திருச்சியில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வழக்கில் 3 பேர் கைது

மர்ம ஆசாமி ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி விஜயகுமார் பாக்கெட்டில் இருந்த ரூபாய் 500 பணத்தை திருடிக் கொண்டு ஓடி விட்டார். குணா, ஆண்ட்ரூஸ் , விக்னேஷ் ஆகிய 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி வெங்கடேஸ்வரனிடமிருந்து ரூபாய் 2000 பணத்தை பறித்து கொண்டு ஓடி விட்டனர்.
திருச்சியில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வழக்கில் 3 பேர் கைது
Published on

திருச்சி

திருச்சி கீழ சிந்தாமணி புது தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 47)ரியல் எஸ்டேட் செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் ஏர்போர்ட் வயர்லெஸ் ரோட்டில் ஒரு கடை அருகில் நின்று கொண்டு இருந்தார்.

அப்பொழுது அங்கு வந்த மர்ம ஆசாமி ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி விஜயகுமார் பாக்கெட்டில் இருந்த ரூபாய் 500 பணத்தை திருடிக் கொண்டு ஓடி விட்டார்.

இது குறித்து விஜயகுமார் ஏர்போர்ட் போலீசில் புகார் கொடுத்தார். புகார் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் வயர்லெஸ் ரோட்டில் சுற்றி திரிந்த ஒரு மர்ம நபரை பிடித்து விசாரணை நடத்திய போது காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேஷ் (வயது 39) என்பதும், அவர் தான் விஜயகுமார் சட்டை பாக்கெட்டில் இருந்து ரூபாய் 500 பணத்தை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கடேஸ்சை கைது செய்தனர்.

திருச்சி கீழ சிந்தாமணி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசஸ்வரன் (வயது 47). சம்பவத்தன்று இவர் இபி ரோடு கீழே தேவதான பகுதியில் நடந்து சென்றார்.

அப்போது சிந்தாமணி பகுதியை சேர்ந்த குணா (வயது 31 )ஆண்ட்ரூஸ் , விக்னேஷ் ஆகிய 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி வெங்கடேஸ்வரனிடமிருந்து ரூபாய் 2000 பணத்தை பறித்து கொண்டு ஓடி விட்டனர்.

இது தொடர்பாக கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து ஆண்ட்ரூஸ், விக்னேஷ் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். குணாவை தேடி வருகின்றனர். இவர்கள் 3 பேர் மீது கோட்டை போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடதக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com