search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TNPL 2022"

    • நெல்லை ராயல் கிங்ஸ் 14 பந்துகள் மீதமிருந்த நிலையில், இலக்கை எட்டியது.
    • அஜிதேஷ் 25 பந்துகளை எதிர்கொண்டு 1 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 48 ரன்கள் குவித்தார்.

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நெல்லை சங்கர் நகர் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் விளையாடின. முதலில் ஆடிய சேலம் அணியில் கவின் 48 ரன்களும், டேரில் பெராரியா 60 ரன்களும் விளாச, அந்த அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் சேர்த்தது. நெல்லை அணி தரப்பில் அதிசயராஜ் டேவிட்சன், ஹரிஷ் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து 150 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெல்லை ராயல் கிங்ஸ் 14 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டியது.

    துவக்க வீரர் பிரதோஷ் ரஞ்சன் பால் ஒரு ரன்னில் ஆட்டமிழந்த நிலையில், மற்றொரு துவக்க வீரர் சூரியபிரகாஷ்- பாபா அபராஜித் இருவரும் பொறுப்புடன் விளையாடி, ஸ்கோரை உயர்த்தினர். சூரிய பிரகாஷ் 35 ரன்களும், அபராஜித் 32 ரன்களும் அடித்தனர். பாபா இந்திரஜித் 15 ரன்கள் சேர்த்தார். அதன்பின்னர் அஜிதேஷ் அதிரடியாக ஆடி பந்துகளை சிக்சர்களாக பறக்கவிட்டார். அஜிதேஷ் 25 பந்துகளை எதிர்கொண்டு 1 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 48 ரன்கள் (நாட் அவுட்) குவித்தார். ஜிதேந்திர குமார் ஆட்டமிழக்காமல் 10 ரன்கள் சேர்த்தார்.

    இதனால் நெல்லை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த சீசனில் நெல்லை அணி 2வது வெற்றியை பதிவு செய்துள்ளது. தனது முதல் ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. 

    • ஒருபுறம் விக்கெட்டுகள் மளமளவென சரிந்த நிலையிலும், பெராரியோ நிலைத்து நின்று நம்பிக்கை அளித்தார்.
    • நெல்லை அணி தரப்பில் அதிசயராஜ் டேவிட்சன், ஹரிஷ் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நெல்லை சங்கர் நகர் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ராயல் கிங்ஸ் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்ய, சேலம் அணி முதலில் பேட்டிங் செய்தது.

    துவக்க வீரர்கள் ஜமால் (11), கோபிநாத் (10) ஆகியோர் விரைவில் ஆட்டமிழந்த நிலையில், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கவின் 37 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 48 ரன்கள் விளாசினார். அதன்பின், டேரில் பெராரியோ, நெல்லை பந்துவீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு ரன் சேர்த்தார்.

    மறுமுனையில் விக்கெட்டுகள் மளமளவென சரிந்த நிலையிலும், பெராரியோ நிலைத்து நின்று நம்பிக்கை அளித்தார். அவர் 44 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் அரை சதம் கடந்தார்.

    இதனால் சேலம் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் சேர்த்தது. பெராரியோ 60 ரன்களுடன் களத்தில் இருந்தார். நெல்லை அணி தரப்பில் அதிசயராஜ் டேவிட்சன், ஹரிஷ் தலா 2 விக்கெட் எடுத்தனர். ஆர்யா யோகன் மேனன், சஞ்சய் யாதவ் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து 150 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை ராயல் கிங்ஸ் அணி களமிறங்குகிறது. நெல்லை ராயல் கிங்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. 

    • முதலில் ஆடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் ஹரிஷ் குமார், சசி தேவ் சிறப்பாக ஆடினர்.
    • மதுரை அணி 11 பந்துகள் மீதமிருந்த நிலையில் 6 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டியது.

    டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-சீசம் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி துவக்கத்தில் விக்கெட்டுகளை வரிசையாக இழந்து திணறியது.

    51 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில், ஆல் ரவுண்டர் ஹரிஷ் குமார், சசி தேவ் ஜோடி சிறப்பாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இதனால் 20 ஓவர் முடிவில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சசி தேவ் 58 ரன்கள் விளாசினார். ஹரிஷ் குமார் 39 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதையடுத்து 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மதுரை அணி, 11 பந்துகள் மீதமிருந்த நிலையில் 6 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டியது. இதனால் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அனிருத் 58 ரன்கள் (நாட் அவுட்) குவித்தார். அருண் கார்த்திக் 31 ரன்கள், ராஜ்குமார் 19 ரன்கள் எடுத்தனர். 

    • முதலில் ஆடிய திண்டுக்கல் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் சேர்த்தது.
    • நிதிஷ் ராஜகோபால், ஆதித்ய கணேஷ் இருவரும் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெறச் செய்தனர்.

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது லீக் ஆட்டம் நெல்லையில் இன்று இரவு நடைபெற்றது. இப்போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் விளையாடின. முதலில் ஆடிய திண்டுக்கல் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக விக்னேஷ் 32 ரன்கள் சேர்த்தார். கேப்டன் நிஷாந்த் 25 ரன்கள், மோனிஷ் 24 ரன்கள் எடுத்தனர். திருச்சி அணி தரப்பில் அஜய் கிருஷ்ணா 9 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.

    இதையடுத்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திருச்சி அணி, 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது.

    துவக்க வீரர்கள் அமித் சாத்விக் 20 ரன்களும், முரளி விஜய் 8 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்த பின்னர், நிதிஷ் ராஜகோபால், ஆதித்ய கணேஷ் இருவரும் அணியை வெற்றி பெறச் செய்தனர். நிதிஷ் ராஜகோபால் ஆட்டமிழக்காமல் 64 ரன்களும், ஆதித்ய கணேஷ் ஆட்டமிழக்காமல் 37 ரன்களும் விளாச, திருச்சி அணி 6 பந்துகள் மீதமிருந்த நிலையில் 2 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் சேர்த்தது. இதனால் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நிதிஷ் ராஜகோபால் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

    • அதிரடியாக ஆடிய மோனிஷ் 24 ரன்களும், விக்னேஷ் 32 ரன்களும் சேர்க்க திண்டுக்கல் அணி கவுரவமான ஸ்கோரை எட்டியது.
    • திருச்சி அணி தரப்பில் அஜய் கிருஷ்ணா 9 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட் கைப்பற்றினார்.

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது லீக் ஆட்டம் நெல்லையில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற திருச்சி வாரியர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணியின் துவக்க வீரர் பிரதீப் ஒரு ரன்னில் பெவிலியன் திரும்பினார். அதன்பின்னர் கேப்டன் ஹரி நிஷாந்த்- மணி பாரதி ஜோடி சற்று தாக்குப்பிடித்தது. அதிரடியாக ஆடிய கேப்டன் நிஷாந்த் 25 ரன்களும், மணி பாரதி 18 ரன்களும் சேர்த்தனர். விஷால் வைத்யா 16 ரன்களில் வெளியேறினார். மோகித் ஹரிஹரன் (8), ராஜேந்திரன் விவேக் (6) ஆகியோர் ஒற்றை இலக்கை ரன்னை தாண்டவில்லை.

    கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய மோனிஷ் 24 ரன்களும், விக்னேஷ் 32 ரன்களும் சேர்க்க அணி கவுரவமான ஸ்கோரை எட்டியது. தொடர்ந்து சிலம்பரசன் 2 ரன்கள், மனோஜ் குமார் 1 ரன் எடுக்க, 20 ஓவர் முடிவில் திண்டுக்கல் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் சேர்த்தது. திருச்சி அணி தரப்பில் அஜய் கிருஷ்ணா 9 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட் கைப்பற்றினார். ரகில் ஷா தலா 2 விக்கெட், சரவணகுமார், யாஸ் அருண் மொழி, அந்தோணி தாஸ் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

    இதையடுத்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி அணி களமிறங்குகிறது.

    • நெல்லை அணியில் அபாரமாக ஆடிய சூரியபிரகாஷ் 62 ரன்களும், சஞ்சய் யாதவ் 87 ரன்களும் குவித்தனர்.
    • பரபரப்பான கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவை என்ற நிலையில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 14 ரன்கள் எடுத்து சமன் செய்தது.

    நெல்லை:

    ஆறாவது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் நெல்லை சங்கர் நகரில் நடைபெற்றது. இதில் கவுசிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீசும், பாபா இந்திரஜித் தலைமையிலான நெல்லை ராயல் கிங்சும் மோதின.

    முதலில் ஆடிய நெல்லை அணி, 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது. அபாரமாக ஆடிய சூரியபிரகாஷ் 62 ரன்களும், சஞ்சய் யாதவ் 87 ரன்களும் குவித்தனர்.

    இதையடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில், கேப்டன் கவுசிக் காந்தி, ஜெகதீசன் இருவரும் நல்ல தொடக்கம் கொடுத்தனர். ஜெகதீசன் 25 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின்னர் ராதாகிருஷ்ணன் ஒரு ரன்னிலும், சசிதேவ் 15 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    அவர்களைத் தொடர்ந்து கவுசிக்குடன் இணைந்த சோனு யாதவ் அதிரடியாக ஆடினார். அவர் 23 பந்துகளில் 3 சிக்சர்களுடன் 34 ரன்கள் சேர்த்த நிலையில், ஆட்டமிழந்தார். சதீஷ் 5 ரன்கள் மட்டுமே சேர்த்தார். மறுமுனையில் நிதானமாக ஆடிய கேப்டன் கவுசிக் அரை சதம் கடந்தார். தொடர்ந்து ஆடிய அவர் 64 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் 43 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டரி 2 சிக்சருடன் இந்த இலக்கை எட்டினார்.

    பரபரப்பான கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவை என்ற நிலையில், அந்த ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட ஹரிஷ் ரன் எடுக்கவில்லை. 2வது பந்தில் பவுண்டரி, 3வது பந்தில் ரன் எடுக்கவில்லை. 4வது பந்தில் சிக்சர், கடைசி பந்தில் 4 ரன்கள் எடுக்க, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 14 ரன்கள் எடுத்து சமன் செய்தது. 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது.

    முதலில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பேட்டிங் செய்தது. அதிசயராஜ் வீசிய அந்த ஓவரில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 9 ரன் சேர்த்தது. இதையடுத்து சூப்பர் ஓவரை எதிர்கொண்ட நெல்லை அணி, 10 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. 

    • துவக்க வீரர் சூரியபிரகாஷ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவிப்பில் ஈடுபட்டார்.
    • அதிரடியாக ஆடிய சஞ்சய் யாதவ் ஆட்டமிழக்காமல் 47 பந்துகளில் 87 ரன்கள் விளாசினார்.

    நெல்லை:

    ஆறாவது டி.என்.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்கியது. இத்தொடரில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருச்சி வாரியர்ஸ், திருப்பூர் தமிழன்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், கோவை கிங்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.

    முதல் நாளான இன்று நெல்லை சங்கர் நகரில் தொடக்க ஆட்டம் நடைபெறுகிறது. இதில் கவுசிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீசும், பாபா இந்திரஜித் தலைமையிலான நெல்லை ராயல் கிங்சும் மோதுகின்றன. டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, நெல்லை அணி முதலில் பேட்டிங் செய்தது.

    நெல்லை அணியின் ரஞ்சன் பால் (7), பாபா அபராஜித் (2), பாபா இந்திரஜித் (3) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். மறுமுனையில் துவக்க வீரர் சூரியபிரகாஷ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவிப்பில் ஈடுபட்டார். அவருடன் சஞ்சய் யாதவ் பவுண்டரி, சிக்சர் என அதிரடி காட்டினார். இருவரும் அரை சதம் கடக்க, அணியின் ஸ்கோர் வெகுவாக உயர்ந்தது.

    சூரியபிரகாஷ் 62 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், தொடர்ந்து ஆடிய சஞ்சய் யாதவ் ஆட்டமிழக்காமல் 87 ரன்கள் விளாசினார். அவர் 47 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் இந்த ரன்னை எட்டினார்.

    இதனால் நெல்லை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது. அஷிதேஷ் 16 ரன்களுடன் களத்தில் இருந்தார். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தரப்பில் சந்தீப் வாரியர், மணிமாறன் சித்தார்த், சோனு யாதவ், ஹரீஷ் குமார் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி களமிறங்கியது.

    ×