search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வில்லியனூரில் ரெயில் மறியலுக்கு முயன்ற விடுதலை சிறுத்தை கட்சியினர் 95 பேர் கைது
    X

    வில்லியனூரில் ரெயில் மறியலுக்கு முயன்ற விடுதலை சிறுத்தை கட்சியினர் 95 பேர் கைது

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து வில்லியனூரில் ரெயில் மறியலுக்கு முயன்ற விடுதலை சிறுத்தை கட்சியினர் 95 பேர் கைது செய்யப்பட்டனர்.

    வில்லியனூர்:

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து இதற்கு பொறுப்பேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் தி.மு.க. மற்றும் கூட்டணிகட்சிகள் கடையடைப்பு போராட்டம் அறிவித்திருந்தன.

    இதையடுத்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது. அதைபோல் வில்லியனூர் விடுதலைசிறுத்தை கட்சியினர் ரெயில் மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். இதையடுத்து விடுதலைசிறுத்தை கட்சியின் தொகுதி செயலாளர் தமிழ்வழவன், அலுவலக செயலாளர் எழில் மாறன், வாகையரசு, தமிழரசன் உள்ளிட்ட கட்சிநிர்வாகிகள், தொண்டர்கள் வில்லியனூர் எம்.ஜி.ஆர். சிலை அருகே காலை 10 மணிக்கு கூடினார்கள். அவர்கள் சென்னையிலிருந்து புதுவைக்கு வரும் ரெயிலை வில்லியனூர் ரெயில் நிலையத்தில் வைத்து ரெயில் மறியலில் ஈடுபட அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டனர்.

    ஊர்வலம் ரெயில் நிலையம் வந்தடைந்தது. போலீசார் ரெயில் வருவதற்கு முன்பே விடுதலைசிறுத்தை கட்சியினர் 95 பேரையும் கைதுசெய்தனர். கைது செய்யப்பட்ட சிறிது நேரத்தில் ரெயில் வந்து சென்றது.

    Next Story
    ×