search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "arokia matha"

    • 6-ந்தேதி ஆரோக்கிய அன்னையின் சப்பர பவனி வீதி உலா நடக்கிறது.
    • 7-ந்தேதி இரவு 9.30 மணிக்கு கொடியிறக்கம் நடக்கிறது.

    திருச்செந்தூர் அருகே அடைக்கலாபுரம் அற்புதநகர் அதிசய ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு ஆலய திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருமூலநகர் பங்குத்தந்தை பீட்டர் பாஸ்டின் தலைமையில் கொடியேற்றம் நடந்தது. தூத்துக்குடி புனித தோமா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ராயப்பன் மறையுரை மாற்றினார். இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக சூசை அறநிலைய ஆன்மிக இயக்குனர் அருட்தந்தை செட்ரிக் பிரிஸ் தலைமையில் ஜெபமாலை பவனி நவநாள் திருப்பலி நடந்தது. விழாவின் 2-ம் நாளான இன்று (வியாழக்கிழமை) வீரபாண்டியன்பட்டணம் துணை பங்குத்தந்தை வில்லிஜிட் தலைமையில் திருப்பலியும், நற்கருணை ஆசிரும் நடக்கிறது. 3 முதல் 8-வது நாள் வரை அருட்தந்தைகள் வில்லியம், அமல்ராஜ், சில்வெஸ்டர், பனிமயம், பபிஸ்டன், அருமைநாதன் தலைமையில் திருப்பலி நடக்கிறது.

    9-வது நாளான 6-ந்தேதி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான ஆரோக்கிய அன்னையின் சப்பர பவனி வீதி உலா நடக்கிறது. அன்றைய தினம் இஞ்ஞாசியார்புரம் பங்குத்தந்தை சேவியர் அருள்ராஜ் தலைமையில் காலை செபமாலை பவனி, புதுநன்மை திருப்பலியும், மாலை திருவிழா மாலை ஆராதனையும் நடக்கிறது. இதில் பொத்தக்காலன்விளை திருத்தல பங்குத்தந்தை வெனி இளங்குமரன் மறையுரை ஆற்றுகிறார்.

    10-ம் நாளான 7-ந் தேதி காலை 6 மணிக்கு அருட்தந்தை ததேயுஸ் ராஜன் தலைமையில் கூட்டு திருப்பலியும், மாலை அருட்தந்தை ஜான் சுரேஷ் தலைமையில் நற்கருணை பவனியும் நடக்கிறது. மறையுரை மற்றும் பவனியை தொடர்ந்து இரவு 9.30 மணிக்கு கொடியிறக்கம் நடக்கிறது.

    8-ந் தேதி காலை 11 மணிக்கு சூசை அறநிலைய நிதி நிர்வாகி சில்வெஸ்டர் தலைமையில் நன்றி திருப்பலி நடக்கிறது. தொடர்ந்து அசன விருந்து நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை அடைக்கலாபுரம் பங்குத்தந்தை பீட்டர் பால் மற்றும் ஊர் பொது மக்கள் செய்து வருகின்றனர்.

    • அன்னையின் புகழ்மாலை, ஜெபமாலை, திருப்பலி நடந்தது.
    • கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    முன்சிறை புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தின் குடும்ப பெருவிழா கடந்த 2-ந்தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. விழா நாட்களில் காலை மற்றும் மாலையில் அன்னையின் புகழ்மாலை, ஜெபமாலை, திருப்பலி நடந்தது.

    விழாவின் இறுதி நாளான நேற்று காலை 6 மணிக்கு முதல் திருப்பலி, 9 மணிக்கு திருச்சி தூய பவுல் இறையியல் கல்லூரி பேராசிரியர் அருட்தந்தை சேவியர் பெனடிக் தலைமையில் பெருவிழா திருப்பலி நடந்தது.

    மருதன்கோடு பங்கு அருட்தந்தை ஜான்சேவியர் அருளுரை வழங்கினார். தொடர்ந்து 11 மணிக்கு மலையாள மொழியில் திருப்பலி, அன்னையின் தேர் பவனி, மாலை 6 மணிக்கு அருட்தந்தை அருள் தலைமையில் திருப்பலி, கொடி இறக்கம், இரவு 7 மணி முதல் 9 மணி வரை கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    • இந்த ஆலயத்தில் கடந்த 2-ந்தேதி கொடியேற்றம் நடந்தது.
    • இன்று மாலை 6 மணி அளவில் நடக்கிறது.

    அரியாங்குப்பம் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தின் 332 வது ஆண்டு திருவிழா நடந்து வருகிறது. அதன்படி கடந்த 2-ந் தேதி கொடியேற்றம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான ஆடம்பர தேர் பவனி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணி அளவில் நடக்கிறது.

    முன்னதாக சிறப்பு திருப்பலியும், 76 பேருக்கு சிறப்பு உறுதி பூசல் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஆலயபங்கு தந்தை அந்தோணிரோச் தலைமையில் நிர்வாக குழு மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.

    • சிலர் பாதயாத்திரையாக வந்து வேளாங்கண்ணி பேராலயத்தில் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
    • ஏராளமான பக்தர்கள் தங்களுடைய குறைகள் நீங்க மாதாவுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த பேராலயம் இந்தியாவில் உள்ள மிக முக்கியமான ஆன்மிக சுற்றுலா தலமாக விளங்குகிறது. ஆரோக்கிய மாதாவின் பிறந்த தினமான செப்டம்பர் 8-ந் தேதி வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டு திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டு திருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 8-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி நேற்று நடைபெற்றது.

    இதையொட்டி தேர்பவனியை காண இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வந்தனர். இதனால் வேளாங்கண்ணி பேராலய வளாகம் மட்டுமின்றி அதன் சுற்று வட்டார பகுதிகளில் எங்கு நோக்கினும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஏராளமான பக்தர்கள் தங்களுடைய குறைகள் நீங்க மாதாவுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். ஒரு சிலர் பாதயாத்திரையாக வந்து வேளாங்கண்ணி பேராலயத்தில் நேர்த்திக்கடனை செலுத்தினர். வெளியூர்களில் இருந்து வந்த பக்தர்கள் நேர்த்திக்கடனாக தென்னங்கன்றுகளை வாங்கி மாதாவுக்கு சமர்ப்பித்தனர்.

    மேலும் பக்தர்கள் தங்களது வீடு, வாகனங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக பேராலயத்தில் அமைக்கப்பட்டுள்ள கொடிமரத்தில் பூட்டு வாங்கி பூட்டி நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகாத பெண்கள் தாலி வாங்கி கொடிமரத்தில் கட்டினர். திருமணமான பெண்கள் குழந்தை பாக்கியம் வேண்டி தொட்டில் வாங்கி பேராலய கொடிக்கம்பத்தில் கட்டி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும் உடல்நலம் பாதுகாக்கவும், படித்த மாணவர்கள் வேலை வாய்ப்பை பெறுவதற்காகவும், பல்வேறு குறைகள் தீர பேராலய பகுதியில் அமைந்துள்ள சிலுவை பாதையில் முட்டியிட்டு சென்று பழைய மாதா கோவிலில் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    வேளாங்கண்ணி மாதா பேராலய பொிய ேதர்பவனியையொட்டி பக்தர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சுகாதாரத்துறையின் மூலம் ஆங்காங்கே தினமும் 20 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மேலும் வேளாங்கண்ணியில் 10 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு மருத்துவ வசதி செய்யப்பட்டது. வெளியூரில் இருந்து ரெயிலில் வந்த பக்தர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் காய்ச்சல் கண்டறியப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் 485 துப்புரவு பணியாளர்கள் அமைக்கப்பட்டு தினமும் உடனுக்குடன் குப்பைகள் அகற்றும் பணி நடந்தது. பாதுகாப்பு பணியில் சுமார் 2 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனா்.

    • 10-ம்தேதி அன்னையின் அலங்கார தேர் பவனி நடைபெறுகிறது.
    • 11-ம்தேதி திருக்கொடி இறக்குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    புதுக்கடை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள முன்சிறை புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தின் 109-வது ஆண்டு குடும்ப திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. குழித்துறை மறை மாவட்ட தொடர்பாளர் அருட்தந்தை ஜேசு ரெத்தினம் தலைமையில் கொடியேற்றமும், அவரது தலைமையில் திருப்பலியும் நடைபெறுகிறது. 2-ம் நாளில் காலை 7 மணிக்கு அருட்தந்தை மார்ட்டின் தலைமையிலும், மாலை அருட்தந்தை ஜான் பென்கர் தலைமையிலும் திருப்பலி நடக்கிறது.

    3-ம் நாள் காலை 8.30 மணிக்கு அருட்தந்தை ஜீஸ் ரைமண்ட் தலைமையில் திருப்பலியும், தொடர்ந்து 11 மணிக்கு அன்பு விருந்தும், மாலை 5.30 மணிக்கு அருட்தந்தை காட்வின் செல்வ ஜஸ்டஸ் தலைமையில் திருப்பலி நடைபெறுகிறது. விழா நாட்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் ஜெபமாலை புகழ் மாலையுடன் தொடர்ந்து திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. 4-ம் நாள் காலையில் பங்கு அருட்தந்தை சேவியர் புரூஸ் தலைமையில் ஆரோக்கிய மாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஆங்கிலத் திருப்பலி நடைபெறுகிறது.

    விழாவில் 9-ம் நாள் காலை 8 மணிக்கு அருட்தந்தை பெஞ்சமின் தலைமையில் முதல் திருவிருந்து திருப்பலியும், மாலை அருட்தந்தை விக்டர் தலைமையில் திருப்பலியும், தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு அன்னையின் அலங்கார தேர் பவனியும் நடைபெறுகிறது. விழாவின் கடைசி நாளான 10-ம் நாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி அளவில் திருச்சி இறையியல் கல்லூரி அதிபர் அருட்தந்தை சேவியர் பெனடிக்ட் தலைமையில் விழா நிறைவு திருப்பலியும், காலை 11 மணிக்கு மலையாள திருப்பலியும், தொடர்ந்து அன்னையின் அலங்கார தேர் பவணியும் நடைபெறுகிறது.

    மாலை 5.30 மணிக்கு அருட்தந்தை அருள் தலைமையில் திருப்பலியும், திருக்கொடி இறக்குதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு பல் சமய பொதுக்கூட்டமும், தொடர்ந்து இளைஞர் இயக்கம் நடத்தும் திங்கள் நகர் ரிச்சு பாலா நாட்டியாலாவின் நடன நிகழ்ச்சியும், மதுரை மருதுவின் பல்சுவை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    விழாவில் நேற்றும், இன்றும் (வியாழக்கிழமை) அருட்தந்தையர்கள் தலைமையில் நற்செய்தி பெருவிழா நடைபெற்றது.

    விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை சேவியர் புரூஸ் தலைமையில் பங்கு மக்கள், விழா குழுவினர், பங்கு பேரவையினர் மற்றும் பக்த சபையினர் இணைந்து செய்து வருகிறார்கள்.

    • 8-ந்தேதி ஆரோக்கிய அன்னையின் பிறப்பு பெருவிழா நடக்கிறது.
    • 8-ந்தேதி இரவு அன்னையின் தேர் பவனியும் நடக்கிறது.

    தென்னகத்து வேளாங்கண்ணி என்று போற்றப்படும் புகழ்வாய்ந்த வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை திருத்தல திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. மாலை 6 மணிக்கு மதுரை மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி தலைமையில் அன்னையின் கொடியேற்றமும் சிறப்பு திருப்பலியும் நடந்தது. இதில் மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் இதன் முக்கிய விழா வருகிற 8-ந்தேதி ஆரோக்கிய அன்னையின் பிறப்பு பெருவிழா நடக்கிறது. அன்று மாலை 5 மணிக்கு நற்கருணை ஆராதனையும், 6 மணிக்கு முப்பெரும் விழா கூட்டுத் திருப்பலியையும் சேலம் மறை மாவட்ட ஆயர் அருள்செல்வம் ராயப்பன் நடத்துகிறார். இரவு 7 மணிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ளும் வண்ண விளக்குகள், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அன்னையின் தேர் பவனியும் நடக்கிறது.

    9-ந் தேதி காலை 6.30 மணிக்கு ஆரோக்கிய அன்னையின் திருக்கொடி பங்குதந்தை வளன் தலைமையில் இறக்கப்பட்டு நன்றி திருப்பலியுடன் விழா நிறைவு பெறுகிறது. இந்த திருவிழா ஏற்பாடுகளை எஸ்.வி.டி. அதிபர் அந்தோணி ஜோசப் அடிகளார், பங்குத்தந்தை வளன், உதவி பங்குதந்தை குழந்தை யேசுதாஸ் அடிகளார் மற்றும் இருபால் துறவியர் அன்பியங்கள் பங்குமக்கள் செய்து வருகின்றனர்.

    திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகசபாபதி தலைமையில் போலீசார் செய்துள்ளனர்.

    சென்னை சைதாப்பேட்டை சின்னமலையில் புனித ஆரோக்கிய மாதா திருத்தலத்தின் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 19-ந்தேதி வரை மிகவும் ஆடம்பரமாக இந்த விழா நடைபெற உள்ளது.
    சென்னை சைதாப்பேட்டை சின்னமலையில் புனித ஆரோக்கிய மாதா மற்றும் தோமையாரின் திருத்தலம் அமைந்துள்ளது. இது சென்னையில் உள்ள பழமையான ஆலயங்களில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் புனித ஆரோக்கிய மாதா ஆலயத்தின் திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    அந்தவகையில் 468-வது ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 19-ந் தேதி வரை மிகவும் ஆடம்பரமாக இந்த விழா நடைபெற உள்ளது.

    திருவிழாவின் ஒவ்வொரு நாளும் பல அருட்தந்தையர்களால் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. 12-ந் தேதி சென்னை மயிலை உயர் மறைமாவட்ட முன்னாள் பேராயர் ஏ.எம்.சின்னப்பா தலைமையில் நற்கருணை பெருவிழாவும், 15-ந் தேதி தர்மபுரி ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில் குடும்ப விழா திருப்பலியும், 18-ந் தேதி செங்கல்பட்டு ஆயர் நீதிநாதன் தலைமையில் ஆடம்பர தேர்த்திருவிழாவும் நடைபெற உள்ளது. 19-ந் தேதி மாலை 6 மணிக்கு சென்னை மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணி சாமி தலைமையில் கொடி இறக்கமும், திருப்பலியோடும் விழா நிறைவு பெற உள்ளது.
    பெங்களூரு சுதாமநகரில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலய 21-ம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்குகிறது
    பெங்களூரு எச்.ஏ.எல். சுதாமநகரில் புனித ஆரோக்கிய அன்னை ஜெப ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 21-ம் ஆண்டு திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    அதன் பிறகு திவ்ய நற்கருணை ஆசீர்வாதம் நடக்கிறது. நாளை (சனிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு திருப்பலியும், புனித தோமையர் ஆலயத்தில் இருந்து அன்னையின் தேர் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமும் நடக்கிறது. நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு திருப்பலியும், காலை 11 மணிக்கு அன்னதானமும் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை ஆலய பங்கு தந்தை ராஜரத்தினம் மற்றும் ஆலய கமிட்டியினர் செய்து வருகிறார்கள்.
    வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் பவனி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
    வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா கடந்த 29-ந்தேதி மதுரை உயர்மறைமாவட்ட பேராயர் அந்தோணிபாப்புசாமி தலைமையில கொடியேற்றத்துடன் தொடங்கியது. வண்ண விளக்குகள் மல்லிகை மலர் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் ஆரோக்கிய அன்னை பவனி வந்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து ஆரோக்கிய அன்னையின் திருக்கொடி பங்கு தந்தை ஆரோக்கியதாஸ் தலைமையில் இறக்கப்பட்டு நன்றி திருப்பலியுடன் விழா நிறைவுபெற்றது.

    திருவிழா ஏற்பாடுகளை எஸ்.வி.டி.அதிபர் ஜோசப் அடிகளார், பங்குத்தந்தை ஆரோக்கியதாஸ், எஸ்.வி.டி. உதவி பங்குதந்தை யூஜின்டென்சிங் அடிகளார், ஆன்மிக குரு அகஸ்டின்காரமல் அடிகளார் மற்றும் இருபால் துறவியர், அன்பியங்கள், பங்குமக்கள் செய்திருந்தனர். 
    புதுவை அரியாங்குப்பத்தில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை திருத்தலம் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தின் 328-ம் ஆண்டு பெருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    புதுவை அரியாங்குப்பத்தில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை திருத்தலம் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தின் 328-ம் ஆண்டு பெருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    சென்னை மயிலைமறை வட்ட முதன்மை குரு ஸ்டேன்லி செபாஸ்டின் நாளை காலை 6 மணி திருப்பலிக்கு பின் கொடியை ஏற்றி வைத்து பெருவிழாவை தொடங்கி வைக்கிறார். அன்று மாலை 5.30 மணிக்கு தேர் பவனி, நற்கருணை ஆசீர் இடம் பெறுகின்றன. ஆரோக்கிய அன்னை பிறந்த நாளான 8-ந் தேதி மாலை வீதிகளில் சிறப்பு தேர் பவனி நடை பெறுகிறது.

    அதைத்தொடர்ந்து நவநாட்களில் தினமும் காலை 6 மணிக்கு திருப்பலியும், மாலை 5.30 மணிக்கு திருப்பலி, மறையுரை, சிறிய தேர்பவனி, தேவ நற்கருணை ஆசீர் ஆகியவை இடம்பெறுகின்றன. அருட் தந்தையர்கள் அந்தோணி ராஜ், அமல்ராஜ், பெரிய நாயகசாமி, அந்தோணிசாமி, மார்ட்டின் டிகுருஸ், ஜான் பிரிட்டோ, விக்டர் ஆம்ஸ்ட்ராங் ஆகியோர் திருப்பலி நிறைவேற்றி சிறப்பு மறையுரை வழங்கு கின்றனர்.

    விழாவின் முக்கிய நிகழ் வான ஆண்டு பெருவிழா வருகிற 16-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அன்று காலை 5 மணிக்கும், 6.15 மணிக்கும் திருப்பலிகள் நடைபெறுகின்றன. தொடர்ந்து 8 மணிக்கு புதுவை- கடலூர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் ஆடம்பர கூட்டு திருப்பலி நடைபெறு கிறது.

    மதியம் 11.30-க்கு சிறப்பு திருப்பலியும், மாலை 5.30 மணிக்கு திருப்பலி, அதனைத்தொடர்ந்து ஆடம்பர தேர் பவனியும் நடைபெறுகிறது. மறுநாள் (17-ந்தேதி) காலை 6 மணி திருப்பலிக்குப்பின் கொடி இறக்கம் செய்யப்பட்டு பெருவிழா நிறைவு பெறு கிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை தாமஸ் தலைமையில் பங்கு நிர்வாக குழுவினர் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.
    நாகர்கோவில் அனந்தன்நகர் புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா இன்று(வெள்ளிக்கிழமை) தொடங்கி 9-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    நாகர்கோவில் அனந்தன்நகர் புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா இன்று(வெள்ளிக்கிழமை) தொடங்கி 9-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

    இன்று மாலை 6.15 மணிக்கு ஜெபமாலை, கொடியேற்றம், திருப்பலி நடக்கிறது. அருட்பணி செல்வராஜ் கொடியேற்றி வைக்கிறார். அருட்பணி தேவதாஸ் தலைமை தாங்குகிறார். அருட்பணி மைக்கேல் ஏஞ்சல் மறையுரையாற்றுகிறார்.

    2-ந் தேதி மதியம் 12 மணிக்கு அன்பு விருந்தும், மாலை 6 மணிக்கு நற்கருணை ஆசீரும் நடக்கிறது.

    8-ந் தேதி காலை 7.15 மணிக்கு ஜெபமாலை, முதல் திருவிருந்து திருப்பலி நடக்கிறது. இதற்கு மறைமாவட்ட முதன்மை குரு வி.ஹிலாரியுஸ் தலைமை தாங்குகிறார். அருட்பணி பெலிக்ஸ் அலெக்சாண்டர் மறையுரையாற்றுகிறார். மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, மாலை ஆராதனை நடக்கிறது. இதற்கு அருட்பணி டயனிஷியஸ் தலைமை தாங்குகிறார். அருட்பணி கிளேட்டன் மறையுரையாற்றுகிறார்.

    9-ந் தேதி 10-ம் திருவிழா நடக்கிறது. அன்று காலை 7.45 மணிக்கு ஜெபமாலையும், பெருவிழா திருப்பலியும் நடக்கிறது. அருட்பணி ரால்ப் கிராண்ட் மதன் தலைமை தாங்குகிறார். அருட்பணி பஸ்காலிஸ் மறையுரையாற்றுகிறார்.

    விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை பி.பிரபு, பங்கு இறைமக்கள், பங்கு மேய்ப்பு பணி பேரவையினர் செய்து வருகிறார்கள். 
    ராஜாக்கமங்கலம்துறை புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
    ராஜாக்கமங்கலம்துறை புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. விழாவில் இன்று மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை, 6 மணிக்கு திருவிழா கொடியேற்றம் நடைபெறுகிறது. தொடர்ந்து அருட்தந்தையர்கள் ஆன்றனி அல்காந்தர், ஜோசப் ரொமால்ட் ஆகியோர் திருப்பலி நிறைவேற்றுகிறார்கள்.

    2-ந் தேதி காலை 7.30 மணிக்கு அருட்தந்தை அல்போன்ஸ் தலைமையில் திருப்பலி, மாலை 6.30 மணிக்கு மறைக்கல்வி மன்ற ஆண்டு விழா ஆகியவை நடக்கிறது. தொடர்ந்து விழா நாட்களில் மாலை ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி, இரவு கலைநிகழ்ச்சிகள், கைப்பந்து போட்டி, கபடி போட்டி ஆகியவை நடைபெறுகிறது.

    8-ந் தேதி காலை 7 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, தொடர்ந்து அருட்தந்தை செல்வராஜ் தலைமையில் முதல் திருவிருந்து திருப்பலி, மாலை 6 மணிக்கு ஆராதனை ஆகியவை நடக்கிறது.

    9-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு புனித ஜெரோம் கல்லூரி அதிபர் அருட்தந்தை ஆக்னல் தலைமை தாங்கி திருவிழா திருப்பலி நிறைவேற்றுகிறார். 8 மணிக்கு பாதுகாவலர் திருவிழா திருப்பலி, மாலை 4 மணிக்கு அன்னையின் தேர் பவனி, 6 மணிக்கு ஜெபமாலை, கொடியிறக்கம், நன்றி வழிபாடு நற்கருணை ஆசீர் ஆகியவை நடக்கிறது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை ராஜ், பங்கு பேரவையினர், ஊர் பொதுமக்கள், அருட் சகோதரிகள் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

    ×