என் மலர்
நீங்கள் தேடியது "Nellikuppam Municipality"
- நெல்லிக்குப்பம் நகராட்சியில் 5 இடங்களில் தடுப்பூசி முகாம் நடந்தது.
- கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக கடலூர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றது.
கடலூர்:
கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக கடலூர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றது. அதன்படி நெல்லிக்குப்பத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி முகாம் நெல்லிக்குப்பம் நகராட்சி மருத்துவமனையில் நடைபெற்றது. முகாமிற்கு நகரமன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார். துணைத்தலைவர் கிரிஜா திருமாறன், நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி, துப்புரவு அலுவலர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதனை தொடர்ந்து நெல்லிக்குப்பம் நகராட்சி மருத்துவமனை உள்ளிட்ட 5 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டனர். மேலும் தடுப்பூசி போடாத நபர்களை கண்டறிந்து தடுப்பூசி போடுவதற்கு நகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் நகராட்சி கவுன்சிலர்கள் சத்யா, பாரூக், இளநிலை உதவியாளர் பாபு, டாக்டர் சக்தி கவுதம் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.






