search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேதமடைந்த சாலைகளை சீரமைக்க காங்கிரசார் கோரிக்கை மனு
    X

    சேதமடைந்த சாலைகளை சீரமைக்க காங்கிரசார் கோரிக்கை மனு

    • திருச்சி மாநகரில் பாதாள சாக்கடை பணிகளால் பல இடங்களில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க கோரி மேயரிடம் காங்கிரசார் மனு அளித்தனர்
    • சிறு மழை பெய்தால் கூட பாதசாரிகள், வாகனங்கள் முற்றிலும் செல்ல முடியாத நிலைக்கு சாலைகள் பாழ்பட்டுள்ளன

    திருச்சி:

    திருச்சியில் புதை வடிகால் (பாதாள சாக்கடை) திட்டப்பணிகளுக்கு தோண்டப்பட்டு சீர் செய்யப்படாத சாலைகளை உடனை சீரமைக்கக் கோரி, காங்கிரஸ் கட்சி சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட துணைத் தலைவர் சார்லஸ், மேயருக்கு அளித்துள்ள கோரிக்கை ம னு குறித்து அவர் மேலும் கூறியதாவது:

    திருச்சி, மாநகராட்சியில் கடந்த 2 ஆண்டுகளாக புதை வடிகால் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களை ஒப்பந்த நிறுவனத்தினர் சரியாக மூடாததால் பல இடங்களில் சாலைகள் பயன்படுத்த முடியாத அளவுக்கு பள்ளம் மேடுகளாக காட்சியளிக்கின்றன.

    சிறு மழை பெய்தால் கூட பாதசாரிகள், வாகனங்கள் முற்றிலும் செல்ல முடியாத நிலைக்கு சாலைகள் பாழ்பட்டுள்ளன. விரைவில் அவை சரிசெய்யப்படும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்து வந்தாலும், பணிகளை மேற்கொண்டுள்ள ஒப்பந்த நிறுவனங்கள் அதற்கான முயற்சியில் ஈடுபட்டதாக தெரியவில்லை.

    எனவே, இனியாவது போர்க்கால அடிப்படையில், மழை காலம் தொடங்கும் முன்பாக சாலைகளை செப்பனிட வேண்டும்.

    மேலும் மாநகராட்சி முழுவதும் புதிதாக தார்ச்சாலைகள் அமைக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டு மேயரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

    உடன் மாவட்ட பொதுச்செயலாளர் பூக்கடை பன்னீர்செல்வம், வார்டு தலைவர்கள் மலர் வெங்கடேஷ், காமராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.




    Next Story
    ×