search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vaccination Camp"

    • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று 32- வது கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
    • மாவட்ட கலெக்டர் ஷர்வன் குமார் ஜடாவத் தலைமைதாங்கி முகாமினை தொடங்கி வைத்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று 32- வது கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது. அதன்படி கள்ளக்குறிச்சி நகராட்சி வளாகத்தில் நகர்புற சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஷர்வன் குமார் ஜடாவத் தலைமைதாங்கி முகாமினை தொடங்கி வைத்தார். சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் ராஜா, வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா, நகர மன்ற தலை–வர் சுப்ராயலு, நகராட்சி ஆணையர் குமரன் ஆகி–யோர் முன்னிலை வைத்தனர். இதில் வட்டார மருத்துவ அலுவலர் பாலதண்டாயுத–பாணி, மருத்துவர்கள் ஜெகதீஷ், பிரபாவதி, ஜெனிபர் ராகுல் ஆகி–யோர் பங்கேற்றனர். மேலும் அடங்கிய மருத்துவ குழுவினர் பொது–மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தினர்.

    தொடர்ந்து மாவட்ட கலெக்டர் கூறியதாவது, தமிழகத்தில் தற்போது கொரோனா பெருந்தொற்று பரவி வரும் நிலையில், மெகா கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெறுகிறது. இந்த சிறப்பு முகாம் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார மருத்துவ–மனைகள், மருத்து–வக்கல்லூரி மருத்துவமனை, பொதுமக்கள் அதிகம் கூடும்இடங்களில் நடைபெறுகிறது. மேலும், சிறப்பு ஏற்பா–டாக டி.என்.பி.எஸ்.சி. தேர்வு நடைபெறும் 93 மையங்கள் உட்பட2,448-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. 75-வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குமுன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி (Booster Dose) 15.07.2022 முதல் 30.09.2022 வரை 75 நாட்களுக்கு அனைத்து தடுப்பூசி மையங்களிலும் இலவசமாக செலுத்தப்படுகிறது. கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத பொதுமக்கள் கொரோனா பெருந்தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிசெலுத்திக்கொள்ளுமாறும், இரண்டு தவணை செலுத்தியவர்கள் மூன்றாவ–தாக முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இப்பணிக்காக 416 தடுப்பூசி குழுக்கள் நியமிக்கப்பட்டு 40,500 எண்ணிக்கையிலான தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு–ள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • 1000-க்கும் மேற்பட்ட இடங்களில் செயல்பட்டது
    • நடமாடும் வாகனங்கள் மூலமும் தடுப்பூசி போடப்பட்டது.

    திருப்பத்தூர்:

    தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. 2 தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் நிறைவடைந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    முன்னதாக தமிழகத்தில் அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி செலுத்த வாரம் தோறும் மாநிலம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

    திருப்பத்தூரில் 1000-க்கும் மேற்பட்ட இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

    நடமாடும் வாகனங்கள் மூலமும் தடுப்பூசி போடப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் தடுப்பூசிகளை செலுத்தி கொண்டனர்.

    • 948 இடங்களில் நடந்தது
    • பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் இன்று 948 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.

    தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. 2 தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் நிறைவடைந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    முன்னதாக தமிழகத்தில் அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி செலுத்த வாரம் தோறும் மாநிலம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

    இந்த நிலையில் 32 வது சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் இன்று தமிழகம் முழுவதும் 1 லட்சம் மையங்களில் முகாம் அமைத்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். அதன்படி வேலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகரப்புற சுகாதார மையங்கள், பள்ளிகள் என 948 மையங்களில் இன்று காலை முதல் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது.

    இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

    • ஆடுகளுக்கான தடுப்பூசி முகாம் 20-ந் தேதி நடந்து வருகிறது.
    • மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் செம்மறி ஆடுகள் மற்றும் வெள்ளாடுகளை பாதிக்கும் ஆட்டுக்கொல்லி நோய் பரவாமல் தடுக்கும் வகையிலும், பருவமனை தொடங்க உள்ளதால் ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம் இன்று (20-ந் தேதி) முதல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை மருந்தகங்களில் நடைபெறுகிறது.

    ஆடு வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள கால்நடை மருந்தகங்களில் தடுப்பூசி போடப்படும் நாட்களில் முறையாக ஆடுகளுக்கு தடுப்பூசி போட்டு நோயில் இருந்து ஆடுகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

    • கடலூர் மாநகராட்சியில் 150 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் மேயர் சுந்தரி ராஜா அவர்களால் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.
    • கடலூர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    கடலூர்:

    கொரோனா பரவலை தடுக்கும் விதமாக கடலூர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடலூர் மாநகராட்சியில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமை தாங்கி தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார். துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன், செயற்பொறியாளர், புண்ணியமூர்த்தி , நகர் நல அலுவலர் டாக்டர் அரவிந்த் ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதனை தொடர்ந்து கடலூர் மாநகராட்சி முழுவதும் 150 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் மாநகர தி.மு.க. செயலாளர் கே.எஸ்.ராஜா மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டனர். மேலும் தடுப்பூசி போடாத நபர்களை கண்டறிந்து தடுப்பூசி போடுவதற்கு மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி வீடுகள் தோறும் நேரில் சென்று தடுப்பூசி போடும் பணியிலும் பணியாளர்கள் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். இதில் மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • கோவையில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த சில தினங்களாக ஒருநாள் பாதிப்பானது 100-யை தாண்டி பதிவாகி வருகிறது.
    • முகாமுக்கு வந்த மக்கள் அனைவரும் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியையும் கடைபிடித்தனர்.

    கோவை:

    கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த சில தினங்களாக ஒருநாள் பாதிப்பானது 100-யை தாண்டி பதிவாகி வருகிறது.

    தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்டத்தில் பொது–இடங்களில் மக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. முககவசம் அணியாதவர்களிடம் இருந்து ரூ.500 அபராதம் வசூலிக்கப்படுகிறது.

    கொரோனாவில் இருந்து தப்பிக்க தடுப்பூசி ஒன்றே ஆயுதம் என்பதால் அரசு, மாவட்ட நிர்வாகம் அனைவரும் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தி வருகிறது. மேலும் தடுப்பூசி போடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது.

    கோவையில் இன்று 31-வது மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. கிராமப்புறங்களில் 2,304 மையங்கள், மாநகரில் 950 என மொத்தம் 3,254 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய முகாமானது இரவு 7 மணி வரை நடந்தது.

    முகாமுக்கு காலை முதலே மக்கள் வந்த வண்ணம் இருந்தனர். இதுவரை ஒரு தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் மற்றும் 2-வது தவணை செலுத்துபவர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

    இதுதவிர 2 தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதங்கள் நிறைவடைந்தவர்கள், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட அனுமதிக்கப்ப–ட்டுள்ளது. முன்கள பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டது. முகாமுக்கு வந்த மக்கள் அனைவரும் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியையும் கடைபிடித்தனர்.

    • விழுப்புரம் மாவட்டத்தில் 2,033 இடங்களில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டுள்ளது,
    • கடந்த 6 மாத இடைவெளிக்குப்பின் கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது.

    விழுப்புரம் :

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த 6 மாத இடை வெளிக்குப்பின் கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. ஜனவரி 2021 முதல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு ஆஸ்பத்திரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்ட–த்தில் கொரோனா தடுப்பூசி 16.1.2021 முதல் ஆஸ்பத்திரி பணியாளர்களுக்கும், 26.2.2021 முதல் முன்கள–ப்பணி யாளர்களுக்கும், 1.3.2021 முதல் 45 வயதிற்கு மேற்பட்ட பொது மக்களுக்கும், 20.5.2021 முதல் 18 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்களுக்கும், 3.1.2022 முதல் 15 வயதிலிருந்து 17 வயதிற்குட்பட்ட வர்களுக்கும், 16.3.2022 முதல் 12 வயதிலிருந்து 14 வயதிற் குட்பட்டவர்கள் என படிப்படியாக அனை வருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.

    விழுப்புரம் மாவட்டத்தில் 12 வயது முதல் 14 வயது உள்ளவர்கள் முதல் தவணையாக 67171 நபர்களுக்கும்,இரண்டாவது தவணையாக 45836நபர்களுக்கும் 15வயது முதல் 17 வயது உள்ளோர்முதல் தவணையாக 80,054 நபர்களுக்கும் இரண்டாவது தவணையாக 64650 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது விழுப்புரம் மாவட்டத்தில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் 10,000 மேற்பட்ட முன் களப்பணியாளர்களும் தன்னார்வத் அமைப்புகளும் ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம் நகராட்சி சார்பில்42 மையங்களில்குறிப்பாக புதிய பேருந்து நிலையம் பழைய பஸ் நிலையம் ரயில் நிலையம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் காய்கறி மார்க்கெட் உழவர் சந்தை சினிமா திரையரங்குகள் உள்ளிட்ட பகுதிகளில்தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டிருந்தது முகாமில் இரண்டாவது தடுப்பூசி மற்றும் ஊக்குவிப்பு 3-வது தடுப்பூசியும் ஆர்வத்துடன் செலுத்திக்கொண்டனர் .

    • ஒரு வார்டுக்கு 17 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகிறது.
    • சென்னையில் மட்டும் 13 லட்சத்து 72 ஆயிரத்து 219 பேர் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர்.

    கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் 50 ஆயிரம் இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

    அதன் தொடர்ச்சியாக இன்று ஒரு லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தமிழகத்தில் முதல் தவணை, 2வது தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் என சுமார்.1.45 கோடிக்கும் அதிகமானோர் உள்ளனர். சென்னையில் மட்டும் நேற்று வரையில் 13 லட்சத்து 72 ஆயிரத்து 219 பேர் முதல் மற்றும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர்.

    இவர்களுக்காக இன்று ஒரு வார்டுக்கு 17 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு வார்டுக்கும் 8 சுகாதார குழுக்கள் வீதம் 200 வார்டுக்கு 1600 சுகாதார குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வார்டுகளில் உள்ள பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி கமிஷனர் சுகன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

    தடுப்பூசி போடாமல் உள்ளவர்கள் பெயர் விவரம் சுகாதாரப் பணியாளர்களிடம் உள்ளதால் அவர்கள் அந்தந்த வீடுகளுக்கு சென்று முகாம் அருகில் நடைபெறுவதை கூறி தடுப்பூசி போட அழைப்பு விடுக்க உள்ளனர். பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவோருக்கும் முக்கியத்துவம் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    • தமிழக அரசின் உத்தரவிற்கு இணங்க மாதம் ஒரு மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
    • 12 வயதுக்கு மேற்பட்ட 95 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 81 சதவீதம் பேருக்கு 2-ம்தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளன.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் இதுவரை 12 வயதுக்கு மேற்பட்ட 28 லட்சத்து 84 ஆயிரத்து 643 பேருக்கு முதல் தவணையும், 24 லட்சத்து 46 ஆயிரத்து 11 பேருக்கு 2-ம் தவணையும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 12 வயதுக்கு மேற்பட்ட 95 சத வீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 81 சதவீதம் பேருக்கு 2-ம்தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளன.

    தமிழக அரசின் உத்தர விற்கு இணங்க மாதம் ஒரு மெகா தடுப்பூசி முகாம்

    நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 30 தடுப்பூசி முகாம்கள் நடத்தி முடிக்க ப்பட்டுள்ளன. இதன்மூலம் 8 லட்சத்து 2 ஆயிரத்து 820 பேருக்கு முதல் தவணை, 11 லட்சத்து 64 ஆயிரத்து 655 பேருக்கு 2-ம் தவணை என மொத்தம் 19 லட்சத்து 83 ஆயிரத்து 836 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப் பட்டுள்ளன.

    மாவட்டத்தில் இதுவரை 52 ஆயிரத்து 871 பேருக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தப்ப ட்டுள்ளது. முன்னெச்செரிக்கை தவணை தடுப்பூசி செலுத்துவதற்கான கால இடைவெளி 9 மாதத்தில் இருந்து 6 மாதங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.

    நாளை (ஞாயிற்றுக்கி ழமை) 31-வது சிறப்பு தடுப்பூசி முகாம் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற உள்ளது. இதற்கென ஊரகப் பகுதியில் 4,610, மாநகராட்சிப் பகுதியில் 630 என மொத்தம் 5,240 தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்துபவர்கள், கணினியில் பதிவு மேற்கொ ள்பவர்கள் தகுதிவாய்ந்த பயனாளிகளை அழைத்து வருபவர்கள் என 19,500-க்கு மேற்பட்ட அலுவலர்கள், பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

    முகாமுக்காக கோவி ஷீல்டு தடுப்பூசி மருந்து 1 லட்சத்து 83 ஆயிரத்து 380 டோஸ்களும், கோவே க்ஸின் 88 ஆயிரத்து 900 டோஸ்களும், கோ ர்பெவாக்ஸ் 32 ஆயிரத்து 340 டோஸ்களும் கையிருப்பில் உள்ளன. இந்த முகாமில் 1 லட்சம் பயனாளிகளுக்கு தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    மேலும் 15 முதல் 17 வயது வரையிலானபள்ளி செல்லும் மற்றும் பள்ளி செல்லா குழந்தைகளுக்கு இதுவரை 1லட்சத்து35 ஆயிரத்து 763 பேருக்கு முதல் தவணை தடுப்பூ சியும், 1லட்சத்து 8 ஆயிர த்து 212பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.12 முதல் 14 வயது வரையிலான பள்ளி செல்லும் மற்றும்பள்ளி செல்லா குழந்தைகளுக்கு இதுவரை 88ஆயிரத்து 184 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 5 ஆயிரத்து 277 பேருக்கு 2-ம்தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

    12 வயதுக்கு மேற்பட்ட 1 லட்சத்து 62ஆயிரத்து 665 பேர் முதல்தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களாகவும், தகுதியுள்ள 4லட்சத்து 32 ஆயிரத்து 621 பேர் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத வர்களாகவும் கண்டறியப் பட்டுள்ளனர். எனவே 12 வயதுக்கு மேற்பட்ட பள்ளி செல்லும் மற்றும் பள்ளி செல்லா அனைத்து குழந்தைகளும் உரிய முதல் தவணை, 2-ம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

    • தமிழகம் முழுவதும் இன்று 30-வது கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.
    • மாவட்டம் முழுவதும் நடைபெற்ற முகாம்களில் முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    நெல்லை:

    தமிழகம் முழுவதும் இன்று 30-வது கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் சமுதாய நலக்கூடங்கள் என 917 மையங்களில் இன்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

    மாநகராட்சி பகுதியில் 140 சிறப்பு முகாம்கள் மற்றும் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் 777 இடங்களிலும் தகுதியான அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. முதல், 2-ம் தவனை தடுப்பூசிகள் போடப்பட்டது. பூஸ்டர் தடுப்பூசியும் போடப்பட்டது. இதில் ஏராளமானோர் வந்து ஊசிபோட்டு சென்றனர்.

    நெல்லை மாவட்டத்தில் 2009 நிலையான தடுப்பூசி முகாம்கள், 135 தடுப்பூசி முகாம்கள் என மொத்தம் 2,144 தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. இதில் 12 வயதிற்கு மேற்பட்டவர்கள், 2-ம் தவணை தடுப்பூசிகள் செலுத்தி 9 மாதம் நிறைவடைந்தவர்கள் தடுப்பூசி போட்டு சென்றனர்.

    மாவட்டம் முழுவதும் நடைபெற்ற முகாம்களில் முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதேநேரத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    மாநகர பகுதியில் சந்திப்பு ரெயில் நிலையம், பஸ் நிலையங்கள், வங்கிகள் உள்பட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மதியத்திற்கு பின்பு வீடு வீடாக சென்றும் தடுப்பூசி போடப்பட்டது.

    மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவின்பேரில் மாநகர நல அலுவலர் டாக்டர் ராஜேந்திரன் மேற்பார்வையில் இன்று மாநகர பகுதியில் சிறப்பு முகாம்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    • நெல்லிக்குப்பம் நகராட்சியில் 5 இடங்களில் தடுப்பூசி முகாம் நடந்தது.
    • கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக கடலூர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றது.

    கடலூர்:

    கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக கடலூர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றது. அதன்படி நெல்லிக்குப்பத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி முகாம் நெல்லிக்குப்பம் நகராட்சி மருத்துவமனையில் நடைபெற்றது. முகாமிற்கு நகரமன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார். துணைத்தலைவர் கிரிஜா திருமாறன், நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி, துப்புரவு அலுவலர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதனை தொடர்ந்து நெல்லிக்குப்பம் நகராட்சி மருத்துவமனை உள்ளிட்ட 5 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டனர். மேலும் தடுப்பூசி போடாத நபர்களை கண்டறிந்து தடுப்பூசி போடுவதற்கு நகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் நகராட்சி கவுன்சிலர்கள் சத்யா, பாரூக், இளநிலை உதவியாளர் பாபு, டாக்டர் சக்தி கவுதம் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    ×