search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thiruvannamalai hills"

    • திருமாலைபதி எனும் தெய்வீக அலங்கார பாதை, கோவிலின் மூன்றாவது பிரகாரமாகும்.
    • இப்புனித பாதையில் காண்போர் கருத்தைக் கவரும் 900 அடி கலைக்கூடம் இருந்தது.

    திருமாலைபதி எனும் தெய்வீக அலங்கார பாதை, அருள்மிகு அருணாச்சலேசுவரர் கோவிலின் மூன்றாவது பிரகாரமாகும்.

    அருள்பாலிக்கும் ஆண்டவனுக்கு முன்னொரு காலத்தில் வண்ணமலர் மாலைகளும், ரத்தின ஆபரணங்களும்

    கவின்மிகு ஆடைகளும் சந்தன அலங்காரத் தயாரிப்புகளும் அணிவிக்கப்பட்டன.

    மேலும் வேதவிற்பன்னர்களின் வேத முழக்கங்களும் ரீங்காரமிடும் இடமாக இருந்தது.

    இப்புனித பாதையில் காண்போர் கருத்தைக் கவரும் 900 அடி கலைக்கூடம் பல ஆண்டுகளாக மூடப்பட்டு,

    வெளி உலகின் வெளிச்சத்திற்கு வராமல் மங்கிக் கிடந்தது.

    இதன் அருமை பெருமைகளை தீர்க்க தரிசனத்தோடு கண்டறிந்து உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியவர்கள்

    துணை ஆணையர் ஜெயராமனும் மற்றும் திருக்கோவில் அறங்காவலர்களும்தான்.

    • துவாபர யுகத்தில் தங்க மலையாகவும், இன்றைய கலியுகத்தில் கல்மலையாகவும் விளங்குகிறது.
    • இந்த மலை மிகப் பெரும் புனிதமாக கருதப்படுகிறது.

    அண்ணாமலை தங்கமலையாக இருந்த ரகசியம் உங்களுக்கு தெரியுமா?

    கைலாயத்தில் லிங்கம் இருப்பதால் கயிலாயம் சிறப்பு.

    ஆனால், லிங்கமே மலையாக இருப்பதால் திருவண்ணாமலை சிறப்பு.

    இந்த மலை மிகப் பெரும் புனிதமாக கருதப்படுகிறது.

    இதை சிவலிங்கமாக கருதி சித்தர்கள், முனிவர்கள், ஞானிகளெல்லாம் வழிபட்டுள்ளனர்.

    உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே இம்மலை உள்ளதாக தல வரலாறு கூறுகிறது.

    கிருதய யுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும்,

    துவாபர யுகத்தில் தங்க மலையாகவும், இன்றைய கலியுகத்தில் கல்மலையாகவும் விளங்குகிறது.

    • கிரி வலம்வர வேண்டும் என்ற நினைவோடு ஓரடி எடுத்து வைப்பவருக்கு யாகம் செய்த பலன் கிட்டும்.
    • இரண்டடியில் ராஜசூயயாக பலன் உண்டு. சர்வதீர்த்தமாடிய பலனும் வந்து சேரும்.

    அருணாச்சலத்தை வலம்வர வேண்டும் என்ற நினைவோடு ஓரடி எடுத்து வைப்பவருக்கு யாகம் செய்த பலன் கிட்டும்.

    அதுமட்டுமா? இந்தப் பூமியையே பிரதட்சணம் செய்த பலனும் கிடைக்கும்.

    இரண்டடியில் ராஜசூயயாக பலன் உண்டு.சர்வதீர்த்தமாடிய பலனும் வந்து சேரும்.

    மூன்றடியில் தான பலன். நான்கடியில் அஷ்டாங்க யோக பலன்.

    அதுமட்டுமா, வலமாக வைத்த ஓரடிக்கு முழு பலன்களும் சித்திக்கும்.

    இரண்டடிக்கு லிங்கப் பிரதிஷ்டை பலன் வாய்க்கும்.

    மூன்றடிக்கு கோவில் கட்டிய பேறு கிடைக்கும்.

    அருணாசலத்தை வலமாக சிறிது தூரம் நடந்தாலே வெள்ளியங்கிரி வெகு சமீபத்தில் இருக்கும்.

    மலையைச் சுற்றி நடந்து சிவந்த பாதங்களைக் கண்டால் நானாவித பாவங்களும் காணாதொழியும்.

    பாதத் துளிகள் நரகத்தையும் பரிசுத்தப்படுத்தும்.

    கிரிவலம் வருவோரின் காலடித்தூசுபட்டு மனித தேகத்தின் பிறவிப் பிணி நீங்கும்.

    வலம் வருவோர் கயிலாய மலையை அடைந்தவுடன் அங்கே அவர்களுக்கு சந்திரன் வெண்ணிறக் குடை பிடிப்பான்.

    சூரியன் தீபம் சுமப்பான். தருமதேவதை கைலாகு கொடுக்கும்.

    நானாவித பூக்களை நடைபாதையில் தூவி இந்திரன் உபசரிப்பான்.

    குபேரன் கைகளைக் கூப்பி சமீபம் வருவான். அஷ்ட வசுக்கள் மலர்மாரிப் பொழிவர்.

    அப்சரஸ்கள் (ரம்பா, ஊர்வசி, மேனகா, திலோத்தமை) ஆடிப்பாடி அணி செய்வார்கள்.

    கங்காதேவியும், யமுனாதேவியும் சாமரம் வீசுவர்.

    மேகங்கள் அமுதம் ஏந்தி வந்து தாகம் தீர்க்கும்.

    திருமகள் வாசனைத் திரவியங்களைக் கொண்டு வருவாள்.

    நான்கு வேதங்களும் நாவாரப் புகழ்ந்து வரும்.

    • அவர் முன்னால் அகண்ட தீபம் ஏற்றியதும் மலையில் மகாதீபம் ஏற்றப்படும்.
    • மாலையில் கொடிமரம் அருகிலுள்ள மண்டபத்திற்கு பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளுவர்.

    சிவன் கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மா இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார்.

    இந்நாளிலேயே தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது.

    அன்று அதிகாலையில் அண்ணாமலையார் சன்னதியில் ஒரு தீபம் ஏற்றி, அதன் மூலம் மேலும் ஐந்து தீபங்கள் ஏற்றி பூஜிப்பார்.

    பின்பு அந்த தீபங்களை ஒன்றாக்கி அண்ணாமலையார் அருகில் வைத்து விடுவர்.

    இதனை, "ஏகன் அநேகனாகி அநேகன் ஏகனாகுதல்" தத்துவம் என்பார்கள்.

    பரம்பொருளான சிவனே, பல வடிவங்களாக அருளுகிறார் என்பதே இந்நிகழ்ச்சியின் உட்கருத்து.

    பின்பு இந்த தீபத்தை மலைக்கு கொண்டு சென்று விடுவர்.

    மாலையில் கொடிமரம் அருகிலுள்ள மண்டபத்திற்கு பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளுவர்.

    அப்போது மூலஸ்தானத்தில் இருந்து அர்த்தநாரீஸ்வரர் வருவார்.

    அவர் முன்னால் அகண்ட தீபம் ஏற்றியதும் மலையில் மகாதீபம் ஏற்றப்படும்.

    அதாவது அண்ணாமலையார் ஜோதி வடிவில் காட்சி தருவதாக ஐதீகம்.

    மகா தீபம் ஏற்றும் வேளையில் மட்டுமே அர்த்தநாரீஸ்வரரைத் தரிசிக்க முடியும்.

    மற்ற நாட்களில் இவர் சந்நிதியை விட்டு வருவதில்லை.

    • இங்கே சஞ்சீவி மற்றும் இரும்பைப் பொன்னாக்கும் ரசமாக்கும் மூலிகை இருக்கலாம்.
    • ஆனால் அவை எல்லாம் போதிய மனப்பக்குவம் உள்ளவருக்கே காணக்கிடைப்பதாகும்.

    இரும்பை தங்கமாக்கும் மூலிகை

    அண்ணாமலைச் சாரலில் எண்ணற்ற மூலிகைச் செடிகள் செழித்து வளர்கின்றன.

    மனிதனின் அத்தனை பிணிகளுக்கும் அவை அருமருந்தாய் அமையும்.

    இங்கே சஞ்சீவி மூலிகை இருக்கலாம். இரும்பைப் பொன்னாக்கும் ரசமாக்கும் மூலிகை இருக்கலாம்.

    ஆனால் அவை எல்லாம் போதிய மனப்பக்குவம் உள்ளவருக்கே காணக்கிடைப்பதாகும்.

    கிரிவலம் வரும்போது நாம் மூலிகைக் காற்றை சுவாசிக்க முடியும்.

    அது நம் உடம்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

    மலைக்குள் இயங்கும் மர்ம உலகம்

    அண்ணாமலை முழுவதும் கருங்கல் வடிவமல்ல, மலைக்குள் பிரும்மலோகம் உள்ளதென்பது ஐதீகம்.

    சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் அண்ணாமலையில் ஒரு இரவு முழுவதும் தியானித்திருந்த சுஜாதாசென் என்கிற ஆங்கிலேய பெண்,

    மலைக்குள் ஒரு பெரிய உலகத்தையே தாம் கண்டதாகக் கூறி இருக்கிறார்.

    அப்போது இதனை யாரும் நம்பவில்லை.

    சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் எஸ்.என்.டாண்டன் என்பவருக்கு பல அற்புதக் காட்சிகள் காணக் கிடைத்தன.

    அவர் தாம் கண்டதாகக் கூறிய பலவும் ஆங்கில அம்மையார் கண்டவற்றை ஒத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • மலையின் உள்ளிருந்து செந்நிற ஜோதிக்கிரணங்கள் அவ்வப்போது வெளிப்படும்.
    • ஒரு விநாயகருக்கு 'தலை திருக தனம் கொடுத்த விநாயகர்' என்று பெயர்.

    மலையின் உள்ளிருந்து செந்நிற ஜோதிக்கிரணங்கள் அவ்வப்போது வெளிப்படும்.

    அது மலை சுற்றும் பக்தர்கள் மீது படிந்தால் இகலோக சுகத்திற்கான அருளையும், பரலோக பாக்கியத்தையும் அளிக்கும்.

    பவுர்ணமியன்று வலம் வருவது சிறப்பு.

    ஆண்டுக்கொரு முறை பவுர்ணமி நாளில் தட்சிணாமூர்த்தியே மலை வலம் வருகிறார்.

    எத்தகைய பாவியும், தீப நாளில் ஐந்து முறை மலை சுற்றினால் அவனுக்கு பாவ விமோசனம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    விசித்திர விநாயகர்

    மலை சுற்றுப்பாதையில் நிறையவே விநாயகர் கோவில்கள் (தனித்தனியே பதினாறு), முருகன் சன்னதிகள் (ஏழு) உள்ளன.

    ஒரு விநாயகருக்கு 'தலை திருக தனம் கொடுத்த விநாயகர்' என்று பெயர்.

    மலைச்சுற்று பாதையில் தட்சிணாமூர்த்தி கோவில்கள் இரண்டு, பாதமண்டபங்கள் இரண்டு, நந்தி தேவர் மண்டபங்கள் எட்டு, சிவாலயங்கள் எட்டு உள்ளன.

    இவை தவிர துர்க்கையம்மன் கோவில், வடவீதி சுப்பிரமணியர் கோவில், அனுமன் கோவில்,

    பூத நாராயணன் கோவில், வீரபத்ரர் கோவில், முனீஸ்வரர் கோவில், நவக்கிரக கோவில் ஆகியனவும் உள்ளன.

    • கூட்டுப் பிரார்த்தனையும், கோ பூஜையும் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
    • இந்த அம்பாளை மனம் உருகி வழிபட்டால் ஐஸ்வர்யம், லட்சுமி கடாட்சம் பெறலாம்.

    இத்திருக்கோவிலில் சதுர் புஜத்துடன் வீற்றிருக்கும் அருள்மிகு அபீதகுசாம்பாள்

    வேறெங்கும் இல்லாத அளவிற்கு சுமார் 6 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் காணப்படுகிறாள்.

    இந்த அம்பிகை தெற்கு முகமாக வீற்றிருந்து சாந்தமாக தினம் ஒரு விதமான முகத் தோற்றத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிப்பது குறிப்பிடத்தக்கது.

    ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் பகல் வேலையில் சிறப்பு பூஜையும், அபிஷேகமும், திருவிளக்கு பூஜையும் மகளிரால் செய்யப்படுகிறது.

    வெள்ளிக்கிழமை மற்றும் செவ்வாய் கிழமைகளில் ராகு காலத்தில் சிறப்பு வழிபாடும்,

    கூட்டுப் பிரார்த்தனையும், கோ பூஜையும் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

    அவ்வபோது அம்பாளுக்கு பூச்சொரிதல், சந்தனகாப்பு, 108 பால்குட அபிஷேகம், நிறை பணி காட்சி போன்ற

    வைபவங்கள் பக்தகோடிகளால் செய்து வரப்பட்டு, அம்மனின் பரிபூரண அருளை பெற்று வருவதாக நம்பப்படுகிறது.

    காஞ்சி ஸ்ரீலஸ்ரீ சங்கராச்சாரிய சுவாமிகள் 1967ல் இத்தலத்துக்கு வருகை புரிந்து

    ஸ்ரீ சக்கரத்தினை அபீதகுசாம்பாள் சன்னதியில் பிரதிஷ்டை செய்துள்ளார்.

    வியாபாரத்திலும், தொழிலிலும் சிறந்த லாபங்களை பெற்று வளமடைய அதிர்ஷ்ட தேவியாக இத்திருத்தலத்தில் உள்ள அம்பாள் விளக்குகிறாள்.

    இந்த அம்பாளை மனம் உருகி வழிபட்டால் மாணவர்கள் கல்வியில் மேம்பாடும்,

    குடும்பத்தில் அதிர்ஷ்டம், ஐஸ்வர்யம், லட்சுமி கடாட்சம் முதலியனவற்றையும் பெறலாம்.

    • இந்த ஆலயம் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது.
    • சிலைகள் என்று கணக்கிட்டால் ஆலயம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட சிலைகள் உள்ளன.

    அண்ணாமலையார் ஆலயம் எத்தனையோ ஆச்சரியங்களையும், அதிசயங்களையும் கொண்டது.

    இந்த ஆலயம் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது.

    தமிழ்நாட்டில் உள்ள மிகப்பெரிய ஆலயங்களில் தனித்துவம் கொண்டதாக இந்த ஆலயம் திகழ்கிறது.

    இந்த ஆலயத்துக்கு 7 பரிகாரங்கள் உள்ளன.

    9 பெரிய கோபுரங்கள் உள்ளன.

    40க்கும் மேற்பட்ட சன்னதிகள் அமைந்துள்ளன.

    இதில் 4 விநாயகர் சன்னதிகளும், 4 முருகர் சன்னதிகளும் அடங்கும்.

    சிலைகள் என்று கணக்கிட்டால் ஆலயம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட சிலைகள் உள்ளன.

    2ம் பிரகாரத்தில் 63 நாயன்மார்களுக்கு கற்சிலைகளும், வெண்கல சிலைகளும் உள்ளன.

    2ம் பிரகாரத்தில் திரும்பும் திசையெல்லாம் லிங்கங்களை காணலாம்.

    • இதை பிரதிபலிக்கவே உண்ணாமுலை அம்மன் சன்னதி முன்பு நந்தி உள்ளது.
    • இந்த மூன்று மணிகளையும் அடிக்கும் போது அதன் சத்தம் நீண்ட தொலைவுக்கு கேட்குமாம்.

    ஆலயங்களில் அம்பாள் சன்னதி முன்பு சிம்மம்தான் அமைக்கப்பட்டிருக்கும்.

    ஆனால் திருவண்ணாமலை ஆலயத்தில் உண்ணாமுலை அம்மன் சன்னதியில் நந்தி உள்ளது.

    அம்பாளுக்குரிய சிம்மம் அங்கு இல்லை.

    ஈசனிடம் கோபித்துக் கொண்டு பூலோகத்துக்கு வந்த பார்வதி இத்தலத்தில் தவம் இருந்தாள்.

    அவளுக்கு பாதுகாப்பாக நந்தியும் வந்து விட்டார்.

    இதை பிரதிபலிக்கவே உண்ணாமுலை அம்மன் சன்னதி முன்பு நந்தி உள்ளது.

    பிரமாண்டமான மணிகள்

    திருவண்ணாமலை ஆலயத்தில் மிகப் பிரமாண்டமான 3 மணிகள் உள்ளன.

    அதில் 2 மணிகள் அண்ணாமலையார் சன்னதி மண்டபத்தில் உள்ளது.

    மற்றொரு மணி உண்ணாமுலை அம்மன் சன்னதியில் கட்டப்பட்டுள்ளது.

    இந்த மூன்று மணிகளையும் அடிக்கும் போது அதன் சத்தம் நீண்ட தொலைவுக்கு கேட்குமாம்.

    இந்த மூன்று மணிகளும் நூற்றாண்டை கடந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

    • மலையே ஓர் அழகான நந்தி வடிவமாகத் தோன்றுவது கண்கொள்ளாக் காட்சி.
    • இது மலை நந்தி என்றால், கிரிவலப் பாதையில் நிறைய சிலை நந்திகளும் உண்டு.

    கிரிவலத்தின் தொடக்கத்தில், அதாவது அருணாசலேஸ்வரர் ஆலயப் பகுதியில் மலை ஒன்றாகத் தெரியும்.

    பின்னர் அந்தப் பாதையின் வெவ்வேறு இடங்களில் இரண்டாக, மூன்றாகத் தெரியும்,

    நிறைவாகக் கிரிவலத்தைப் பூர்த்தி செய்யும் நேரத்தில் ஐந்தாகத் தெரியும்.

    உதாரணமாக, கவுதம ஆசிரமம் எதிரே மலை மூன்று பிரிவுகளாகத் தெரியும்.

    பக்தர்கள் இதனைத் திரிமூர்த்தி தரிசனம் என்று அழைக்கிறார்கள்.

    கிரிவலம் வருகிறவர்கள் இங்கே விழுந்து கும்பிடுகிற வழக்கம் உள்ளது.

    அதேபோல், நிருதி லிங்கத்திலிருந்து சற்றுத் தொலைவில் உள்ளது நந்தி முக தரிசனம் என்ற இடம்.

    இங்கே அறிவிப்புப் பலகை உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று கவனித்தால்,

    மலையே ஓர் அழகான நந்தி வடிவமாகத் தோன்றுவது கண்கொள்ளாக் காட்சி.

    இது மலை நந்தி என்றால், கிரிவலப் பாதையில் நிறைய சிலை நந்திகளும் உண்டு.

    அஷ்ட லிங்கங்கள், சூரிய, சந்திர லிங்கங்களுக்கு எதிரே உள்ள நந்திகளைத் தவிர,

    மலையே சிவம் என்பதால் அதனைப் பார்த்தபடி ஆங்காங்கே நந்தி வடிவங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

    • அந்த இடுக்கை மேலோட்டமாகப் பார்த்தால், நாம் இதற்குள் நுழையவே முடியாது என்றுதான் தோன்றும்.
    • நரம்புக் கோளாறுகள், ஒற்றைத் தலைவலி உள்ளிட்ட பல உபாதைகள் விலகிவிடும்.

    இடைக்காட்டுச் சித்தர் கிரிவல பாதையில் உள்ள ஒரு மண்டபத்தில் மூன்று யந்திரங்களைப் பிரதிஷ்டை செய்துள்ளார்.

    இவற்றை நாம் நெருங்கினாலே போதும், யந்திரங்களின் ஆகர்ஷண சக்தி நம்மீது பரவ,

    நம் உடலில் உள்ள நரம்புக் கோளாறுகள், ஒற்றைத் தலைவலி உள்ளிட்ட பல உபாதைகள் விலகிவிடும் என்கிறார்கள்.

    ஆனால் ஒரே ஒரு பிரச்சினை, சித்தர் பிரதிஷ்டை செய்த அந்த யந்திரங்களின் மீது ஒரு சிறிய கோபுரம் உள்ளது.

    அதற்குள் நாம் நுழைந்து வரவேண்டும்.

    அந்த இடுக்கை மேலோட்டமாகப் பார்த்தால், நாம் இதற்குள் நுழையவே முடியாது என்றுதான் தோன்றும்.

    ஆனால் ஒருக்களித்துப் படுத்த நிலையில் இடுக்கின் ஒருபுறமாகத் தலையையும் ஒரு கையையும் உள்ளே நுழைக்க வேண்டும்.

    பின்னர் மறுபுறமிருந்து உந்தித் தள்ளி வெளியே வரவேண்டும்.

    வயிற்றுப் பகுதியில் லேசாக அழுத்தும், அவ்வளவுதான்! அடுத்த பக்கம் வந்து விடலாம்.

    • திருவண்ணாமலை மலை மீது ஏராளமான ரகசிய குகைகள் இருக்கின்றன.
    • அண்ணாமலையார் ஆண்டுக்கு இரண்டு தடவைதான் வெளியில் வருவார்.

    திருவண்ணாமலை மலை மீது ஏராளமான ரகசிய குகைகள் இருக்கின்றன.

    அந்த குகைகளில் அரூப நிலையில் சித்தர்கள் தவம் இருந்து வருகிறார்கள்.

    பிராப்தம் உள்ளவர்களுக்கு அவர்களது காட்சி கிடைக்குமாம்.

    நேர் வாசலில் வர மாட்டார்

    அண்ணாமலையார் ஆண்டுக்கு இரண்டு தடவைதான் வெளியில் வருவார்.

    ஆனால் ராஜகோபுரம் வழியாக அவர் வெளியில் வர மாட்டார்.

    பக்கத்தில் உள்ள மற்றொரு வாசல் வழியாகத்தான் அவர் வெளியே வருவார் என்று கூறப்படுகிறது.

    ×