search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் மாவட்டத்தில், நாளை  31-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம்
    X

    சேலம் மாவட்டத்தில், நாளை 31-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

    • தமிழக அரசின் உத்தரவிற்கு இணங்க மாதம் ஒரு மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
    • 12 வயதுக்கு மேற்பட்ட 95 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 81 சதவீதம் பேருக்கு 2-ம்தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளன.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் இதுவரை 12 வயதுக்கு மேற்பட்ட 28 லட்சத்து 84 ஆயிரத்து 643 பேருக்கு முதல் தவணையும், 24 லட்சத்து 46 ஆயிரத்து 11 பேருக்கு 2-ம் தவணையும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 12 வயதுக்கு மேற்பட்ட 95 சத வீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 81 சதவீதம் பேருக்கு 2-ம்தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளன.

    தமிழக அரசின் உத்தர விற்கு இணங்க மாதம் ஒரு மெகா தடுப்பூசி முகாம்

    நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 30 தடுப்பூசி முகாம்கள் நடத்தி முடிக்க ப்பட்டுள்ளன. இதன்மூலம் 8 லட்சத்து 2 ஆயிரத்து 820 பேருக்கு முதல் தவணை, 11 லட்சத்து 64 ஆயிரத்து 655 பேருக்கு 2-ம் தவணை என மொத்தம் 19 லட்சத்து 83 ஆயிரத்து 836 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப் பட்டுள்ளன.

    மாவட்டத்தில் இதுவரை 52 ஆயிரத்து 871 பேருக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தப்ப ட்டுள்ளது. முன்னெச்செரிக்கை தவணை தடுப்பூசி செலுத்துவதற்கான கால இடைவெளி 9 மாதத்தில் இருந்து 6 மாதங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.

    நாளை (ஞாயிற்றுக்கி ழமை) 31-வது சிறப்பு தடுப்பூசி முகாம் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற உள்ளது. இதற்கென ஊரகப் பகுதியில் 4,610, மாநகராட்சிப் பகுதியில் 630 என மொத்தம் 5,240 தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்துபவர்கள், கணினியில் பதிவு மேற்கொ ள்பவர்கள் தகுதிவாய்ந்த பயனாளிகளை அழைத்து வருபவர்கள் என 19,500-க்கு மேற்பட்ட அலுவலர்கள், பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

    முகாமுக்காக கோவி ஷீல்டு தடுப்பூசி மருந்து 1 லட்சத்து 83 ஆயிரத்து 380 டோஸ்களும், கோவே க்ஸின் 88 ஆயிரத்து 900 டோஸ்களும், கோ ர்பெவாக்ஸ் 32 ஆயிரத்து 340 டோஸ்களும் கையிருப்பில் உள்ளன. இந்த முகாமில் 1 லட்சம் பயனாளிகளுக்கு தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    மேலும் 15 முதல் 17 வயது வரையிலானபள்ளி செல்லும் மற்றும் பள்ளி செல்லா குழந்தைகளுக்கு இதுவரை 1லட்சத்து35 ஆயிரத்து 763 பேருக்கு முதல் தவணை தடுப்பூ சியும், 1லட்சத்து 8 ஆயிர த்து 212பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.12 முதல் 14 வயது வரையிலான பள்ளி செல்லும் மற்றும்பள்ளி செல்லா குழந்தைகளுக்கு இதுவரை 88ஆயிரத்து 184 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 5 ஆயிரத்து 277 பேருக்கு 2-ம்தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

    12 வயதுக்கு மேற்பட்ட 1 லட்சத்து 62ஆயிரத்து 665 பேர் முதல்தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களாகவும், தகுதியுள்ள 4லட்சத்து 32 ஆயிரத்து 621 பேர் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத வர்களாகவும் கண்டறியப் பட்டுள்ளனர். எனவே 12 வயதுக்கு மேற்பட்ட பள்ளி செல்லும் மற்றும் பள்ளி செல்லா அனைத்து குழந்தைகளும் உரிய முதல் தவணை, 2-ம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×