search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Police wife killed"

    • கடலூரில் பயங்கரம் நகைக்காக சப்-இன்ஸ்பெக்டர் மனைவியை கொன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • தனக்கு தெரிந்த ஒருவரை பார்த்து விட்டு வருவதாக கூறி , வெளியே சென்றுள்ளார் . அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை .

     கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி காங்கேயன்குப்பத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற போலீஸ் சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் சதாசிவம்.அவரது மனைவி மலர்க்கொடி ( வயது 54). இவர்களது மகன் சிவகுரு ( 30 ). போலீஸ்காரரான இவர் கடலூர் புதுக்குப்பம் போலீஸ் குடியிருப்பில் தங்கி கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார். உடல் நிலை சரியில்லாத மலர்க்கொடி கடலூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தனது மகன் சிவகுரு வீட்டுக்கு சென்றார் பின்னர் மாலை ஆைணக்குப்பத்தில் உள்ள தனக்கு தெரிந்த ஒருவரை பார்த்து விட்டு வருவதாக கூறி , வெளியே சென்றுள்ளார் . அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை .

    இதற்கிடையில் கடலூர் ஆனைக்குப்பத்தில் ஏற்க னவே வசித்த பழைய போலீஸ் குடியிருப்பில் மலர்க்கொடி தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அப்போது மலர்க்கொடி முகம் சிதைக்கப்பட்டு இருந்தது . அவரை மர்ம நபர் அடித்துக் கொலை செய்திருப்பது தெரியவந்தது. இருப்பினும் ஒரு காது அறுக்கப்பட்டு , ேதாடு கிடந்தது. மற்றொரு காதில் இருந்த நகையை காணவில்லை. மேலும் தகவல் அறிந்ததும் சிவகுருவும் சம்பவ இடத்துக்கு சென்று , இறந்தது தனது தாய் மலர்க்கொடி தான் என்பதை உறுதி செய்தார். இந்த நிலையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மலர்கொடி உடலை பார்வையிட்டு அதிகாரிகளிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.

    தகவல் அறிந்த துணை போலீஸ் கரிகால் பாரி சங்கர், இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் ஆகிய மூன்று பேர் தலைமையில் தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதன் விளைவாக போலீசாரிடம் வாலிபர் பிடிபட்டார். அவரது பெயர் சத்தியம் (34). கடலூர் புதுக்குப்பம் பகுதிரயை சேர்ந்த இவர் நகைககாக போலீஸ் அதிகாரி மனைவி மலர்கொடியை கொன்றதாக போலீசாரிடம் தெரிவித்தனர். அவர் மலர்கொடியிடம் இருந்து கம்மலை பறித்து சென்றார். இதுதொடர்பாக அந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கைதான அவரிடம் நகையை பறிமுதல் செய்ய உள்ளனர். நகைக்காக போலீஸ் அதிகாரி மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் கடலூரில் பரபரப்ைப ஏற்படுத்தி உள்ளது.

    ×