search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "teenager killed"

    • மொபட் அவினாசி ரோட்டில் சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
    • விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகிறார்கள்.

    கோவை

    கோவை புலியகுளம் அருகே உள்ள அம்மன்குளத்தை சேர்ந்தவர் உன்னிகிருஷ்ணன். இவரது மகன் கார்த்திக் (வயது 28). சம்பவத்தன்று இவர் தனது நண்பரான விருத்தாசலத்தை சேர்ந்த முகமது ரியாஸ் (22) என்பவரை தனது மொபட்டில் பின்னால் அமர வைத்து சென்றார்.

    மொபட் அவினாசி ரோடு லட்சுமில்ஸ் சந்திப்பு அருகே சென்ற போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மொபட் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் 2 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போரடினர்.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் 2 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் கார்த்திக் பரிதாபமாக இறந்தார்.

    முகமது ரியாஸ் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகிறார்கள்.  

    • காரைக்காலில் சாலை விபத்தில் வாலிபர் பலியானார்.
    • மாணவிகள் குறுக்கே வந்ததால், மாணவிகள் மீது மோதாமல் இருக்க, எதிர் திசையில் சென்றார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் சேத்திலால் நகரில் வசிப்பவர் அந்தோணி(வயது30). இவர் எலக்ட்ரிகல் வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் ஆனது. நேற்று மதியம் உணவு சாப்பிடுவதற்காக, வேலை செய்யும் இடத்திலிருந்து தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். காரைக்கால் காமராஜர் சாலை- அல்லிக்குளத்து வீதி சந்திப்பில் சென்ற பொழுது, பள்ளி மாணவிகள் குறுக்கே வந்ததால், மாணவிகள் மீது மோதாமல் இருக்க, எதிர் திசையில் சென்றார்.

    அப்போது எதிரே வந்த சேத்தூரை சேர்ந்த கதிரவன்(28) மோட்டார் சைக்கிள் மீது மோதினார். இந்த விபத்தில் அந்தோணி தூக்கிஎறியப்பட்டு தலையில் பலத்த காயமடைந்தார். அங்கிருந்தோர். அந்தோணியை மீட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு நேற்று மாலை அந்தோணி சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இது குறித்து காரைக்கால் போக்குவரத்து காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சங்கராபுரம் அருகே டிராக்டர் டிப்பர் மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியானார்.
    • பகண்டை கூட்டுரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கள்ளக்குறிச்சி 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பகண்டை கூட்டுரோடு அடுத்த வாணா–புரத்தை சேர்ந்தவர் அருள்குமார் (வயது26). இவர் இருசக்கர வாகனத்தில் மாடாம்பூண்டி கிராமத்தில் தனது உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்டு விட்டு உறவினருடன் மீண்டும் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். மரூர்-புதூர் அருகே வந்தபோது எதிர்பாரதவிதமாக சாலையோரம் கரும்புலோடுடன் நின்றுகொண்டிருந்த டிராக்டர் டிப்பரின் பின்பக்கம் அருள்குமார் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதி–யது. இதில் படுகாயம் அடைந்த அருள்குமார் மருத்துவமனை செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். பின்னால் அமர்ந்து கொண்டிருந்த அவரது உறவினர் லேசான காயத்துடன் உயிர்தப்பினார். இது குறித்து பகண்டை கூட்டுரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • திருமங்கலம் அருகே வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலியானார்.
    • இருசக்கர வாகனத்தில் வேலைக்காக பாப்பநாயக்கன்பட்டி ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி ராம்முன்னி நகரைச் சேர்ந்தவர் துரைராஜ் (வயது37). இவரது மனைவி சங்கரேஸ்வரி.

    துரைராஜ் தனியார் நிறுவனத்தில் சர்வீஸ் மேனாக பணிபுரிந்து வந்தார். நேற்று மாலை 5 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வேலைக்காக பாப்பநாயக்கன்பட்டி ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே வந்த வன்னிவேலம்பட்டியைச் சேர்ந்த சக்திவேல்(45) என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம், துரைராஜ் ஓட்டி வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் துரைராஜ் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலே பலியானார்.

    இச்சம்பவம் குறித்து துரைராஜ் மனைவி சங்கரேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் சக்திவேல் மீது டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எதிர்பாராதவிதமாக மான் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் சம்பவ இடத்திலேயே மான் இறந்தது.
    • விபத்து குறித்து அருகில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தவர் தமிழ்ச்செல்வன் (வயது 34). இவர் சுதந்திர தின விடுமுறையில் சொந்த ஊரான சேலத்திற்கு சென்றார். விடுமுறையை கழித்துவிட்டு மீண்டும் கள்ளக்குறிச்சியில் பணி புரியும் தனியார் நிறுவனத்திற்கு செல்ல காலையில் இரு சக்கர வாகன மூலம் புறப்பட்டு வந்துள்ளார் . சின்னசேலம் அருகே உள்ள கணியாமூர்- பங்காரம் நெடுஞ்சாலையில் மான் சாலையை கடக்க முயன்றது. அப்போது எதிர்பாராதவிதமாக மான் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் சம்பவ இடத்திலேயே மான் இறந்தது. இருசக்கரத்தை ஓட்டி வந்த தமிழ்ச்செல்வனுக்கு நெஞ்சு பகுதியில் பலத்த அடிபட்டது. விபத்து குறித்து அருகில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சின்னசேலம் போலீசார் விபத்தில் சிக்கிய தமிழ்செல்வனை மீட்டு மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியில் தமிழ்ச்செல்வன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    • உசிலம்பட்டி அருகே நாய் குறுக்கே பாய்ந்ததால் பைக்கில் சென்ற வாலிபர் பலியானார்.
    • உசிலம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வழக்குப்பதிவு செய்தனர்.

    உசிலம்பட்டி

    உசிலம்பட்டி அருகே உள்ள தொட்டப்பநாயக்கனூர் வடக்கு தெருவை சேர்ந்த செல்வம் மகன் ஆனந்தன் (வயது 23). டீக்கடையில் வேலை செய்து வந்தார்.

    இவரும், உறவினர் ஆண்டிபட்டி பாலக்கோம்பையைச் சேர்ந்த முத்து கணேசனும் (33) மோட்டார் சைக்கிளில் தேனி ரோட்டில் உசிலம்பட்டியை நோக்கி வந்து கொண்டிருந்தனர். தொட்டப்ப நாயக்கனூர் தனியார் பள்ளி அருகே வந்தபோது திடீரென்று நாய் குறுக்கே பாய்ந்தது.

    இதில் பைக்கில் சென்றவர்கள் நிலை தடுமாறி முன்னால் நின்ற லாரி மீது மோதியதில் ஆனந்தன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். முத்துகணேசன் படுகாயம் அடைந்தார்.

    உசிலம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வழக்குப்பதிவு செய்து பலியான வாலிபரின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தினர்.

    நாகர்கோவில் அருகே உடல் நலம் சரியில்லாமல் அவதிப்பட்ட இளம்பெண் குளியல் அறையில் மயங்கி விழுந்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    என்.ஜி.ஓ. காலனி:

    நாகர்கோவில் அருகே உள்ள கீழஉடையப்பன் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் பால்துரை. இவரது மனைவி அனுராணி (வயது 35). இவர்களுக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை.

    அனுராணி உடல் நலம் சரியில்லாமல் அவதிப்பட்டார். இதற்காக தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். நேற்று வீட்டில் உள்ள குளியலறைக்கு குளிக்கச் சென்றார். அங்கு திடீரென அவர் மயங்கி விழுந்தார். இதை பார்த்த பால்துரை சத்தம் போட்டு அலறினார்.

    அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று அனுராணியை மீட்டு அவர் சிகிச்சை பெற்று வந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சுசீந்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அனுராணிக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகளே ஆவதால் அவரது மரணம் குறித்து ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது. #tamilnews
    ×