search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Varushabishekam"

    • கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு துளசிங்க நகரில் பிரசித்தி பெற்ற அம்மா பூமாதேவி ஆலயம் சித்தர் பீடத்தில் 30-வது ஆண்டு வருஷாபிஷேக விழா
    • சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மதியம் விஷேட சோடனை தீபாராதனையும் நடைபெற்றது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு துளசிங்க நகரில் பிரசித்தி பெற்ற அம்மா பூமாதேவி ஆலயம் சித்தர் பீடத்தில் 30-வது ஆண்டு வருஷாபிஷேக விழா மற்றும் செடி வந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருப்பள்ளியெழுச்சி பூஜை நடைபெற்றது. காலை 8 மணிக்கு மஹா கணபதி பூஜை, சங்கல்பம் கணபதி ஹோமம், அம்பாள் முலமந்திர ஹோமம் நடைபெற்றது. பின்னர் அம்பாள் குரு பரிவார தெய்வங்களுக்கும் மற்றும் உற்சவ அம்பாள் குருவுக்கும் மஞ்சள், மாபொடி, திரவியம், பால், தேன் மற்றும் சந்தனம் பூர்ன கும்பாபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மதியம் விஷேட சோடனை தீபாராதனையும் நடைபெற்றது.

    பூஜைகளை லட்சுமணன் சுவாமி தலைமையில் ஆலய அர்ச்சகர் செல்வ சுப்பிரமணியன், சங்கரேஷ்வரி ஆலய அர்ச்சகர் சுப்பிரமணியன் முரளிதரன் சுவாமிகள் செய்தனர். அதன்பிறகு முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான கடம்பூர் ராஜூ அன்னதானத்தை தொடங்கி வைத்தார். இதில் தொழில் அதிபர் எஸ்.கே.பி. முருகன் பிரேமா, பூமா டெக்ஸ் நவநீதராஜா, சுப்பையா, ராகவேந்திரா சேவா அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன், வார்டு உறுப்பினர் ராமர், யூனியன் துணை தலைவர் பழனிச்சாமி, சுப்பாராஜ், சங்கரேஸ்வரி, மாரியப்பன், ஆறுமுகம் மற்றும் திருவிளக்கு பூஜை குழுவினர் மீனாட்சி, லட்சுமி மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழா ஏற்பாடுகளை அம்மா பூமாதேவி ஆலய குழுவினர் செய்தனர்.

    • 24-ந் தேதி காலை 7 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, மகாகணபதி ஹோமம் நடக்கிறது.
    • மதியம் 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, அன்னதானம் நடக்கிறது.

    ஆரல்வாய்மொழி பரகோடி கண்டன் சாஸ்தா, மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் 13-ம் ஆண்டு வருஷாபிஷேக விழா வருகிற 24-ந் தேதி (புதன்கிழமை) நடக்கிறது.

    அன்று காலை 7 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாஜனம், பஞ்சகவ்ய பூஜை, கும்பபூஜை, மகாகணபதி ஹோமம், மூலமந்திரம், மாலாமந்திரம் ஹோமம், தீபாராதனை, 9 மணிக்கு மகா அபிஷேகம், மதியம் 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, 12.30 மணிக்கு அன்னதானம் போன்றவை நடைபெறும்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.

    • மூலஸ்தானம் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு அபிஷேகம் நடைபெற்றது.
    • மூலஸ்தானம் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு அபிஷேகம் நடைபெற்றது.

    நெல்லை பாளையங்கோட்டை மேலவாசல் பிரசன்ன விநாயகா் மற்றும் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் இந்த இடம் கோட்டையாக அமையப்பெற்று காவல் நிலையமாக செயல்பட்டு வந்தது. கோட்டையின் கீழே விநாயகா் மற்றும் முருகப்பெருமான் சன்னதிகள் அமைந்துள்ளது.

    காலப்போக்கில் கோட்டை சிதிலம் அடைந்தாலும் இக்கோவில்களில் பக்தர்கள் வழிபாடு நடத்தி வருகிறார்கள்.

    சிறப்பு வாய்ந்த இந்த சன்னதியில் 10-ம் ஆண்டு வருசாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. 3 நாட்கள் விழாவில் முதல்நாள் ஷண்முகா அர்ச்சனையும், 2-வது நாள் அருணகிரிநாதா் குருபூஜையும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான வருசாபிஷேக விழா நேற்று உத்திராட நட்சத்திரத்தில் நடைபெற்றது.

    இதற்காக காலை விக்னேஷ்வர பூஜை, பஞ்சகவ்ய பூஜை, மகா கணபதி ஹோமம், பூா்ணாகுதி தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கடம் புறப்பாடு நடைபெற்று பிரசன்ன விநாயகா் மற்றும் சுப்பிரமணியசுவாமி விமான கோபுரங்கள், மூலஸ்தானம் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து மூர்த்திகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. இரவில் பிரசன்ன விநாயகா், வள்ளி- தேவவேனா சமேத சுப்பிரமணிய சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.

    • இந்நிகழ்ச்சியில் வெள்ளூர் ஊர் பொதுமக்கள் சீர்வரிசை உடன் வந்து சாமி தரிசனம் செய்தனர்.
    • இதனை தொடர்ந்து அம்பாள் - சுவாமி விதி உலா நடைபெற்றது.

    ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வெள்ளூர் சிவகாமி அம்பாள் உடனுறை மத்தியபதி ஈஸ்வரர் நடுநக்கர் கோவில் வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று காலை மணி 9.30 மணிக்கு கோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகமும், காலை மணி 11.45 மணிக்கு கணபதி, முருகன், அம்பாள் சுவாமிக்கு கும்பாபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது.

    மதியம் 12 மணி அளவில் ஊர் பொதுமக்களுக்கு அன்னதானம் நிகழ்ச்சி நடந்தது. இரவு 7 மணிக்கு சிவபெருமானுக்கும் சிவகாமி அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வெள்ளூர் ஊர் பொதுமக்கள் சீர்வரிசை உடன் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    இதனை தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு அம்பாள் - சுவாமி விதி உலா நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரத்திலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • இன்று மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.
    • இன்று இரவு மூலவருக்கு அபிஷேகம் நடைபெறாது.

    திருச்செந்தூர் சுப்பிர மணியசாமி கோவிலில் இன்று ஆனி வருசாபிஷேக விழா நடைபெற்றது.

    இதையொட்டி கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கோவில் மகா மண்டபத்தில் மூலவர், வள்ளி, தெய்வானை அம்பாள் கும்பங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    பின்னர் குமரவிடங்க பெருமான் சன்னதியில் சண்முகம் கும்பத்திற்கும், பெருமாள் சன்னதியில் பெருமாள் கும்பத்திற்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    தொடர்ந்து பூஜையில் வைக்கப்பட்ட கும்ப கலசங்கள் கோவில் விமான தளத்திற்கு கொண்டு வரப்பட்டு காலை 9 மணிக்கு மூலவர், சண்முகர், பெருமாள் ஆகிய விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து வள்ளி, தெய்வானை அம்பாள் விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு வருஷாபிசேகம் நடைபெற்றது.


    வருசாபிஷேக விழாவில், திருச்செந்தூர் கோவில் தக்கார் இரா. கண்ணன் ஆதித்தன், கோவில் இணை ஆணையர் கார்த்திக், கோவில் உள்துறை சூப்பிரண்டு ராஜேந்தின், தக்கார் பிரதிநிதி டாக்டர் பாலசுப்பிரமணிய ஆதித்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி குமரவிடங்க பெருமானும் வள்ளி அம்பாளும் தனித்தனி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நடக்கிறது.

    இன்று இரவு மூலவருக்கு அபிஷேகம் நடைபெறாது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    • நாளை அதிகாலை 4 மணிக்கு கோவில் நடைதிறக்கப்படும்.
    • மூலவர், வள்ளி, தெய்வானை அம்மாள் கும்பங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் இணை ஆணையர் கார்த்திக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை (வெள்ளிக்கிழமை) ஆனி வருசாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி நாளை அதிகாலை 4 மணிக்கு கோவில் நடைதிறக்கப்படும். 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் தீபாராதனையும் நடக்கிறது.

    பின்னர் கோவில் மகாமண்டபத்தில் மூலவர், வள்ளி, தெய்வானை அம்மாள் கும்பங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. குமரவிடங்கபெருமான் சன்னதியில் சண்முகர் கும்பத்திற்கும், பெருமாள் சன்னதியில் பெருமாள் கும்பத்திற்கும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. பின்னர் பூஜையில் வைக்கப்பட்ட கும்பங்கள் கோவில் விமான தளத்திற்கு கொண்டுவரப்பட்டு காலை 8.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் மூலவர், சண்முகர், பெருமாள் ஆகிய விமான கலசத்திற்கு வருசாபிஷேகம் நடக்கிறது.

    தொடர்ந்து வள்ளி, தெய்வானை அம்பாள் விமான கலசத்திற்கு வருஷாபிஷேகம் நடக்கிறது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி குமரவிடங்கபெருமானும், வள்ளி அம்பாளும் தனித்தனி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர். இரவு மூலவருக்கு அபிஷேகம் நடைபெறாது.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    விநாயகருக்கு கும்பாபிஷேகமும், முத்தாரம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், 1,008 சங்காபிஷேகமும், வருசாபிஷேகமும் நடந்தது. பின்னர் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகமும், அம்மனுக்கு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
    திருச்செந்தூர் முத்தாரம்மன் கோவிலில் வருசாபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி காலையில் கணபதி ஹோமம், 1,008 சங்கு பூஜை, கும்ப பூஜை, ஹோமம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து காலை 10.30 மணிக்கு விமான கலசத்துக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் விநாயகருக்கு கும்பாபிஷேகமும், முத்தாரம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், 1,008 சங்காபிஷேகமும், வருசாபிஷேகமும் நடந்தது. பின்னர் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகமும், அம்மனுக்கு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

    பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இரவில் புஷ்பாஞ்சலி நடந்தது. நிகழ்ச்சியில், சைவ வேளாளர் ஐக்கிய சங்க தலைவர், செயலாளர் சந்தனராஜ், பொருளாளர் ஞான சுந்தரம், நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×