search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உக்ரைனில் ராணுவ ஆயுத கிடங்கில் பயங்கர தீவிபத்து- 15 ஆயிரம் பேர் வெளியேற்றம்
    X

    உக்ரைனில் ராணுவ ஆயுத கிடங்கில் பயங்கர தீவிபத்து- 15 ஆயிரம் பேர் வெளியேற்றம்

    உக்ரைனில் ராணுவ ஆயுத கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். #Ukraine
    கிவ்:

    உக்ரைன் நாட்டில் வட செர்னிகிவ் பகுதியில் டிருஷ்பா என்ற கிராமத்தில் ராணுவ ஆயுத கிடங்கு உள்ளது. இது 1700 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.

    அங்கு நேற்று திடீரென தீவிபத்து ஏற்பட்டது. 6-வது பிரிவு ஆயுத கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால் அங்கிருந்த வெடி பொருட்கள் வெடித்து சிதறின. ஒரு நிமிடத்துக்கு ஒன்று வீதம் வெடி பொருட்கள் வெடித்தன.

    இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. நெருப்பு பந்துகள் வானில் எழுந்தன. உடனே தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.


    இந்த தீ விபத்து காரணமாக ராணுவ ஆயுத கிடங்கு உள்ள பகுதிகளில் தங்கியிருக்கும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    மேலும் இந்த விபத்தில் உயிரிழந்தோர் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. அதே நேரத்தில் புகை மூட்டத்தில் சிக்கி 60 பேர் மயக்கம் அடைந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. #Ukraine
    Next Story
    ×