என் மலர்
நீங்கள் தேடியது "private company engineer suicide"
புதுச்சேரி:
வில்லியனூர் கோட்டைமேடு மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் ராஜேந்திரன் (வயது46). இவர் திருபுவனையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலைபார்த்து வந்தார். இவருக்கு ரேணுகாதேவி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜேந்திரன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சொந்த ஊரான திருவாரூக்கு சென்றனர். பின்னர் குடும்பத்தினரை அங்கேயே தங்கி இருக்க சொல்லி விட்டு இவர் வேலைக்கு செல்வதற்காக கோட்டைமேடு திரும்பினார்.
நேற்று காலை ராஜேந்திரனை அவரது மனைவி ரேணுகாதேவி செல்போனில் தொடர்பு கொண்டார். ஆனால் செல்போன் ரிங் சென்றேதை தவிர ராஜேந்திரன் எடுத்து பேசவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ரேணுகாதேவி அதே பகுதியில் உள்ள தனது உறவினர் பிரபாகரனுக்கு தகவல் தெரிவித்து வீட்டில் சென்று பார்க்கும்படி கூறினார்.
இதையடுத்து பிரபாகரன் வீட்டுக்கு சென்று பார்த்த போது வீடு உட்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. ஜன்னல் வழியாக பார்த்த போது அங்கு படுக்கை அறையில் ராஜேந்திரன் மின்விசிறி கொக்கியில் நைலான் கயிற்றால் தூக்குபோட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சி அ டைந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நியூட்டன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் அருள் ஆகியோர் வழக்குபதிவு செய்து ராஜேந்திரன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






