search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vijayalakshmi"

    தேர்தல் பிரசார கூட்டங்கள் நடத்த அனுமதி பெற வேண்டும் என்று அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி கூறினார்.
    அரியலூர்:

    இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, நாடாளுமன்ற தேர்தல்- 2019 தேதி அறிவிக்கப்பட்டு நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரப்பெற்றுள்ளது. இதை தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் நன்னடத்தை விதிகளை பின்பற்றுதல் தொடர்பான ஆலோசனை கூட்டம் அரியலூர் மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான விஜயலட்சுமி தலைமை தாங்கி பேசியதாவது:-

    தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடத்திட அனுமதிக்கப்பட்ட மைதானங்கள் மற்றும் ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ள இடங்களை பயன்படுத்த அனைத்து கட்சியினர் மற்றும் வேட்பாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும். தேர்தலின் போது பிற கட்சியினர் மற்றும் அவர்களது வேட்பாளர்களின் கொள்கைகள், முந்தைய செயல்பாடுகள் மற்றும் வேலைகள் ஆகியவற்றை மட்டுமே விமர்சிக்கலாம். தேர்தல் பிரசார கூட்டங்கள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள இடம் மற்றும் நேரம் குறித்து காவல் துறையினருக்கு முன்பே தெரிவித்து உரிய அனுமதி பெற்றிருக்க வேண்டும். கூட்டம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள இடத்தில் தடை ஏதும் முன்பே விதிக்கப்பட்டிருப்பின் அதை பின்பற்ற வேண்டும்.

    மேலும் தேர்தல் அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பாக துவக்கப்பட்ட நலத்திட்ட நடவடிக்கைகளை தொடர தடையில்லை. வெள்ளம், பஞ்சம் அல்லது இன்ன பிற இயற்கை இடர்பாடு காலங்களில் துயர்துடைப்பு பணி செய்திட தடையில்லை. பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தேர்தல் ஆணைய முன்அனுமதியுடன் பண உதவி செய்வதற்கும் தடை இல்லை.

    அலுவலக பணிகளோடு தேர்தல் பிரசார பணிகளை இணைக்கக்கூடாது. வாக்காளர்களுக்கு பணமோ அல்லது வேறு சில வழிகளிலோ தூண்டுதல் கூடாது. வாக்காளர்களிடையே ஜாதி, மதம் மற்றும் மொழி அடிப்படையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபடக்கூடாது. மத வழிபாட்டு தலங்களில் தேர்தல் தொடர்பான பிரசாரம் செய்ய கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், மாவட்ட வருவாய் அதிகாரி பொற்கொடி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிதாபானு, வருவாய் கோட்டாட்சியர்கள் சத்தியநாராயணன் (அரியலூர்), ஜோதி (உடையார்பாளையம்), வட்டாட்சியர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். 
    தமிழ், கன்னட படங்களில் நடித்து பிரபலமான நடிகை விஜயலட்சுமி உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சினிமா துறையிடம் உதவி கோரியுள்ளார். #Vijayalakshmi #Hospitalized
    தமிழ் மற்றும் கன்னடப் படங்களில் நடித்தவர் நடிகை விஜயலட்சுமி. தமிழில் பிரெண்ட்ஸ் படத்தில் விஜய்க்கு தங்கையாக, சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர். பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஆர்யாவுக்கு அண்ணியாக நடித்து இருந்தார்.

    தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாததால் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த விஜயலட்சுமி, சமீபகாலமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். அவருக்கு உயர் ரத்த அழுத்த பிரச்சினை இருந்து வந்தது.

    அவர் தீவிர சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள மல்லையா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    விஜயலட்சுமி சகோதரி இதுபற்றி கூறியதாவது:-

    ‘விஜயலட்சுமிக்கு நேற்று ரத்த அழுத்தம் அதிகமானதால் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளோம். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



    இருந்த பணத்தை எல்லாம் எங்கள் அம்மாவின் சிகிச்சைக்கே செலவு செய்துவிட்டோம். மிகுந்த பொருளாதார சிக்கலில் உள்ளோம். விஜயலட்சுமியின் சிகிச்சைக்கு சினிமா துறையினர் உதவ வேண்டும்‘

    இவ்வாறு அவர் கூறினார்.

    2006-ம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட்டது. ஒரு உதவி இயக்குனர் திருமணம் செய்துகொள்ள கட்டாயப்படுத்தியதுதான் அவர் தற்கொலைக்கு முயல காரணமாக பேசப்பட்டது. அதே ஆண்டு விஜயலட்சுமி தனது தந்தையையும் இழந்தார்.

    இந்த பிரச்சினைகளில் இருந்து மீண்டு வந்த விஜயலட்சமி ஒரு நடிகரை திருமணம் செய்துகொள்ளப் போவதாக அறிவித்தார். அந்த திருமணம் 2007-ம் ஆண்டு நடந்து இருக்க வேண்டியது. ஆனால் திடீர் என்று ரத்தாகிவிட்டது. அதன் பின்னர் விஜயலட்சுமி வெளியில் வருவதையே குறைத்துக்கொண்டார். #Vijayalakshmi #Hospitalized

    சிம்புதேவன் இயக்கவிருந்த இம்சை அரசன் இரண்டாம் பாகத்தில் ஒப்பந்தமாகி பின்னர் விலகுவதாக வடிவேலு அறிவித்துள்ள நிலையில், இயக்குநர் சிம்புதேவன் புதிய படமொன்றை தொடங்கினார். #Chimbudevan #VenkatPrabhu
    சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு ஹீரோவாக நடித்த படம் ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’. 2006-ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை, இயக்குநர் ச‌ங்கர் தயாரித்தார். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கப்பட்டது.

    ஆனால், படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே சில பிரச்சினைகள் காரணமாக படம் நிறுத்தப்பட்டது. இந்தப் பிரச்சினை எப்போது முடியும் என்று தெரியாததால், இயக்குநர் சிம்புதேவன் வேறொரு படத்தை இயக்குகிறார்.

    6 முக்கியக் கதாபாத்திரங்களை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில் ஜெய், சிவா, வைபவ், பிரேம்ஜி, விஜயலட்சுமி, அஜய் மாஸ்டர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பிளாக்டிக்கெட் கம்பெனி சார்பில் இயக்குநர் வெங்கட்பிரபு தயாரிக்கும் இந்தப் படத்திற்கு பிரேம்ஜி இசையமைக்க இருப்பதாக கூறப்படுகிறது.
    சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான ‘அந்த நாள்’ திரைப்படம் போல் கதையம்சம் கொண்ட திரைப்படமாக உருவாக இருக்கிறது. சமீபத்தில் துவங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. #Chimbudevan #VenkatPrabhu

    பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜயலட்சுமியின் குழந்தை நிலன் நடந்து வந்ததை பார்த்து, திருமணம் செய்து கொண்டுகுழந்தை பெற்றுக்கொள்ளும் ஆசை வந்ததாக மும்தாஜ் கூறினார். #Mumtaj
    பிக்பாஸ் நிகழ்ச்சியில் மும்தாஜ், ஷாரிக்கிடம் ஒரு தாயைப் போல பாசம் காட்டினார். 19 வருடங்களாக திரைத்துறையில் இருக்கும் மும்தாஜுக்கு தற்போது 38 வயதாகிறது. இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

    சமீபத்திய பேட்டி ஒன்றில், பிக்பாஸ் போட்டியாளர் விஜயலட்சுமியின் மகனை பார்த்தபோது, தனக்கும் திருமணம் செய்துகொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள ஆசை வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

    ‘பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த விஜியின் மகனைப் பார்த்த உடன் நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன். கதவை உடைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்று என் வீட்டில் உள்ள குழந்தைகளைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது.



    விஜியின் குழந்தை நிலன் வீட்டிற்குள் நடந்து வந்ததை பார்த்த எனக்கு திருமணம் செய்துகொண்டு குழந்தைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று ஆசையாக இருந்தது’ எனக் கூறியுள்ளார். ஆனால் எப்போது திருமணம் செய்துகொள்ளப்போகிறீர்கள் எனக் கேட்டதற்கு மழுப்பலான பதிலையே சொல்லியிருக்கிறார். #Mumtaj

    ×