என் மலர்
நீங்கள் தேடியது "worker fell"
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே ராமநாதபுர காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 45). கூலித் தொழிலாளி. மதுகுடிக்கும் பழக்கம் உள்ள கிருஷ்ணமூர்த்தி சம்பவத்தன்று தொண்ட மாநத்தம் பகுதியில் உள்ள சாராயக்கடைக்கு சென்று அங்கு சாராயம் குடித்து விட்டு அருகில் உள்ள மதில் சுவரில் ஏறி அமர்ந்திருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக கிருஷ்ணமூர்த்தி மதில்சுவரில் இருந்து தவறி விழுந்தார். இதில் முதுகு தண்டு வடம் உள்ளிட்ட உடலில் பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அவர் ராமநாதபுரத்தில் உள்ள ஜிப்மர் கிளை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
பின்னர் வீடு திரும்பிய கிருஷ்ணமூர்த்திக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் வழியிலேயே கிருஷ்ணமூர்த்தி பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் அருள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






