search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vande Bharat Express"

    வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் டெல்லியில் இருந்து வாரணாசிக்கு இன்று(நேற்று) தனது முதல் வர்த்தகப்பயணத்தை தொடங்கியது. #VandeBharatExpress #Delhi #Varanasi
    புதுடெல்லி:

    நாட்டின் முதல் அதிவேகமான ரெயிலை சென்னை ஐ.சி.எப் தொழிற்சாலை தயாரித்தது. என்ஜின் இல்லாமல் இயங்கக்கூடிய இந்த ரெயிலுக்கு ‘வந்தே பாரத்’ எனப் பெயரிடப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை டெல்லியில் நடந்த விழாவில் பிரதமர் மோடி ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரெயிலைக் கொடியசைத்து தொடங்கி வைத்தார். சோதனை ஓட்டமாக டெல்லியில் இருந்து உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி நகருக்கு சென்ற வந்தே பாரத் ரெயில், அங்கிருந்து டெல்லிக்கு திரும்பியபோது நடுவழியில் பழுதானது. பின்னர் பழுது நீக்கப்பட்டு டெல்லி கொண்டு வரப்பட்டது.

    இந்நிலையில், ‘வந்தேபாரத்’ எக்ஸ்பிரஸ் ரெயில் வர்த்தக ரீதியான தனது முதல் பயணத்தை நேற்று தொடங்கியது. இது குறித்து ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கையில், ‘வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் டெல்லியில் இருந்து வாரணாசிக்கு இன்று(நேற்று) தனது முதல் வர்த்தகப்பயணத்தை தொடங்கியது. அடுத்த 2 வாரங்களுக்கு டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன. உங்களுக்கான டிக்கெட்டுகளை இன்றே பெறுங்கள்” என குறிப்பிட்டார். 
    பிரதமர் மோடியால் நேற்று தொடங்கி வைக்கப்பட்ட ‘வந்தே பாரத்’ அதிவேக எக்ஸ்பிரஸ் ரெயில் தனது பயணத்தின் இரண்டாவது நாளான இன்று சிறிய கோளாறால் தாமதமாக டெல்லி வந்து சேர்ந்தது. #EnginelessTrain #VandeBharatExpress
    புதுடெல்லி:

    மணிக்கு 180 கிலோமீட்டர் வேகம் வரை செல்லக்கூடிய அதிவேக மின்சார ரெயிலை சென்னை ஐ.சி.எப். இணைப்புப் பெட்டி தொழிற்சாலை சமீபத்தில் தயாரித்தது.

    டெல்லி-வாரணாசி வழித்தடத்தில் ஓடும் இந்த அதிநவீன ரெயிலுக்கு ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ரெயிலின் சேவையை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். டெல்லியில் இருந்து நேற்று காலை வாரணாசி நோக்கி புறப்பட்டு சென்ற ரெயில் நேற்றிரவு 10.30 மணியளவில் வாரணாசியில் இருந்து டெல்லி நோக்கி புறப்பட்டது.

    இன்று காலை 6.30 மணியளவில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள துன்ட்லா சந்திப்பு வழியாக வந்தபோது ‘பிரேக்’ சரியாக பிடிக்காமல் சக்கரங்கள் வழுக்கிச் செல்வதை உணர்ந்த ரெயிலின் டிரைவர் வேகத்தை குறைத்து ரெயிலை அங்கே நிறுத்தினார். பின்னர் சுமார் ஒருமணி நேரம் பழுது பார்க்கும் பணி முடிந்து அங்கிருந்து ரெயில் புறப்பட்டது.

    இந்த ரெயிலின் முதல் வெள்ளோட்டத்தை ரசிப்பதற்காக ஏராளமான பத்திரிகை நிருபர்களும், செய்தியாளர்களும் அதில் பயணித்தனர். சரியாக பிரேக் பிடிக்காதபோது அந்த ரெயிலின் முதல் மற்றும் கடைசி பெட்டிகளில் இருந்து அதிர்வதைப்போன்ற சப்தம் கேட்டதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

    கடைசி 4 பெட்டிகளில் சிறிய புகையுடன் ஏதோ தீய்ந்ததுபோல் வாசனை வந்ததாகவும், மின்சாரம் தடைபட்டதாகவும் கூறப்படுகிறது.

    பின்னர் 8.15 மணியளவில் ரெயில் அங்கிருந்து புறப்பட்டது. பிரேக் சரியாக இயங்காததால் ஆரம்பத்தில் மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்திலும், பின்னர் படிப்படியாக அதிகரித்து சுமார் 40 கிலோமீட்டர் வேகத்திலும் ரெயில் செல்ல தொடங்கியது.

    இதற்கிடையே, அதில் இருந்த பத்திரிகையாளர்கள் அவ்வழியாக சென்ற மற்றொரு ரெயிலில் டெல்லிக்கு ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர்.



    காலை சுமார் 8.55 மணியளவில் மீண்டும் ‘பிரேக்’ பிரச்சனை ஏற்பட்டு சரிபார்ப்பு பணி முடிந்து ‘வந்தே பாரத்’ ஒருவழியாக இன்று பிற்பகல் ஒருமணியளவில் டெல்லி வந்து சேர்ந்தது.

    இருட்டில் ரெயில் செல்லும்போது தண்டவாளத்தின் குறுக்கே ஓடும் கால்நடைகள் அடிபட்டு சாவதுண்டு. அப்படி நேற்றிரவு சில கால்நடைகள் அடிபட்டு, அவற்றின் மாமிசம் அல்லது ரத்தம் ரெயில் சக்கரங்களில் ஒட்டியிருந்தால் பிரேக் பிடிக்காமல் சக்கரங்கள் வழுக்கிச்செல்ல வாய்ப்புண்டு என்று ரெயில்வே அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர்.

    இதுதொடர்பான செய்தி வெளியானதும் சமூக வலைத்தளங்களில் பல்வேறு விமர்சனங்கள் பதிவாகியுள்ளது.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவில், ‘மோடி அரசின் செயல்திறனுக்கு இந்த ரெயில் மிகச்சிறந்த உதாரணம்’ என தெரிவித்துள்ளார்.

    நாளை (ஞாயிறு) முதல் வர்த்தகரீதியான போக்குவரத்தை தொடங்கும் ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரெயிலில் சுமார் ஒருவாரம் வரை முன்பதிவு நிறைவடைந்து ஆயிரக்கணக்கான பயணிகள் உற்சாகமான பயணத்துக்காக காத்திருப்பது குறிப்பிடத்தக்கது. #EnginelessTrain #VandeBharatExpress
    டெல்லி-வாரணாசி வழித்தடத்தில் ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ என்ற அதிவேக ரெயில் சேவையை பிரதமர் மோடி இன்று துவக்கி வைத்தார். #EnginelessTrain #VandeBharatExpress
    புதுடெல்லி:

    இந்தியாவில் முதல் முறையாக ‘ரெயில்-18’ என்ற பெயரில் என்ஜின் இல்லாத ரெயில் தயாரிக்கப்பட்டுள்ளது. 16 பெட்டிகள் கொண்ட இந்த ரெயில், சென்னை பெரம்பூரில் உள்ள ரெயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
     
    வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த ரெயிலுக்கு என்ஜின் தனியாக இருக்காது. பெட்டிகளுடன் இணைக்கப்பட்டதாக இருக்கும். மணிக்கு 180 கிமீ வேகம் வரை செல்லும் இந்த ரெயிலின் சோதனை ஓட்டம் கடந்த ஆண்டு இறுதியில் வெற்றிகரமாக நடைபெற்றது. இதையடுத்து இந்த ரெயிலை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நடவடிக்கைகள் தொடங்கின.

    இந்நிலையில், நாட்டின் முதல் என்ஜின் இல்லா ரெயிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் துவக்கி வைத்து உரையாற்றினார். முன்னதாக, ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்களுக்கு, பிரதமர் மோடி 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்.



    வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் டெல்லியில் இருந்து வாரணாசி வரை இயக்கப்படுகிறது. 30 ஆண்டு காலமாக இயக்கப்படும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு மாற்றாக இது அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. #EnginelessTrain #VandeBharatExpress
    இந்தியாவின் முதல் என்ஜின் இல்லாத ரெயிலை, வரும் 15-ம் தேதி பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைக்க உள்ளார். #EnginelessTrain #VandeBharatExpress
    புதுடெல்லி:

    இந்தியாவின் முதல் முறையாக ‘ரெயில்-18’ என்ற பெயரில் என்ஜின் இல்லாத ரெயில் தயாரிக்கப்பட்டுள்ளது. 16 பெட்டிகள் கொண்ட இந்த ரெயில், சென்னை பெரம்பூரில் உள்ள ரெயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

    வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த ரெயிலுக்கு என்ஜின் தனியாக இருக்காது. பெட்டிகளுடன் இணைக்கப்பட்டதாக இருக்கும். மணிக்கு 180 கிமீ வேகம் வரை செல்லும் இந்த ரெயிலின் சோதனை ஓட்டம் கடந்த ஆண்டு வெற்றிகரமாக நடைபெற்றது.

    இந்நிலையில், நாட்டின் முதல் என்ஜின் இல்லா ரெயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி வரும் 15-ம் தேதி டெல்லியில் துவக்கி வைக்க உள்ளார். இத்தகவலை ரெயில்வே துறையின் மூத்த அதிகாரி ஒருவர் பிடிஐ-க்கு அளித்த பேட்டியின்போது கூறியுள்ளார்.

    ‘டெல்லியில் பிப்ரவரி 15-ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியின்போது, காலை 10 மணியளவில் என்ஜின் இல்லா ரெயிலை பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைத்து உரையாற்ற உள்ளார். இந்த ரெயில், ரெயில்வேயின் முதல் உள்நாட்டு தயாரிப்பு என்பது பெருமைக்குரிய விஷயம்’ என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.



    இந்த ரெயில் டெல்லியில் இருந்து வாரணாசி வரை இயக்கப்படுகிறது. 30 ஆண்டு காலமாக இயக்கப்படும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு மாற்றாக இது அமையும்.

    டெல்லி மும்பை ராஜ்தானி வழித்தடத்தில் சோதனை ஓட்டத்தின்போது, இந்த என்ஜின் இல்லா ரெயில் 180 கிமீ வேகம் வரை சென்றது. இதன்மூலம் இந்தியாவின் அதிவேக ரெயில் என்ற பெருமையையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. #EnginelessTrain #VandeBharatExpress
    சென்னையில் தயாரான அதிவேக ரெயிலுக்கு ‘வந்தே பாரத்’ என புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த ரெயில் டெல்லி-வாரணாசி இடையே இயக்கப்பட இருக்கிறது. #VandeBharatExpress #IndiaFastestIndigenousTrain
    புதுடெல்லி:

    என்ஜின் இன்றி தானியங்கி முறையில் செயல்படும் இந்தியாவின் முதலாவது ரெயில் சென்னையில் உள்ள ரெயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐ.சி.எப்.) தயாரிக்கப்பட்டது. பதினெட்டே மாதங்களில் தயார் செய்யப்பட்டதால் இந்த அதிவேக ரெயிலுக்கு, ‘ரெயில் 18’ என பெயர் வந்தது.

    ரூ.100 கோடி செலவில், முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய ‘ரெயில் 18’ கடந்த ஆண்டு அக்டோபர் 29-ந் தேதி அறிமுகம் செய்யப்பட்டது.

    16 பெட்டிகளை கொண்ட இந்த ரெயில் பெட்டிகள் முற்றிலும் குளிர்சாதன வசதி கொண்டது. மேலும் பல்வேறு அதிநவீன வசதிகளையும் கொண்டுள்ளது. மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் இந்த ரெயிலின் சோதனை ஓட்டம் கடந்த மாதம் ராஜஸ்தான் மாநிலத்தில் வெற்றிகரமாக நடந்தது.

    இந்த நிலையில், தற்போது இந்த ரெயிலுக்கு ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ என புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த ரெயில் டெல்லி-வாரணாசி இடையே இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் கூறியதாவது:-

    ‘ரெயில் 18’ இன்று முதல் ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ என்று அழைக்கப்படும். நாடு முழுவதும் பொதுமக்கள் எண்ணற்ற பெயர்களை சிபாரிசு செய்தனர். ஆனால் ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ என்பதைதான் முடிவு செய்தோம்.

    முற்றிலும் இந்தியாவில், இந்திய பொறியாளர்களால் தயாரிக்கப்பட்ட இந்த ரெயில், உலகத்தரம் வாய்ந்த ரெயில்களை ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் உருவாக்க முடியும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.

    ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ ரெயிலை டெல்லி-வாரணாசி இடையே இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. விரைவில் இந்த ரெயில் சேவை தொடங்கும்.

    இதனை கொடியசைத்து தொடங்கி வைக்கும்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #VandeBharatExpress #IndiaFastestIndigenousTrain 
    இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பான அதிவேக ரெயிலுக்கு ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி பியுஷ் கோயல் இன்று தெரிவித்துள்ளார். #Train18 #VandeBharatExpress #PiyushGoyal
    புதுடெல்லி:

    இந்தியாவில் ஓடும் ரெயில்களின் வேகத்தை அதிகரித்து வெளிநாடுகளில் உள்ளதைப்போல் பயண நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் அதிவேக ரெயில் சேவையை விரைவில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    அவ்வகையில், கடந்த ஆண்டில் பல வழித்தடங்களில் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் ரெயில்கள் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதற்காக அதிவிரைவு ரெயில் பெட்டிகள் தயாரிக்க வெளிநாட்டு நிறுவனங்களிடம் டெண்டர் கோரப்பட்டது.

    ஆனால், வெறும் 315 பெட்டிகளை தயாரிக்க எந்த நிறுவனமும் முன்வராததால் வெளிநாட்டு தொழில்நுட்பத்துடன் இந்தியாவில் தயாரிக்க தீர்மானிக்கப்பட்டது. முதல்கட்டமாக 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரு ரெயில்களுக்கான பெட்டிகளை சென்னை வில்லிவாக்கம் அருகில் உள்ள இணைப்பு பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கும் பணிகள் தொடங்கியது.

    இதேபோல், உத்தரபிரதேசம் மாநிலம், ரேபரேலி நகரில் உள்ள இணைப்புப்பெட்டி தொழிற்சாலையில் 97 கோடி ரூபாய் செலவில் 16 பெட்டிகளை கொண்ட அதிவிரைவு ரெயிலும் 18 மாதங்களில் தயாரிக்கப்பட்டது. 

    ‘டிரெயின்-18’ என பெயரிடப்பட்டுள்ள இந்த ரெயில் டெல்லி-வாரணாசி நகரங்களுக்கிடையில் செயல்படவுள்ளது. இந்த ரெயிலின் முதல் பயணிகள் சேவையை பிரதமர் மோடி விரைவில் கொடியசைத்து தொடங்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், முற்றிலுமாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள இந்த ரெயிலுக்கு ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ என பெயரிடப்பட்டுள்ளதாக ரெயில்வே துறை மந்திரி பியுஷ் கோயல் இன்று தெரிவித்துள்ளார். #Train18 #VandeBharatExpress #PiyushGoyal
    ×