search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tree Branches"

    • காற்று அதிகமாக வீசும் போது மரக்கிளைகள் முறிந்து சாலையில் விழுந்து விடுகிறது.
    • பெண் கவுன்சிலர் ஒருவரின் கணவர் மீது மரக்கிளை ஒடிந்து விழுந்ததில் காயத்துடன் உயிர் தப்பினார்.

    நெல்லை:

    நெல்லை டவுன்-பேட்டை சாலையில் கோடீஸ்வரன் நகர் பகுதியில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் முதல் பேட்டை செக்கடி பஸ் நிறுத்தம் அருகில் உள்ள கொம்புமாடசாமி கோவில் வரை சாலையின் ஓரத்தில் பழமையான மரங்கள் உள்ளது.

    இதில் பெரும்பாலான மரங்களின் கிளைகள் சாலையை நோக்கி உள்ளது. இதனால் வாகன போக்குவரத்து சற்று ஆபத்தாகவே அமைந்துள்ளது. சில நேரங்களில் காற்று அதிகமாக வீசும் போது மரக்கிளைகள் முறிந்து சாலையில் விழுந்து விடுகிறது.

    இதனால் மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அதனை கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில் இது சம்பந்தமாக நெல்லை மாவட்ட பொது ஜன பொது நல சங்க தலைவர் அய்யூப் நெல்லை நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளரிடம் புகார் மனு அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    இப்போது தென்மேற்கு பருவமழை காலத்தை ஒட்டி சாலைகளில் மரக்கிளைகள் முறிந்து விழுந்து விடுகின்றன. மரத்திலிருந்து கிளைகள் ஒடிந்து விழுகின்ற நேரத்தில் வாகனத்தின் மீது விழுந்தால், வாகன ஓட்டிகள் பேராபத்தை சந்திக்க நேரிடும்.பெரிய வாகனத்தில் விழுந்தால் வாகனம் நிலை தடு மாறி எதிரே வரக்கூடிய வாக னத்தில் மோதி விடும் நிலை இருக்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு நெல்லை மாநகராட்சி பெண் கவுன்சிலர் ஒருவரின் கணவர் மோட்டார் சைக்கிளில் வரும்போது மரக்கிளை ஒடிந்து அவர் மீது விழுந்து காயத்துடன் உயிர் தப்பினார். எனவே அலட்சி யம் கா ட்டாமல் பங்க்கிலிருந்து கொம்பு மாடசாமி கோவில் வரையுள்ள மரக் கிளைகளை வெட்டி வாகன ஓட்டி களின் பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • வீடுகள் மீதும் மின் கம்பி மீதும் உராய்வதால் விபத்து ஏற்படும் சூழல் அடிக்கடி நிலவுகிறது.
    • ரமேஷ் ,சேவியர், ஜெகதீசன், சரவணன், அர்ஜுனன், வெங்கடேசன், ரவி ஆகியோர் உடன் இருந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர் கார்த்திகேயன் தலைமையில் தி.மு.க.வினர் புதுவை வனத்துறை துணை இயக்குனரிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நெல்லித்தோப்பு தொகுதிக்குட்பட்ட கஸ்தூரிபாய் நகர், கிணற்று வீதியில் உள்ள மரங்களில் மரக்கிளைகள் வளர்ந்து இப்பகுதிகளில் உள்ள வீடுகள் மீதும் மின் கம்பி மீதும் உராய்வதால் விபத்து ஏற்படும் சூழல் அடிக்கடி நிலவுகிறது.

    இதனால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த அச்சத்துக்கு உள்ளாகி றார்கள். எனவே அப்பகுதி பொது மக்களின் நலன் கருதி மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

    இந்த நிகழ்ச்சியின் போது தொகுதி செயலாளர் நடராஜன், பொதுக்குழு உறுப்பினர் வேலவன், அருண், தொண்டரணி கருணா, கஸ்தூரிபாய் நகர் கிளை தலைவர் கலிய பெருமாள், செயலாளர் பிரான்சிஸ்,ஆதி, ரமேஷ் ,சேவியர், ஜெகதீசன், சரவணன், அர்ஜுனன், வெங்கடேசன், ரவி ஆகியோர் உடன் இருந்தனர்.

    • மின்சார கம்பிகளுக்கு இடையூறான மரங்களின் கிளைகளை வெட்ட வேண்டும் என்று பொதுமக்கள் மின்சார அலுவலகத்திற்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
    • மின் வாரிய ஊழியர்களின் பணியை பொதுமக்கள் பாராட்டினர்.

    உடன்குடி:

    உடன்குடி நகரப் பகுதியில் அவ்வபோது பலத்த காற்று வீசும் போது, மின்சார கம்பிகளுக்கு இடையே செல்லும் மரக்கிளைகள் மின்சார கம்பியில் தேய்த்து அடிக்கடி பழுதாகி மின்சாரம் துண்டிக்கப்படும் நிலை ஏற்பட்டது.

    இதனால் மின்சார கம்பிகளுக்கு இடையூறான மரங்களின் கிளைகளை வெட்ட வேண்டும் என்று பொதுமக்கள் மின்சார அலுவலகத்திற்கு கோரிக்கை விடுத்து வந்தனர். பொதுமக்களின் கோரிக்கை ஏற்று உடன்குடி பகுதியில் மின்கம்பிகளுக்கு இடையூறான மரக்கிளைகளை அப்புறபடுத்தும் பணியில் மின்சார துறையினர் செயல்பட்டனர். ஒவ்வொரு டிரான்ஸ்பார்மாக மின்சாரத்தை நிறுத்தி இடையூறான மரக்கிளைகளை அப்புறபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். இவர்களது பணியை பொதுமக்கள் பாராட்டினார்கள்.

    ×