search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "teenager arrested"

    • செஞ்சியில் நடந்த ரோந்தில் 27 நாட்டு வெடிகளுடன் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • அவர் வைத்தி ருந்த பையில் காட்டு பன்றிக்கு வைக்கும் 27நாட்டு வெடிகள் இருந்தது தெரிய வந்தது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சிறுவாடி காப்பு காட்டில்,வனசரக காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேக ப்படும்படியாக அங்குநின்றி ருந்த வாலிபரை மடக்கி விசாரணை செய்தனர். விசாரணையில் திருவண்ணாமலை மாவட்டம்சேத்துப்பட்டு மேல்வில்லிவலத்தை சேர்ந்த சதீஷ், (வயது20)என்பதும், அவர் வைத்தி ருந்த பையில் காட்டு பன்றிக்கு வைக்கும் 27நாட்டு வெடிகள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, செஞ்சி வன சரக காவலர்கள் வழக்கு பதிந்து சதீஷை கைது செய்து, சிறையில்அடைத்தனர். மேலும் 27 வெடிகளை பறிமுதல்செய்தனர்.

    • கடலூரில் பயங்கரம் நகைக்காக சப்-இன்ஸ்பெக்டர் மனைவியை கொன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • தனக்கு தெரிந்த ஒருவரை பார்த்து விட்டு வருவதாக கூறி , வெளியே சென்றுள்ளார் . அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை .

     கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி காங்கேயன்குப்பத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற போலீஸ் சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் சதாசிவம்.அவரது மனைவி மலர்க்கொடி ( வயது 54). இவர்களது மகன் சிவகுரு ( 30 ). போலீஸ்காரரான இவர் கடலூர் புதுக்குப்பம் போலீஸ் குடியிருப்பில் தங்கி கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார். உடல் நிலை சரியில்லாத மலர்க்கொடி கடலூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தனது மகன் சிவகுரு வீட்டுக்கு சென்றார் பின்னர் மாலை ஆைணக்குப்பத்தில் உள்ள தனக்கு தெரிந்த ஒருவரை பார்த்து விட்டு வருவதாக கூறி , வெளியே சென்றுள்ளார் . அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை .

    இதற்கிடையில் கடலூர் ஆனைக்குப்பத்தில் ஏற்க னவே வசித்த பழைய போலீஸ் குடியிருப்பில் மலர்க்கொடி தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அப்போது மலர்க்கொடி முகம் சிதைக்கப்பட்டு இருந்தது . அவரை மர்ம நபர் அடித்துக் கொலை செய்திருப்பது தெரியவந்தது. இருப்பினும் ஒரு காது அறுக்கப்பட்டு , ேதாடு கிடந்தது. மற்றொரு காதில் இருந்த நகையை காணவில்லை. மேலும் தகவல் அறிந்ததும் சிவகுருவும் சம்பவ இடத்துக்கு சென்று , இறந்தது தனது தாய் மலர்க்கொடி தான் என்பதை உறுதி செய்தார். இந்த நிலையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மலர்கொடி உடலை பார்வையிட்டு அதிகாரிகளிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.

    தகவல் அறிந்த துணை போலீஸ் கரிகால் பாரி சங்கர், இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் ஆகிய மூன்று பேர் தலைமையில் தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதன் விளைவாக போலீசாரிடம் வாலிபர் பிடிபட்டார். அவரது பெயர் சத்தியம் (34). கடலூர் புதுக்குப்பம் பகுதிரயை சேர்ந்த இவர் நகைககாக போலீஸ் அதிகாரி மனைவி மலர்கொடியை கொன்றதாக போலீசாரிடம் தெரிவித்தனர். அவர் மலர்கொடியிடம் இருந்து கம்மலை பறித்து சென்றார். இதுதொடர்பாக அந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கைதான அவரிடம் நகையை பறிமுதல் செய்ய உள்ளனர். நகைக்காக போலீஸ் அதிகாரி மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் கடலூரில் பரபரப்ைப ஏற்படுத்தி உள்ளது.

    • மதுரை அருகே மனைவியை உருட்டுக்கட்லையால் தாக்கிய கணவர் கைது செய்யப்பட்டார்.
    • கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    அனுப்பானடி, ஜே.ஜே.நகரை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 29). கூலி தொழிலாளி. இவரது மனைவி கலைவாணி (26). அருண்குமாருக்கு மனைவியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டது.

    அவர் இது தொடர்பாக மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். சம்பவத்தன்று இரவு கலைவாணி வீட்டில் இருந்தார். அங்கு வந்த அருண்குமார் குடிப்பதற்காக பணம் கேட்டார். கலைவாணி தர மறுத்தார். ஆத்திரம் அடைந்த அருண்குமார் மனவியை உருட்டு கட்டையால் தாக்கி விட்டு தப்பினார். இது குறித்த புகாரின் பேரில் கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்குமாரை கைது செய்தனர்.

    பசுமலை, பேரக்கா நகரை சேர்ந்த மகேஸ்வரன் மகன் பிரவீன் (வயது 24). இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஜீவானந்தம் (40) என்பவருக்கு சொந்தமான இடத்தில் கடை வைத்து நடத்தி வருகிறார்.

    பிரவீனுக்கும், ஜீவானந்தம் என்பவருக்கும் கடையை காலி செய்வது தொடர்பாக முன்விரோதம் இருந்தது. பிரவீன் நேற்று மதியம் கடையில் இருந்தார். அங்கு வந்த ஜீவானந்தம், அத்துமீறி கடைக்குள் புகுந்து பிரவீனை அடித்து உதைத்தார். இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜீவானந்தத்தை கைது செய்தனர்.

    • ஆன்லைன் மூலம் வாங்கினார்
    • 170 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கோவை:

    கோவை ரேஸ்கோர்சில் உள்ள தனியார் கல்லூரி அருகே கல்லூரி மாணவர்களுக்கு வாலிபர் ஒருவர் போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக ரகசிய தகவல் வந்தது.

    இதனையடுத்து ரேஸ்கோர்ஸ் சப்-இன்ஸ்பெக்டர் சைனபா தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்த வாலிபரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 170 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் தெலுங்குபாளையம் எல்.ஐ.சி. காலனியை சேர்ந்த ரோகித் (வயது 24) என்பது தெரிய வந்தது.

    மேலும் போதை மாத்திரை பழக்கத்துக்கு அடிமையான இவர் ஆன்லைன் மூலம் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து குறைந்த விலைக்கு வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கி அதனை போதைக்காக பயன்படுத்தியதும், மேலும் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். தலைமைவாக உள்ள விஜயகுமார் என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    இது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:-கோவையில் தற்போது இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் இடையே போதை ஊசி செலுத்தும் பழக்கம் அதிகரித்து வருகிறது. யாரும் இதனை கண்டுபிடிக்க முடியாது போதை கிடைக்கும் என்பதால் இதனை மாணவர்கள், இளைஞர்கள் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு போதை ஊசி செலுத்திய மாணவர் இறந்தார். இதனை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மருந்து கடடைகளில் டாக்டர்களின் பரிந்துரை கடிதம் இல்லாமல் மருந்துகள் வாங்க முடியாது. ஆனால் தற்போது மாணவர்கள் ஆன்லைன் மூலம் போதை மாத்திரைகளை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். எனவே ஆன்லைனில் டாக்டர்களின் பரிந்துரை இல்லாமல் மருந்துகளை விற்பனை செய்ய கூடாது என அரசு சட்டம் இயற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

    • ஷகிதா பேகத்தின் ஒரு மகளைஅவர் ஒரு தலையாக காதலித்து வந்ததாகவும், அந்த பெண்ணை தனக்கு திருமணம் செய்து கொடுக்குமாறும் ஷகிதா பேகத்திடம் கேட்டுள்ளார்.
    • அரிவாளால் தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டியதில் ரத்த வெள்ளத்தில் ஷகிதா பேகம் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    திருச்சி,

    திருச்சியை அடுத்த திருவெறும்பூர் அருகேயுள்ள மேல கல்கண்டார்கோட்டை அண்ணா தெருவை சேர்ந்தவர் முகமது சையது. இவரது மனைவி ஷகிதா பேகம் (வயது 34). இவர் அதே பகுதியில் உள்ள ஜவுளிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு 2 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர்.

    நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் ஷகிதா பேகம் வேலைக்கு சென்று விட்டு மதியம் சாப்பிடுவதற்காக தனது வீட்டுக்கு சென்றார். வீட்டுக்குள் நுழைந்த அடுத்த சில நிமிடங்களில் ஷகிதா பேகத்தின் அலறல் சத்தம் கேட்கவே அருகில் இருந்த அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டின் கதவை தட்டி உள்ளனர். ஆனால் கதவு உள்புறமாக தாழிடப்பட்டு இருந்தது.

    இந்தநிலையில் வாலிபர் ஒருவர் முகத்தில் துணியை கட்டிக்கொண்டு ஷகிதா பேகத்தின் வீட்டின் பின்பக்க ஓட்டை பிரித்துக்கொண்டு குதித்து தப்பி ஓடியுள்ளான். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொன்மலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஷகிதா பேகம் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

    அப்போது அரிவாளால் தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டியதில் ரத்த வெள்ளத்தில் ஷகிதா பேகம் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உடனே போலீசார் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

    இதற்கிடையே சம்பவம் நடந்த இடத்தில் தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் பொன்னி வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும் மாநகர போலீஸ் துணை கமிஷனர் ஸ்ரீதேவி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்த குற்றவாளியை பொன்மலை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.

    விசாரணையில் இளம்பெண்ணை அரிவாளால் வெட்டியவர் மேலகல்கண்டார் கோட்டையைச் சேர்ந்த ஜோசப் ராஜ் என்பதும், ஷகிதா பேகத்தின் ஒரு மகளைஅவர் ஒரு தலையாக காதலித்து வந்ததாகவும், அந்த பெண்ணை தனக்கு திருமணம் செய்து கொடுக்குமாறும் ஷகிதா பேகத்திடம் கேட்டுள்ளார்.

    அதற்கு ஷகிதா பேகம் மறுப்பு தெரிவித்து விட்டார். இந்த நிலையில் சம்பவத்தன்று ஷகிதா பேகத்தின் வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கிய அவன் மறைந்து இருந்துள்ளான். பின்னர் ஷகிதா வந்தவுடன் தகராறு செய்து அவர் மீது மிளகாய் பொடி தூவி ஷகிதா பேகத்தை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடியது தெரிய வந்தது.

    இது தொடர்பாக பொன்மலை போலீசார் ஜோசப் ராஜ் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த நிலையில் கத்தியால் குத்தப்பட்ட ஷகிதா பேகம் இன்று சிகிச்சை பலனிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    மகளைத் திருமணம் செய்து தர மறுத்ததால் தாய் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பொன்மலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • புதுவை நெல்லித்தோப்பு பெரியார் நகர் 9-வது குறுக்குத் தெருவை சேர்ந்த வர்லெனின்.
    • மூக வலைதளத்தில் சென்னை விமான நிலைய நிறுவனத்துக்கு கஸ்டமர்ஸ் சர்வீஸ் பணிக்கு ஆட்கள் தேவை என்று தகவல் வந்ததையடுத்து அந்த நிறுவனத்துக்கு இ.மெயில் மூலம் விண்ணப்பித்தார்.

    புதுச்சேரி:

    புதுவை நெல்லித்தோப்பு பெரியார் நகர் 9-வது குறுக்குத் தெருவை சேர்ந்த வர் லெனின். இவரது மனைவி ஜனனி.

    கடந்த ஆண்டு இவர் சமூக வலைதளத்தில் சென்னை விமான நிலைய நிறுவனத்துக்கு கஸ்டமர்ஸ் சர்வீஸ் பணிக்கு ஆட்கள் தேவை என்று தகவல் வந்ததையடுத்து அந்த நிறுவனத்துக்கு இ.மெயில் மூலம் விண்ணப்பித்தார்.

    அப்போது அந்த நிறுவன பெண் அனுசிங் மற்றும் பங்கஜ் ஆனந்த், ஹேமாகோபால்ரத்தினம் ஆகிய 3 பேர் ஜனனியிடம் செல்போனில் தொடர்பு கொண்டு சிறுக சிறுக ஜனனியிடம் ரூ.16 லட்சத்து 48 ஆயிரத்து 680-ஐ பெற்றனர்.

    ஆனால் அவர்கள் விமான நிறுவனத்தில் வேலை வாங்கி தரவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஜனனி இதுகுறித்து புதுவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த மோசடியில் ஈடுபட்ட டெல்லியை சேர்ந்த லனன் குமாரை கைது செய்தனர்.

    இதேபோல் புதுவையை சேர்ந்த அன்லா ஜெயில் என்பவரிடம் கனடாவிலிருந்து போன்மூலம் தொடர்பு கொண்டு ரூ.41 லட்சத்து 71 ஆயிரத்தை மோசடி செய்த மணிப்பூரை சேர்ந்த ரோனால் சிங் என்றவரையும்,

    இதேபோல் புதுவையை சேர்ந்த சுைனனா நாரக்கிடம் கல்யாணம் செய்வதாக ஆன்லைன் ஆப் மூலம் தொடர்பு கொண்டு பேசிய கனடாவை சேர்ந்த அந்த மர்ம நபர் நான் டாக்டர் எனவும் சொந்தமாக ஆஸ்பத்திரி கட்டுவதற்காக பணம் தேவபைடுவதாக கூறி அந்த பெண்ணிடம் ரூ.54 லட்சம் மோசடி செய்தார். பின்னர் அந்த நபர்குறித்து விசாரணை நடத்தியதில் அந்த நபர் நைஜீரியாவை சேர்ந்த இமானுவேல் என்பது தெரியவந்தது. இந்த 3 மோசடி வழக்கிலும் தொடர்புடைய 3 பேரை சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோஜ் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ் மற்றும் போலீசார் கைது செய்து இன்று புதுவை அழைத்து வந்தனர்.பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிலைறயில் அடைக்கின்றனர்.லனன்குமாரிடமிருந் ரூ.4.50 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

    • போலீசார் சம்பவயிடம் சென்று சோதனை செய்தனர். அப்போது செல்லப்பன் வீட்டில் 2 நாட்டு துப்பாக்கி, மருந்து பால்ஸ் குண்டு ஆகியவை இருந்தது தெரிய வந்தது.
    • போலீசார் நாட்டு துப்பாக்கி மற்றும் மருந்து பால்ஸ் குண்டு ஆகியவை பறிமுதல் செய்து செல்லப்பனை கைது செய்தனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதி கால்வாரை பகுதியை சேர்ந்தவர் செல்லப்பன் (32). இவர் வீட்டில் உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கி வைத்திருப்பதாக பர்கூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    போலீசார் சம்பவயிடம் சென்று சோதனை செய்தனர். அப்போது செல்லப்பன் வீட்டில் 2 நாட்டு துப்பாக்கி, மருந்து பால்ஸ் குண்டு ஆகியவை இருந்தது தெரிய வந்தது.

    பின்னர் போலீசார் நாட்டு துப்பாக்கி மற்றும் மருந்து பால்ஸ் குண்டு ஆகியவை பறிமுதல் செய்து செல்லப்பனை கைது செய்தனர். மேலும் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

    ×