செஞ்சியில் ரோந்து: 27 நாட்டு வெடிகளுடன் வாலிபர் அதிரடி கைது

செஞ்சியில் நடந்த ரோந்தில் 27 நாட்டு வெடிகளுடன் வாலிபர் கைது செய்யப்பட்டார்.அவர் வைத்தி ருந்த பையில் காட்டு பன்றிக்கு வைக்கும் 27நாட்டு வெடிகள் இருந்தது தெரிய வந்தது.
செஞ்சியில் ரோந்து: 27 நாட்டு வெடிகளுடன் வாலிபர் அதிரடி கைது
Published on

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சிறுவாடி காப்பு காட்டில்,வனசரக காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேக ப்படும்படியாக அங்குநின்றி ருந்த வாலிபரை மடக்கி விசாரணை செய்தனர். விசாரணையில் திருவண்ணாமலை மாவட்டம்சேத்துப்பட்டு மேல்வில்லிவலத்தை சேர்ந்த சதீஷ், (வயது20)என்பதும், அவர் வைத்தி ருந்த பையில் காட்டு பன்றிக்கு வைக்கும் 27நாட்டு வெடிகள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, செஞ்சி வன சரக காவலர்கள் வழக்கு பதிந்து சதீஷை கைது செய்து, சிறையில்அடைத்தனர். மேலும் 27 வெடிகளை பறிமுதல்செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com