search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேட்டையில் சாலையோர மரங்களின் கிளைகள் வெட்டி அப்புறப்படுத்தப்படுமா?- சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு
    X

    பேட்டையில் சாலையோர மரங்களின் கிளைகள் வெட்டி அப்புறப்படுத்தப்படுமா?- சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

    • காற்று அதிகமாக வீசும் போது மரக்கிளைகள் முறிந்து சாலையில் விழுந்து விடுகிறது.
    • பெண் கவுன்சிலர் ஒருவரின் கணவர் மீது மரக்கிளை ஒடிந்து விழுந்ததில் காயத்துடன் உயிர் தப்பினார்.

    நெல்லை:

    நெல்லை டவுன்-பேட்டை சாலையில் கோடீஸ்வரன் நகர் பகுதியில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் முதல் பேட்டை செக்கடி பஸ் நிறுத்தம் அருகில் உள்ள கொம்புமாடசாமி கோவில் வரை சாலையின் ஓரத்தில் பழமையான மரங்கள் உள்ளது.

    இதில் பெரும்பாலான மரங்களின் கிளைகள் சாலையை நோக்கி உள்ளது. இதனால் வாகன போக்குவரத்து சற்று ஆபத்தாகவே அமைந்துள்ளது. சில நேரங்களில் காற்று அதிகமாக வீசும் போது மரக்கிளைகள் முறிந்து சாலையில் விழுந்து விடுகிறது.

    இதனால் மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அதனை கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில் இது சம்பந்தமாக நெல்லை மாவட்ட பொது ஜன பொது நல சங்க தலைவர் அய்யூப் நெல்லை நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளரிடம் புகார் மனு அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    இப்போது தென்மேற்கு பருவமழை காலத்தை ஒட்டி சாலைகளில் மரக்கிளைகள் முறிந்து விழுந்து விடுகின்றன. மரத்திலிருந்து கிளைகள் ஒடிந்து விழுகின்ற நேரத்தில் வாகனத்தின் மீது விழுந்தால், வாகன ஓட்டிகள் பேராபத்தை சந்திக்க நேரிடும்.பெரிய வாகனத்தில் விழுந்தால் வாகனம் நிலை தடு மாறி எதிரே வரக்கூடிய வாக னத்தில் மோதி விடும் நிலை இருக்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு நெல்லை மாநகராட்சி பெண் கவுன்சிலர் ஒருவரின் கணவர் மோட்டார் சைக்கிளில் வரும்போது மரக்கிளை ஒடிந்து அவர் மீது விழுந்து காயத்துடன் உயிர் தப்பினார். எனவே அலட்சி யம் கா ட்டாமல் பங்க்கிலிருந்து கொம்பு மாடசாமி கோவில் வரையுள்ள மரக் கிளைகளை வெட்டி வாகன ஓட்டி களின் பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×