search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "3 people arrest"

    • மர்ம ஆசாமி ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி விஜயகுமார் பாக்கெட்டில் இருந்த ரூபாய் 500 பணத்தை திருடிக் கொண்டு ஓடி விட்டார்.
    • குணா, ஆண்ட்ரூஸ் , விக்னேஷ் ஆகிய 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி வெங்கடேஸ்வரனிடமிருந்து ரூபாய் 2000 பணத்தை பறித்து கொண்டு ஓடி விட்டனர்.

    திருச்சி

    திருச்சி கீழ சிந்தாமணி புது தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 47)ரியல் எஸ்டேட் செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் ஏர்போர்ட் வயர்லெஸ் ரோட்டில் ஒரு கடை அருகில் நின்று கொண்டு இருந்தார்.

    அப்பொழுது அங்கு வந்த மர்ம ஆசாமி ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி விஜயகுமார் பாக்கெட்டில் இருந்த ரூபாய் 500 பணத்தை திருடிக் கொண்டு ஓடி விட்டார்.

    இது குறித்து விஜயகுமார் ஏர்போர்ட் போலீசில் புகார் கொடுத்தார். புகார் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் வயர்லெஸ் ரோட்டில் சுற்றி திரிந்த ஒரு மர்ம நபரை பிடித்து விசாரணை நடத்திய போது காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேஷ் (வயது 39) என்பதும், அவர் தான் விஜயகுமார் சட்டை பாக்கெட்டில் இருந்து ரூபாய் 500 பணத்தை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கடேஸ்சை கைது செய்தனர்.

    திருச்சி கீழ சிந்தாமணி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசஸ்வரன் (வயது 47). சம்பவத்தன்று இவர் இபி ரோடு கீழே தேவதான பகுதியில் நடந்து சென்றார்.

    அப்போது சிந்தாமணி பகுதியை சேர்ந்த குணா (வயது 31 )ஆண்ட்ரூஸ் , விக்னேஷ் ஆகிய 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி வெங்கடேஸ்வரனிடமிருந்து ரூபாய் 2000 பணத்தை பறித்து கொண்டு ஓடி விட்டனர்.

    இது தொடர்பாக கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து ஆண்ட்ரூஸ், விக்னேஷ் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். குணாவை தேடி வருகின்றனர். இவர்கள் 3 பேர் மீது கோட்டை போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடதக்கது.

    சிவகாசியில் போலீஸ்காரரை மது போதையில் தாக்கியதாக 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகாசி:

    சிவகாசி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றுபவர் ராமச்சந்திரன். இவர் நேற்று இரவு சிவானந்தா காலனி பகுதியில் ரோந்து சென்றார். அப்போது அங்குள்ள டாஸ்மாக்கடை அருகில் போதையில் 3 பேர் நின்று தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    உடனே போலீஸ் காரர் ராமச்சந்திரன் 3 பேரையும் எச்சரித்து வீட்டுக்கு செல்லுமாறு அறிவுறுத்தினார். ஆனால் அவர்கள் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் விதத்தில் நடந்து கொண்டனர்.

    மேலும் மதுபோதையில் ராமச்சந்திரனை கம்பால் தாக்கிவிட்டு தப்பினர். படுகாயம் அடைந்த அவர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் போலீஸ்காரர் ராமச் சந்திரனை தாக்கியது லட்சுமியாபுரத்தைச் சேர்ந்த சங்கர் (வயது27), அய்யம்பட்டி ராஜ்குமார் (27), பிரபு (29) என தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். #tamilnews
    ‘பேஸ்புக்’ மூலம் பழக்கமான கல்லூரி மாணவிகள் மற்றும் குடும்ப பெண்கள் என 100-க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்கள் சிக்கி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பொள்ளாச்சி:

    கோவை பொள்ளாச்சியில் ‘பேஸ்புக்’ மூலம் பழக்கமான கல்லூரி மாணவியை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இவர்கள் பொள்ளாச்சி ஜோதி நகரை சேர்ந்த சபரி என்ற ரிஷ்வந்த்(25), சூளேஸ் வரன்பட்டியை சேர்ந்த சதிஷ் (28), பக்கோதிபாளையத்தை சேர்ந்த வசந்தகுமார் (24) ஆவார்கள். கைதான சபரி என்ஜினீயர் ஆவார். சதிஷ் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.

    இவர்களது நண்பரான பொள்ளாச்சி மாக்கினாம் பட்டியை சேர்ந்த திருநாவுக்கரசு(26) என்பவர் இந்த கும்பலுக்கு தலைவனாக செயல்பட்டுள்ளார். வட்டிக்கு பணம் கொடுக்கும் பைனான்ஸ் தொழில் செய்து வந்த இவர் கார் வாங்கி விற்பனையும் செய்து வந்தார். இவர் வட்டிக்கு கொடுத்தவர்களிடம் பணத்தை வசூலிப்பது தான் வசந்தகுமாரின் வேலை.

    கைதானவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சிக்கரமான தகவல்கள் வெளிவந்தன. இந்த கும்பல் கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து இதுவரை கல்லூரி மாணவிகள், குடும்ப பெண்கள், வேலைக்கு செல்லும் இளம் பெண்கள் என 100-க்கும் மேற்பட்ட பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்திருப்பது தெரிய வந்தது.

    அழகான பெண்கள், மாணவிகளின் செல்போன் எண்ணை வாங்கி கொடுப்பது திருநாவுக்கரசின் வேலை. சபரி அந்த எண்ணில் தொடர்பு கொண்டு மாணவிகளிடம் ஆசை வார்த்தைகள் கூறி தனது வலையில் வீழ்த்தி விடுவார். இதற்காக சபரி தனது பெயரை ரிஷ்வந்த் என மாற்றி உள்ளார்.

    தன்னிடம் சிக்கிய மாணவிகளை சபரி, ஆனைமலை அருகே சின்னப்பம்பாளையம் பகுதியில் உள்ள திருநாவுக்கரசின் பண்ணை வீட்டுக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்துள்ளார்.

    இதை சபரியின் நண்பர்கள் மறைந்திருந்து வீடியோ எடுத்துக்கொண்டு, அந்த வீடியோவை காட்டி மிரட்டி மற்றவர்களும் பலாத்காரம் செய்துள்ளனர். சில பெண்களை மிரட்டி பணமும் பறித்துள்ளனர்.

    கைதானவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன்களில் 50-க்கும் மேற்பட்ட பெண்களின் உல்லாச வீடியோக்கள் கிடைத்துள்ளது. இந்த கும்பலின் தலைவனான திருநாவுக்கரசிடம் ஏராளமான பெண்களை மிரட்டி உல்லாசம் அனுபவித்த வீடியோக்கள் இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். தலைமறைவாக உள்ள அவரை கைது செய்ய தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    இதற்கிடையே, இந்த கும்பல் பற்றி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்த மாணவியின் சகோதரரை சபரியின் நண்பர்கள் செந்தில்(33), பாபு(26), வசந்தகுமார்(20) மற்றும் மணிகண்டன் ஆகியோர் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் செந்தில், பாபு, வசந்தகுமார் ஆகியோரை கைது செய்தனர். இதில் தலைமறைவாக உள்ள மணிகண்டனை போலீசார் தேடி வருகிறார்கள்.

    மாணவிகள் உள்பட பல பெண்களை ஆபாச வீடியோ எடுத்துள்ள இவ்வழக்கில் முக்கிய குற்றவாளிகளை போலீசார் தப்பிக்க வைக்க முயற்சி செய்வதாக புகார் எழுந்துள்ளது. 100-க்கும் மேற்பட்ட பெண்களை சீரழித்துள்ள இந்த கும்பலை சேர்ந்தவர்கள் மீது சாதாரண பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இதனால் குற்றவாளிகள் எளிதில் எந்த வித தண்டனையும் கிடைக்காமல் தப்பி விடுவார்கள் என கூறும் சமூக ஆர்வலர்கள், வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றனர்.

    இந்த கும்பல் பற்றிய அதிர்ச்சிக்கரமான தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் பொள்ளாச்சி வக்கீல்கள் சங்கம் சார்பாக அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக பொள்ளாச்சி வக்கீல்கள் யாரும் ஆஜராக மாட்டோம் என தீர்மானம் நிறைவேற்றினர்.

    இந்த பாலியல் வழக்கில் முக்கிய குற்றவாளிகளை வெளிக் கொண்டு வராமல் போலீசார் பாதுகாப்பு அளிப்பதாகவும், எனவே இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். இந்த குற்றங்களில் தொடர்புடையவர்கள் மீது சாதாரண பிரிவுகளில் வழக்குபதிவு செய்துள்ளதற்கு போலீசாருக்கு கண்டனம் தெரிவித்தும் வக்கீல்கள் சங்கம் சார்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கோவை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் தலைமையில் தி.மு.க.வினர் டி.எஸ்.பி. அலுவலகத்தில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றக் கோரி மனு அளித்தனர்.

    இதுகுறித்து கிழக்கு போலீசார் கூறுகையில், பாதிக்கப்பட்ட பெண்கள் தரப்பில் புகார் தெரிவித்தால், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் கூறுகையில், பொள்ளாச்சியில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளது துரதிஷ்டவசமானது. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என்றார். #tamilnews
    ராயபுரம் கள்ளச்சாவி தயாரித்து காரை திருடி விற்ற 3 பேரை கைது செய்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராயபுரம்:

    ராயபுரம் ராமநாராயணன் தெருவை சேர்ந்தவர் அல்லிமுத்து. கார் வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். இவரிடம் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மண்ணடியை சேர்ந்த சித்திக் என்பவர் காரை வாடகைக்கு எடுத்து சென்று திருப்பி ஒப்படைத்து விட்டார்.

    இந்த நிலையில் அல்லி முத்து வீட்டு முன்பு நிறுத்தியிருந்த கார் திடீரென மாயமானது. போலீசார் விசாரணையில் சித்திக், கள்ளச்சாவி தயாரித்து காரை திருடி திருவனந்தபுரத்தில் விற்றது தெரிய வந்தது. இதையடுத்து சித்திக், அவரது நண்பர்கள் அனீஸ், பத்மாபதி ஆகிய 3 பேரை கைது செய்தனர். கார் மீட்கப்பட்டது. #tamilnews
    ராயபுரம் அருகே செல்போன்கடை ஊழியரை வெட்டி ரூ.75 லட்சம் பறித்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    ராயபுரம்:

    ஏழுகிணறு கிரிகோரி தெருவை சேர்ந்தவர் ஜாபர். செல்போன் மொத்த வியாபாரி. இவரிடம் ஏழு கிணறை சேர்ந்த ரபீக்கான் வேலை பார்த்து வந்தார். கடந்த 2-ந்தேதி கடைகளில் வசூலான ரூ.70 லட்சம் பணத்துடன் ரபீக்கான் மோட்டார் சைக்கிளில் வந்தார்.

    ஏழுகிணறு பெரியண்ணா தெரிவில் வந்தபோது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்மகும்பல் திடீரென ரபீக்கானை வழிமறித்து சர மாரியாக வெட்டினர். பின்னர் அவரிடம் இருந்த ரூ.70 லட்சம் பணப்பையை பறித்து தப்பி சென்று விட்டனர்.

    இதுகுறித்து பூக்கடை உதவி கமி‌ஷனர் லட்சுமணன் உத்தரவின்படி இன்ஸ்பெக்டர் தவமணி, சப்- இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    வழிப்பறி நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு காமிராக்களில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு செய்தனர். இதில் வழிப்பறியில் ஈடுபட்டது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஷேக் தாவூத், கும்மிடிபூண்டி கிஷோர், பொன்னேரி சதீஷ் என்பது தெரிந்தது.

    புதுச்சேரியில் பதுங்கி இருந்த அவர்கள் 3 பேரையும் தனிப்படை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.9 லட்சத்து 30 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும் இதுதொடர்பாக அவர்களது கூட்டாளிகள் 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். #tamilnews
    வில்லியனூரில் மதுக்கடையில் ஏற்பட்ட மோதலில் வாலிபரை பீர் பாட்டிலால் குத்திய 3 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.

    புதுச்சேரி:

    வில்லியனுர் கோட்டைமேட்டை சேர்ந்தவர் ஞானசேகர் (வயது31) இவர் நேற்று மாலை அங்குள்ள தனியார் மதுக்கடையில் மதுகுடித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு ஏற்கனவே மதுகுடித்து கொண்டிருந்த வில்லியனூர் நடராஜன் நகரை சேர்ந்த அய்யனார் (24), சுபாஷ் (21) மற்றும் முத்துபிள்ளை பாளையம் ஓம்சக்தி நகரை சேர்ந்த அன்பரசன் (26) ஆகியோருக்கும் ஞானசேகருக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரம் அடைந்த அய்யனார் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து ஞானசேகரை சரமாரியாக தாக்கினர். பீர்பாட்டிலாலும் குத்தினர். இதில் ஞானசேகருக்கு முகத்தில் படுகாயம் ஏற்பட்டது. அவர் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றார்.

    பின்னர் இதுகுறித்து வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலய்யன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் அருள் ஆகியோர் வழக்குபதிவு செய்து அய்யனார் உள்பட 3 பேரையும் கைது செய்தனர்.

    ×