என் மலர்
நீங்கள் தேடியது "Villianur"
புதுச்சேரி:
வில்லியனூர் கணுவாப்பேட்டை புதுநகரை சேர்ந்தவர் வீரப்பன். இவரது மகன் விஜயன் (வயது 25). இவர் வில்லியனூரில் உள்ள ஒரு பூக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
நேற்று மாலை இவர் தனது நண்பர்களான மணிகண்டன், அய்யப்பன், ஆகியோருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் வில்லியனூர் மேற்கு ரத வீதியில் சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை அய்யப்பன் ஓட்டிச் செல்ல, மற்ற 2 பேரும் பின்னால் அமர்ந்து சென்றனர்.
அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி அய்யப்பன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது உரசியது. இதனால் உயிருக்கு பயந்து விஜயன் மோட்டார் சைக்கிளில் இருந்து எகிறி குதித்தார். இதில் எதிர்பாராத விதமாக விஜயன் லாரியின் சக்கரத்தில் சிக்கி கொண்டார். இதனால் லாரி சக்கரம் விஜயன் உடல் மீது ஏறி இறங்கியது.
இதில் படுகாயம் அடைந்த விஜயனை அவருடன் வந்த நண்பர்கள் மீட்டு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளித்த பின் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால், வழியிலேயே விஜயன் பரிதாபமாக இறந்து போனார்.
இந்த விபத்து குறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புனிதராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
புதுச்சேரி:
வில்லியனூர் மூர்த்தி நகர் மாரியம்மன கோவில் தெருவை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரது மகன் தமிழரசன் (வயது 24). இவர் பொங்கல் அன்று நண்பர்களுடன் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார்.
அப்போது தண்ணீர் தாகம் எடுத்தது. அங்கு இருந்த தண்ணீர் பாட்டிலில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து வைத்திருந்ததை கவனிக்காமல் எடுத்து குடித்து விட்டார். பின்னர் சிறிது நேரத்தில் வீட்டுக்கு வெளியே மயங்கி விழுந்தார்.
இதைக்கண்ட உறவினர் உடனடியாக அவரை மீட்டு வில்லியனூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த தமிழரசன் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து போனார்.
இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வேலையன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் வேலரசி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
வில்லியனூர் புதுப்பேட் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு 4 மகன்கள். இவர்களில் 3-வது மகன் பாரத் அம்பேத் (வயது 29). கார் டிரைவராகவேலை செய்து வந்தார்.
இதற்கிடையே பாரத் அம்பேத்துக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில் பாரத் அம்பேத் சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.
அதுபோல் நேற்றும் வேலைக்கு செல்லாமல் பாரத் அம்பேத் வீட்டில் இருந்தார். அப்போது அவரது தாய் ஜெயலட்சுமி வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தால் எப்படி திருமணம் செய்து வைக்க முடியும்? என கண்டித்தார். பின்னர் ஜெயலட்சுமி வயல் வேலைக்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் தாய் கண்டித்ததால் மனமுடைநத பாரத் அம்பேத் தற்கொலை செய்து கொள்ள முடிவு செயதார். அருகில் உள்ள உறவினர் அஞ்சலை வீட்டுக்கு சென்ற பாரத் அம்பேத் அங்கு சேலையால் தூக்கு போட்டு தொங்கினார். அக்கம் பக்கத்தினர் பாரத் அம்பேத்தை மீட்டு வில்லியனூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல் சிகிசசைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பாரத் அம்பேத் பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலய்யன், ஏட்டு கிருபாகரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே அரியூர்- சிவராந்தகம் மெயின் ரோட்டில் சாராயக்கடை அருகே நேற்று காலை 73 வயது மதிக்கதக்க முதியவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயத்துடன் பிணமாக கிடந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் வில்லியனூர் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புனிதராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்த முதியவர் கண்டமங்கலம் அருகே உள்ள நவமால்மருதூர் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்த மணி என்பதும் அங்குள்ள செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலைபார்த்து வந்தது தெரியவந்தது.
மேலும் விசாரணையில் மதுகுடிக்கும் பழக்கம் உள்ள மணி கடந்த 16-ந்தேதி மாலை சாராயம் குடிக்க வந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே கீழூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன். விவசாயி. இவரது மனைவி சுமதி. இவர்களது மகன் சசிக்குமார் (வயது 15). இவர் அரியூரில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று இவர் தனது நண்பர்களுடன் அங்குள்ள ஏரியில் தூண்டில் போட்டு மீன் பிடித்து கொண் டிருந்தார்.
அப்போது அருகில் குட்டை அமைத்து மீன் வளர்த்து வரும் அதே பகுதியை சேர்ந்த தமிழரசன் (31), சீனுவாசன் (26), பிரகாஷ் (19), வெங்கடேசன் (25) ஆகியோர் தங்களது குட்டையில் மீன் பிடித்ததாக கூறி சசிக்குமாரை சரமாரியாக தாக்கினர்.
இந்த தாக்குதலில் சசிக்குமார் பலத்த காயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக அரியூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து சசிக்குமாரின் தாய் சுமதி மங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் வழக்கு பதிவு செய்து தமிழரசன் உள்ளிட்ட 4 பேரையும் தேடி வருகிறார்.
வில்லியனூர் அருகே ஆத்துவாய்க்கால்பேட் பகுதியில் செல்போன் மூலம் ஆன்-லைனில் லாட்டரி விற்கப்படுவதாக வில்லியனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலய்யன் மற்றும் போலீஸ்காரர்கள் அமீதுஉசேன், தமிழ்ச்செல்வன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு செல்போனில் பேசியபடி நின்று கொண்டு இருந்த 3 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த அஸ்வத்தமன் (வயது24), முரளி (26), ராஜேஷ் ஆகியோர் என்பதும் இவர்கள் செல்போன் மூலம் ஆன்-லைனில் லாட்டரி விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லாட்டரி விற்ற பணம் ரூ.53 ஆயிரம் மற்றும் 3 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
வில்லியனூர்:
வில்லியனூர் அருகே பிள்ளையார்குப்பம் ஆஸ்பத்திரி ரோட்டை சேர்ந்தவர் பஞ்சமூர்த்தி (வயது 41). விவசாயி. இவருக்கு தேவி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
பஞ்சமூர்த்திக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதனால் கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இதுபோல் அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கோபம் அடைந்த தேவி கணவரை விட்டு பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். மனைவி பிரிந்து சென்றதால் மன வருத்தத்தில் பஞ்சமூர்த்தி அளவுக்கு அதிகமாக மது குடித்து வந்தார். ஆனாலும், மனைவி மற்றும் குழந்தைகள் பிரிந்து சென்றதை பஞ்சமூர்த்தியால் மறக்க முடிய வில்லை.
இதனால் மனமுடைந்த பஞ்சமூர்த்தி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டை விட்டு வெளியேறி அப்பகுதியில் உள்ள சுடுகாட்டுக்கு சென்ற அவர் அங்குள்ள மரத்தில் கயிற்றால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது அண்ணன் ராமச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வேலய்யன், ஏட்டு வேலாயுதம் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
வில்லியனூர் கிருஷ்ணா நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் ராஜமணி (வயது 54). இவரது மனைவி சசிகலா (50). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இதற்கிடையே கணவன் - மனவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வீட்டின் கீழ் தளத்தில் ராஜமணியும், வீட்டின் மாடியில் சசிகலா தனது மகள்- மகளுடன் தனித்தனியே வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று ராஜமணி சொத்து பத்திரம் தொடர்பாக வீட்டின் மாடிக்கு சென்று சசிகலாவிடம் கேட்டார். அப்போது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரம் அடைந்த ராஜமணி சசிகலாவை சரமாரியாக தாக்கினார்.
இது குறித்து சசிகலா வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து ராஜமணியை கைது செய்தனர்.
புதுச்சேரி:
திருக்கனூர் அருகே கூனிச்சம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகள் பூங்குழலி. (வயது 24). இவர் ரெட்டியார் பாளையம் போலீஸ் நிலையத்தில் பெண் போலீஸ் காரராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.
இன்று காலை 7 மணிக்கு வழக்கம் போல் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் பணிக்கு புறப்பட்டு வந்தார். ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தார்.
வில்லியனூர் அருகே பிள்ளையார் குப்பத்தில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க்கில் நிறுத்தி ஹெல் மெட்டை கழற்றி வைத்து விட்டு மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்பினார்.
பின்னர் அங்கிருந்து ரோட்டில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி ஹெல்மெட் அணிய முயன்றபோது, அந்த வழியாக அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் பூங்குழலி மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில், தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்த பூங்குழலியை அக்கம் பக்கத்தினர் மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பூங்குழலி பரிதாபமாக இறந்து போனார்.
இந்த விபத்து குறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து பூங்குழலி மீது மோதி விட்டு மோட்டார் சைக்கிளில் சென்றவரை தேடி வருகிறார்கள்.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே ராமநாதபுர காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 45). கூலித் தொழிலாளி. மதுகுடிக்கும் பழக்கம் உள்ள கிருஷ்ணமூர்த்தி சம்பவத்தன்று தொண்ட மாநத்தம் பகுதியில் உள்ள சாராயக்கடைக்கு சென்று அங்கு சாராயம் குடித்து விட்டு அருகில் உள்ள மதில் சுவரில் ஏறி அமர்ந்திருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக கிருஷ்ணமூர்த்தி மதில்சுவரில் இருந்து தவறி விழுந்தார். இதில் முதுகு தண்டு வடம் உள்ளிட்ட உடலில் பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அவர் ராமநாதபுரத்தில் உள்ள ஜிப்மர் கிளை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
பின்னர் வீடு திரும்பிய கிருஷ்ணமூர்த்திக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் வழியிலேயே கிருஷ்ணமூர்த்தி பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் அருள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.