search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Suzuki"

    • சுசுகி நிறுவனம் எட்டு புதிய எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை உருவாக்கி வருகிறது.
    • சுசுகியின் முதல் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனமாக எலெக்ட்ரிக் அக்சஸ் மாடல் இருக்கலாம்.

    சுசுகி நிறுவனம் 2030 ஆண்டு வரையிலான சர்வதேச செயல் திட்டம் மற்றும் வாகனங்கள் வெலியீடு திட்டம் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது. இதில் சில சுவாரஸ்யமான எலெர்ட்ரிக் மாடல்களும் இடம்பெற்றுள்ளன. சுசுகி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனம் 2024 வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    முன்னதாக சுசுகி நிறுவனம் தனது எலெக்ட்ரிக் பர்க்மேன் ஸ்டிரீட் மாடலை டெஸ்டிங் செய்யும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. எனினும், அக்சஸ் எலெக்ட்ரிக் மாடலே சுசுகியின் முதல் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனமாக அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

    அக்சஸ் மாடல் சுசுகி நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடல் ஆகும். மேலும் இது பர்க்மேன் ஸ்டிரீட் IC என்ஜின் வேரியண்டை விட குறைந்த விலையில் கிடைக்கிறது. அந்த வகையில் இது சுசுகியின் எண்ட்ரி லெவல் எலெக்ட்ரிக் மாடலாக இருக்கும். இதோடு எலெக்ட்ரிக் பர்க்மேன் ஸ்டிரீட் மாடலின் கீழ் நிலைநிறுத்தப்படும் என தெரிகிறது.

    சுசுகியின் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் பிரிவில் 2030 ஆண்டிற்குள் மொத்தம் எட்டு மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. எலெக்ட்ரிக் வாகனங்கள் வெளியாகும் போதிலும், தொடர்ந்து IC என்ஜின் வாகனங்கள் பிரிவிலும் சுசுகி கவனம் செலுத்த இருக்கிறது. அடுத்த ஏழு ஆண்டுகளில் IC என்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு முறையே 75:25 முறையில் அறிமுகமாகிறது.

    மோட்டார்சைக்கிள் பிரிவில் சுசுகி நிறுவனம் எந்த மாடல்களின் எலெக்ட்ரிக் வெர்ஷனை அறிமுகம் செய்யும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எனினும், ஜிக்சர் சீரிஸ் தான் எலெக்ட்ரிக் வடிவம் பெறும் என எதிர்பார்க்கலாம்.

    • சுசுகி நிறுவனத்தின் புதிய பர்க்மேன் ஸ்டிரீட் பிரீமியம் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • இது பர்க்மேன் ஸ்டிரீட் மேக்சி ஸ்கூட்டர் சீரிசின் முற்றிலும் புதிய டாப் எண்ட் மாடல் ஆகும்.

    ஜப்பான் நாட்டை சேர்ந்த இருசக்கர வாகனங்கள் உற்பத்தியாளரான சுசுகி இந்திய சந்தையில் முற்றிலும் புதிய பர்க்மேன் ஸ்டிரீட் EX மேக்சி ஸ்கூட்டரை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய சுசுகி பர்க்மேன் ஸ்டிரீட் EX மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 12 ஆயிரத்து 300, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணம் செய்யப்பட்டு உள்ளது.

    சுசுகி பர்க்மேன் ஸ்டிரீட் EX மாடல் சுசுகியின் மேக்சி ஸ்கூட்டர் சீரிசின் புதிய டாப் எண்ட் மாடல் ஆகும். புதிய ஸ்கூட்டரில் கணிசமான மாற்றங்கள் செய்யப்பட்டு, மிக முக்கிய மெக்கானிக்கல் அப்டேட் பெற்று இருக்கிறது. சுசுகி பர்க்மேன் ஸ்டிரீட் EX மாடலில் மேம்பட்ட 124சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 8.5 ஹெச்பி பவர், 10.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

    பர்க்மேன் ஸ்டிரீட் EX மாடலில் ஆட்டோ ஸ்டார்ட்/ஸ்டாப் சிஸ்டம் கொண்டிருக்கிறது. இது எரிபொருள் பயன்பாட்டை மற்றும் காற்று மாசை குறைக்கும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் சைலண்ட் ஸ்டார்டர் சிஸ்டம் உள்ளது. இது போக்குவரத்து நெரிசலில் என்ஜின் ஆஃப் ஆன பின், திராட்டிலை மெதுவாக திருகும் போது என்ஜின் ஆன் ஆகி விடும். இத்துடன் புது மாடலில் 12 இன்ச் வீல், சற்றே அகலமான 100/80 செக்‌ஷன் டயர் கொண்டிருக்கிறது.

    இத்துடன் பர்க்மேன் ஸ்டிரீட் EX மாடலில் ப்ளூடூத் சார்ந்த டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், சுசுகி ரைடு கனெக்ட் சிஸ்டம் உள்ளது. இந்த சிஸ்டம் மூலம் பயனர்கள் தங்களின் போன்களை ஸ்கூட்டருடன் இணைத்துக் கொண்டு டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், இன்கமிங் அழைப்புகள், எல்எம்எஸ், வாட்ஸ்அப் அலெர்ட் என ஏராளமான விவரங்களை ஸ்கூட்டரின் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டரில் பார்க்க முடியும்.

    • சுசுகி நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஹயபுசா மாடல் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
    • புது லிமிடெட் எடிஷன் ஹயபுசா மாடலில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது.

    சுசுகி நிறுவனம் ஹயபுசா லிமிடெட் எடிஷன் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய லிமிடெட் எடிஷன் மாடல் "Bol d'Or " என அழைக்கப்படுகிறது. ஹயபுசா லிமிடெட் எடிஷன் மாடலில் காஸ்மெடிக் மற்றும் மெக்கானிக்கல் அப்டேட்கள் செய்யப்பட்டு உள்ளன. இந்த மாடலில் ஹயபுசாவின் பாரம்பரிய அம்சங்களுடன் புதிய பெயிண்ட் மற்றும் விசேஷ ஸ்டிக்கரிங் செய்யப்பட்டு இருக்கிறது.

    ஹயபுசா ஸ்டாண்டர்டு மாடலுடன் ஒப்பிடும் போது புதிய மாடலில் பெரிய விண்ட்ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர ஃபிளாட் சேடில், ரியர் சீட் கௌல், முன்புற பிரேக் மற்றும் கிளட்ச் லீவர் அப்கிரேடு, சிறிய டெயில் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாடலிலும் 1340 சிசி லிக்விட் கூல்டு இன்-லைன், நான்கு சிலிண்டர்கள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் அக்ரபோவிக் எக்சாஸ்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இதன் என்ஜின் கிரான்க்-கேஸ் தற்போது கார்பன் பைபர் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய சுசுகி ஹயபுசா "Bol d'Or" எடிஷன் மொத்தத்தில் 100 யூனிட்களே விற்பனை செய்யப்பட உள்ளன. இது பிரான்ஸ் நாட்டு சந்தையில் மட்டும் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

    சுசுகி ஹயபுசா Bol d'Or லிமிடெட் எடிஷன் விலை 27 ஆயிரத்து 499 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 22 லட்சத்து 60 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தற்போது விற்பனை செய்யப்படும் சுசுகி ஹயபுசா ஸ்டாண்டர்டு மாடலை லிமிடெட் எடிஷன் விலை அதிகம் ஆகும். இந்தியாவில் சுசுகி ஹயபுசா மாடலின் விலை ரூ. 16 லட்சத்து 41 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் அக்சஸ் 125 ஸ்கூட்டரை புதிய நிறங்களில் அறிமுகம் செய்தது.
    • அந்த வகையில் அக்சஸ் 125 மாடல் தற்போது டூயல் டோன் நிற ஆப்ஷன்களிலும் விற்பனைக்கு கிடைக்கிறது.

    சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் தனது அக்சஸ் 125 ஸ்கூட்டரின் டூயல் டோன் வெர்ஷனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. அந்த வகையில் சுசுகி அக்சஸ் 125 சாலிட் ஐஸ் கிரீன் / பியல் மிரேஜ் வைட் எனும் புதிய நிறத்தில் கிடைக்கிறது. புதிய டூயல் டோன் ஆப்ஷன் சுசுகி அக்சஸ் 125 ரைடு கனெக்ட் மற்றும் ஸ்பெஷல் எடிஷனில் மட்டுமே கிடைக்கிறது.

    முன்னதாக சுசுகி அக்சஸ் 125 மாடல் மெட்டாலிக் ராயல் பிரான்ஸ், பியல் மிரேஜ் வைட், மெட்டாலிக் மேட் பிளாக், மெட்டாலிக் மேட் போர்டௌக்ஸ் ரெட், பியர் மிரேஜ் வைட், மெட்டாலிக் மேட் பிளாட்டினம் சில்வர். பியர் மிரேஜ் வைட் மற்றும் மெட்டாலிக் டார்க் கிரீனிஷ் புளூ போன்ற நிறங்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த வரிசையில் தான் தற்போது டூயல் டோன் ஆப்ஷன் சேர்க்கப்பட்டு இருக்கிறது.

    சுசுகி அக்சஸ் 125 ரைடு கனெக்ட் எடிஷனில் ப்ளூடூத் சார்ந்த டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டு இருக்கிறது. இது ஸ்மார்ட்போனுடன் இணைந்து கொண்டு டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், அழைப்புகள், அதிவேக எச்சரிக்கை, போன் பேட்டரி நிலை, எஸ்எம்எஸ், வாட்ஸ்அப் அலெர்ட், மிஸ்டு கால் என ஏராளமான விவரங்களை காண்பிக்கிறது.

    இந்த ஸ்கூட்டரில் வெளிப்புறம் பியூல் லிட், எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி பொசிஷன் லைட்கள், யுஎஸ்பி சார்ஜிங் சாக்கெட் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இந்திய சந்தையில் புதிய சுசுகி அக்சஸ் 125 டூயல் டோன் விலை ரூ. 85 ஆயிரத்து 200, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    • சுசுகி நிறுவனத்தின் 2023 வி ஸ்டாம் 1050DE மேட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
    • இந்த மோட்டார்சைக்கிள் ஆஃப் ரோடிங் அம்சங்கள், 5 இன்ச் ஃபுல் கலர் டிஎப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் கொண்டிருக்கிறது.

    சுசுகி நிறுவனம் 2023 சுசுகி வி ஸ்டாம் 1050 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து இருக்கிறது. இத்துடன் XT மாடல் நிறுத்தப்பட்டு, அதற்கு மாற்றாக புதிய வி ஸ்டாம் 1050DE மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய DE வேரியண்ட் வி ஸ்டாம் 1050 ஸ்டாண்டர்டு வேரியண்ட் உடன் விற்பனை செய்யப்படுகிறது.

    இரு வேரியண்ட்களிலும் புதிய 5 இன்ச், ஃபுல் கலர் டிஎப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், அப்-டவுன் குயிக்-ஷிப்டர், செண்டர் ஸ்டான்டு, ஹேண்ட் கார்டு, யுஎஸ்பி, 12 வோல்ட் சார்ஜிங் சாக்கெட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் 1037 சிசி, லிக்விட் கூல்டு, 90 டிகிரி வி ட்வின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 105.5 ஹெச்பி பவர், 100 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.


    ஸ்டாண்டர்டு வேரியண்ட் உடன் ஒப்பிடும் போது, புதிய DE வேரியண்ட் ஆஃப் ரோடிங் சார்ந்து ஏராளமான அம்சங்களை கொண்டிருக்கிறது. புதிய வி ஸ்டாம் 1050DE மாடலில் அதிக சஸ்பென்ஷன் டிராவல் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் உள்ளது. இரு மாடல்களிலும் 6 ஆக்சிஸ் IMU, லீன் சென்சிடிவ் ஏபிஎஸ், ஹில் ஹோல்டு கண்ட்ரோல் போன்ற வசதிகளை கொண்டிருக்கிறது.

    மேலும் மேம்பட்ட ரைடு பை வயர் திராட்டில், குரூயிஸ் கண்ட்ரோல், 3 ஸ்டேஜ் டிராக்‌ஷன் கண்ட்ரோல், மூன்று பவர் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் DE வேரியண்டில் புதிதாக G மோட் வழங்கப்பட்டு இருக்கிறது. இது ஆஃப் ரோடிங்கின் போது பயன்தரும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது.

    • சுசுகி நிறுவனத்தின் புதிய 1000சிசி மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகமானது.
    • புதிய சுசுகி கட்டானா மாடல் இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது.

    சுசுகி இந்தியா நிறுவனம் 2022 ஆண்டிற்கான முதல் லிட்டர் கிளாஸ் மாடல், சுசுகி கட்டானா அறிமுகம் செய்தது. புதிய சுசுகி கட்டானா மாடலின் விலை ரூ. 13 லட்சத்து 61 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்திய சந்தையில் சுசுகி நிறுவனத்தின் ஒற்றை 1000சிசி மாடலாக இது அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    சுசுகி கட்டானா மாடல் ஸ்போர்டி பாடி-வொர்க் மற்றும் பிகினி ஃபேரிங் கொண்டிருக்கிறது. இந்த மாடலில் சதுரங்க வடிவம் கொண்ட எல்.இ.டி. ஹெட்லைட், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் உள்ளன. இதன் ஒட்டுமொத்த டிசைன் அதிநவீன மற்றும் ரெட்ரோ எலிமண்ட்களால் உருவாக்கப்பட்டு இருக்கிறது.


    இந்த மாடலில் 999சிசி, இன்-லைன், 4 சிலிண்டர் லிக்விட் கூல்டு மோட்டார் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 149 ஹெச்.பி. பவர், 106 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இது தவிர டிராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், லோ ஆர்.பி.எம். அசிஸ்ட் மற்றும் ரைடு-பை-வயர் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய சுசுகி கட்டானா மாடலில் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டு உள்ளது. இதில் ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர், ட்ரிப் மீட்டர், பியூவல் லெவல் காஜ், கியர் மோட் மற்றும் என்ஜின் டெம்பரேச்சர் உள்ளிட்ட விரங்கள் இடம்பெற்று இருக்கிறது. இதன் முன்புறம் யு.எஸ்.டி. முன்புற ஃபோர்க், பின்புறம் ஷாக் அப்சார்பர் உள்ளது. இந்த மாடலில் இரட்டை முன்புற டிஸ்க், பின்புறம் ஒற்றை டிஸ்க் மற்றும் டூயல் சேனல் ஏ.பி.எஸ். உள்ளது.

    இந்திய சந்தையில் புதிய சுசுகி கட்டானா மாடல் மெட்டாலிக் மேட் ஸ்டெல்லார் புளூ மற்றும் மெட்டாலிக் மிஸ்டிக் சில்வர் என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இந்த மாடலுக்கான முன்பதிவு விரைவில் துவங்க இருக்கிறது. இந்திய சந்தையில் புதிய சுசுகி கட்டானா மாடல் கவாசகி நின்ஜா 1000 SX மற்றும் பி.எம்.டபிள்யூ. S 1000 XR போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    • சுசுகி நிறுவனம் தனது பர்க்மேன் ஸ்டிரீட் எலெக்ட்ரிக் வெர்ஷனை பல மாதங்களாக சோதனை செய்து வருகிறது.
    • இந்த மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    சுசுகி இந்தியா நிறுவனம் பர்க்மேன் ஸ்டிரீட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை இந்திய சந்தையில் சோதனை செய்து வருகிறது. சுசுகி தனது பர்க்மேன் ஸ்டிரீட் மாடலின் எலெக்ட்ரிக் வேரியண்டை உருவாக்கி வருவது அனைவரும் அறிந்த நிலையில், இதன் சிறப்பம்சங்கள் மற்றும் இதர விவரங்கள் தொடர்ந்து மர்மமாகவே இருந்து வந்தது.

    இந்த நிலையில் தான், சுசுகி பர்க்மேன் ஸ்டிரீட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் காப்புரிமை வரைபடங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது. இதில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும், அதன் பெட்ரோல் மாடலில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் ஃபிரேமில் உருவாக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இந்த ஸ்கூட்டரின் AC மோட்டார் ஃபிரேமின் முன்புறம் இருக்கையின் கீழ் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஃபுளோர்போர்டின் உள்புறம் AC-DC மோட்டார் உள்ளது.


    சுசுகி பர்க்மேன் ஸ்டிரீட் மாடல் அதிக அண்டர் சீட் ஸ்டோரேஜுக்கு பெயர் பெற்றது ஆகும். எனினும், இதன் எலெக்ட்ரிக் வேரியண்டில் பேட்டரி வைக்கப்படுவதால், அதிக அண்டர் சீட் ஸ்டோரேஜ் கிடைக்காது என்றே தெரிகிறது. மேலும் DC-AC கன்வெர்ட்டர் பேட்டரி பேக் உள்புறம் வைக்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் போட்டி நிறுவன மாடல்களை விட அதிக ரேன்ஜ் வழங்கும் என எதிர்பார்க்கலாம்.

    இந்திய சந்தையில் சுசுகி பர்க்மேன் ஸ்டிரீட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. எனினும், இதன் விற்பனைக்கு மேலும் தாமதமாகலாம் என தெரிகிறது. ஒருவேளை பர்க்மேன் ஸ்டிரீட் எலெக்ட்ரிக் வேரியண்ட் அறிமுகமாகும் பட்சத்தில் இது சுசுகி இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்ற பெருமையை பெறும்.

    சுசுகி நிறுவனம் முற்றிலும் புதிய எஸ் கிராஸ் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது.


    சுசுகி நிறுவனத்தின் புதிய எஸ் கிராஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல் மேம்பட்ட குளோபல் சி பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது முந்தைய மாடலை விட அதிகளவு எஸ்.யு.வி. போன்ற தோற்றம் கொண்டிருக்கிறது.

    இந்த காரின் முன்புறம் கிளாஸ்-பிளாக் கிரில் மற்றும் எல்.இ.டி. ஹெட்லைட்கள் உள்ளன. இவை காரின் தோற்றத்தை பிரம்மாண்டமாக வெளிப்படுத்துகின்றன. பக்கவாட்டில் இந்த கார் முந்தைய மாடலை விட பெரிதாக காட்சியளிக்கிறது. பின்புறம் ராப்-அரவுண்ட் டெயில் லேம்ப்கள், இண்டகிரேட் செய்யப்பட்ட ரூப் ஸ்பாயிலர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. 

     சுசுகி எஸ் கிராஸ்

    புதிய சுசுகி எஸ் கிராஸ் மாடலில் 1.4 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட என்ஜின் மற்றும் மைல்டு-ஹைப்ரிட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 125.2 பி.ஹெச்.பி. திறன், 235 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. 

    இந்த காரில் 360 டிகிரி சரவுண்ட்-வியூ கேமரா, 9 இன்ச் இன்போடெயின்மெண்ட் யூனிட், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, முன்புறம் ஹீட்டெட் சீட்கள், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் பல்வேறு இதர அம்சங்கள் உள்ளன. 

    இத்துடன் அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம், டிரைவர் அசிஸ்டன்ஸ், அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல், லேன் கீப் அசிஸ்ட், கிராஸ்-டிராபிக் அலெர்ட், எமர்ஜென்சி ஆட்டோனோமஸ் பிரேக்கிங் போன்ற வசதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
    சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய அவெனிஸ் 125 ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.


    சுசுகி நிறுவனம் அவெனிஸ் 125 மாடலினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்தியாவில் புதிய சுசுகி அவெனிஸ் 125 விலை ரூ. 86,700 (எக்ஸ்-ஷோரூம்) என துவங்குகிறது. இந்த ஸ்கூட்டர் டி.வி.எஸ். என்டார்க் 125, ஹோண்டா கிரேசியா, ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 மற்றும் அப்ரிலியா எஸ்.ஆர். 125 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    இந்த மாடலில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், யு.எஸ்.பி. சார்ஜர், சைடு ஸ்டாண்டு இண்டர்லாக் போன்ற அம்சங்கள் உள்ளன. சுசுகி அவெனிஸ் மாடலில் 125சிசி, பியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. 

     சுசுகி அவெனிஸ் 125

    புதிய சுசுகி அவெனிஸ் மாடல் கிரே, ஆரஞ்சு, வைட் மற்றும் புளூ போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் மோட்டோ ஜிபி எடிஷன் விலை ரூ. 87,600 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    சுசுகி நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் மோட்டார்சைக்கிளின் என்ஜின் விவரங்கள் வெளியாகி இருக்கிறது.



    இரு சக்கர வாகன உற்பத்தியில் முன்னணியில் உள்ள சுசுகி நிறுவனத்தின் புதிய வரவாக ஜிக்சர் 250 சந்தைக்கு வர இருக்கிறது. இப்புதிய மாடல் மோட்டார்சைக்கிளை இம்மாதம் 20-ந் தேதி இந்நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த ஆண்டின் மிகப் பெரிய, மறக்கமுடியாத அறிமுகமாக ஜிக்சர் 250 இருக்கும் என்று நிறுவனம் உறுதிபட நம்புகிறது.

    இந்நிறுவனம் மிகப் பெரிய எழுச்சியை பார்த்து ரசிக்க தயாராகுங்கள் என்கிற ரீதியில் விளம்பர வாசகம் மூலம் வாடிக்கையாளர்களைக் கவரும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக புதிய மோட்டார்சைக்கிளை சுசுகி அறிமுகம் செய்யப் போகிறது என்ற செய்திகள் பரவலாக வெளிவந்துள்ளன.

    ஆனால் கடந்த ஆண்டுதான் 250 சி.சி. பிரிவில் ஒரு மோட்டார்சைக்கிளை இந்நிறுவனம் அறிமுகம் செய்யப் போவது உறுதியானது. இந்தியாவில் சுசுகி தயாரிப்புகளில் ஜிக்சர் பிராண்ட் மிகவும் பிரபலமாகிவிட்டது. இதனால் இந்தியாவில் ஜிக்சர் 250 என்ற பெயரில் இதை அறிமுகப்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.



    உறுதியான மோட்டார்சைக்கிளுக்குரிய அனைத்து வடிவமைப்புகளும் கொண்டதாக இது உள்ளது. இதில் 249 சி.சி., சிங்கிள் சிலிண்டர் என்ஜினைக் வழங்கப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த என்ஜின் 26.5 பி.எஸ் மற்றும் 22.6 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது. 

    4-வால்வ் கொண்ட இந்த என்ஜின் 6 கியர்களை உடையதாகவும் இது பி.எஸ்.6 புகைவிதிகளுக்கு உட்பட்டு இருக்கும். யமஹா பேஸர் மாடலுக்கு போட்டியாக இது இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்தியாவில் இதன் விலை ரூ.1.35 லட்சம் முதல் ரூ.1.45 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது.
    ஜப்பான் நாட்டு மோட்டார்சைக்கிள் நிறுவனமான சுசுகி இந்தியாவில் 2019 இன்ட்ரூடர் 150 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. #SuzukiIntruder



    சுசுகி நிறுவனம் இந்தியாவில் 2019 இன்ட்ரூடர் 150 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. 2019 சுசுகி இன்ட்ரூடர் 150 விலை ரூ.1,08,162 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2019 சுசுகி இன்ட்ரூடர் 150 முந்தைய மாடலை விட சிறிதளவு மேம்படுத்தப்பட்டுள்ளது.

    அந்த வகையில் 2019 இன்ட்ரூடர் மாடல் புதிதாக மெட்டாலிக் மேட் டைட்டானியம் சில்வர் நிறத்தில் கிடைக்கிறது. இத்துடன் கியர் ஷிஃப்ட் பேட்டன் மற்றும் பிரேக் பெடல் உள்ளிட்டவை மேம்படுத்தப்பட்டுள்ளது. இது வாகனத்தை ஓட்டுவோருக்கு சவுகரியத்தை வழங்குகிறது.

    புதிய 2019 இன்ட்ரூடர் மாடலின் பின் இருக்கையில் அமர்ந்து செல்வோருக்கு பேக்ரெஸ்ட் வழங்கப்பட்டுள்ளது. இவை தவிர சுசுகி இன்ட்ரூடர் 150 மாடலில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. என்ட்ரி-லெவல் குரூஸ் மோட்டார்சைக்கிளில் 154.9சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.



    இந்த என்ஜின் 14.6 பி.ஹெச்.பி. @8000 ஆர்.பி.எம் மற்றும் 14 என்.எம். டார்க் @6000 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜினுடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. புதிய இன்ட்ரூடர் 150 மாடல் லிட்டருக்கு 44 கிலோமீட்டர் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சுசுகி இன்ட்ரூடர் 150 மாடலின் முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது. பிரேக்கிங்கை பொருத்தவரை முன்புறம் 266 எம்.எம். டிஸ்க் பின்புறம் 220 எம்.எம். பிரேக் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஏ.பி.எஸ். வசதி சேர்க்கப்பட்டுள்ளது.
    சுசுகி நிறுவனத்தின் புதிய டி.ஆர். இசட்50 மோட்டார்சைக்கிளின் இந்திய விற்பனை துவங்கியுள்ளது. #Suzuki



    சுசுகி நிறுவனம் அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற வகையிலான வாகனங்களை தயாரிப்பதில் முன்னணி நிறுவனமாக உள்ளது. இந்நிறுவனம் கடந்த ஆண்டிலேயே 3 மோட்டார்சைக்கிள்ளை காட்சிப்படுத்தியிருந்தது. 

    இவற்றில் முதலாவது மாடலாக டி.ஆர். இசட்50 இந்திய விற்பனை துவங்கியுள்ளது. இந்திய சந்தையில் 50 சி.சி. பிரிவில் அறிமுகமாகி இருக்கும் இந்த மோட்டார்சைக்கிள் சாகசப் பிரியர்களுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

    கரடு, முரடான சாலைகளில் பயணிப்பதற்கேற்ப இதன் டயர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. வெறுமனே சாகசப் பயணத்துக்கென வடிவமைக்கப்பட்டுள்ளதால் இதில் முகப்பு விளக்கு கிடையாது. இதனால் இதை சாதாரண சாலைகளில் இரவில் பயன்படுத்த முடியாது. 

    இந்த மோட்டார்சைக்கிளில் 49 சி.சி. திறனுடன் ஒற்றை சிலிண்டர் என்ஜினைக் கொண்டிருக்கிறது.  இந்த என்ஜின் 3 கியர்களுடன் ஆட்டோமேடிக் கிளட்ச் வசதியுடன் வழங்கப்பட்டுள்ளது. குறைந்த சி.சி. திறன் கொண்டிருக்கும் டி.ஆர். இசட் 50 மாடலில் டிரம் பிரேக் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

    சிறியவர்களும் ஓட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் இதன் எடையும் 58 கிலோவாக உள்ளது. பெட்ரோல் டேங்க் 3 லிட்டர் கொள்ளளவு கொண்டிருக்கிறது. வண்ணங்களை தேர்வு செய்ய வாய்ப்பு தராமல் ஒரே மஞ்சள் நிறத்தில் மட்டுமே இந்த மோட்டார்சைக்கிளை சுசுகி அறிமுகம் செய்துள்ளது.
    ×