search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    வெங்கட் பிரபு கூட்டணியுடன் புதிய படத்தை தொடங்கிய சிம்புதேவன்
    X

    வெங்கட் பிரபு கூட்டணியுடன் புதிய படத்தை தொடங்கிய சிம்புதேவன்

    சிம்புதேவன் இயக்கவிருந்த இம்சை அரசன் இரண்டாம் பாகத்தில் ஒப்பந்தமாகி பின்னர் விலகுவதாக வடிவேலு அறிவித்துள்ள நிலையில், இயக்குநர் சிம்புதேவன் புதிய படமொன்றை தொடங்கினார். #Chimbudevan #VenkatPrabhu
    சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு ஹீரோவாக நடித்த படம் ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’. 2006-ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை, இயக்குநர் ச‌ங்கர் தயாரித்தார். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கப்பட்டது.

    ஆனால், படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே சில பிரச்சினைகள் காரணமாக படம் நிறுத்தப்பட்டது. இந்தப் பிரச்சினை எப்போது முடியும் என்று தெரியாததால், இயக்குநர் சிம்புதேவன் வேறொரு படத்தை இயக்குகிறார்.

    6 முக்கியக் கதாபாத்திரங்களை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில் ஜெய், சிவா, வைபவ், பிரேம்ஜி, விஜயலட்சுமி, அஜய் மாஸ்டர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பிளாக்டிக்கெட் கம்பெனி சார்பில் இயக்குநர் வெங்கட்பிரபு தயாரிக்கும் இந்தப் படத்திற்கு பிரேம்ஜி இசையமைக்க இருப்பதாக கூறப்படுகிறது.
    சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான ‘அந்த நாள்’ திரைப்படம் போல் கதையம்சம் கொண்ட திரைப்படமாக உருவாக இருக்கிறது. சமீபத்தில் துவங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. #Chimbudevan #VenkatPrabhu

    Next Story
    ×