search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thiruvattar Adikesava Perumal Temple"

    • ஆதிகேசவ பெருமாளுக்கு தளியல் ஆற்றில் ஆராட்டு நடைபெற்றது.
    • திருவம்பாடி கிருஷ்ணசுவாமி கருட வாகனத்தில் ஆராட்டுக்கு எழுந்தருளினர்.

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஐப்பசித் திருவிழா கடந்த 23-ந் தேதி தொடங்கியது. விழா நாட்களில் சாமிபவனி, கதகளி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று முன்தினம் சிறப்பு நாதஸ்வரக்கச்சேரி, சாமி கருட வாகனத்தில் பள்ளிவேட்டைக்கு எழுந்தருளல் ஆகியன நடந்தது.

    விழாவின் 10-வது நாளான நேற்று ராமாயண பாராயணம், சிறப்பு நாதஸ்வர கச்சேரி போன்றவை நடந்தது. இரவு கருட வாகனத்தில் ஆதிகேசவ பெருமாளும் திருவம்பாடி கிருஷ்ணசுவாமியும் கருட வாகனத்தில் ஆராட்டுக்கு எழுந்தருளினர்.

    அப்போது திருவிதாங்கூர் மன்னரின் பிரதிநிதி உடைவாளுடன் முன் சென்றார். திருவட்டார் போலீசார் துப்பாக்கி ஏந்தி மரியாதை செய்தனர். பின்னர் ஆதிகேசவ பெருமாளுக்கு தளியல் ஆற்றில் ஆராட்டு நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் செய்து இருந்தனர்.

    • இன்று இரவு 7 மணிக்கு தளியல் ஆற்றில் எழுந்தருளல் நடக்கிறது.
    • இன்று நள்ளிரவு 1 மணிக்கு குசேல விருத்தம் கதகளி நடைபெறுகிறது.

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஐப்பசித்திருவிழா கடந்த 23-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.

    விழா நாட்களில் சாமிபவனி, கதகளி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வந்தது. நேற்று முன்தினம் இரவு சாமி பல்லக்கில் பவனி வருதல், துரியோதனன் வதம், கதகளி ஆகியவை நடந்தது.

    நேற்று பக்தி இன்னிசை, சாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல், பாலிவதம் கதகளி ஆகியவை நடைபெற்றது.

    நேற்று (திங்கட்கிழமை) நாதஸ்வர கச்சேரி, சாமி கருடவாகனத்தில் பள்ளிவேட்டைக்கு எழுந்தருளல் ஆகியவை நடந்தது.

    இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணிக்கு சிறப்பு நாதஸ்வர கச்சேரி, கருட வாகனத்தில் சாமி ஆராட்டுக்கு தளியல் ஆற்றில் எழுந்தருளலும், நள்ளிரவு 1 மணிக்கு குசேல விருத்தம் கதகளி ஆகியவை நடைபெறுகிறது.

    • ஐப்பசி திருவிழா இன்று தொடங்கி நவம்பர் 1-ந்தேதி 10 நாட்கள் நடக்கிறது.
    • 31-ந் தேதி சாமி கருடவாகனத்தில் பள்ளிவேட்டைக்கு எழுந்தருளல் நடைபெறும்.

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கடந்த ஜூலை மாதம் 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி, ஐப்பசி மாதங்களில் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி ஐப்பசி திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (நவம்பர்) 1-ந் தேதி வரை நடக்கிறது.

    முதல் நாளான இன்று காலை 8.30 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. பின்னர் சாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல், சிறப்பு பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து விழா நாட்களில் பல்வேறு பூஜைகள், சாமி வாகனத்தில் பவனி வருதல் போன்றவை நடக்கிறது.

    24-ந் தேதி இரவு 9 மணிக்கு சாமி அனந்த வாகனத்தில் பவனி வருதல், 10 மணிக்கு ருக்மணி சுயம்வரம் கதகளியும், 25-ந் தேதி காலை 8 மணிக்கு பாகவத பாராயணம், இரவு 9 மணிக்கு கமல வாகனத்தில் சாமி எழுந்தருளல், 10 மணிக்கு தட்ச யாகம் கதகளியும் நடைபெறும்.

    26-ந் தேதி இரவு 7 மணிக்கு ராமாயண பாராயணம், 9.30 மணிக்கு சாமி பல்லக்கில் பவனி வருதல், 10 மணிக்கு சந்தான கோபாலம் கதகளியும், 27-ந் தேதி இரவு 8 மணிக்கு கிருஷ்ணன் சன்னதியில் கொடியேற்றம், தொடர்ந்து கருட வாகனத்தில் சாமி பவனி வருதல், நள சரிதம் கதகளியும், 28-ந் தேதி இரவு 7 மணிக்கு திருவாதிரைக்களி, 9 மணிக்கு சாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதலும், 29-ந் தேதி இரவு 9 மணிக்கு சாமி பல்லக்கில் பவனி வருதல், தொடர்ந்து துரியோதன வதம் கதகளியும் நடக்கிறது.

    30-ந் தேதி இரவு 9 மணிக்கு பாலிவதம் கதகளி, 31-ந் தேதி இரவு 8.30 மணிக்கு சிறப்பு நாதஸ்வரக்கச்சேரி, 9.30 மணிக்கு சாமி கருடவாகனத்தில் பள்ளிவேட்டைக்கு எழுந்தருளல் போன்றவை நடைபெறும்.

    விழாவின் இறுதி நாளான வருகிற 1-ந் தேதி காலை 6 மணிக்கு ராமாயண பாராயணம், 11 மணிக்கு திருவிலக்கு எழுந்தருளல், இரவு 7 மணிக்கு சிறப்பு நாதஸ்வர இன்னிசைக் கச்சேரி, கருட வாகனத்தில் சாமி ஆராட்டுக்கு தளியல் ஆற்றுக்கு எழுந்தருளல், இரவு 1 மணிக்கு குசேல விருத்தம் கதகளி ஆகியவை நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் இணைந்து செய்துள்ளனர்.

    • இந்த கோவிலில் கடந்த ஜூலை மாதம் 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடந்தது.
    • செப்டம்பர் 19-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை சூரியக்கதிர்கள் ஆதிகேசவப் பெருமாளின் திருமேனியில் விழும்.

    திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் கடந்த ஜூலை மாதம் 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பின் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இந்த கோவிலில் செப்டம்பர் மாதம் 19-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை மாலையில் சூரியக்கதிர்கள் கருவறை வரை பாய்ந்து ஆதிகேசவப் பெருமாளின் திருமேனியில் விழும் அதிசயம் நடைபெறும். பெருமாளுக்கு உகந்த தமிழ் மாதமான புரட்டாசி மாத தொடக்கத்தில் மாலைச்சூரியனின் பொன்னிற கதிர்கள் பெருமாளின் திருமேனியில் விழும் வகையில் கோவிலை வடிவமைத்துள்ளனர்.

    இந்தநிலையில், நேற்று மாலையில் சூரியனின் மஞ்சள் நிறக்கதிர்கள் கண்களை கூசச்செய்யும் விதத்தில் பாய்ந்து கருவறையில் பெருமாள் மீது விழுந்தது. இதைப் பார்த்து பக்தர்கள் பரவசமடைந்தனர். இந்த அபூர்வ காட்சியை இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணியளவில் காணலாம்.

    • கிருஷ்ணசாமி கோவில்களில் கிருஷ்ணஜெயந்தி விழா நடந்தது.
    • கிருஷ்ணசாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி பவனி நடந்தது.

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் நேற்று கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. மாலையில் தீபாராதனையை தொடர்ந்து கோவிலில் உள்ள உதய மார்த்தாண்ட மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்ட தொட்டிலில் குழந்தை கண்ணன், பலராமன் ஐம்பொன் விக்கிரகங்கள் வைக்கப்பட்டன. பின்னர் பக்தர்கள் தொட்டிலை அசைத்து மகிழ்ந்தனர்.

    இரவில் கிருஷ்ணன் கோவிலில் கலச அபிஷேகம், அலங்கார தீபாராதனை, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    இதேபோல் அருமனை அருகே உள்ள முழுக்கோடு, கடலிகோடு ஆகிய பகுதிகளில் உள்ள கிருஷ்ணசாமி கோவில்களில் கிருஷ்ணஜெயந்தி விழா நடந்தது. இதையொட்டி கடலிகோடு கிருஷ்ணசாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி பவனி நடந்தது. பவனி புண்ணியம் கண்டன் சாஸ்தா கோவிலில் இருந்து தொடங்கி முழுக்கோடு வழியாக கடலிகோடு கிருஷ்ணசாமி கோவிலில் நிறைவடைந்தது. இதில் குழந்தைகள் கிருஷ்ணர் வேடம் அணிந்தும், முத்துக்குடையுடன் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • இந்த கோவிலில் கடந்த மாதம் 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடந்தது.
    • இன்று (செவ்வாய்க்கிழமை) பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

    திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் கடந்த மாதம் 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடந்தது.

    இதன் 41-வது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், காலை 8.30 மணிக்கு கிருஷ்ணன் கோவில், குலசேகரப்பெருமாள் கோவில், சாஸ்தா கோவில் ஆகியவற்றில் சிறப்பு கலச அபிஷேகம் போன்றவை நடைபெறும்.

    காலை 9.30 மணிக்கு மேல் வழக்கம்போல் பக்தர்கள் ஒற்றக்கல் மண்டபத்தில் ஏறி சாமிதரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள், மாலை 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது.

    • இந்த கோவிலில் கும்பாபிஷேகம் கடந்த 6-ந்தேதி நடந்தது.
    • பூஜைகள், பஞ்சவாத்தியம், நாதஸ்வரம், தவில் இல்லாமல் நடக்கிறது.

    108 வைணவத்திருப்பதிகளில் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 6-ந்தேதி நடந்தது. அதன்பின்னர் கோவிலில் சாமியை தரிசனம் செய்ய பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. குறிப்பாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. அதன்படி நேற்று கோவிலுக்கு பக்தர்கள் அதிக அளவில் வந்து இருந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    கடந்த செவ்வாய்க்கிழமை முதல் ஒற்றைக்கல் மண்டபத்தில் ஏறி சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளதால், பக்தர்கள் மிகுந்த உற்சாகத்துடன் சாமிகும்பிட வருகின்றனர்.

    பூஜைகள், பஞ்சவாத்தியம், நாதஸ்வரம், தவில் இல்லாமல் நடக்கிறது. எனவே இசைக்கலைஞர்களை உடனே நியமிக்க அறநிலையத்துறை முன்வரவேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.

    • இந்த கோவிலில் கடந்த 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடந்தது.
    • 7 ஆண்டுக்கு பின்னர் ஒற்றைக்கல் மண்டபத்தில் ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் புனரமைப்பு பணிகளுக்காக 7 ஆண்டுக்கு முன்பு கருவறையில் இருந்த அர்ச்சனா மூர்த்தி விக்கிரகங்கள் பாலாலயத்திற்கு மாற்றப்பட்டது. அதன்பின்னர் கருவறையில் பாம்பணை மீது பள்ளி கொண்டு அருள்பாலிக்கும் ஆதிகேசவ பெருமாளை ஒற்றைக்கல் மண்டபத்தில் ஏறி தரிசிக்கும் வாய்ப்பு பக்தர்களுக்கு இல்லாமல் போனது.

    கடந்த 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பின்னர் ஒற்றைக்கல் மண்டபத்தில் இருந்து சாமியை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அனுமதிக்கப்படவில்லை. இதுபற்றிய செய்தி, 'தினத்தந்தி'-யில் வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து ஒற்றைக்கல் மண்டபத்தில் நின்று சாமியை பக்தர்கள் தரிசனம் செய்ய பாதுகாப்பு கம்பிகள் இணைக்கும் பணி நேற்று முன் தினம் முடிந்தது.

    அதைத்தொடர்ந்து நேற்று காலை முதல் ஒற்றைக்கல் மண்டபத்தில் ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். காலை 9.30 மணியில் இருந்து 11.30 மணி வரையும், மாலை 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனைக்குப் பின்னர் 8.30 மணி வரையும் பக்தர்கள் சாமியை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    7 ஆண்டுக்கு பின்னர் ஒற்றைக்கல் மண்டபத்தில் ஏறி சாமி தரிசனம் செய்த பக்தர்கள் பரவசத்துடன் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்தனர்.

    • 108 வைணவ திருப்பதிகளில் ஒன்றாக திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவில் உள்ளது.
    • ஒற்றைக் கல் மண்டபத்தில் பாதுகாப்பு கம்பிகள் பொருத்தப்பட்டது.

    108 வைணவ திருப்பதிகளில் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் கடந்த 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு கோவிலுக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

    7 ஆண்டுகளுக்கு முன்பு கோவில்கருவறையில் இருந்து பாலாலயத்துக்கு அர்ச்சனா மூர்த்தி சிலைகள் மாற்றப்பட்ட பின்னர் ஒற்றைக்கல் மண்டபத்தில் ஏறி பாம்பணை மீது பள்ளிகொண்டிருக்கும் ஆதிகேசவ பெருமாளை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

    கும்பாபிஷேகம் மற்றும் திருவிழா முடிந்த பின்னர் காலை நேர பூஜை மற்றும் மாலை நேர தீபாராதனைக்குப்பின்னர் ஒற்றைக்கல் மண்டபத்தில் ஏறி கருவறையில் உள்ள ஆதிகேசவ பெருமாளை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திருவிழா முடிந்தபின்னரும் ஒற்றைக்கல் மண்டபத்தில் ஏறி பக்தர்கள் சாமிதரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.

    அதன் எதிரொலியாக இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரையும், மாலை 6.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையும் பக்தர்கள் ஒற்றைக் கல் மண்டபத்தில் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதைத்தொடர்ந்து நேற்று ஒற்றைக் கல் மண்டபத்தில் பாதுகாப்புடன் நிற்பதற்கு வசதியாக பாதுகாப்பு கம்பிகள் பொருத்தப்பட்டது. இதனால் மண்டபத்தில் ஏறும் பக்தர்கள் பாதுகாப்பாக நின்று சாமியை தரிசிக்க முடியும்.

    • ஆதிகேசவ பெருமாளுக்கு பலாக்காயும், கஞ்சியும் நிவேத்யமாக படைக்கப்பட்டது.
    • இன்று காலை முதல் மதியம் வரை பெருந்தமிர்து சிறப்பு பூஜை நடக்கிறது.

    108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் கடந்த 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்திற்கு பிறகு நாள்தோறும் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் விடுமுறைநாளான நேற்று காலை முதலே உள்ளூர், வெளியூர் மற்றும் கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்களும் வாகனங்களில் வந்திருந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    நேற்று ஆடி மாதம் முதல் தேதி என்பதால் ஆதிகேசவ பெருமாளுக்கு பலாக்காயும், கஞ்சியும் நிவேத்யமாக படைக்கப்பட்டது. ஒவ்வொரு ஆடி மாதம் 2-ம் நாள் பட்டுவஸ்திரம், பல்வேறு வகையான உணவு பதார்த்தங்கள் ஆதிகேசவ பெருமாளுக்கு படைக்கும் பெருந்தமிர்து பூஜை நடைபெறவதும் வழக்கம்.

    அதன்படி ஆடி 2-ம் நாளான இன்று (திங்கட்கிழமை) காலை முதல் மதியம் வரை பெருந்தமிர்து சிறப்பு பூஜை நடக்கிறது.

    கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு கோவில் கருவறையில் இருந்து பாலாலயத்துக்கு அர்ச்சனா மூர்த்தி சிலைகளை மாற்றப்பட்டது. அதன்பிறகு ஒற்றைக்கல் மண்டபத்தில் ஏறி பாம்பணை மீது பள்ளிகொண்டிருக்கும் ஆதிகேசவப்பெருமாளை தரிசிக்க அனுமதிக்கப்படவில்லை. தற்போது கும்பாபிஷேகத்தையொட்டி அர்ச்சனா மூர்த்தி சிலைகள் கருவறைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பூஜை நடந்து வருகிறது.

    கும்பாபிஷேகம் மற்றும் திருவிழா முடிந்த பிறகு ஒற்றைக்கல் மண்டபத்தில் ஏறி கருவறையில் உள்ள ஆதிகேசவப்பெருமாளை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதுவரை அனுமதிக்கப்படவில்லை. இதுகுறித்து கோவில் மேலாளர் மோகன்குமார் கூறுகையில், ஒற்றைக்கல் மண்டபத்தின் இடது மற்றும் வலது புறம் பள்ளமானது.

    முன்பு இந்த பகுதிகளில் பாதுகாப்பு கம்பிகள் போடப்பட்டிருந்தது. இதனால் மண்டபத்தில் ஏறும் பக்தர்கள் பாதுகாப்பாக நிற்க முடியும். சீரமைப்பு பணிகள் நடந்த போது அவை மாற்றப்பட்டது. எனவே, ஒற்றைக்கல் மண்டபத்தை சுற்றி பாதுகாப்பு கம்பிகள் அமைத்த பிறகு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்தார். விரைவில் ஒற்றைக்கல் மண்டபம் மீது பாதுகாப்பு கம்பிகள் பொருத்தி சாமி தரிசனம் செய்வதற்கு அறநிலையத்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.

    • திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் கடந்த 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடந்தது.
    • இன்று 11 மணியளவில் ஆதிகேசவப்பெருமாளுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் கடந்த 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பின்பு தினமும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி கும்பிட்டு செல்கிறார்கள். இங்கு கடந்த 9-ந்தேதி முதல் சிறப்பு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் பல்வேறு சிறப்பு பூஜைகள், சாமி பவனி வருதல் போன்றவை நடந்தது. நேற்று முன்தினம் இரவு சாமி பல்லக்கு வாகனத்தில் பவனி வருதலும், நேற்று இரவு சாமி வேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சியும் நடந்தது.

    விழாவில் இன்று (வியாழக்கிழமை) ஆராட்டு விழா நடக்கிறது. இதையொட்டி அதிகாலையில் திருப்பள்ளி எழுச்சி, மங்கள ஆராத்தி, ஆராட்டு பலி, ஆராட்டுக்கு எழுந்தருளல் போன்றவை நடைபெறும்.பூவங்கா பறம்பு ஆதிராவின் ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது. 11 மணியளவில் பரளியாறு பாயும் கிழக்கு நடையில் ஆதிகேசவப்பெருமாளுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    • திருவட்டார் கோவிலின் வெளியே குலசேகர பெருமாள் சன்னதி உள்ளது.
    • கும்பாபிஷேகத்துக்கு பிறகு குலசேகர பெருமாள் சன்னதியில் பூஜை நடத்தப்படமால் பூட்டியே கிடந்தது.

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 418 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோவிலில் கொடிமர பிரதிஷ்டையை தொடர்ந்து திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 6 நாட்கள் திருவிழா கொடியேற்றத்துடன் நடந்து வருகிறது. நேற்று 2-வது நாள் திருவிழா நடந்தது. காலையிலும், மாலையிலும் ஸ்ரீபூதபலி எழுந்தருளல், மதியம் ஸ்ரீபலி, இரவு பக்தி இன்னிசை ஆகியவை நடைபெற்றது.

    கும்பாபிஷேகத்துக்கு பிறகு கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக உள்ளது. நேற்று கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. குமரி மாவட்டம் மட்டுமல்லாது, பிற மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சாமியை தரிசிக்க வந்தனர். அவர்கள் வந்த வாகனங்கள் வெகுதூரத்துக்கு நிறுத்தப்பட்டிருந்தது.

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலின் உள்ளே ஆதிகேசவ பெருமாள் சன்னதி, வேணுகோபாலன் சன்னதி, சாஸ்தா சன்னதி ஆகியவை உள்ளன. கோவிலின் வெளியே குலசேகர பெருமாள் சன்னதி உள்ளது. அந்த சன்னதி கும்பாபிஷேகத்துக்கு பிறகு திறக்கப்பட்டது. கும்பாபிஷேகத்துக்கு மறுநாள் குலசேகர பெருமாள் சன்னதி மாலை பூஜை நடத்தப்படமால் பூட்டியே கிடந்தது.

    இதனால் பக்தர்கள் வருத்தப்பட்டு, கோவிலில் முறையிட்டனர். அதைத்தொடர்ந்து குலசேகர பெருமாள் சன்னதி காலை, மாலை திறந்து இருக்கும் என்று இணை ஆணையர் அறிவித்தார். இந்த நிலையில் நேற்று காலையிலும் குலசேகர பெருமாள் சன்னதி திறக்கப்படவில்லை. பக்தர்கள் கோவில் மேலாளரிடம் முறையிட்ட பின்னரே சன்னதி திறக்கப்பட்டு பூஜைகள் நடந்தது. குலசேகர பெருமாள் சன்னதியை தினமும் திறந்து, பூஜை நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். சன்னதி திறக்கப்படாததற்கு அர்ச்சகர்கள் குறைவாக இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

    கும்பாபிஷேகம் நடந்துள்ளதால், பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருப்பதாலும் அனைத்து சன்னதிகளையும் திறந்து பூஜை நடத்த அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து உள்ளது. மேலும் இங்கு பணியாற்றிய நாதஸ்வர கலைஞர், தவில் கலைஞர்கள் ஓய்வு பெற்ற பின்னர் இதுவரை புதிதாக இசைக்கலைஞர்கள் நியமிக்கப்படவில்லை. தற்போது திருவிழா நடைபெறுவதால் தற்காலிக கலைஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த பணி இடத்துக்கும் கலைஞர்களை நியமித்து கோவில் பூஜைகள் சிறப்பாக நடைபெற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

    ×