search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருவட்டார் கோவில் ஒற்றைக்கல் மண்டபத்தில் ஏறி தரிசனம் செய்ய இன்று முதல் அனுமதி
    X

    திருவட்டார் கோவில் ஒற்றைக்கல் மண்டபத்தில் ஏறி தரிசனம் செய்ய இன்று முதல் அனுமதி

    • 108 வைணவ திருப்பதிகளில் ஒன்றாக திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவில் உள்ளது.
    • ஒற்றைக் கல் மண்டபத்தில் பாதுகாப்பு கம்பிகள் பொருத்தப்பட்டது.

    108 வைணவ திருப்பதிகளில் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் கடந்த 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு கோவிலுக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

    7 ஆண்டுகளுக்கு முன்பு கோவில்கருவறையில் இருந்து பாலாலயத்துக்கு அர்ச்சனா மூர்த்தி சிலைகள் மாற்றப்பட்ட பின்னர் ஒற்றைக்கல் மண்டபத்தில் ஏறி பாம்பணை மீது பள்ளிகொண்டிருக்கும் ஆதிகேசவ பெருமாளை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

    கும்பாபிஷேகம் மற்றும் திருவிழா முடிந்த பின்னர் காலை நேர பூஜை மற்றும் மாலை நேர தீபாராதனைக்குப்பின்னர் ஒற்றைக்கல் மண்டபத்தில் ஏறி கருவறையில் உள்ள ஆதிகேசவ பெருமாளை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திருவிழா முடிந்தபின்னரும் ஒற்றைக்கல் மண்டபத்தில் ஏறி பக்தர்கள் சாமிதரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.

    அதன் எதிரொலியாக இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரையும், மாலை 6.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையும் பக்தர்கள் ஒற்றைக் கல் மண்டபத்தில் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதைத்தொடர்ந்து நேற்று ஒற்றைக் கல் மண்டபத்தில் பாதுகாப்புடன் நிற்பதற்கு வசதியாக பாதுகாப்பு கம்பிகள் பொருத்தப்பட்டது. இதனால் மண்டபத்தில் ஏறும் பக்தர்கள் பாதுகாப்பாக நின்று சாமியை தரிசிக்க முடியும்.

    Next Story
    ×