search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "building worker suicide"

    களக்காடு அருகே காதல் தோல்வியால் மன உளைச்சல் அடைந்த கட்டிட தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள சுந்தரபாண்டியபுரத்தை சேர்ந்தவர் இசக்கிபாண்டி (வயது 47). இவர் தற்போது கோவையில் மனைவி மற்றும் 3 மகன்களுடன் வசித்து வருகிறார்.

    இவரது 2-வது மகன் குமார் (18). கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்த இவர் தனது உறவினர் பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்தாராம். இந்நிலையில் அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் நிச்சயம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே இசக்கி பாண்டி தனது மகன் குமாருடன் பொங்கல் விடுமுறைக்காக சுந்தரபாண்டியபுரத்திற்கு வந்துள்ளார். காதல் தோல்வியால் மன உளைச்சலில் இருந்த குமார் வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து இசக்கி பாண்டி களக்காடு போலீசில் புகார் செய்தார். களக்காடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி அருகே பொங்கல் நாளில் உறவினர்கள் திட்டியதால் மனமுடைந்த கட்டிட மேஸ்திரி தற்கொலை செய்து கொண்டார்.
    தருமபுரி:

    தருமபுரியை அடுத்த செட்டிக்கரை அருகே உள்ள பள்ளக்கொல்லை பகுதியை சேர்ந்த ராஜாமணி மகன் அர்ஜுணன் (வயது 25). இவர் பெங்களூருவில் கட்டிட மேஸ்திரியாக இருந்தார். இவருக்கு குடிப்பழக்கம் உண்டு.

    ஊருக்கு வந்த இவர் இங்கும் குடித்துவிட்டு குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டார். இதனால் உறவினர்கள் திட்டியதால் மனமுடைந்த இவர் பொங்கல் நாளான நேற்று மாலை தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தருமபுரி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். தற்கொலை செய்த அர்ஜுணனுக்கு பிரியங்கா என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.
    கள்ளக்குறிச்சி அருகே வரதட்சணை கேட்டு கணவர் கொடுமைப்படுத்தியதாக மனைவி போலீசில் புகார் செய்ததால் மனவேதனை அடைந்த அவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    கள்ளக்குறிச்சி:

    விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள பொற்படாகுறிச்சியை சேர்ந்தவர் சரவணன் (வயது 28). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி மங்கைகரசி (26).

    இவர்களுக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    இதனால் மனவேதனை அடைந்த மங்கைகரசி கோபித்து கொண்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி அருகே கருணாபுரத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    பின்னர் மங்கைகரசி கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசில் தனது கணவர் சரவணன் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக புகார் செய்தார்.

    இது தொடர்பாக விசாரணை நடத்த சரவணன் வீட்டுக்கு போலீசார் நேற்று மாலை சென்றனர். வீட்டில் இருந்த சரவணனிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டும். நாங்கள் சொல்லும் போது போலீஸ் நிலையத்துக்கு வர வேண்டும் என்று சரவணனிடம் போலீசார் கூறி விட்டு சென்றனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்த சரவணன் வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்தார்.

    அக்கம் பக்கத்தினர் சரவணனை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது

    பின்னர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சரவணன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி சப்- இன்ஸ்பெக்டர் பாலமுரளி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    திருச்சி திருவெறும்பூர் அருகே கடன் தொல்லையால் கட்டிட தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    திருவெறும்பூர்:

    திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி வடக்குமலை பெரியார் தெருவை சேர்ந்தவர் சக்திவேல். கட்டிட தொழிலாளி. இவரது மனைவி தனலட்சுமி. இந்து என்கிற மகள் உள்ளார். சக்திவேலுக்கு கடன் தொல்லை இருந்து வந்துள்ளது. இதனால் சில நாட்களாக மனமுடைந்த நிலையில் இருந்த அவர்,நேற்று இரவு வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்ப வில்லை. 

    இந்த நிலையில் துவாக்குடி அண்ணா வளைவுப் பகுதியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாக வேப்பமரத்தில் ஒருவர் தூக்கில் தொங்குவதாக துவாக்குடி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று பார்வையிட்டனர். 

    அப்போது அங்கு இறந்து கிடந்தது சக்திவேல் என்பது தெரியவந்தது. கடன் தொல்லை காரணமாக அவர் தற்கொலை செய்ததும் தெரியவந்தது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கட்டிட தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

    திருக்கோவிலூர்:

    திருக்கோவிலூரை அடுத்துள்ள மழவந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 38). இவர் சென்னையில்ல தங்கி கட்டிட தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார்.

    கடந்த 1 மாதமாக சொந்த ஊரில் இருந்து வந்த அசோக்குமார் அதே ஊரில் உள்ள ஏரிக்கரையில் தீக்குளித்தார். இதனைக்கண்ட அக்கம், பக்கத்தினர் ஓடிச் சென்று தீயில் எரிந்து கொண்டிருந்த அசோக்குமாரை காப்பாற்றி முதல் உதவி சிகிச்சைக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையிலும், பின்னர் மேல் சிகிச்சைக்கு சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையிலும் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த கண்டாச்சிபுரம் போலீசார் விரைந்து சென்று தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட அசோக்குமாரின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பின் உடலை உரியவரிடம் கொடுத்ததுடன், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

    வில்லியனூர் அருகே கட்டிட தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே கோர்க்காடு கிராமம் அம்மன் நகரை சேர்ந்தவர் செல்வம் (வயது 45). இவரது மனைவி லட்சுமி. இருவரும் கட்டிட தொழிலாளிகள். இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

    இதற்கிடையே செல்வத்துக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று செல்வம் உடல்நலக்குறை வால் கட்டிட வேலைக்கு செல்லவில்லை. லட்சுமி மட்டும் கட்டிட வேலைக்கு சென்றார்.

    இந்த நிலையில் நேற்று மதியம் செல்வத்துக்கு நோய் கொடுமை அதிகமானதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த செல்வம் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் துப்பட்டாவால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் கரிக்கலாம்பாக்கம் உதவி சப்-இன்ஸ்பெக்டர் தண்டபாணி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×