search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோரிக்கை மனு"

    • குறை தீர்க்கும் முகாமில் கருமாணிக்கம் எம்.எல்.ஏ. கோரிக்கை மனுக்களை பெற்றார்.
    • ஜமாத் தலைவர்கள், கிராமத் தலைவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு மனுகளை அளித்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம், பனைக்குளம், புதுவலசை, தேர்போகி ஆகிய ஊராட்சிகளில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் திருவாடானை சட்ட மன்ற உறுப்பினர் கருமாணிக்கம் தலைமையில் நடந்தது. தொகுதி மக்களை சந்தித்து குறைகளை கேட்டு அறிந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    பெறப்பட்ட மனுக்களை விரைவாக பரிசீலனை செய்து மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் நான்கு ஊராட்சிகளை சேர்ந்த ஜமாத் தலைவர்கள், கிராமத் தலைவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு மனுகளை அளித்தனர். காங்கிரஸ் கட்சி பொறுப்பு குழு உறுப்பினர் ராஜாராம் பாண்டியன், தி.மு.க. மத்தியமண்டபம் ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், துணைச் செயலாளர் பவுசியா பானு, காங்கிரஸ் கட்சி சிறு பான்மை மாவட்ட தலைவர் வாணி இப்ராஹிம், துணைத் தலைவர் கணிப் கான், மகிலா காங்கிரஸ் தலைவி ராமலட்சுமி.

    திருவாடானை சட்ட மன்றத் தொகுதி மகிலா காங்கிரஸ் தலைவி ஜீனத்து நிஷா, மாவட்ட மனித உரிமை துறை தலைவர் அபு தாஹீர். காங்கிரஸ் வட்டார தலைவர்கள் காருகுடி சேகர், அன்வர் அலி நத்தர், சேது பாண்டி, நகர் தலைவர் கோபி, மாவட்ட நிர்வாகிகள் கருப்பையா, சேதுபதி, ஆறுமுகம், இளைஞர் அணி நவாஸ், அல் அமீன், முகமது பயாஸ், தாஜுதீன், சந்தானம், சேகு சபியுல்லா, முருகேசன், அன்வர் அலி, முஜீப் ரகுமான், ரவி, பஞ்சாட்சரம், மண்டப ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • மதுரை மாநகராட்சியில் அடிப்படை வசதிகளை உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும்.
    • கமிஷனரிடம், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கோரிக்கை மனு அளித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாநகராட்சியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர வலியுறுத்தி முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான செல்லூர் ராஜூ எம்.எல்.ஏ., கமிஷனர் பிரவீன்குமாரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மாநகராட்சி 62-வது வார்டு முதல் 69-வது வார்டு வரை கழிவுநீர் பிரச்சினை உள்ளது. முறையாக பராமரிக்கா ததால் மேற்கண்ட வார்டுகளில் உள்ள சாலை மற்றும் தெருக்களில் கழிவுநீர் ஆறாக ஓடுகிறது. இதே போல் 72-வது வார்டான பைக்காரா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் பொதுமக்கள் கடும் அவதியடைகின்றனர்.

    எனவே முத்துப்பட்டியில் உள்ள கழிவுநீரேற்று நிலையத்தை மேம்படுத்தி புனரமைக்க வேண்டும். அதிக விசைத்திறன் கொண்ட மோட்டார்களை பயன்படுத்தி புதிய பம்பிங் ஸ்டேசன் அமைக்க வேண்டும்.

    காளவாசல் முதல் சம்மட்டிபுரம் பகுதிகளில் கழிவுநீர் பிரச்சினையை சரிசெய்ய வேண்டும். மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களுக்கும் நவீன கழிவுநீர் அகற்றும் வாகனத்தை வாங்க வேண்டும். இதனால் பாதாள சாக்கடை அடைப்பு பிரச்சினை குறையும்.

    கடந்த 2 ஆண்டுகளில் மதுரை மாநகராட்சியில் ரூ.717.10 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப் பட்டு உள்ளதாக நகராட்சி துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அதன் விபரங்களை வழங்க வேண்டும். மதுரை மாநகராட்சியில் சாலையில் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே சாலைகளை செப்பனிட வேண்டும்.

    மாநகராட்சியில் தெருவிளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் இருளில் மூழ்கும் நிலை உள்ளது. எனவே தெரு விளக்குகளை பராமரித்து உடனுக்குடன் சரி செய்ய வேண்டும். சுகாதார பணியாளர்கள் பற்றாக்குறையால் குப்பைகள் மலைபோல் தேங்குகிறது. எனவே உரிய பணியாளர்களை நியமித்து குப்பையில்லா நகரமாக மாற்ற வேண்டும்.

    வைகை ஆற்றில் ஆகாய தாமரையை அகற்ற வேண்டும். பனையூர் வாய்க்காலை சீரமைக்க வேண்டும். மாரியம்மன் தெப்பக்குளத்தில் கழிவுநீர் கலக்காத வண்ணம் பாதுகாக்க வேண்டும். தமுக்கத்தில் உள்ள வளாக கட்டிடத்திற்கு வாடகை பல மடங்கு அதிகரித்துள்ளது. எனவே அதனை குறைக்க வேண்டும். மதுரை மாநகராட்சியில் அடிப்படை வசதிகளை போக்கால அடிப்படையில் உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • குப்பன்குளம் பகுதி யில் சாலை ஓரத்தில் வீடு கட்டி 7 குடும்பத்தினர்கள் வசித்து வந்தனர்.
    • தற்போது வீடு கள் இடித்த பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப் புலியூர் குப்பன்குளம் பகுதி யில் சாலை ஓரத்தில் வீடு கட்டி 7 குடும்பத்தினர்கள் வசித்து வந்தனர். இந்த நிலையில் ஆக்கிர மித்து வீடு கட்டி இருப்பதை அகற்ற வேண்டும் என நீதி மன்ற உத்தரவின் பேரில் மாநகராட்சி நிர்வாகம் நேற்று முன்தினம் பொக் லைன் எந்திரம் மூலம் வீடு களை இடித்து காலி செய்த னர். இந்த நிலை யில் இன்று காலை பாதிக்கப் பட்ட மக்கள் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர் தஷ்ணா, விடுதலை சிறுத்தைகள் நிர்வாகி வக்கீல் அறிவுடை நம்பி, அ.தி.மு.க. நாக ராஜன் ஆகியோர் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்த னர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நாங்கள் திருப்பாதிரிப் புலியூர் குப்பன்குளம் சாலை ஓரத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்தோம். தற்போது மாநகராட்சி சார்பில் நாங்கள் இருந்து வந்த வீடுகளை இடித்து காலி செய்தனர். இந்த நிலையில் எங்களுக்கு அடுக்கு மாடி குடியிருப்பில் மாற்று இடம் வழங்கப்படும் என மாநகராட்சி சார்பில் உத்தரவாதம் அளிக்கப் பட்டது. தற்போது வீடு கள் இடித்த பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் எங்களுக்கு வேறு எங்கும் இடம் இல்லாததால் அதே பகுதியில் வசித்து வரக்கூடிய அவல நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம். ஆகையால் எங்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    • நூற்றுக்கணக்கான பயணிகள் பல ஊர்களில் இருந்து வந்து செல்கின்றனர்.
    • சுமார் 200 ஏக்கர் நிலம் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


    நாகர்கோவில், ஜூலை.3-

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கி ழமையான இன்று பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. கலெக்டர் ஸ்ரீதர் மனுக்களை பெற்றுக்கொண்டார். பூதப்பாண்டி பேரூராட்சி பகுதியை சேர்ந்த பொது மக்கள் சிலர் கலெக்டரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    திட்டுவிளை பஸ் நிலையத்தில் தினமும் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், முதியவர்கள், வியாபாரிகள் நூற்றுக்கணக்கான பயணிகள் பல ஊர்களில் இருந்து வந்து செல்கின்றனர்.

    இந்த நிலையில் பஸ் வந்து நிற்கும் இடத்தின் அருகே பயணிகள் நிழற்கூடை இல்லாமல் தூரத்தில் இருப்பதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறார்கள்.

    எனவே மக்களின் நலன் கருதி பஸ் நிறுத்தம் இடத்தில் பயணிகள் நிழற்கூடம் அமைத்து தர வேண்டும் என அதில் கூறப்பட்டிருந்தது.

    தமிழ்நாடு விவசாயிகள் சங்க குமரி மாவட்ட கிளை துணை தலைவர் நாகராஜன் தலைமையில் விவசாயிகள் ரவி, அழகேசன் உள்பட பலர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கன்னி பூ சாகுபடிக்காக கடந்த ஜூன் மாதம் 1-ந்தேதியன்று அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால் கால்வாய்கள் தூர்வாரப்படாததால், தோவாளை சானல் கடைமடை நிலப்பாறை கால்வாய் வாலசவுந்தரி குளத்திற்கு போதுமான அளவு தண்ணீர் வந்து சேரவில்லை. இந்த குளம் நிரம்பினால் தான் அருகே உள்ள மற்ற குளங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியும். தற்போது வாலசவுந்தரி குளத்திற்கு போதுமான தண்ணீர் இல்லாததினால் சுமார் 200 ஏக்கர் நிலம் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே தோவாளை கால்வாயில் அதிக தண்ணீர் விட்டு மற்ற குளங்களை நிரப்பி விவசாயத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறியிருந்தது. கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தவர்களை போலீசார் சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதித்தனர். அவர்களின் உடமைகள் முழுமையாக சோதனை செய்யப்பட்டது. காரில் வந்தவர்களையும் போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

    • சட்டமன்ற உறுதிமொழி குழுவிடம் பா.ம.க. கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
    • முன்னதாக எம்.எல்.ஏ. அருளுக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சட்டமன்ற உறுதிமொழி குழுவினர் வருகை தந்துள்ளனர். அந்தக் குழுவில் உள்ள சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருளிடம் ராமநாதபுரம் மாவட்ட பா.ம.க. மாவட்ட செயலாளர் தேனிசை. அக்கீம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதில் ராமநாதபுரம் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. நகர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்தை எளிதாக்க வேண்டும்.

    ராமநாதபுரம் நகர் வெளியே புதிய ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கடலாடி ஒன்றிய செயலாளர் இருளாண்டி, தலைவர் காளிமுத்து, துணைத்தலைவர் முனியசாமி, ராமநாதபுரம் நகர செயலாளர் பாலா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக எம்.எல்.ஏ. அருளுக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது.

    • திருச்சி மாநகரில் பாதாள சாக்கடை பணிகளால் பல இடங்களில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க கோரி மேயரிடம் காங்கிரசார் மனு அளித்தனர்
    • சிறு மழை பெய்தால் கூட பாதசாரிகள், வாகனங்கள் முற்றிலும் செல்ல முடியாத நிலைக்கு சாலைகள் பாழ்பட்டுள்ளன

    திருச்சி:

    திருச்சியில் புதை வடிகால் (பாதாள சாக்கடை) திட்டப்பணிகளுக்கு தோண்டப்பட்டு சீர் செய்யப்படாத சாலைகளை உடனை சீரமைக்கக் கோரி, காங்கிரஸ் கட்சி சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட துணைத் தலைவர் சார்லஸ், மேயருக்கு அளித்துள்ள கோரிக்கை ம னு குறித்து அவர் மேலும் கூறியதாவது:

    திருச்சி, மாநகராட்சியில் கடந்த 2 ஆண்டுகளாக புதை வடிகால் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களை ஒப்பந்த நிறுவனத்தினர் சரியாக மூடாததால் பல இடங்களில் சாலைகள் பயன்படுத்த முடியாத அளவுக்கு பள்ளம் மேடுகளாக காட்சியளிக்கின்றன.

    சிறு மழை பெய்தால் கூட பாதசாரிகள், வாகனங்கள் முற்றிலும் செல்ல முடியாத நிலைக்கு சாலைகள் பாழ்பட்டுள்ளன. விரைவில் அவை சரிசெய்யப்படும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்து வந்தாலும், பணிகளை மேற்கொண்டுள்ள ஒப்பந்த நிறுவனங்கள் அதற்கான முயற்சியில் ஈடுபட்டதாக தெரியவில்லை.

    எனவே, இனியாவது போர்க்கால அடிப்படையில், மழை காலம் தொடங்கும் முன்பாக சாலைகளை செப்பனிட வேண்டும்.

    மேலும் மாநகராட்சி முழுவதும் புதிதாக தார்ச்சாலைகள் அமைக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டு மேயரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

    உடன் மாவட்ட பொதுச்செயலாளர் பூக்கடை பன்னீர்செல்வம், வார்டு தலைவர்கள் மலர் வெங்கடேஷ், காமராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.




    ×