோ கடத்தி சென்று விட்டதாக போலீசில் புகார் கூறப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே கரிக்கலாம்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் லட்சுமணன். கூலித் தொழிலாளி. இவரது மனைவி முனியம்மாள். இவர்களது மகள் காயத்ரி (வயது 16). இவர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதி விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த மாணவி காயத்ரியை திடீரென காணவில்லை. பல இடங்களில் தேடியும் எங்கும் காயத்ரி இல்லை.

    இதையடுத்து லட்சுமணன் தனது மகள் மாயமானது குறித்து கரிக்கலாம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். புகாரில் தனது மகள் காயத்ரியை யாரோ கடத்தி சென்றிருக்கலாம் என சந்தேகப்படுவதாக கூறி உள்ளார்.

    போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் பெரியசாமி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வில்லியனூர் அருகே கட்டிட தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே கோர்க்காடு கிராமம் அம்மன் நகரை சேர்ந்தவர் செல்வம் (வயது 45). இவரது மனைவி லட்சுமி. இருவரும் கட்டிட தொழிலாளிகள். இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

    இதற்கிடையே செல்வத்துக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று செல்வம் உடல்நலக்குறை வால் கட்டிட வேலைக்கு செல்லவில்லை. லட்சுமி மட்டும் கட்டிட வேலைக்கு சென்றார்.

    இந்த நிலையில் நேற்று மதியம் செல்வத்துக்கு நோய் கொடுமை அதிகமானதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த செல்வம் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் துப்பட்டாவால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் கரிக்கலாம்பாக்கம் உதவி சப்-இன்ஸ்பெக்டர் தண்டபாணி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வில்லியனூரில் மதுக்கடையில் ஏற்பட்ட மோதலில் வாலிபரை பீர் பாட்டிலால் குத்திய 3 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.

    புதுச்சேரி:

    வில்லியனுர் கோட்டைமேட்டை சேர்ந்தவர் ஞானசேகர் (வயது31) இவர் நேற்று மாலை அங்குள்ள தனியார் மதுக்கடையில் மதுகுடித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு ஏற்கனவே மதுகுடித்து கொண்டிருந்த வில்லியனூர் நடராஜன் நகரை சேர்ந்த அய்யனார் (24), சுபாஷ் (21) மற்றும் முத்துபிள்ளை பாளையம் ஓம்சக்தி நகரை சேர்ந்த அன்பரசன் (26) ஆகியோருக்கும் ஞானசேகருக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரம் அடைந்த அய்யனார் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து ஞானசேகரை சரமாரியாக தாக்கினர். பீர்பாட்டிலாலும் குத்தினர். இதில் ஞானசேகருக்கு முகத்தில் படுகாயம் ஏற்பட்டது. அவர் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றார்.

    பின்னர் இதுகுறித்து வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலய்யன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் அருள் ஆகியோர் வழக்குபதிவு செய்து அய்யனார் உள்பட 3 பேரையும் கைது செய்தனர்.

    வில்லியனூர் அருகே குடிபோதையில் ரகளை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    மங்கலம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் நேற்று இரவு மங்கலம்- உருவையாறு ரோட்டில் ரோந்து பணி சென்றனர். அப்போது 2 பேர் குடிபோதையில் பொதுமக்களுக்கு இடையூறாக ரகளையில் ஈடுபட்டனர்.

    அவர்களை அங்கிருந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தியும் அவர்கள் அங்கிருந்து செல்லாமல் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்களில் ஒருவர் விழுப்புரம் அருகே அய்யூர் கிராமத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி நாகப்பன் (வயது 48) என்பதும், மற்றொருவர் திருபுவனை பெரிய காலனியை சேர்ந்த கரும்பு வெட்டும் தொழிலாளி அம்பேத்கார் (41) என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    ×