search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "renamed"

    சென்னையில் தயாரான அதிவேக ரெயிலுக்கு ‘வந்தே பாரத்’ என புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த ரெயில் டெல்லி-வாரணாசி இடையே இயக்கப்பட இருக்கிறது. #VandeBharatExpress #IndiaFastestIndigenousTrain
    புதுடெல்லி:

    என்ஜின் இன்றி தானியங்கி முறையில் செயல்படும் இந்தியாவின் முதலாவது ரெயில் சென்னையில் உள்ள ரெயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐ.சி.எப்.) தயாரிக்கப்பட்டது. பதினெட்டே மாதங்களில் தயார் செய்யப்பட்டதால் இந்த அதிவேக ரெயிலுக்கு, ‘ரெயில் 18’ என பெயர் வந்தது.

    ரூ.100 கோடி செலவில், முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய ‘ரெயில் 18’ கடந்த ஆண்டு அக்டோபர் 29-ந் தேதி அறிமுகம் செய்யப்பட்டது.

    16 பெட்டிகளை கொண்ட இந்த ரெயில் பெட்டிகள் முற்றிலும் குளிர்சாதன வசதி கொண்டது. மேலும் பல்வேறு அதிநவீன வசதிகளையும் கொண்டுள்ளது. மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் இந்த ரெயிலின் சோதனை ஓட்டம் கடந்த மாதம் ராஜஸ்தான் மாநிலத்தில் வெற்றிகரமாக நடந்தது.

    இந்த நிலையில், தற்போது இந்த ரெயிலுக்கு ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ என புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த ரெயில் டெல்லி-வாரணாசி இடையே இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் கூறியதாவது:-

    ‘ரெயில் 18’ இன்று முதல் ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ என்று அழைக்கப்படும். நாடு முழுவதும் பொதுமக்கள் எண்ணற்ற பெயர்களை சிபாரிசு செய்தனர். ஆனால் ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ என்பதைதான் முடிவு செய்தோம்.

    முற்றிலும் இந்தியாவில், இந்திய பொறியாளர்களால் தயாரிக்கப்பட்ட இந்த ரெயில், உலகத்தரம் வாய்ந்த ரெயில்களை ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் உருவாக்க முடியும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.

    ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ ரெயிலை டெல்லி-வாரணாசி இடையே இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. விரைவில் இந்த ரெயில் சேவை தொடங்கும்.

    இதனை கொடியசைத்து தொடங்கி வைக்கும்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #VandeBharatExpress #IndiaFastestIndigenousTrain 
    தெலுங்கானாவில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் கரீம் நகரின் பெயர் கரிபுரம் என மாற்றப்படும் என உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். #KarimNagar #Karipuram #BJP #YogiAdityanath
    கரீம்நகர்:

    தெலுங்கானா மாநிலத்தில் ஆட்சியை பிடிப்பதற்காக உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தை பா.ஜனதா கட்சி பிரசாரத்தில் களம் இறக்கியது.

    நேற்று அவர் கரீம் நகரில் தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.

    அப்போது பேசிய அவர், ‘‘மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் கரீம் நகரின் பெயர் கரிபுரம் என மாற்றப்படும், உங்கள் உணர்வுகள் மதிக்கப்படும்’’ என கூறினார்.

    யோகி ஆதித்யநாத், கடந்த 2-ந் தேதி ஐதராபாத்தில் பிரசாரம் செய்தபோது, ‘‘ஐதராபாத்தின் பெயரை பாக்ய நகர் என மாற்ற வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், பா.ஜனதா கட்சியை ஆட்சி செய்வதற்கு தேர்ந்தெடுங்கள்’’ என்று அழைப்பு விடுத்தது நினைவுகூரத்தக்கது.

    தெலுங்கானா மாநில பா.ஜனதா கட்சி தலைவர் டி.ராஜாசிங் லோத், பா.ஜனதா கட்சி ஆட்சியைப் பிடித்தால் அந்த மாநிலத்தில் உள்ள பல நகரங்களின் பெயர்கள், தலைவர்களின் பெயர்களைக் கொண்டு மாற்றப்படும் என கூறியது குறிப்பிடத்தக்கது. #KarimNagar #Karipuram #BJP #YogiAdityanath
    உத்தரபிரதேசத்தில் உள்ள அலகாபாத் நகரின் பெயர் ‘பிரயாக்ராஜ்’ என்று மாற்றப்படுவதாக உத்தரபிரதேச முதல்மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். #Allahabad #Prayagraj #YogiAdityanath
    அலகாபாத்:

    இந்தியாவில் பல நகரங்களின் பெயர்கள் மாற்றப்பட்டு உள்ளன. அந்த வகையில் புதிதாக, உத்தரபிரதேசத்தில் உள்ள அலகாபாத் நகரின் பெயர் ‘பிரயாக்ராஜ்’ என்று மாறுகிறது.

    இது தொடர்பாக அந்த மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் நேற்று அலகாபாத்தில் கும்ப மார்க்தர்ஷக் மண்டல் என்ற அமைப்பை சேர்ந்தவர்களை சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில், துறவிகள் உள்ளிட்டோரின் கோரிக்கையை ஏற்று விரைவில், அலகாபாத் என்ற பெயர் ‘பிரயாக்ராஜ்’ என மாற்றப்படும் என்றும், இதற்கு அனுமதி வழங்க கோரி மத்திய அரசுக்கு உத்தரபிரதேச அரசு கடிதம் எழுதும் என்றும் கூறினார்.

    அலகாபாத் நகரின் பெயரை ‘பிரயாக்ராஜ்’ என மாற்றுமாறு துறவிகள் உள்ளிட்டோர் விடுத்துள்ள கோரிக்கைக்கு, மாநில கவர்னர் ராம்நாயக் ஏற்கனவே ஆதரவு தெரிவித்து இருப்பதாகவும் அப்போது அவர் தெரிவித்தார்.  #Allahabad #Prayagraj #YogiAdityanath  
    ×