search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ukraine"

    உக்ரைன் நாட்டில் செயல்பட்டு வந்த சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 17 பேர் பலியாகினர் என மீட்புக் குழுவினர் தெரிவித்தனர். #CoalMineBlast
    கியில்:

    கிழக்கு உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் ஆதிக்கத்தில் உள்ள லுகான்ஸ்க் நகரின் யுரிவ்கா பகுதியில்  நிலக்கரி சுரங்கம் செயல்பட்டு வருகிறது.

    நேற்று முன்தினம் இங்கு நிலக்கரி வெட்டி எடுக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி 17 பேர் இறந்தனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். 

    தகவலறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றனர். #CoalMineBlast
    உக்ரைனில் தானே தயாரித்த பாராசூட்டை பரிசோதிக்க 14-வது மாடியில் இருந்து குதித்த சிறுவன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Jump #Stunt #Homemade #Ukraine #Parachute
    கீவ்:

    உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள மக்கீவ்கா நகரை சேர்ந்த 15 வயது சிறுவன் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகும் வகையில் வித்தியாசமான சாகசத்தில் ஈடுபட முடிவு செய்தான்.

    இதற்காக அவன் வீட்டிலேயே பாராசூட் ஒன்றை தயார் செய்தான். பின்னர் அந்த பாராசூட்டை பரிசோதித்து பார்க்க முடிவு செய்த சிறுவன் வீட்டின் அருகே உள்ள 14 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் உச்சிக்கு சென்றான்.

    சிறுவனின் சாகசத்தை பார்க்க அவனது தாய், உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் அங்கு குவிந்தனர். அவர்கள் அனைவரும் சிறுவனை உற்சாகப்படுத்தியதோடு, பலர் அங்கு நடப்பதை தங்கள் செல்போனில் படம் பிடித்தனர். இதனால் உற்சாகம் அடைந்த அந்த சிறுவன் தனது இரு கைகளையும் உயர்த்தி காட்டியபடி, மாடியில் இருந்து கீழே குதித்தான்.

    பின்னர் அவன் தனது பாராசூட்டை இயக்கினான். அந்த பாராசூட் சரியான நேரத்தில் விரிந்த போதிலும், முறையாக இயங்கவில்லை. இதனால் சிறுவன் தரையில் விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தான். தன் கண் முன்னே மகன் கீழே விழுந்து உயிர் இழந்ததை கண்டு அவனது தாய் அதிர்ச்சியில் உறைந்தார்.

    சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர், “அங்கு ஏராளமானவர்கள் கூடியிருந்தனர். ஆனால் அவர்கள் யாரும் சிறுவனின் விபரீத முயற்சியை தடுக்கவில்லை. மாறாக அவர்கள் தங்கள் செல்போனில் படம் பிடித்துக்கொண்டிருந்தனர்” என வேதனையுடன் தெரிவித்தார்.

    சிறுவன் பாராசூட்டை முறையாக தயார் செய்யாததால் இந்த விபரீதம் நடந்ததாக கூறப்படுகிறது. அதே சமயம் முறையாக தயார் செய்யப்பட்ட பாராசூட்டை பயன்படுத்தி இருந்தாலும் கூட சிறுவன் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.  #Jump #Stunt #Homemade #Ukraine #Parachute
    உக்ரைன் நாட்டு கப்பல்கள் சிறைபிடிப்பு பிரச்சனையை மையப்படுத்தி ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உடனான சந்திப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரத்து செய்தார். #G20Summit #Trump #Putin #TrumpPutin #Ukrainecrisis
    பியூனஸ் அயர்ஸ்:

    உக்ரைனின் கிரிமியா பகுதியை கடந்த 2014-ல் ரஷியா தன்னுடன் இணைத்ததில் இருந்து இரு நாடுகளுக்குமிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. சமீபத்தில் கிரிமியா அருகே உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 3 கடற்படை கப்பல்களை ரஷிய ராணுவம் தாக்குதல் நடத்தி கைப்பற்றியதில் இருந்து மீண்டும் போர் பதற்றம் உருவாகி உள்ளது.
     
    உக்ரைன் விவகாரத்தில் ரஷியாவுக்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும் உக்ரைன் நாட்டுக்கு அதிக ஆதரவு அளிக்கும்படி ஐரோப்பிய நாடுகளை வலியுறுத்தி உள்ளது.


     இந்த பரபரப்பான சூழ்நிலையில், அர்ஜென்டினாவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் ரஷிய அதிபர் புதினை அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பது உறுதி என ரஷிய அதிபரின் கிரெம்ளின் மாளிகை அறிவித்திருந்தது. வாஷிங்டனில் இருந்து அர்ஜென்டினாவுக்கு புறப்படும்போது டிரம்ப்பும் நேற்று இதை உறுதிப்படுத்தி இருந்தார்.

    ஆனால், ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த சந்திப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் தற்போது ரத்து செய்து விட்டார்.

    ரஷியாவால் சிறைபிடிக்கப்பட்ட கப்பல்களும், மாலுமிகளும் இன்னும் உக்ரைனுக்கு திரும்பிவராத நிலையில் புதினுடனான சந்திப்பை ரத்து செய்ய தீர்மானித்துள்ளேன். இந்த பிரச்சனை தீர்ந்த பின்னர் கூடிய விரைவில் அர்த்தமுள்ள ஒரு சந்திப்பை நான் எதிர்பார்க்கிறேன் என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். #G20Summit #Trump #Putin #TrumpPutin #Ukrainecrisis
    உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடல்வழி மோதல் முற்றியுள்ள நிலையில், ஜி20 மாநாட்டில் புதினுடனான சந்திப்பை டிரம்ப் ரத்து செய்யலாம் என தெரிகிறது. #Crimea #RussiaSeizesShips #Trump #Putin
    வாஷிங்டன்:

    உக்ரைனின் கிரிமியா பகுதியை கடந்த 2014-ல் ரஷ்யா தன்னுடன் இணைத்ததில் இருந்து இரு நாடுகளுக்குமிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. சமீபத்தில் கிரிமியா அருகே உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 3 கடற்படை கப்பல்களை ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி கைப்பற்றியதில் இருந்து கடல் பிராந்தியத்தில் போர்பதற்றம் உருவாகி உள்ளது. உக்ரைனில் 30 நாட்களுக்கு ராணுவ சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

    உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும் உக்ரைன் நாட்டுக்கு அதிக ஆதரவு அளிக்கும்படி ஐரோப்பிய நாடுகளை வலியுறுத்தி உள்ளது.


    இந்த பரபரப்பான சூழ்நிலையில் அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்சில் வரும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் ஜி20 உச்சிமாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டின்போது அமெரிக்க அதிபர் டிரம்பும், ரஷ்ய அதிபர் புதினும் சந்தித்து பேச முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த சந்திப்பின்போது பாதுகாப்பு, ஆயுத கட்டுப்பாடு மற்றும் உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் புதினுடனான சந்திப்பை டிரம்ப் ரத்து செய்யலாம் என தெரிகிறது.

    இதுதொடர்பாக டிரம்ப் கூறுகையில், ‘உக்ரைன் கப்பல்களை ரஷ்யா தாக்கி சிறைப்பிடித்தது தொடர்பான முழு அறிக்கைக்காக காத்திருக்கிறேன். அதுபோன்ற அத்துமீறல் எனக்கு பிடிக்கவில்லை. ஜி20 மாநாட்டின்போது எங்கள் (புதினுடன்) சந்திப்பு நடக்காமல் போகலாம்’ என்றார்.

    ரஷ்யா மீது கடும் பொருளாதார தடைகளை விதிக்க அமெரிக்கா விரும்புவதாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கூறியது குறிப்பிடத்தக்கது. #Crimea #RussiaSeizesShips #Trump #Putin

    ரஷ்யாவின் அச்சுறுத்தலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைன் நாட்டில் நாளை முதல் 30 நாட்களுக்கு ராணுவச் சட்டம் அமல்படுத்தப்படுகிறது. #UkraineMartialLaw #Crimea #RussiaSeizesShips
    கீவ்:

    உக்ரைனின் கிரிமியா பகுதியை கடந்த 2014-ல் ரஷ்யா தன்னுடன் இணைத்ததில் இருந்து இரு நாடுகளுக்குமிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், கிரிமியா அருகே உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 3 கடற்படை கப்பல்களை ரஷ்யா நேற்று முன்தினம் கைப்பற்றியது. கிரிமியா அருகே உள்ள கெர்ச் ஜலசந்தியை உக்ரைன் கப்பல்கள் கடந்தபோது, தங்கள் பகுதியில் சட்டவிரோதமாக நுழைந்ததாக கூறி இந்த நடவடிக்கையை ரஷ்ய ராணுவம் எடுத்திருக்கிறது.  

    ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகள் பகிர்ந்து கொள்ளும் கெர்ச் ஜலசந்தியானது, அஸோவ் கடலுக்கு செல்லும் ஒரே பாதை ஆகும். அந்த பகுதியில் ரஷ்யா தனது டேங்கர் கப்பலை நிறுத்தி உள்ளது. அத்துடன் ரஷ்ய போர் விமானங்களும் அந்த பகுதியில் பறக்கின்றன. உக்ரைன் கப்பல்களை ரஷ்யா கைப்பற்றியதால் அசோவ் கடற்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.

    இந்த சூழ்நிலையில், உக்ரைனின் ரஷ்ய எல்லையில்  உள்ள குறிப்பிட்ட பிராந்தியங்களில் ராணுவத்திற்கு முழு அதிகாரம் வழங்கக்கூடிய ராணுவச் சட்டத்தை அமல்படுத்த உக்ரைன் அரசு முடிவு செய்தது. இதற்காக பாராளுமன்றத்தில் நேற்று மசோதா தாக்கல் செய்யப்பட்டது. விவாதத்திற்கு பிறகு மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மசோதாவை நிறைவேற்ற 226 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், மசோதாவிற்கு ஆதரவாக 276 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதையடுத்து நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் 30 நாட்களுக்கு ராணுவச் சட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.

    ரஷ்ய எல்லையை ஒட்டியுள்ள மோல்டோவாவின் டிரான்ஸ்னிஸ்டிரியா பிராந்தியம் மற்றும் கருங்கடல் ஓரம் உள்ள பிராந்தியங்கள் மற்றும் அஸோவ் கடல் பகுதியில் இந்த சட்டம் அமலில் இருக்கும். இந்த பிராந்தியங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பிளவுபட்ட பிராந்தியமான டிரான்ஸ்னிஸ்டிரியாவில் ரஷ்ய படைகள் முகாமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.



    தேசிய பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முதலில் 60 நாட்களுக்கு ராணுவ சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான ஆணையில் அதிபர் பெட்ரோ போரோஷென்கோ கையெழுத்திட்டார். அதன்பின்னர், 30 நாட்களாக குறைத்தார்.

    இது தொடர்பாக உக்ரைன் அதிபர் கூறுகையில், ‘ராணுவச் சட்டம் அமல்படுத்தப்பட்டதால் போர் பிரகடனம் என்று அர்த்தம் அல்ல.  உக்ரைன் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கை’ என்றார். #UkraineMartialLaw #Crimea #RussiaSeizesShips
    உக்ரைனில் ராணுவ ஆயுத கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். #Ukraine
    கிவ்:

    உக்ரைன் நாட்டில் வட செர்னிகிவ் பகுதியில் டிருஷ்பா என்ற கிராமத்தில் ராணுவ ஆயுத கிடங்கு உள்ளது. இது 1700 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.

    அங்கு நேற்று திடீரென தீவிபத்து ஏற்பட்டது. 6-வது பிரிவு ஆயுத கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால் அங்கிருந்த வெடி பொருட்கள் வெடித்து சிதறின. ஒரு நிமிடத்துக்கு ஒன்று வீதம் வெடி பொருட்கள் வெடித்தன.

    இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. நெருப்பு பந்துகள் வானில் எழுந்தன. உடனே தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.


    இந்த தீ விபத்து காரணமாக ராணுவ ஆயுத கிடங்கு உள்ள பகுதிகளில் தங்கியிருக்கும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    மேலும் இந்த விபத்தில் உயிரிழந்தோர் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. அதே நேரத்தில் புகை மூட்டத்தில் சிக்கி 60 பேர் மயக்கம் அடைந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. #Ukraine
    இந்திய விமானப்படையில் உள்ள ஏ.என் 32 ரக விமான உதிரி பாகங்கள் வாங்க உக்ரைனில் உள்ள நிறுவனதுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தில் இந்திய பாதுகாப்பு துறை அதிகாரிகள் லஞ்சம் பெற்றதை அந்நாட்டு அரசு கண்டுபிடித்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்திய விமானப்படையின் போக்குவரத்து பிரிவில் பயன்படுத்தக்கூடிய ஏ.என்-32 ரக விமானங்களுக்கு உதிரி பாகங்கள் வாங்குவது தொடர்பாக இந்திய பாதுகாப்பு துறைக்கும், உக்ரைன் நாட்டை சேர்ந்த நிறுவனத்துக்கும் இடையே 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஒப்பந்தம் கையெழுத்து ஆனது.

    உதிரி பாகங்கள் வினியோகம் செய்வது தொடர்பாக குளோபல் மார்க்கெட்டிங் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தது. இந்த ஒப்பந்தம் நடந்து 11 மாதங்களுக்கு பிறகு இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது உக்ரைனின் தேசிய ஊழல் தடுப்பு அமைப்புக்கு தெரியவந்தது. இதில் இந்திய பாதுகாப்பு துறை அதிகாரிகள் சுமார் ரூ.17.55 கோடி லஞ்சம் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து குளோபல் மார்க்கெட்டிங் நிறுவனத்தின் தொடர்பு, பணம் பரிமாற்றம் நடந்ததாக சந்தேகப்படும் துபாயில் உள்ள நூர் இஸ்லாமிக் வங்கி ஆகியவற்றிடம் விசாரணை நடத்த உக்ரைனின் தேசிய ஊழல் தடுப்பு அமைப்பு முடிவு செய்தது. இந்த விவகாரத்தில் தங்களுக்கு உதவும்படி இந்திய உள்துறை அமைச்சகத்துக்கு, உக்ரைனின் தேசிய ஊழல் தடுப்பு அமைப்பு கடிதம் எழுதி உள்ளது தற்போது அம்பலமாகி இருக்கிறது.

    உக்ரைன் தலைநகர் கெய்வில் வைத்து மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்பட்ட ரஷியாவை சேர்ந்த பிரபல பத்திரிகையாளர் ஆர்கடி பாப்சென்கோ பத்திரமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #Russianjournalist #ArkadyBabchenko #Ukraine

    கெய்வ்:

    ரஷியாவை சேர்ந்த பிரபல பத்திரிக்கையாளர், ஆர்கடி பாப்சென்கோ. இவர் ரஷியாவில் இருந்து உயிருக்கு பயந்து வெளியேறி உக்ரைன் நாட்டில் தஞ்சம் அடைந்தார். 

    இதனிடையே, அவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் வைத்து சில மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. பத்திரிக்கையில் செய்தி வெளியிவதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என கூறப்பட்டது. அவர் கொல்லப்பட்டதற்கு ரஷியா தான் காரணம் எனவும் கூறப்பட்டது.

    இந்நிலையில், அவர் தற்போது பத்திரமாக இருப்பதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. பாப்சென்கோவை கொலை செய்ய போடப்பட்ட திட்டத்தை முன்கூட்டியே தெரிந்துகொண்ட உக்ரைன் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அவரை காப்பாற்றியுள்ளனர். உயிரை காப்பாற்றிய உக்ரைன் அதிகாரிகளுக்கு பாப்சென்கோ நன்றி தெரிவித்துள்ளார். #Russianjournalist #ArkadyBabchenko #Ukraine
    ரஷியாவை சேர்ந்த பிரபல பத்திரிகையாளர் ஒருவர், உக்ரைன் தலைநகர் கெய்வில் வைத்து மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். #Russianjournalist #ArkadyBabchenko #Ukraine

    கெய்வ்:

    ரஷியாவை சேர்ந்த பிரபல பத்திரிக்கையாளர், ஆர்கடி பாப்சென்கோ. இவர் ரஷியாவில் இருந்து உயிருக்கு பயந்து வெளியேறி உக்ரைன் நாட்டில் தஞ்சம் அடைந்தார். 

    இந்நிலையில், அவர் நேற்றிரவு தனது வீட்டில் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் மயங்கி கிடந்தார். இதையடுத்து அவரது மனைவி போலீசாருக்கு தகவல் அளித்தார். உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த போலீசார், அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் மரணமடைந்ததாக போலீசார் தெரிவித்தனர். பத்திரிக்கையில் செய்தி வெளியிவதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். #Russianjournalist #ArkadyBabchenko #Ukraine
    ×