search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TVS iQube"

    • டிவிஎஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஐகியூப் இந்திய உற்பத்தியில் அசத்தி வருகிறது.
    • அமோக வரவேற்பு இல்லை என்ற போதிலும் இந்த மாடல் கணிசமான விற்பனையை பதிவு செய்து வருகிறது.

    டிவிஎஸ் நிறுவனம் சமீபத்தில் தனது ஐகியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அப்டேட் செய்தது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஐகியூப் மாடல் இந்தியாவில் கணிசமான விற்பனையை பதிவு செய்து வருகிறது. ஐகியூப் மாடல் தொடர்ந்து வரவேற்பை பெற பல்வேறு காரணங்கள் இருந்த போதிலும், புது வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பது மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

    ஐகியூப் மாடலின் புது வேரியண்ட் வாடிக்கையாளர் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் ஏராளமான ஆப்ஷன்களை வழங்குகிறது. இத்துடன் இதன் பேஸ் வேரியண்ட் தற்போது அதிக ரேன்ஜ் வழங்குகிறது. எனினும், இதன் விலை அதிகளவு மாற்றம் இன்றி நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பது சந்தையில் போட்டியை பலப்படுத்தி இருக்கிறது.


    எலெக்ட்ரிக் வாகன சந்தையில் எதிர்கால திட்டமிடல் உடன் கடந்த ஆண்டு ரூ. 1000 கோடி முதலீடு செய்தது. இதைத் தொடர்ந்து மீண்டும் ரூ. 1000 கோடி முதலீடு செய்து புது வாகனங்கள் மூலம் எலெக்ட்ரிக் மயமாக்கலை நீட்டிக்க டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஜூன் 2022 மாதத்தில் மட்டும் டிவிஎஸ் நிறுவனம் 4 ஆயிரத்து 667 ஐகியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்து இருந்தது.

    இது மே மாதத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 2 ஆயிரத்து 030 யூனிட்களை விட அதிகம் ஆகும். அந்த வகையில் டிவிஎஸ் நிறுவனம் உற்பத்தியில் 77 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் மாதாந்திர வாகன உற்பத்தியில் 20 ஆயிரம் யூனிட்களை அடைய டிவிஎஸ் நிறுவனம் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

    • டி.வி.எஸ். நிறுவனத்தின் ஐகியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை விவரங்கள் வெளியீடு.
    • இந்த மாடல் முழு சார்ஜ் செய்தால் 140 கி.மீ. ரேன்ஜ் வழங்கும் திறன் கொண்டு இருக்கிறது.

    டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் ஐகியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் பிரபலமான மாடலாக விளங்குகிறது. 2022 ஜூன் மாதத்தில் மட்டும் 4 ஆயிரத்து 667 டி.வி.எஸ். ஐகியூப் யூனிட்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. இதுவரை ஒரே மாதத்தில் இத்தனை ஐகியூப் யூனிட்களை டி.வி.எஸ். நிறுவனம் விற்பனை செய்ததே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    சமீபத்தில் டி.வி.எஸ். நிறுவனம் தனது ஐகியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அப்டேட் செய்து பல்வேறு புது அம்சங்களை வழங்கி இருந்தது. புதிய மாடல் சந்தையில் அதிக வரவேற்பை பெற்றது. மேலும் இந்த ஸ்கூட்டர் பல்வேறு வேரியண்ட்களில் கிடைக்கிறது. அம்சங்கள் மற்றும் பேட்டரி ரேன்ஜ் அடிப்படையில் இவை பிரிக்கப்பட்டு உள்ளன.


    இந்தியாவில் டி.வி.எஸ். ஐகியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் - டி.வி.எஸ். ஐகியூப், ஐகியூப் எஸ் மற்றும் ஐகியூப் எஸ்.டி. என மூன்று வித வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1 லட்சத்து 14 ஆயிரத்து 936, ஆன் ரோடு சென்னை என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதில் சார்ஜரின் விலை சேர்க்கப்படவில்லை.

    2022 டி.வி.எஸ். ஐகியூப் மாடல் ஷைனிங் ரெட், டைட்டானியம் கிரே, காப்பர் பிரான்ஸ், மிண்ட் புளூ, கார்ப்பரேட் பிரான்ஸ், லுசிட் எல்லோ, ஸ்டார்லைட் புளூ, கோரல் சேண்ட், காப்பர் பிரான்ஸ் மேட் மற்றும் டைட்டானியம் கிரே மேட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.

    டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹைப்ரிட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு மற்றும் வெளியீடு குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஐக்யூப் ஹைப்ரிட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் வெளியிட தயாரித்து வருகிறது. இந்தியாவில் ஐக்யூப் மாடல் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

    முன்னதாக 2010 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் டிவிஎஸ் ஐக்யூப் ஸ்கூட்டர் அறிமுகம் முதன்முதலில் செய்யப்பட்டது. ஹைப்ரிட் ஸ்கூட்டர் 100சிசி இன்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் கொண்டிருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் மோட்டார் 150Wh மற்றும் 500Wh என இருவித பேட்டரி ஆப்ஷன்களுடன் கிடைக்கும் என கூறப்படுகிறது.

    இதன் எலெக்ட்ரிக் மோட்டார்கள் எகனாமி மற்றும் பவர் ரைடிங் மோட்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. டிவிஎஸ் ஐக்யூப் வேகம் மணிக்கு 20 கீலோமீட்டருக்கும் குறைவாக இருக்கும் போது முழுமையாக எலெக்ட்ரிக் திறனை பயன்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கும் அதிக வேகத்தில் செல்லும் போது பெட்ரோல் இன்ஜின் மூலம் இயங்கும்.



    ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட வடிவமைப்பில் கூடுதலாக புதிய நிறங்களில் டிவிஎஸ் ஐக்யூய் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுக்க பல்வேறு மாநிலங்களும் எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டி வரும் நிலையில், டிவிஎஸ் தனது ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய தயார்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

    மேலும் டிவிஎஸ் ஹைப்ரிட் ஸ்கூட்டர் தயாரிப்பு பணிகள் துவங்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் டிவிஎஸ் ஐக்யூப் விலை மற்ற நிறுவன மாடல்களுக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் அரசின் நிதியுதவியை பெற அந்நிறுவனம் முயற்சிக்கலாம்.
    ×