search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பிரசன்ன விநாயகா் மற்றும் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வருசாபிஷேக விழா
    X

    பிரசன்ன விநாயகா் மற்றும் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வருசாபிஷேக விழா

    • மூலஸ்தானம் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு அபிஷேகம் நடைபெற்றது.
    • மூலஸ்தானம் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு அபிஷேகம் நடைபெற்றது.

    நெல்லை பாளையங்கோட்டை மேலவாசல் பிரசன்ன விநாயகா் மற்றும் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் இந்த இடம் கோட்டையாக அமையப்பெற்று காவல் நிலையமாக செயல்பட்டு வந்தது. கோட்டையின் கீழே விநாயகா் மற்றும் முருகப்பெருமான் சன்னதிகள் அமைந்துள்ளது.

    காலப்போக்கில் கோட்டை சிதிலம் அடைந்தாலும் இக்கோவில்களில் பக்தர்கள் வழிபாடு நடத்தி வருகிறார்கள்.

    சிறப்பு வாய்ந்த இந்த சன்னதியில் 10-ம் ஆண்டு வருசாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. 3 நாட்கள் விழாவில் முதல்நாள் ஷண்முகா அர்ச்சனையும், 2-வது நாள் அருணகிரிநாதா் குருபூஜையும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான வருசாபிஷேக விழா நேற்று உத்திராட நட்சத்திரத்தில் நடைபெற்றது.

    இதற்காக காலை விக்னேஷ்வர பூஜை, பஞ்சகவ்ய பூஜை, மகா கணபதி ஹோமம், பூா்ணாகுதி தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கடம் புறப்பாடு நடைபெற்று பிரசன்ன விநாயகா் மற்றும் சுப்பிரமணியசுவாமி விமான கோபுரங்கள், மூலஸ்தானம் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து மூர்த்திகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. இரவில் பிரசன்ன விநாயகா், வள்ளி- தேவவேனா சமேத சுப்பிரமணிய சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.

    Next Story
    ×