search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Test Series"

    இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட்இண்டீஸ் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்துள்ளது. #WIvSL #SLvWI

    செய்ண்ட் லூசியா:

    வெஸ்ட்இண்டீஸ் சென்றுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணி அபாரமாக வெற்றி பெற்றது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    இலங்கை அணி முதல் இன்னிங்சில் 253 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இலங்கை அணியில் சந்திமால் 119 ரன்கள், குசால் மெண்டிஸ் 45 ரன்கள் எடுத்தனர். வெஸ்ட்இண்டீஸ் அணி பந்துவீச்சில் ஷனான் கேப்ரியல் 5 விக்கெட்களும், கெமார் ரோச் 4 விக்கெட்களும் வீழ்த்தினர். 

    இதையடுத்து வெஸ்ட்இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கிரேக் பிராத்வெய்ட், டெவான் ஸ்மித் ஆகியோர் களமிறங்கினர். முதல் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட்இண்டீஸ் அணி 2 ஓவர்களில் 2 ரன்கள் எடுத்திருந்தது.



    இந்நிலையில் நேற்று இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற்றது. கிரேக் பிராத்வெய்ட் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் கெய்ரான் பவல் களமிறங்கினார். இந்த ஆட்டத்தின் இடையில் மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. மழை நின்ற பின் மீண்டும் ஆட்டம் தொடங்கியது. அப்போது நிதானமாக விளையாடிவந்த பவல் 27 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    அவரைத்தொடர்ந்து ஷாய் ஹோப் களமிறங்கினார். சிறப்பாக விளையாடிவரும் ஸ்மித் அரைசதம் அடித்தார். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட்இண்டீஸ் அணி 44.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்மித் 53 ரன்களுடனும், ஹோப் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இலங்கை அணி பந்துவீச்சில் கசுன் ரஜிதா, லஹிரு குமாரா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.



    வெஸ்ட்இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் இன்னும் 135 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. #WIvSL #SLvWI
    வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இலங்கை அணி 253 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. #WIvSL #SLvWI

    செய்ண்ட் லூசியா:

    வெஸ்ட்இண்டீஸ் சென்றுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணி அபாரமாக வெற்றி பெற்றது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குசால் பெரேரா, மஹேலா உடாவாட்டே ஆகியோர் களமிறங்கினர். உடாவாட்டே டக்-அவுட் ஆனார். அதன்பின் தனஞ்ஜெயா டி சில்வா களமிறங்கினார். அவரும் நிலைத்து நிற்காமல் 12 ரன்னில் ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து பெரேரா உடன், குசால் மெண்டிஸ் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடினர். 



    குசால் பெரேரா 55 பந்தில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் கேப்டன் தினேஷ் சந்திமால் களமிறங்கினார். குசால் மெண்டிஸ் 45 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதன்பின் வந்தவர்கள் ரன் எடுக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஒரு முனையில் சந்திமால் மற்றும் நிலைத்து நின்று சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். 

    இறுதியில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 79 ஓவர்களில் 253 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. சந்திமால் 186 பந்துகளில் 119 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். வெஸ்ட்இண்டீஸ் அணி பந்துவீச்சில் ஷனான் கேப்ரியல் 5 விக்கெட்களும், கெமார் ரோச் 4 விக்கெட்களும் வீழ்த்தினர். 



    இதையடுத்து வெஸ்ட்இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கிரேக் பிராத்வெய்ட், டெவான் ஸ்மித் ஆகியோர் களமிறங்கினர். முதல் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட்இண்டீஸ் அணி 2 ஓவர்களில் 2 ரன்கள் எடுத்துள்ளது. #WIvSL #SLvWI
    இங்கிலாந்து நாட்டில் அந்நாட்டுக்கு எதிரான தொடரில் பிரகாசிக்க உடல் மட்டுமின்றி மனதளவிலும் பலமாக இருப்பது அவசியம் என இந்திய கிரிக்கெட் வீரர் முரளி விஜய் கூறியுள்ளார். #INDvENG #MuraliVijay #ENGvIND


    இந்திய கிரிக்கெட் அணி வருகிற ஜூலை மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. அப்போது அந்நாட்டு அணியுடன் 5 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில், இங்கிலாந்து தொடரில் பிரகாசிக்க உடல் மட்டுமின்றி மனதளவிலும் பலமாக இருப்பது அவசியம் என இந்திய கிரிக்கெட் வீரர் முரளி விஜய் கூறியுள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட், வெளியே சென்று நம்மை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு அளிக்கிறது. அது நிச்சயமாக ஒரு சுவாரஸ்யமான விளையாட்டாக இருக்கும், அதைத்தொடர்ந்து வரும் போட்டிகளில் இங்கிலாந்து தொடருக்கான உத்திகள் தொடங்கும். ஆப்கானிஸ்தான் ஒரு தரமான அணி, டெஸ்ட் போட்டி எந்த ஒரு வீரருக்கும் சவாலாக இருக்கும். 

    சிறந்த வீரர்களும் இங்கிலாந்து மைதானங்களில் விளையாட கஷ்டப்படுவார்கள். இத்தகைய சூழ்நிலைகளில் ரன்கள் எடுப்பது ஒரு மனநிலை சம்பந்தப்பட்ட விளையாட்டு மற்றும் நீங்கள் தொடர்ந்து விளையாட வேண்டும். உங்கள் நேரத்தை செலவழிப்பது முக்கியம், உங்களை நம்புங்கள், ரன்கள் தானாக வரும். என் வாழ்க்கை முழுவதும் நான் அதை தான் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

    தனிப்பட்ட விளையாட்டை விட போட்டியை வெல்வதே முக்கியம் என அனைவரிடமும் நான் கூறி வருகிறேன். நாம் நன்றாக விளையாடிய பின், இறுதியில் நமது அணி தோல்வியடைந்தால் அது மகிழ்ச்சியாக இருக்காது. இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக இந்திய அணிக்காக ஒரு சில போட்டிகளில் விளையாட விரும்புகிறேன், ஆனால் அது அட்டவணையை சார்ந்தது, எப்படி இருந்தாலும் சமாளித்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #INDvENG #MuraliVijay #ENGvIND
    லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் போது ஏற்பட்ட காயம் காரணமாக பாகிஸ்தான் பேட்ஸ்மேன் பாபர் அசாம் இத்தொடரில் இருந்து விலகியுள்ளார். #ENGvPAK #BaburAzam

    லண்டன்:

    இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 58.2 ஓவர்களுக்கு ஆல் அவுட்டாகி 184 ரன்னில் சுருண்டது. அதன் பின்னர் பாகிஸ்தான் முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக அசார் அலியும், இமாம் அல் ஹக் ஆகியோர் களமிறங்கினர்.

    அணியின் எண்ணிக்கை 12 ஆக இருக்கும் போது, இமாம் அல் ஹக் அவுட்டானார். அவரை தொடர்ந்து ஆடிய ஹரிஸ் சொகைல் 39 ரன்னில் வெளியேறினார். அடுத்து இறங்கிய ஆசாத் சபிக்கும், பாபர் அசாம் ஆகியோரது பொறுப்பான ஆட்டத்தால் பாகிஸ்தான் அணி எண்ணிக்கை உயர்ந்தது.

    ஆசாத் சபிக் 59 ரன்னில் அவுட்டாகினார். நிதானமாக ஆடிய பாபர் அசாம் 68 ரன்கள் எடுத்தபோது காயத்தால் வெளியேறினார்.  



    இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் அணி 110 ஓவரில் எட்டு விக்கெட்டுக்கு 350 ரன்கள் எடுத்தது. இதன்மூலம், இங்கிலாந்தை விட பாகிஸ்தான் 166 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    இந்நிலையில், இப்போட்டியின் போது பாபர் அசாம் கையில் பந்து தாக்கியதில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அசாம் இங்கிலாந்து தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். #ENGvPAK #BaburAzam
    ×