search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "velankanni matha"

    • வேளாங்கண்ணி கடலில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது.
    • வேளாங்கண்ணி திருவிழாவில் கலந்து கொள்ள வந்த பக்தர்கள் கடலில் குளிக்கவில்லை.

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த பேராலய ஆண்டு திருவிழா கடந்த ஆகஸ்டு மாதம் 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி கடந்த 7-ந்தேதி நடந்தது. 8-ந்தேதி மாதா பிறந்த நாள் விழா நடந்தது. இதை தொடர்ந்து கொடியிறக்கப்பட்டு விழா நிறைவு பெற்றது.

    இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ள வருவார்கள். அப்போது அவர்கள் கடலில் குளிக்கும் போது உயிர் பலி ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    இதனால் வேளாங்கண்ணி கடலில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக விழாவில் கலந்து கொள்ள வந்த பக்தர்கள் கடலில் குளிக்கவில்லை.

    இந்த நிலையில் 10 நாட்கள் நடந்த பேராலய ஆண்டு விழா முடிவடைந்ததால் நேற்று முன்தினம் முதல் பக்தர்கள் கடலில் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

    பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை என்பதால் வேளாங்கண்ணியில் திரளான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

    • சிலர் பாதயாத்திரையாக வந்து வேளாங்கண்ணி பேராலயத்தில் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
    • ஏராளமான பக்தர்கள் தங்களுடைய குறைகள் நீங்க மாதாவுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த பேராலயம் இந்தியாவில் உள்ள மிக முக்கியமான ஆன்மிக சுற்றுலா தலமாக விளங்குகிறது. ஆரோக்கிய மாதாவின் பிறந்த தினமான செப்டம்பர் 8-ந் தேதி வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டு திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டு திருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 8-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி நேற்று நடைபெற்றது.

    இதையொட்டி தேர்பவனியை காண இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வந்தனர். இதனால் வேளாங்கண்ணி பேராலய வளாகம் மட்டுமின்றி அதன் சுற்று வட்டார பகுதிகளில் எங்கு நோக்கினும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஏராளமான பக்தர்கள் தங்களுடைய குறைகள் நீங்க மாதாவுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். ஒரு சிலர் பாதயாத்திரையாக வந்து வேளாங்கண்ணி பேராலயத்தில் நேர்த்திக்கடனை செலுத்தினர். வெளியூர்களில் இருந்து வந்த பக்தர்கள் நேர்த்திக்கடனாக தென்னங்கன்றுகளை வாங்கி மாதாவுக்கு சமர்ப்பித்தனர்.

    மேலும் பக்தர்கள் தங்களது வீடு, வாகனங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக பேராலயத்தில் அமைக்கப்பட்டுள்ள கொடிமரத்தில் பூட்டு வாங்கி பூட்டி நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகாத பெண்கள் தாலி வாங்கி கொடிமரத்தில் கட்டினர். திருமணமான பெண்கள் குழந்தை பாக்கியம் வேண்டி தொட்டில் வாங்கி பேராலய கொடிக்கம்பத்தில் கட்டி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும் உடல்நலம் பாதுகாக்கவும், படித்த மாணவர்கள் வேலை வாய்ப்பை பெறுவதற்காகவும், பல்வேறு குறைகள் தீர பேராலய பகுதியில் அமைந்துள்ள சிலுவை பாதையில் முட்டியிட்டு சென்று பழைய மாதா கோவிலில் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    வேளாங்கண்ணி மாதா பேராலய பொிய ேதர்பவனியையொட்டி பக்தர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சுகாதாரத்துறையின் மூலம் ஆங்காங்கே தினமும் 20 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மேலும் வேளாங்கண்ணியில் 10 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு மருத்துவ வசதி செய்யப்பட்டது. வெளியூரில் இருந்து ரெயிலில் வந்த பக்தர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் காய்ச்சல் கண்டறியப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் 485 துப்புரவு பணியாளர்கள் அமைக்கப்பட்டு தினமும் உடனுக்குடன் குப்பைகள் அகற்றும் பணி நடந்தது. பாதுகாப்பு பணியில் சுமார் 2 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனா்.

    • இன்று(வியாழக்கிழமை) மாதாவின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.
    • இன்று மாலை 6 மணிக்கு அன்னையின் திருக்கொடி இறக்கப்படுகிறது.

    இந்தியாவில் உள்ள பிரசித்தி பெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயம் முக்கிய இடம் வகிக்கிறது.

    மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாக சர்வ மதத்தினரும் நம்பிக்கையுடன் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தளமாக விளங்கும் மாதாஆலயம் அமைந்துள்ள வேளாங்கண்ணி, கீழே நாடுகளின் 'லூர்து நகர்' என்ற பெருமையுடன் அழைக்கப்படுகிறது.

    கிறிஸ்தவ ஆலயங்களுக்கு மிக அரிதாக கிடைக்கக்கூடிய 'பசிலிக்கா' என்ற அந்தஸ்து பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் கட்டிட அழகு காண்போரை பிரமிக்க செய்வதாகும். இங்கு ஆண்டுதோறும் 10 நாட்கள் ஆண்டு திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும்.

    துன்பத்தில் துவண்டு அமைதி தேடி மன்றாடி வருபவர்களின் மனதை ஆற்றுப்படுத்தி புது வாழ்விற்கு வழிகாட்டி வரும் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழா ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 8-ந் தேதி நடக்கிறது.

    இந்த விழாவில் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாதாவை வழிபட்டு செல்வார்கள். விழாவுக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வேண்டி விரதம் இருந்த, நடைபயணமாக வேளாங்கண்ணிக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    இவ்வாறு பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழா கடந்த மாதம்(ஆகஸ்டு)் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடங்கியது முதல் ஒவ்வொரு நாளும் பேராலயத்திலும், பேராலய வளாகத்திலும், விண்மீன் ஆலயம், மேல் கோவில், கீழ் கோவில் ஆகிய இடங்களிலும் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், கொங்கு, மராத்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    இதேபோல சிலுவை பாதை வழிபாடு, ஜெபமாலை, நவநாள் ஜெபம், மாதா மன்றாட்டு திவ்ய நற்கருணை ஆசி உள்ளிட்ட பிரார்த்தனை நிகழ்ச்சிகள் விமரிசையாக நடந்தன.

    வேளாங்கண்ணி பேராலய திருவிழாவின் பிரதான நிகழ்ச்சியான மாதா பெரிய தேர்பவனி நேற்று இரவு நடந்தது. தேர்பவனியையொட்டி தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

    இதில் பேராலய அதிபர் இருதயராஜ், பங்குத்தந்தை அற்புதராஜ், பொருளாளர் உலகநாதன், உதவி பங்கு தந்தையர்கள் டேவிட் தன்ராஜ், ஆண்டோ ஜேசுராஜ் மற்றும் உதவி பங்கு தந்தையர்கள், அருட் தந்தைகள், அருட் சகோதரிகள் கலந்து கொண்டனர்.

    நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், பேரூராட்சி தலைவர் டயானா சர்மிளா, துணைத்தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன், பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருப்பலியை தொடர்ந்து தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தேரை புனிதம் செய்தார். இதையடுத்து இரவு 8 மணிக்கு பேராலயத்தின் மணிகள் ஒழிக்க மின்விளக்கு மலர் அலங்காரத்துடன் தயார் நிலையில் இருந்த புனித ஆரோக்கிய மாதா சொரூபம் தாங்கிய பெரிய தேர் பேராலய முகப்பிலிருந்து புறப்பட்டு சென்றது.

    தேர் பவனி தொடங்குவதற்கு சற்று முன்பாக லேசான தூறலுடன் மழை பெய்ய தொடங்கியது. சரியாக 8 மணிக்கு தேர்பவனி தொடங்கிய நேரத்தில் மழை கொட்டியது. கொட்டும் மழையிலும் தேர்பவனி நடந்தது.

    தேர் புறப்பட்டதும் பேராலயத்தை சுற்றி திரண்டு இருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் உற்சாக மிகுதியில் கைதட்டி 'மரியே வாழ்க' என கோஷமிட்டு பிரார்த்தனை செய்தனர்.

    மாதா தேருக்கு முன்பாக புனித மிக்கேல் சமன்சு, புனித சூசையப்பர், புனித அந்தோணியார், புனித செபஸ்தியார், அமலோற்பவ மாதா, புனித உத்ரிய மாதா ஆகிய 6 தேர்கள் வண்ண விளக்குகளில் அலங்காரங்களுடன் அணிவகுத்தன.

    இந்த 7 தேர்கள் முன்பாகவும், தேரை பின்தொடர்ந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சென்றனர். லட்சக்கணக்கான பக்தர்கள் மத்தியில் அலங்கார தேர்கள் வலம் வரும் நிகழ்ச்சி கண்கொள்ளா காட்சியாக அமைந்தது.

    தேர்வலம் வரும்போது பக்தர்கள் தேர் மீது பூக்களை தூவி ஜெபித்தனர். தேர்பவனி பேராலய முகப்பிற்கு வந்து சேர்ந்ததும் புனித ஆரோக்கிய மாதாவிற்கு நன்றி செலுத்தும் விதமாக பிரார்த்தனை நிறைவேற்றப்பட்டது. வேளாங்கண்ணி முழுவதும் பல்வேறு இடங்களில் பெரிய வண்ணத்திரைகள் அமைக்கப்பட்டு தேர்பவனி நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. பக்தர்கள் ஆங்காங்கு இருந்தபடியே தேர் பவனி செல்வதை பார்த்து மகிழ்ந்தனர். அப்போது அவர்கள் அன்னை மரியே வாழ்க என கைகூப்பி வணங்கி கோஷமிட்டனர்.

    தேர்பவனியையொட்டி நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் தலைைமயில் வேளாங்கண்ணி பேராலயம் மற்றும் வேளாங்கண்ணி முழுவதும் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

    அதேபோல் கடலோர பகுதிகளில் கடலோர காவல் படை போலீசார் 200 பேர் ரோந்து பணியில் ஈடுபட்டுத்தப்பட்டனர்.

    இன்று(வியாழக்கிழமை) மாதாவின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. மாலையில் தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் திருவிழா சிறப்பு கூற்று பாடல் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது.

    மாலை 6 மணிக்கு அன்னையின் திருக்கொடி இறக்கப்படுகிறது. அதனைத்தொடர்ந்து பேராலய கீழ்கோவிலில் மாதா மன்றாட்டு, திவ்ய நற்குண ஆசி, தமிழில் திருப்பலி ஆகியவை நிறைவேற்றப்படுகிறது.

    • தினமும் தமிழ், ஆங்கிலம், மராத்தி, கொங்கனி உள்ளிட்ட மொழிகளில் திருப்பலி நடக்கிறது.
    • நாளை மாலை கொடி இறக்கம் நடைபெறுகிறது.

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. ஆண்டுதோறும் மாதாவின் பிறந்த நாளான செப்டம்பர் 8-ந்தேதி பேராலய ஆண்டு திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன்படி இந்த ஆண்டு விழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாநாட்களில் தினமும் தமிழ், ஆங்கிலம், மராத்தி, கொங்கனி உள்ளிட்ட மொழிகளில் திருப்பலியும், இரவு 8 மணிக்கு சிறிய தேர்பவனியும் நடந்து வருகிறது.

    விழாவின் முக்கிய நிதழ்ச்சியான பெரிய தேர்பவனி இன்று(புதன்கிழமை) இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில் கலந்து கொள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து திரளானோர் குவிந்து வருகின்றனர். மேலும் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

    விழாவையொட்டி பொது சுகாதார அமைப்பின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து வட்டார சுகாதார மேற்பார்வையாளரும் விழாவின் சுகாதார பொறுப்பு அலுவலருமான சுப்பிரமணியன் கூறியதாவது:-

    நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் கண்காணிப்பில் 30 டாக்டர்கள், 10 மருந்தாளுநர்கள், 30 செவிலியர்கள், 87 சுகாதார ஆய்வாளர்கள், 4 வட்டார சுகாதார ஆய்வாளர்கள், 2 மருத்துவம் இல்லா மேற்பார்வையாளர்கள், 70 பயிற்சி சுகாதார ஆய்வாளர்கள் சுகாதார பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    வேளாங்கண்ணியில் 10 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு வட்டார மருத்துவ அலுவலர் அரவிந்தகுமார் தலைமையில் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த முகாம்களில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இ.சி.ஜி., நாய்க்கடி மருந்து, பாம்பு கடி மருந்து, உயிர் காக்கும் மருந்து என வசதிகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    தினமும் வேளாங்கண்ணியில் 4 டிராக்டர்களில் 485 துப்புரவு பணியாளர்கள் கொண்டு 6 முதல் 7 டன் வரை குப்பைகள் அகற்றப்படுகின்றன. கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் தினமும் 20 லட்சம் லிட்டர் குடிநீர் பெறப்பட்டு வேளாங்கண்ணிக்கு வரும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    வேளாங்கண்ணியில் அமைக்கப்பட்டுள்ள நீர்த்தேக்க தொட்டி, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆகியவற்றில் குளோரின் அளவு கண்காணிக்கப்பட்டு வருகிறது. வெளியூர்களில் இருந்து ரெயிலில் வரும் பயணிகளை தெர்மல் ஸ்கேனர் கொண்டு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு காய்ச்சல் இருந்தால் அவர்களை தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் புஷ்பராஜ் தலைமையில் 12 உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கடைகளில் ஆய்வு செய்து வருகின்றனர்.

    நாளை(வியாழக்கிழமை) தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் திருவிழா சிறப்பு கூட்டு திருப்பலியும். மாலை கொடி இறக்கமும் நடைபெறுகிறது. அதனைதொடர்ந்து மாதா மன்றாட்டு, திவ்யநற்கருணை ஆசிர், தமிழில் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது.

    விழாவையொட்டி 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கடலோர காவல் படை போலீசாரும் கடற்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • 16-ம் நூற்றாண்டில் நிகழ்ந்த 3 புதுமைகளால் ஆரோக்கிய அன்னையின் புகழ் உலகம் முழுவதும் பரவியது.
    • வேளாங்கண்ணி பேராலயம் தூய ஆரோக்கிய அன்னையின் பெயரால் கட்டப்பட்டதாகும்.

    நாகையை அடுத்த வேளாங்கண்ணியில், "கீழை நாடுகளின் லூர்துநகர்' என அழைக்கப்படும், புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது.

    இந்த பேராலயத்துக்கு, உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள்வந்து செல்கின்றனர். புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலய திருவிழா ,ஆண்டுதோறும், ஆகஸ்டு 29-ந் தேதி தொடங்கி, செப்டம்பர் 8-ந் தேதிவரை விமரிசையாக கொண்டாடப்படும். வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வருபவர்கள் தங்கள் பாவங்களிலிருந்து விடுபடுவதற்கு மட்டுமின்றி நிகழ்கால வாழ்க்கையின் உடனடித் தேவைகளை ஆரோக்கியமாதா பூர்த்தி செய்வார் என்று பரிபூரணமாக நம்புகிறார்கள். மேலும் தீராத நோயால் அவதிப்படுபவர்கள் வேளாங்கண்ணி மாதாவை மனமுருகி வேண்டினால் அவர்களின் நோய் நீங்கி நல்வாழ்வு பெறுவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை. சர்வ மதத்தினரும் வழிபட்டு செல்லும் வேளாங்கண்ணி பேராலயத்துக்கு தினமும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள்.

    மத நல்லிணக்கம்

    வங்ககடலோரம் அமைந்துள்ள வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம் பண்பாடு, மொழி, சமயத்தால் வேறுபட்டிருக்கும் மக்கள் ஒருங்கிணைந்து சங்கமிக்கும் புண்ணிய பூமியாக திகழ்ந்து வருகிறது. மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் ஈடு இணையற்ற சான்றாக விளங்கும் வேளாங்கண்ணி பேராலயம் திருவிழா நாட்கள் மட்டுமின்றி சாதாரண நாட்களிலும் மிகுந்த பெருமையுமன் விளங்குகிறது.

    முழங்காலிட்டு சென்று வழிபாடு

    திருமணத்தடை, குடும்ப பிரச்சினை, நினைத்த காரியம் நிறைவேற தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் பாத யாத்திரையாக பக்தர்கள் வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்து செல்கிறார்கள். குறிப்பாக திருச்சி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள் காவி உடை அணிந்து சிறிய மாதாவின் சப்பரத்தை இழுத்துக்குகொண்டு தஞ்சை, திருவாரூர் வழியாக வேளாங்கண்ணிக்கு செல்கிறார்கள்.

    மேலும் பக்தர்கள் தங்களின் வேண்டுதல் நிறைவேறினாலும், நிறைவேற வேண்டும் என்றாலும், வேளாங்கண்ணி சிலுவை பாதையில் முழங்காலிட்டு சென்று அன்னையை வழிபடுகிறார்கள்.

    கன்னி மரியாள் பிறந்த நாள்

    வேளாங்கண்ணி பேராலயம் தூய ஆரோக்கிய அன்னையின் பெயரால் கட்டப்பட்டதாகும். 16-ம் நூற்றாண்டில் நிகழ்ந்த 3 புதுமைகளால் ஆரோக்கிய அன்னையின் புகழ் உலகம் முழுவதும் பரவியது. சிறுவனுக்கு அன்னை காட்சி தந்தது, மோர் விற்ற சிறுவன், நடக்க முடியாத சிறுவனின் காலை குணப்படுத்தி சிறுவனை நடக்க செய்தது, போர்த்துகீசிய மாலுமியை புயலில் இருந்து காப்பாற்றி கரை சேர்த்தது போன்றவை முக்கியமானது ஆகும்.

    இந்த ஆலயத்தில் உள்ள கன்னி மரியாளின் பிறந்த நாளும், போர்த்துகக்கீசிய மாலுமி கரை சேர்ந்த நாளும் செப்டம்பர் 8-ந் தேதி ஆகும். ஏசுவின் தாயான மரியா, உலகின் பல நாடுகளில் வாழும் மக்களிடையே தோன்றி ஏசுவின் மீது நம்பிக்கை கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார். உலகின் பல இடங்களில் தோன்றிய அன்னை, இந்தியாவில் தமிழகத்தின் வேளாங்கண்ணியில் காட்சி அளித்ததால் வேளாங்கண்ணி மாதா என்று அழைக்கப்படுகிறார். வேண்டும் வரம் அருளும் வேளாங்கண்ணி மாதாவின் அருளால் பயன்பெற்ற பக்தர்கள் திருவிழா நாட்களில் அன்னையை தரிசிக்க குவிகிறார்கள்.

    • 8-ந்தேதி மாதா சொரூபம் தாங்கிய தேர் பவனி நடைபெறுகிறது.
    • 11-ந்தேதி திருவிழா சிறப்பு கூட்டு பாடல் திருப்பலி நடைபெறுகிறது.

    வால்பாறை அருகில் கருமலை வேளாங்கண்ணி மாதா ஆலயம் உள்ளது.

    இந்த ஆலயத்தின் தேர் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு கருமலை வேளாங்கண்ணி மாதா திருத்தலத்தில் ஆலய பங்கு குரு மரியஜோசப் தலைமையில், உதவி பங்கு குரு இம்மானுவேல், அய்யர்பாடி புனித வனத்துச்சின்னப்பர் ஆலய பங்கு குரு ஆனந்தகுமார் ஆகியோர் முன்னிலையில் கூட்டு பாடல் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

    திருப்பலிக்கு முன் திருவிழா கொடியானது ஆலயத்தை சுற்றி பவனியாக எடுத்து வரப்பட்டு மந்திரித்து ஏற்றி வைக்கப்பட்டது.

    கொடியேற்றத்தின் போது வேளாங்கண்ணி மாதா பக்தர்கள் மரியே வாழ்க என்று முழங்கினார்கள்.

    தேர் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளாக வருகிற 8-ந்தேதி வேளாங்கண்ணி மாதா பிறந்த நாளை முன்னிட்டு மாலை 6 மணிக்கு புனித சூசையப்பர் ஆலய பங்கு குரு ஜார்ஜ் சகாயராஜ் தலைமையில் கூட்டு பாடல் திருப்பலியும் தொடர்ந்து ஆலயத்தை சுற்றி மாதா சொரூபம் தாங்கிய தேர் பவனியும் நடைபெறுகிறது.

    வருகிற 10-ந் தேதி மாலை 7.30 மணிக்கு கோவை மறைமாவட்ட ஆயர் தாமஸ்அக்குவினாஸ் தலைமையில் கூட்டு பாடல் திருப்பலியும் அதனை தொடர்ந்து பல்வேறு எஸ்டேட் பகுதியில் இருந்து தேர் பவனி நடைபெறுகிறது. 11-ந் தேதி காலை 10.30 மணிக்கு திருவிழா சிறப்பு கூட்டு பாடல் திருப்பலி நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை ஆலய பங்கு குரு மரியஜோசப் தலைமையில் வால்பாறை திரு இருதய ஆலய பங்கு மக்கள் மற்றும் கருமை வேளாங்கண்ணி மாதா திருத்தல பங்கு மக்களும் செய்து வருகின்றனர்.

    • திருவிழா வருகிற 8-ந்தேதி வரை 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
    • பெரிய தேர்பவனி வருகிற 7-ந்தேதி நடைபெறுகிறது.

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயம் மிக முக்கியமான ஆன்மிக சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது.

    இதனால் இந்த பேராலயத்திற்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, கோவா, மும்பை, கர்நாடகா உள்பட பிற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து மாதாவை பயபக்தியுடன் வணங்கி செல்கின்றனர்.

    பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த பேராலயத்தில் மாதாவின் பிறப்பு பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம்(ஆகஸ்டு) 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இந்த திருவிழா வருகிற 8-ந்தேதி வரை 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் ஆலயத்தில் குவிந்துள்ளனர். இன்னும் பல பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி வருகிற 7-ந் தேதி(புதன்கிழமை) நடைபெறுகிறது. விழா நாட்களில் தினமும் தமிழ், ஆங்கிலம், மராத்தி, கொங்கனி உள்ளிட்ட மொழிகளில் திருப்பலி நடைபெற்று வருகிறது.

    மேலும், விழாவையொட்டி மாதாவின் சொரூபம் தாங்கிய சிறிய தேர்பவனி நடைபெற்று வருகிறது. அந்தவகையில் நேற்று இரவு 8 மணிக்கு மாதாவின் சிறிய தேர்பவனி நடைபெற்றது. தேர்பவனிக்கு முன்னதாக மிக்கேல் ஆண்டவர், புனித செபஸ்தியார், புனித அந்தோணியார், புனித சூசையப்பர் தேர்களும் அதனைத் தொடர்ந்து ஆரோக்கிய மாதாவின் தேரும் புறப்பட்டு சென்றன.

    தேர்பவனி கடற்கரை சாலை, ஆரியநாட்டு தெரு வழியாக சென்று பின்னர் ஆலயத்தை அடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று மரியே வாழ்க, மரியே வாழ்க என்று கோஷமிட்டவாறு சென்றனர்.

    • இந்த விழா வருகிற 8-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.
    • பெரிய தேர்பவனி 7-ந்தேதி (புதன்கிழமை) நடைபெறுகிறது.

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது.பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த பேராலய ஆண்டு திருவிழா கடந்த மாதம் (ஆகஸ்டு) 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா வருகிற 8-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி 7-ந்தேதி (புதன்கிழமை) நடைபெறுகிறது. மாதாவின் பிறந்த நாள் விழா 8-ந்தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது.

    இந்த விழாவில் கலந்து கொள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வாகனங்கள் மூலம் வந்து குவிந்து வருகின்றனர். மேலும் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். ஆண்டு திருவிழாவையொட்டி நேற்று புனித பாதையில் சிலுவை பாதை ஊர்வலம் நடைபெற்றது.

    இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அப்போது கொங்கனி, தமிழ், ஆங்கிலம், மராத்தி உள்ளிட்ட மொழிகளில் ஏசுவின் பாடுகளை நினைவுகூர்ந்து பிரார்த்தனை செய்தனர்.

    • இந்த திருவிழா செப்டம்பர் 8-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறும்.
    • திருவிழா நாட்களில் பக்தர்கள் கடலில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. மாதாவின் பிறந்த நாளான செப்டம்பர் 8-ந் தேதி வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 8-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும்.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக ஆண்டு திருவிழா பக்தர்கள் இன்றி எளியமுறையில் நடந்தது.

    இந்த ஆண்டு வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. மாலை 5.45 மணிக்கு கடற்கரை சாலை, ஆரியநாட்டு தெரு வழியாக கொடி ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. பின்னர் கொடியை தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் புனிதம் செய்து வைத்து 6.40 மணிக்கு கொடியேற்றி வைத்தார். அப்போது பேராலயம் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலித்தது.

    அதனைத்தொடர்ந்து வாணவேடிக்கைகள் நடந்தது. பக்கதர்கள் பலூன்களை பறக்கவிட்டு மகிழ்ந்தனர். பின்னர் பேராலய கலையரங்கில் ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் மாதா மன்றாட்டு நற்கருணை ஆசீர், தமிழில் திருப்பலி ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.

    விழாவில் வேளாங்கண்ணி மாதா பேராலய அதிபர் இருதயராஜ், பங்குத்தந்தை அற்புதராஜ், உதவி பங்கு தந்தையர்கள் டேவிட் தன்ராஜ், ஆண்டோ ஜேசுராஜ், மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், அரசு அலுவலர்கள் உள்பட லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    விழா நாட்களில் தமிழ், மராத்தி, மலையாளம், ஆங்கிலம், கன்னடம், இந்தி, தெலுங்கு, கொங்கனி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சிறப்பு திருப்பலிகள் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி வருகிற 7-ந் தேதி(புதன்கிழமை) நடக்கிறது. 8-ந்தேதி ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது.

    இந்த திருவிழாவில் கலந்து கொள்வதற்காக பல்வேறு ஊர்களில் இருந்தும், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்தனர். இதனால் வேளாங்கண்ணியில் எங்கு பார்த்தாலும் மனித தலைகளாகவே தென்பட்டது.

    நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் தலைமையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திருவிழா நாட்களில் பக்தர்கள் கடலில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால் பக்தர்கள் கடலில் குளிப்பதை தடு்க்க கடற்கரையில் மரக்கட்டைகளால் தடுப்பு அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • இந்தவிழா செப்டம்பர் 8-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.
    • பெரிய தேர்பவனி வருகிற 7-ந்தேதி நடக்கிறது.

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயம் கீழை நாடுகளின் 'லூர்து' நகர் என்றும் அழைக்கப்படுகிறது.

    இந்தியாவில் கட்டப்பட்டுள்ள ஆலய கட்டிட அமைப்புகளில் 'பசிலிக்கா' என்னும் சிறப்பு அந்தஸ்தை இந்த பேராலயம் பெற்று விளங்குகிறது. இந்த ஆலயம் எதிரே வங்கக்கடல் அமைந்திருப்பது மேலும் சிறப்பு.

    மாதாவின் பிறந்த நாளான செப்டம்பர் 8-ந்தேதி வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு திருவிழா இன்று (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்தவிழா அடுத்த மாதம் (செப்டம்பர்) 8-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. இன்று மாலை 5.45 மணிக்கு கொடி கடற்கரை சாலை ஆரியநாட்டு தெரு வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது.

    பின்னர் கொடியை தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் புனிதம் செய்து வைத்து கொடியேற்றி வைக்கிறார். இதை தொடர்ந்து பேராலய கலையரங்கில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசீர், தமிழில் திருப்பலி ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

    விழா நாட்களில் தமிழ், மராத்தி, மலையாளம், ஆங்கிலம், கன்னடம், இந்தி, தெலுங்கு, கொங்கனி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சிறப்பு திருப்பலிகள் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி வருகிற 7-ந்தேதி நடக்கிறது. 8-ந்தேதி ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது.

    இந்த திருவிழாவில் கலந்து கொள்வதற்காக பல்வேறு ஊர்களில் இருந்தும், வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். திருவிழாவை முன்னிட்டு வேளாங்கண்ணி மாதா பேராலயம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கிறது.

    திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் அருண் தம்புராஜ் கூறியதாவது:-

    கடந்த 2 ஆண்டுகள் கொரோனா தொற்று காரணமாக மக்கள் இன்றி வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா நடத்தப்பட்டது. இந்த ஆண்டு திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவில் கலந்து கொள்ள 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    திருவிழாவிற்கு நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் மேற்பார்வையில் 16 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 110 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 2 ஆயிரம் போலீசார்களும், இது தவிர 5 கம்பெனி தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், 200 ஊர் காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

    27 கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்தும், 4 டிரோன் மூலமும் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. சுகாதார துறையின் மூலம் 10 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவப்பணியில் 25 டாக்டர்கள், 87 சுகாதார ஆய்வாளர்கள், 71 செவிலியர்கள் உள்ளிட்ட 158 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பாக 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. மேலும் அரசு போக்குவரத்து கழகம் மூலம் திருவிழா காலங்களில் தினமும் 250 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன. திருவிழாவையொட்டி எந்தவித அசம்பாவிதம் ஏற்படாத வண்ணம் தீயணைப்பு வீரர்கள் 12 இடங்களில் தீயணைப்பு வாகனங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். விழாவிற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்த திருவிழா அடுத்த மாதம்(செப்டம்பர்) 8-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    • விழாவில் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியாவில் உள்ள பிரசித்தி பெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயமும் ஒன்று.

    தமிழகத்தில் மிகச்சிறந்த ஆன்மிக சுற்றுலா தலமாக விளங்கும் இந்த பேராலயத்துக்கு தினமும் வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் வந்து செல்கின்றனர்.

    வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா வருகிற 29-ந் தேதி(தி்ங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம்(செப்டம்பர்) 8-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் பங்கேற்பு இன்றி கொடியேற்றம் மிக எளிமையாக நடந்தது. இந்த ஆண்டு வழக்கம்போல் பக்தர்கள் பங்கேற்புடன் விழா சிறப்பாக நடைபெற உள்ளது. விழாவில் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து விழா முன்னேற்பாடுகளை நாகை மாவட்ட நிர்வாகம், ஆலய நிர்வாகம், பேரூராட்சி நிர்வாகம் மற்றும் பல்வேறு அரசுத்துறை நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

    விழாவையொட்டி பேராலய வளாகம் மற்றும் சுற்றுச்சுவர் பகுதி முழுவதும் வர்ணம் பூசப்பட்டு பேராலயம் புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது. மேலும் பேராலயத்தில் வண்ண விளக்குகள் பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    • வேளாங்கண்ணி பேராலய திருவிழா 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    • இந்த திருவிழா அடுத்த மாதம் (செப்டம்பர்) 8-ந்தேதி வரை நடக்கிறது.

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா ஆண்டு திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார்.

    நாகை போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, பேரூராட்சி தலைவர் டயானா ஷர்மிளா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:-

    புனித ஆரோக்கிய மாதா ஆண்டு திருவிழா இந்த மாதம் (ஆகஸ்டு) 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம் (செப்டம்பர்) 8-ந் தேதி வரை நடக்கிறது. பேராலய திருவிழா காலங்களில் மக்கள் கூட்ட நெரிசல் இன்றி பஸ்களில் பயணம் செய்ய பல்வேறு போக்குவரத்து மண்டலங்களில் இருந்து போதுமான எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்படும்.

    பயணிகள் சிரமம் இன்றி பயணம் செய்வதற்கு ஏதுவாக பஸ் நிறுத்துமிடங்கள் குறித்து தகவல் பலகைகள் வைக்கப்பட உள்ளது. திருடர்களை கண்காணிக்க கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கவும், கண்காணிப்பு கேமராக்களை பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    பொதுமக்கள் கடற்கரையின் அருகில் செல்வதற்கு எல்லை நிர்ணயம் செய்து தடை விதிக்க வேண்டும். மேலும் திருவிழா காலங்களில் கடலில் மக்கள் குளிக்க தடை விதிக்கப்படும்.

    வேளாங்கண்ணியில் கொரோனா தடுப்பூசி முகாம்களை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அனைத்து உணவு விடுதிகளை ஆய்வு மேற்கொண்டு உணவின் தரத்தை பரிசோதனை செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகுகள் மற்றும் மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் பேரூராட்சி துணைத்தலைவர் தாமஸ்ஆல்வாஎடிசன், சுகாதார துணை இயக்குனர்விஜயகுமார், பேராலய பங்குத்தந்தை அற்புதராஜ், உதவி பங்குத்தந்தை ஆண்டோஜேசுராஜ், பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுசாமி மற்றும் விடுதி உரிமையாளர்கள் சங்கம், வர்த்தக சங்கம், ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

    ×