search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TVS Motors"

    • டிவிஎஸ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஐகியூப் மூன்று வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.
    • டிவிஎஸ் ஐகியூப் ஒட்டுமொத்த விற்பனையில் 89 சதவீதம் 2023 நிதியாண்டில் நடைபெற்று இருக்கிறது.

    டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் ஐகியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தொடர்ந்து இரண்டு மாதங்களாக 15 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி உள்ளது. 2023 பிப்ரவரி மாத வாக்கில் 15 ஆயிரத்து 522 யூனிட்களும், மார்ச் மாதத்தில் 15 ஆயிரத்து 364 யூனிட்களும் விற்பனையாகி இருக்கின்றன. இதன் மூலம் ஐகியூப் மாடல் ஒட்டுமொத்தமாக இந்திய சந்தையில் ஒரு லட்சம் யூனிட்கள் எனும் மைல்கல்லை எட்டியுள்ளது.

    இந்திய சந்தையில் இதுவரை மொத்தத்தில் ஒரு லட்சத்து 08 ஆயிரத்து 550 ஐகியூப் யூனிட்களை டிவிஎஸ் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. 2020 ஜனவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட டிவிஎஸ் ஐகியூப் மாடலின் விற்பனையில் 89 சதவீதம் மார்ச் 2023 இறுதியிலேயே நடைபெற்று இருக்கிறது. முன்னதாக 2023 நிதியாண்டிலேயே ஒரு லட்சம் யூனிட்கள் எனும் மைல்கல்லை எட்ட டிவிஎஸ் இலக்கு நிர்ணயம் செய்து இருந்தது. எனினும், 3 ஆயிரத்து 346 யூனிட்கள் இடைவெளியில் இது தவறிவிட்டது.

     

    கடந்த 12 மாதங்களாக டிவிஎஸ் ஐகியூப் மாடலுக்கான தட்டுப்பாடு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஏப்ரல் முதல் ஜூன் 2022 வரை 8 ஆயிரத்து 724 யூனிட்கள் விற்பனையான நிலையில், ஜூலை முதல் செப்டம்பர் 2022 வரை 15 ஆயிரத்து 645 யூனிட்களாக அதிகரித்து இருக்கிறது. பின் அக்டோபர் முதல் டிசம்பர் 2022-க்குள் 43 ஆயிரத்து 055 யூனிட்களாக உயர்ந்தது.

    ஐகியூப் மாடலின் விற்பனை எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் பட்டியலில் எதிரொலித்தது. 2023 நிதியாண்டில் மட்டும் ஐகியூப் மாடலை 80 ஆயிரத்து 565 பேர் வாங்கியுள்ளனர். இதன் மூலம் டிவிஎஸ் நிறுவனம் டாப் 20 உற்பத்தியாளர்கள் பட்டியலில் ஆறாவது இடத்தை பிடித்துள்ளது.

    மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும் டிவிஎஸ் ஐகியூப் மாடலின் விலை ரூ. 98 ஆயிரத்து 564 என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 1 லட்சத்து 08 ஆயிரத்து 690 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    சமீபத்தில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் 140 கிலோமீட்டர் ரேஞ்ச் வழங்கும் டாப் எண்ட் ஐகியூப் ST வேரியண்டை அறிமுகம் செய்தது. எனினும், இதன் விலை விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

    • ஹோண்டா, டிவிஎஸ் நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • பல்வேறு முன்னணி நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகன துறையில் களமிறங்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

    ஹோண்டா இந்தியா நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய திட்டங்களை மார்ச் 29 ஆம் தேதி அறிவிக்க இருக்கிறது. இதே வரிசையில் டிவிஎஸ் நிறுவனமும் தனது புதிய எலெக்ட்ரிக் வாகனத்தை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில் எலெக்ட்ரிக் இருசக்கர பிரிவு தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது.

    ஏத்தர் எனர்ஜி மற்றும் ஒலா எலெக்ட்ரிக் நிறுவனங்கள் தொடர்ந்து விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இதுதவிர மேலும் பல்வேறு நிறுவனங்கள் புதிதாக எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்து வருகின்றன. அடுத்த சில ஆண்டுகளில் மேலும் பல்வேறு முன்னணி நிறுவனங்களும் எலெக்ட்ரிக் வாகன துறையில் களமிறங்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

     

    டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்திய சந்தையில் ஐகியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனை செய்து வருகிறது. இதுதவிர டிவிஎஸ் நிறுவனம் அடுத்த சில ஆண்டுகளில் மேலும் புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. புதிய டிவிஎஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் 5 கிலோவாட் முதல் 25 கிலோவாட் வரையிலான திறன் கொண்டிருக்கும் என தெரிகிறது.

    இதுதவிர டிவிஎஸ் நிறுவனத்தின் எதிர்கால எலெக்ட்ரிக் வாகனங்கள் முற்றிலும் புதிய பவர்டிரெயின் கொண்டிருக்கும் என காப்புரிமை விண்ணப்பங்களில் தெரியவந்து இருக்கிறது.

    ஹோண்டா நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விவரங்களை மார்ச் 29 ஆம் தேதி அறிவிக்க இருக்கிறது. புதிய காப்புரிமையில் எலெக்ட்ரிக் மோட்டார், சார்ஜர் மற்றும் பேட்டரி பேக் கண்ட்ரோலர் என பல்வேறு பாகங்களின் விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

    காப்புரிமை வரைபடங்களின் படி இது இ-ஸ்கூட்டராக இருக்கும் என தெரிகிறது. மேலும் இதில் பேட்டரி பேக் புளோர்போர்டின் கீழ் பொருத்தப்பட்டு இருக்கும் என தெரிகிறது. இதன் பின்புறம் ஹப் மோட்டார் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஹோண்டா நிறுவனம் கழற்றக்கூடிய பேட்டரி பேக் பயன்படுத்துவது பற்றிய பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

    முன்னதாக வெளியான தகவல்களின் படி ஹோண்டா நிறுவனம் தற்போது விற்பனை செய்து வரும் ஆக்டிவா 6ஜி மாடலை எலெக்ட்ரிக் வடிவில் அறிமுகம் செய்யும் என கூறப்பட்டது.

    • டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் அபாச்சி சீரிஸ் விற்பனையில் புதிய மைல்கல் எட்டியது.
    • கடந்த 28 மாதங்களில் மட்டும் டிவிஎஸ் நிறுவனம் பத்து லட்சம் அபாச்சி யூனிட்களை விற்பனை செய்துள்ளது.

    டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவழனம் சர்வதேச சந்தையில் வளர்ந்து வரும் இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் உற்பத்தியாளராக உள்ளது. டிவிஎஸ் நிறுவனத்தின் அபாச்சி சீரிஸ் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து டிவிஎஸ் நிறுவனம் அபாச்சி சீரிஸ் விற்பனையில் தற்போது 50 லட்சம் யூனிட்களை கடந்துள்ளது.

    புதிய மைல்கல் எட்டியதை அடுத்து சர்வதேச சந்தையில் வேகமாக வளர்ந்து வரும் பிரீமியம் மோட்டார்சைக்கிள் பிராண்டுகளில் ஒன்றாக டிவிஎஸ் உள்ளது. டிவிஎஸ் அபாச்சி சீரிஸ்-இன் டிராக்-டு-ரோட் திட்டத்தின் கீழ் தலைசிறந்த செயல்திறன், அம்சங்கள் மற்றும் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு வருகிறது. 2005 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட டிவிஎஸ் அபாச்சி சீரிஸ் சர்வதேச விற்பனையில் 50 லட்சம் யூனிட்களை கடந்துள்ளது.

     

    அசத்தலான டிசைன், மேம்பட்ட அம்சங்களை கொண்டிருப்பதற்கு அறியப்படும் அபாச்சி சீரிஸ் தொடர்ந்து வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. சமீபத்திய மைல்கல்லை அடுத்து டிவிஎஸ் நிருவனம் முன்னணி வாகன உற்பத்தியாளர் என்பதை நிரூபித்துள்ளது. விற்பனையில் 40 லட்சம் யூனிட்கள் எனும் மைல்கல்லை அடைய டிவிஎஸ் நிறுவனம் 15 ஆண்டுகளை எடுத்துக் கொண்டிருந்தது. கடைசி பத்து லட்சம் யூனிட்கள் 28 மாதங்களில் விற்பனையாகி உள்ளன.

    புதுமைகளை வழங்குவது மற்றும் சிறந்த வாடிக்கையாளர் சேவையை வழங்கியதன் காரணமாக டிவிஎஸ் அபாச்சி சீரிஸ் இத்தகைய வரவேற்பை பெற்று வருகிறது. தொடர்ந்து புதுமைகளை வழங்கும் பட்சத்தில் டிவிஎஸ் அபாச்சி சீரிஸ் மேலும் அதிக மைல்கல்களை எட்டும் என எதிர்பார்க்கலாம்.

    இந்திய சந்தையில் டிவிஎஸ் நிறுவனம் நேக்கட் மற்றும் சூப்பர் ஸ்போர்ட் என இருவித மோட்டார்சைக்கிள் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. நேக்கட் மாடல்கள் பிரிவில் - அபாச்சி RTR 160, அபாச்சி RTR 150 4V, அபாச்சி RTR 180 மற்றும் அபாச்சி RTR 200 4V போன்ற மாடல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    இந்த மாடல்கள் அதிக செயல்திறன், அசத்தலான அம்சங்கள், தொழில்நுட்பம் கொண்டுள்ளன. மேலும் இவை 160 சிசி-யில் துவங்கி அதிகபட்சம் 200சிசி வரையிலான பிரிவுகளில் கிடைக்கின்றன. சூப்பர் ஸ்போர்ட் பிரிவில் டிவிஎஸ் அபாச்சி RR 310 மாடல் இடம்பெற்று இருக்கிறது. 

    • டிவிஎஸ் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய ஃபிளாக்ஷிப் மோட்டார்சைக்கிள் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.
    • புதிய டிவிஎஸ் மோட்டார்சைக்கிள் பிஎம்டபிள்யூ G310 R மாடலை தழுவி உருவாக்கப்படுவதாக தகவல்.

    டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் விரைவில் முற்றிலும் புதிய ஃபிளாக்ஷிப் மோட்டார்சைக்கிளை இம்மாத இறுதியில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய மோட்டார்சைக்கிள் அபாச்சி RTR 310 பெயரில் அறிமுகமாகும் என்றும் இது பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனத்தின் G310 R மாடலை தழுவி உருவாக்கப்படுகிறது என கூறப்படுகிறது.

    இந்திய சந்தையில் புதிய டிவிஎஸ் அபாச்சி RTR 310 விலை ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. புதிய RTR 310 மாடலில் அபாச்சி RR 310 பைக்கில் உள்ளதை போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் அபாச்சி RR 310 மாடலை சார்ந்து உருவாக்கப்பட்ட G310 RR பைக்கை பிஎம்டபிள்யூ அறிமுகம் செய்தது.

    ஜெர்மனியை சேர்ந்த பிஎம்பிள்யூ நிறுவனத்திற்கு அதிக விற்பனையை ஈட்டித் தரும் மாடலாக RR-310 சார்ந்த பிஎம்பிள்யூ G310 RR உள்ளது. இந்தியா மட்டுமின்றி சர்வதேச சந்தைக்கும் இந்த மோட்டார்சைக்கிள் ஓசூரில் உள்ள டிவிஎஸ் உற்பத்தி ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது.

    புதிய டிவிஎஸ் அபாச்சி RTR 310 மாடலின் விலை RR 310-ஐ விட ரூ. 15 ஆயிரத்தில் இருந்து ரூ. 20 ஆயிரம் வரை குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. டிவிஎஸ் அபாச்சி RTR 310 மாடலில் கிடைமட்டமாக பொருத்தப்பட்ட TFT இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், பல்வேறு ரைடிங் மோட்கள் வழங்கப்படுகிறது. செயல்திறனை பொருத்தவரை 312சிசி சிங்கில் சிலிண்டர் லிக்விட் கூல்டு ஃபியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட யூனிட் வழங்கப்படுகிறது.

    இந்த என்ஜின் 34 பிஎஸ் பவர், 27 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன், ஸ்லிப்பர் மற்றும் அசிஸ்ட் கிளட்ச், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய கிளட்ச் மற்றும் பிரேக் லீவர்கள், அப்சைடு டவுன் ஃபோர்க்குகள், பிரீ-லோட் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் சஸ்பென்ஷன், டூயல் சேனல் ஏபிஎஸ் உள்ளிட்டவை ஸ்டாண்டர்டு அம்சங்களாக வழங்கப்படலாம்.

    Photo Courtesy: GaadiWaadi

    • டிவிஎஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் இந்திய சந்தை விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • கடந்த ஆண்டு மே மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட ஐகியூப் ஸ்கூட்டர் 140 கிமீ ரேன்ஜ் வழங்குகிறது.

    டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் தனது மேம்பட்ட ஐகியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் 50 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளது. இது டிவிஎஸ் நிறுவனத்தின் ஒற்றை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்தே பலரும் விரும்பும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக ஐகியூப் இருந்து வருகிறது.

    எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்யும் போது டிவிஎஸ் நிறுவனம் அதன் விற்பனைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. எனினும், நாடு முழுக்க தனது விற்பனை மையங்கள் மூலம் விற்பனையை அதிகப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

    தற்போது டிவிஎஸ் ஐகியூப் மாடல்- ஐகியூப், ஐகியூப் S மற்றும் ஐகியூப் ST என மூன்று வித வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் முதல் இரு வேரியண்ட்களில் ஒரே மாதிரியான அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஐகியூப் ST டாப் எண்ட் மாடலில் பெரிய பேட்டரி பேக் உள்ளது. இது 140 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகிறது.

    டிவிஎஸ் ஐகியூப் ST மாடலில் டச் ஸ்கிரீன் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், TPMS மற்றும் வாய்ஸ் அசிஸ்ட் போன்ற அம்சங்கள் உள்ளது. அடுத்த சில மாதங்ளில் டிவிஎஸ் நிறுவனம் தனது ஐகியூப் விற்பனையை அதிகப்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

    • டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் அபாச்சி ஸ்பெஷல் எடிஷன் மாடலில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.
    • ஸ்பெஷல் எடிஷன் மாடலின் என்ஜின் அம்சத்தில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய அபாச்சி RTR 160 4V ஸ்பெஷல் எடிஷன் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய அபாச்சி RTR 160 4V ஸ்பெஷல் எடிஷன் விலை ரூ. 1 லட்சத்து 30 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. வழக்கமான RTR 160 4V மாடலை விட ஸ்பெஷல் எடிஷனில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டு புது நிறத்தில் கிடைக்கிறது.

    முந்தைய ஸ்பெஷல் எடிஷன் அபாச்சி RTR 160 4V மாடல் மேட் பிளாக் நிறத்தில் வழங்கப்பட்டு இருந்தது. தற்போது இதே நிறம் புதிய 2023 மாடலிலும் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. இத்துடன் பியல் வைட் ஷேட் கொடுக்கப்பட்டுள்ளது. புதிய பெயிண்ட் ஃபினிஷ் பை-டோன் அலாய் வீல்கள் - முன்புறம் பிளாக், பின்புறத்தில் ரெட் நிறம் வழங்கப்பட்டு இருக்கிறது. சீட் தொடர்ந்து டூயல் டோன் ஃபினிஷ் கொண்டிருக்கிறது.

    புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடலில் ட்வீக் செய்யப்பட்ட எக்சாஸ்ட், புதிய புல்-பப் மஃப்ளர் வழங்கப்பட்டு இருக்கிறது. இது ஸ்டாண்டர்டு மாடலில் இருப்பதை விட 1 கிலோ வரை எடை குறைவு ஆகும். இந்த மாடலில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய கிளட்ச் மற்றும் பிரேக் லீவர்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இவற்றுடன் ஸ்டாண்டர்டு மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் மூன்று வித ரைடு மோட்கள், smartXonnect ப்ளூடூத் கனெக்டிவிட்டி, எல்இடி ஹெட்லேம்ப், டிஆர்எல் மற்றும் கியர் ஷிஃப்ட் இண்டிகேட்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. என்ஜினை பொருத்தவரை புது மாடலிலும் 159.7சிசி, ஆயில் கூல்டு, ஃபியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த என்ஜின் 17.3 ஹெச்பி பவர், 14.73 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. 

    • சமீப காலங்களில் வாகனம் வாங்க காயின் மூலம் பணம் செலுத்தும் வழக்கம் வைரலாகி வருகிறது.
    • இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை பலமடங்கு அதிகரித்தாலும், ஆங்காங்கே இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறுகின்றன.

    இந்தியாவில் யுபிஐ மூலம் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் ஒவ்வொரு நாளும் பலமடங்கு அதிகரித்து வருகிறது. இளம் தலைமுறையினர் பரவலாக இந்த முறையில் பரிவர்த்தனை செய்து வரும் நிலையில், முதியவர்கள் தொடர்ந்து ரொக்கம் மற்றும் சில்லறை காயின்களை பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    இந்த நிலையில், நபர் ஒருவர் தான் விரும்பிய ஸ்கூட்டரை வாங்க ரூ. 50 ஆயிரம் தொகையை முழுக்க ரூ. 10 காயின்களாக கொடுத்து இருக்கிறார். ருத்ராபூரை சேர்ந்த நபர் முற்றிலும் புதிய டிவிஎஸ் ஜூப்பிட்டர் ஸ்கூட்டரை வாங்க ரூ. 50 ஆயிரம் தொகையை 5 ஆயிரம் ரூ. 10 காயின்களாக கொடுத்து பணம் செலுத்தி இருக்கிறார். இந்த சம்பவம் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

    பெரிய தொகையை காயின்களாக கொடுக்கும் முறை ஏற்கனவே சிலர் மேற்கொண்டுள்ளனர். முன்னதாக காயின்களை மூட்டை மற்றும் பெட்டிகளில் எடுத்து வந்து செலுத்திய சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. காயின் மூலம் பணம் செலுத்துவது சட்டப்பூர்வமான ஒன்று தான் என்ற போதிலும், காயின்களை முழுமையாக எண்ணி முடிக்க அதிக நேரம் ஆகும். இதன் காரணமாக அதிகபட்சம் ரூ. 2 லட்சம் வரை காயின்களாக செலுத்த டீலர்கள் வரையறை வைத்துள்ளனர்.

    இந்தியாவில் டிவிஎஸ் ஜூப்பிட்டர் ஸ்கூட்டரின் விலை ரூ. 69 ஆயிரத்து 900 என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 85 ஆயிரத்து 246 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் அந்த நபர் ஜூப்பிட்டர் ஸ்கூட்டரின் எந்த வேரியண்டை தேர்வு செய்தார் என்ற தகவல் மர்மமாகவே உள்ளது.

    • டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் ஜூப்பிட்டர் கிளாசிக் ஸ்பெஷல் எடிஷன் மாடலை அறிமுகம் செய்தது.
    • புதிய ஸ்பெஷல் எடிஷன் ஸ்கூட்டரில் டைமண்ட் கட் அல்ய் வீல்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்திய சந்தையில் ஜூப்பிட்டர் கிளாசிக் ஸ்கூட்டரின் ஸ்பெஷல் எடிஷனை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய டிவிஎஸ் ஜூப்பிட்டர் கிளாசிக் டாப் எண்ட் வேரியண்டில் மட்டுமே கிடைக்கிறது. இது சாலையில் அதிவேகமாக 50 லட்சம் வாகனங்கள் எனும் மைல்கல்லை எட்டியதை கொண்டாடும் வகையில் வெளியிடப்பட்டு இருக்கிறது. புதிய டிவிஎஸ் ஜூப்பிட்டர் கிளாசிக் மாடல் விலை ரூ. 85 ஆயிரத்து 866 ஆகும்.

    இந்த ஸ்கூட்டரின் பெண்டர் கார்னிஷ், டிண்ட் செய்யப்பட்ட வைசர், மிரர் ஹைலைட் உள்ளிட்டவைகளை சுற்றி பிளாக் தீம் செய்யப்பட்டு உள்ளது. இத்துடன் 3டி பிளாக் லோகோ வழங்கப்பட்டு இருக்கிறது. ஹேண்டில்பார் எண்ட், டைமண்ட் கட் அலாய் வீல்கள், ரிச் டார்க் பிரவுன் பேனல்கள், பிரீமியம் லெதர் இருக்கை மேற்கவர்கள், பேக் ரெஸ்ட் போன்ற அம்சங்கள் உள்ளன .இந்த ஸ்கூட்டர் மிஸ்டிக் கிரே மற்றும் ரீகல் பர்ப்பில் என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது.

    டிவிஎஸ் ஜூப்பிட்டர் கிளாசிக் மாடலில் புதிய தலைமுறை அலுமினியம், லோ-ஃப்ரிக்‌ஷன் 110சிசி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் சீரான செயல்திறன், பிக்கப் மற்றும் மைலேஜ் உள்ளிட்டவைகளை வழங்குகிறது. இத்துடன் டிவிஎஸ் மோட்டார் காப்புரிமை பெற்ற எகனோமீட்டர் வழங்கப்பட்டு இருக்கிறது. இது இகோ மோட் மற்றும் பவர் மோட் ஆப்ஷன்களை வழங்குகிறது. இவற்றில் இகோ மோட் அதிக மைலேஜ் வழங்கும்.

    இந்திய சந்தையில் டிவிஎஸ் மோட்டார்ஸ் விற்பனை செய்து வரும் பிளாக்‌ஷிப் ஜூப்பிட்டர், என்டார்க், வீகோ மற்றும் பெப் பிளஸ் என நான்கு ஐசி என்ஜின் ஸ்கூட்டர்களும் தொடர்ந்து அமோக வளர்ச்சியை பதிவு செய்து வருகின்றன. ஜூப்பிட்டர் மற்றும் வீகோ மாடல்கள் 3 லட்சத்து 64 ஆயிரத்து 095 யூனிட்களும், பெப் பிளஸ் 28 ஆயிரத்து 913 யூனிட்களும் விற்பனையாகி உள்ளன. டிவிஎஸ் ஐகியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 15 ஆயிரத்து 028 யூனிட்கள் விற்பனையாகி உள்ளன.

    • டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் தனது என்டார்க் 125 ஸ்கூட்டர் சீரிசில் புது மாற்றம் செய்து இருக்கிறது.
    • அதன்படி புது ஸ்கூட்டர் விலை முந்தைய நிற ஆப்ஷன்களை விட அதிக விலை கொண்டிருக்கிறது.

    டிவிஎஸ் நிறுவனம் தனது என்டார்க் 125 ஸ்கூட்டரை தற்போது புளூ நிறத்தில் அறிமுகம் செய்து இருக்கிறது. இத்துடன் செக்யுர்டு பிளாட் கிராபிக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. என்டார்க் 125 ஸ்கூட்டரின் புதிய நிறத்தின் விலை ரூ. 87 ஆயிரத்து 011, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    என்டார்க் 125 ஸ்கூட்டரின் புளூ நிற வேரியண்டில் புது நிறம் தவிர வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் டிவிஎஸ் என்டார்க் மாடலில் 124.8சிசி, மூன்று வால்வுகள் கொண்ட ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 9.25 ஹெச்பி பவர், 10.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.


    இந்த ஸ்கூட்டரில் 12 இன்ச் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் டெலிஸ்கோபிக் போர்க், மோனோஷாக் சஸ்பென்ஷன் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. பிரேக்கிங்கிற்கு முன்புறம் டிஸ்க் பிரேக், டிரம் பிரேக் வழங்கப்பட்டு உள்ளது. இதே ஸ்கூட்டர் டூயல் டிரம் பிரேக் வேரியண்டிலும் கிடைக்கிறது.

    டிவிஎஸ் என்டார்க் புதிய புளூ நிற வேரியண்ட்டுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. வினியோகம் வரும் நாட்களில் துவங்கும் என தெரிகிறது.

    • டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் அபாச்சி RTR 160 மற்றும் RTR 180 மோட்டார்சைக்கிள் மாடல்களை அப்டேட் செய்து இருக்கிறது.
    • புது அபாச்சி RTR சீரிஸ் மாடல்கள் அதிநவீன தோற்றம் மற்றும் அம்சங்களை கொண்டிருக்கிறது.

    டிவிஎஸ் நிறுவனம் தனது அபாச்சி RTR 160 மற்றும் அபாச்சி RTR 180 மோட்டார்சைக்கிள் மாடல்களை இந்திய சந்தையில் அப்டேட் செய்துள்ளது. புதிய அபாச்சி RTR 160 மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 17 ஆயிரம், RTR 180 மாடல் விலை ரூ. 1 லட்சத்து 31 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    புது மோட்டார்சைக்கிள்கள் அதிநவீன தோற்றம் பெற்றுள்ளன. இத்துடன் புதிய எல்இடி ஹெட்லேம்ப்கள், டெயில் லைட் செட்டப் வழங்கப்பட்டு இருக்கிறது. இண்டிகேட்டரில் மட்டும் பல்புகள் வழங்கப்பட்டுள்ளன. அபாச்சி RTR 160 மற்றும் RTR 180 மாடல்களில் மேம்பட்ட இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ப்ளூடூத் கனெக்டிவிட்டி போன்ற அம்சங்கள் உள்ளன. இத்துடன் அர்பன், ரெயின் மற்றும் ஸ்போர்ட் என மூன்று வித ரைடிங் மோட்களை கொண்டுள்ளன.


    அபாச்சி RTR 160 மாடலில் 160 சிசி ஒற்றை சிலிண்டர், இரண்டு வால்வுகள் கொண்ட ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 15 ஹெச்பி பவர், 13.9 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய மேம்பட்ட அபாச்சி RTR 180 மாடலிலும் ஒற்றை சிலிண்டர், இரண்டு வால்வுகள் கொண்ட ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 17 ஹெச்பி பவர், 15.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

    டிவிஎஸ் அபாச்சி RTR 160 மாடல் - புளூ, ரெட், பிளாக், கிரே மற்றும் வைட் என ஐந்து விதமான நிறங்களில் கிடைக்கிறது. அபாச்சி RTR 180 மாடல் - பிளாக் மற்றும் புளூ என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. அபாச்சி RTR 160 மாடல் டிரம், டிஸ்க் மற்றும் ப்ளூடூத் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 1 லட்சத்து 18 ஆயிரம், ரூ. 1. லட்சத்து 22 ஆயிரம் மற்றும் ரூ. 1 லட்சத்து 31 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • டிவிஎஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஐகியூப் இந்திய உற்பத்தியில் அசத்தி வருகிறது.
    • அமோக வரவேற்பு இல்லை என்ற போதிலும் இந்த மாடல் கணிசமான விற்பனையை பதிவு செய்து வருகிறது.

    டிவிஎஸ் நிறுவனம் சமீபத்தில் தனது ஐகியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அப்டேட் செய்தது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஐகியூப் மாடல் இந்தியாவில் கணிசமான விற்பனையை பதிவு செய்து வருகிறது. ஐகியூப் மாடல் தொடர்ந்து வரவேற்பை பெற பல்வேறு காரணங்கள் இருந்த போதிலும், புது வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பது மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

    ஐகியூப் மாடலின் புது வேரியண்ட் வாடிக்கையாளர் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் ஏராளமான ஆப்ஷன்களை வழங்குகிறது. இத்துடன் இதன் பேஸ் வேரியண்ட் தற்போது அதிக ரேன்ஜ் வழங்குகிறது. எனினும், இதன் விலை அதிகளவு மாற்றம் இன்றி நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பது சந்தையில் போட்டியை பலப்படுத்தி இருக்கிறது.


    எலெக்ட்ரிக் வாகன சந்தையில் எதிர்கால திட்டமிடல் உடன் கடந்த ஆண்டு ரூ. 1000 கோடி முதலீடு செய்தது. இதைத் தொடர்ந்து மீண்டும் ரூ. 1000 கோடி முதலீடு செய்து புது வாகனங்கள் மூலம் எலெக்ட்ரிக் மயமாக்கலை நீட்டிக்க டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஜூன் 2022 மாதத்தில் மட்டும் டிவிஎஸ் நிறுவனம் 4 ஆயிரத்து 667 ஐகியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்து இருந்தது.

    இது மே மாதத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 2 ஆயிரத்து 030 யூனிட்களை விட அதிகம் ஆகும். அந்த வகையில் டிவிஎஸ் நிறுவனம் உற்பத்தியில் 77 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் மாதாந்திர வாகன உற்பத்தியில் 20 ஆயிரம் யூனிட்களை அடைய டிவிஎஸ் நிறுவனம் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

    டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்தின் அபாச்சி RR 310 மாடல் பந்தய களத்தில் புது சாதனையை படைத்து இருக்கிறது. இத்தகைய சாதனையை படைத்த முதல் மோட்டார்சைக்கிள் இது ஆகும்.


    டி.வி.எஸ். ஆசியா ஒன் மேக் சாம்பியன்ஷிப் தொடர் சமீபத்தில் நடைபெற்றது. இந்த தொடரில் பங்கேற்றவர்கள் அபாச்சி RR 310 OMC ரேஸ் பைக் கொண்டு பந்தய களத்தில் தங்களின் திறமையை வெளிப்படுத்தினர். சந்தையில் விற்பனை செய்யப்படும் டி.வி.எஸ். அபாச்சி RR 310 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் ரேசிங் பைக் செபாங் சர்வதேச சர்கியூட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. 

    மலேசியாவில் உள்ள இந்த பந்தய களத்தில் டி.வி.எஸ். அபாச்சி RR 310 மாடல் மணிக்கு 201.2 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப் பாய்ந்தது. அந்த வகையில் இத்தகைய சாதனையை படைத்த முதல் இந்திய மோட்டார்சைக்கிள் என்ற பெருமையை அபாச்சி RR 310 பெற்று இருக்கிறது. டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்தின் மோட்டார்ஸ்போர்ட் பிரிவு, டி.வி.எஸ். ரேசிங் இந்த மோட்டார்சைக்கிளை உருவாக்கியது,

     டி.வி.எஸ். அபாச்சி RR310, ரேஸ் பைக்

    நான்கு கட்டங்களில் நடைபெறும் ஒன் மேக் சாம்பியன்ஷிப் தொடரில் 16 பேர் பங்கேற்கின்றனர். அபாச்சி RR 310 ஆசியா OMC ரேஸ் பைக்கில் 312சிசி, DOHC, 4 வால்வுகள் கொண்ட லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது வழக்கமான அபாச்சி RR 310 மாடலை விட 38 சதவீதம் கூடுதல் திறன் வெளிப்படுத்துகிறது. 

    இதுதவிர டி.வி.எஸ். அபாச்சி RR 310 OMC ரேஸ் பைக்கில் குறைந்த எடை கொண்ட கார்பன் ஃபைபர் பாடிவொர்க், வீல்ஸ் மற்றும் சப்-ஃபிரேம் கொண்டிருக்கிறது. இத்துடன் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஒலின்ஸ் சஸ்பென்ஷன் யூனிட் வழங்கப்பட்டு உள்ளது. 
    ×