search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "surya dev"

    • சூரிய பகவானின் காயத்ரி மந்திரத்தை துதிக்க வேண்டும்.
    • சமூகத்தில் பிறர் மதிக்கின்ற சூழ்நிலை ஏற்படும்.

    ஞாயிறு விரதம்" அல்லது "சூரிய விரதம்" இருக்க விரும்புவர்கள் எல்லா காலங்களிலும் இவ்விரதத்தை மேற்கொள்ளலாம் என்றாலும் "ஐப்பசி" மாத வளர்பிறை ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த விரதத்தை அனுஷ்டிப்பது மிகவும் சிறப்பானதாகும். இந்த ஞாயிறு விரதத்தை எந்த ஒரு மாதத்திலும் வளர்பிறை ஞாயிற்றுக்கிழமையில் அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்து விட்டு, சூரியன் உதிக்கின்ற காலை வேளையில் சூரியனை தரிசித்தவாறே, அவருக்குரிய மந்திரங்களை துதித்து வழிபட வேண்டும்.

    பின்பு நவகிரக சந்நிதிக்கு சென்று சூரிய பகவானுக்கு செந்தாமரை பூவை சமர்ப்பித்து, கோதுமை தானியங்கள் சிறிதளவு வைத்து, நெய் தீபங்கள் ஏற்றி, வாசனை மிக்க தூபங்கள் கொளுத்தி, கோதுமை கொண்டு செய்யப்பட்ட இனிப்பு உணவுகளை நைவேத்தியமாக வைத்து சூரிய பகவானின் காயத்ரி மந்திரங்கள், பீஜ மந்திரங்கள் போன்றவற்றை 108 எண்ணிக்கை அல்லது 1008 எண்ணிக்கையில் துதித்து வழிபட வேண்டும்.

    இந்த விரதம் இருப்பவர்கள் அந்த ஞாயிற்றுக்கிழமை முழுவதும் திடஉணவு சாப்பிடாமல் நோன்பிருந்து மறுநாள் காலையில் சூரிய தரிசனம் செய்த பின்பு, சூரிய பகவானுக்கு வீட்டிலேயே ஒரு செம்பு பாத்திரத்தில் சிறிது நீர் நிவேதனமாக அளித்த பின்பே விரதத்தை முடிக்க வேண்டும். உணவு சாப்பிட வேண்டிய நிலையிலிருப்பவர்கள் நீராகாரம், பழச்சாறுகள் போன்றவற்றை அருந்தி விரதமிருக்கலாம்.

    சூரிய விரதம் மேற்கொள்ளும் நபர்களுக்கு உடலாரோக்கியம் மேம்படும். கொடிய நோய்கள் ஏதும் அண்டாது. முகத்தில் ஒரு வசீகரம் உண்டாகும். சமூகத்தில் பிறர் மதிக்கின்ற சூழ்நிலை ஏற்படும். தந்தையின் உடல்நலம் மேம்பட்டு அவரின் ஆயுள் நீடிக்கும். பொருளாதார வளர்ச்சி உண்டாகும். துஷ்ட சக்திகள், செய்வினை மாந்திரிகம் போன்றவை சூரிய விரதம் இருப்பவர்களை அண்டாது.

    • ஆவணி ஞாயிறு விரதம் இருந்து பொங்கல் வைத்து வழிபட்டால் தோஷங்கள் விலகும் என்பது ஐதீகமாகும்.
    • தமிழ்நாட்டில் பல இடங்களில் சூரிய பகவானுக்கு சிறப்பு ஆலயங்கள் இருக்கின்றன.

    சூரியனுக்கு சிம்மம் ஆட்சி வீடாகும். ஆவணி மாதம் சூரிய பகவான் சிம்ம ராசியில் இருப்பார். அதாவது இந்த மாதம் முழுவதும் சூரியன் தன் சொந்த வீட்டில் இருப்பார். எனவே சூரியனுக்கு உகந்த ஆவணி மாத ஞாயிற்றுக் கிழமைகளில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் மிகவும் நல்லது என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பல இடங்களில் சூரிய பகவானுக்கு சிறப்பு ஆலயங்கள் இருக்கின்றன. இந்த ஆலயங்களில் எல்லாம் ஆவணி மாதங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டதாக குறிப்புகள் உள்ளன.

    பழங்காலத்தில் தமிழர்கள் ஆவணி மாத ஞாயிற்றுக் கிழமைகளில் சூரிய பகவானுக்கு பொங்கல் வைத்து வழிபட்டுள்ளனர். வீட்டின் முன்பு வெட்டவெளியில் புதுபானையில் பொங்கல் வைப்பார்கள். தை மாத பொங்கல் நிகழ்ச்சி போன்றே இந்த பொங்கலும் நடத்தப்படும். எனவே இந்த பொங்கலை ஆவணி ஞாயிறு பொங்கல் என்று அழைத்தனர். ஆவணி ஞாயிறு விரதம் இருந்து பொங்கல் வைத்து வழிபட்டால் தோஷங்கள் விலகும் என்பது ஐதீகமாகும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஞாயிறு கிராமம், கொளப்பாக்கம், திருக்கழுக்குன்றம், காஞ்சி கச்சயேஸ்வரர் ஆலயம் ஆகியவற்றில் சூரியனுக்கு சிறப்பான ஆலயமும், சன்னதிகளும் உள்ளன.

    • ஆதித்ய ஹ்ருதயம் பாடினால் உங்களின் ஆபத்துக்கள் நீங்கி, கஷ்ட காலங்களில் மனதில் தோன்றும் பயம் நீங்கும்
    • இந்த ஸ்லோகம் சூரியனைத் துதிக்கும் வகையில் அமைந்துள்ளது.

    நாடியில் வந்த அகத்தியரின் உத்தரவை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இந்த ஸ்லோகத்தை எந்த நேரத்திலும் சொல்லலாம் என்று அகத்தியரே எனது நண்பருக்கு உத்தரவு கொடுத்துள்ளார். மனதில் உண்மையாக இருக்கவேண்டும்! அவ்வளவுதான்! ச்ரத்தையுடன் பதினோரு முறை தொடர்ந்து சொல்பவர்களுக்கு எல்லா பாதுகாப்பும் வெற்றியும், அவரின் அருளும் கிடைக்கும்!

    ததோ யுத்த பரிச்ராந்தம் ஸமரே சிந்தயா ஸ்திதம்

    ராவணம் சாக்ரதோ த்ருஷ்ட்வா யுத்தாய ஸமுபஸ்திதம்

    தைவதைச்ச ஸமாகம்ய த்ரஷ்டுமப்யாகதோ ரணம்

    உபாகம்யாப்ரவீத் ராமம் அகஸ்த்யோ பகவாந் ருஷி:

    ராம ராம மஹாபாஹோ ச்ருணு குஹ்யம் ஸநாதனம்

    யேந ஸர்வாநரீன் வத்ஸ ஸமரே விஜயஷ்யஸு

    ஆதித்யஹ்ருதயம் புண்யம் ஸர்வ சத்ரு விநாசநம்

    ஜயாவஹம் ஜபேந்த்யம் அக்ஷய்யம் பரமம் சிவம்

    ஸர்வ மங்கள மாங்கல்யம் ஸர்வ பாப ப்ரணாசநம்

    சிந்தாசோக ப்ரசமனம் ஆயுர்வர்த்தநம் உத்தமம்

    ரச்மிமந்தம் சமுத்யந்தம் தேவாஸுர நமஸ்க்ருதம்

    பூஜயஸ்வ விவஸ்வந்தம் பாஸ்கரம் புவநேச்வரம்

    சர்வதேவாத்மகோ ஹ்யேஷ தேஜஸ்வி ரச்மிபாவந:

    ஏஷ தேவாஸூரகணான் லோகான் பாதி கபஸ்திபி:

    ஏஷ பிரஹ்மா ச விஷ்ணுச்ச சிவ: ஸ்கந்தக: ப்ரஜாபதி:

    மஹேந்த்ரோ தநத: காலோ யமஸ்-ஸோமோஹ்யபாம்பதி:

    பிதரோ வஸவஸ்ஸாத்யா: ஹ்யச்விநௌ மருதோ மநு :

    வாயுர் வஹ்; ப்ரஜா ப்ராண க்ரதுகர்தா ப்ரபாகர :

    ஆதித்ய: ஸவிதா ஸூர்ய: கக : பூஷா கபஸ்திமான்

    ஸுவர்ணஸத்ருசோ பாநு: ஹிரண்யரேதா திவாகர:

    ஹரிதச்வ: ஸஹஸ்ரார்ச்சி: ஸப்தஸப்திர் மரீசிமாந்

    திமிரோந்மதந்: சம்பு: த்வஷ்டா மார்த்தாண்ட அம்சுமான்

    ஹிரண்யகர்ப்ப: சிசிர: தபரோ பாஸ்கரோ ரவி:

    அக்கர்ப்போ (அ)திதே: புத்ர: சங்க: சிசிர நாசந:

    வ்யோமாநாதஸ் - தமோபேதீ ருக்யஜுஸ்ஸாமபாரக:

    கநவ்ருஷ்டிரபாம் மித்ரோ: விந்த்யவீதீ ப்லவங்கம:

    ஆதபீ மண்டலீ ம்ருத்யூ: பிங்கல: ஸர்வதாபந:

    கவிர்விச்வோ மஹாதேஜா ரக்த: ஸர்வபவோத்பவ:

    நக்ஷத்ர க்ரஹதாராணாம் அதிபோ விச்வபாவந:

    தேஜஸாமபி தேஜஸ்வீ த்வாதசாத்மன் நமோ (அ)ஸ்து தே

    நம: பூர்வாய கிரயே பஸ்ச்சிமே கிரயே நம:

    ஜ்யோதிர்கணாநாம் பதயே திநாதிபதயே நம:

    ஜயாய ஜயபத்ராய ஹர்யச்வாய நமோ நம:

    நமோ நம: ஸஹஸ்ராம்சோ ஆதித்யாய நமோ நம:

    நம உக்ராய வீராய ஸாரங்காய நமோ நம:

    நம: பத்மப்ரபோதாய மார்த்தாண்டாய நமோ நம:

    பரஹ்மேசாநாச்யுதேசாய ஸூர்யாயா யாயாதித்யவர்ச்சஸே

    பாஸ்வதே ஸர்வபக்க்ஷிய ரௌத்ராய வபுஷே நம:

    தமோக்நாய ஹுமக்நாய சத்ருக்நாயாமிதாத்மநே

    க்ருதக்நக்நாய தேவாய ஜ்யோதிஷாம் பதயே நம:

    தப்தசாமீகாரபாய வஹ்நயே விச்வகர்மணே

    நமஸ்தமோபிக்நாய ருசயே லோகஸாக்ஷிணே

    நாசயத்யேஷ வை பூதம் ததேவ ஸ்ருஜதி ப்ரபு :

    பாயத்யேஷ தபத்யேஷ வர்ஷத்யேஷ கபஸ்திபி:

    ஏஷ ஸூப்தேஷு ஜாகர்தி பூதேஷூ பரிஷ்டித:

    ஏஷசைவாக் ஹோத்ரம் ச பலம் சைவாக்ஹோத்ரிணாம்

    வேதச்ச க்ரதவச்சைவ க்ரது-நாம் பலமேவ ச

    யா க்ருத்யா லோகேஷூ ஸர்வ ஏஷ ரவி: ப்ரபு:

    ஏநமாபத்ஸூக்ரேஷூ காந்தாரேஷூ பயேஷூ ச

    கீர்த்தயன் புருஷ: கச்சித் நாவாஸூததி ராகவ

    பூஜயஸ்வைந மேகாக்ரோ: தேவதேவம் ஜகத்பதிம்

    ஏதத் த்ரிகுதம் ஜபத்வா யுத்தேஷு விஜயஷ்யஸு

    அஸ்மின் க்ஷணே மஹா பாஹோ ராவணம் த்வம் வதிஷ்யஸு

    ஏவமுக்த்வா ததாகஸ்த்யோ ஜகாம ச யதாகதம்

    ஏதத் உத்வா மஹாதேஜா நஷ்டசோகோ (அ)பவத் ததா

    தாராயாமாஸ ஸ"ப்ரிதோ: ராகவ: ப்ரயதாத்மவான்

    ஆதித்யம் ப்ரக்ஷ்ய ஜபத்வா தூ பரம் ஹர்ஷமவாப்தவான்

    த்ரிராசம்ய சுசுர் பூத்வா தநுராதாய வீர்யவான்

    ராவணம் ப்ரேக்ஷ்ய (அ)ஹ்ருஷ்டாத்மா யுத்தாய ஸமுபாகமத்

    ஸர்வயத்நேந மஹதா வதே தஸ்ய த்ருதோபவத்

    அத ரவிரவதந் ரீக்ஷ்ய ராமம் முதிதமநா: பரமம் ப்ரஹ்ருஷ்யமாண:

    சிசரபதி ஸம்க்ஷயம் விதித்வா ஸூரகணமதயகதோ வசஸ்த்வரேதி

    என்று கூறிய அகஸ்திய மாமுனி இறுதியாக "இரகு குலத்தில் உதித்தவனே! சூரிய பகவானை மேற்கண்ட துதிகளால் போற்றுபவனுக்கு சிக்கலான நேரங்களிலும், சோதனை காலங்களிலும் பயத்தை ஏற்படுத்தக்கூடிய காலங்களிலும்.எந்த துன்பமும் ஏற்படுவதில்லை. தெய்வங்களினாலேயே போற்றப்படுகின்ற அந்த சூரிய பகவானை முனைப்புடன் கூடிய ஒருமித்த மனத்தோடு, மூன்று முறைகள், மேற்கண்ட துதிகளின் மூலமாக வழிபட்டு வருபவன், யுத்த களத்திலே வெற்றியே காண்பான் என்று அகஸ்திய முனிவரால் அருளப் பெற்ற இந்த அற்புத துதியை, மனதை அடக்கியவரும். பேராற்றல் பெற்றவரும் பெரும் தோள் வலிமை பெற்றவருமான ஸ்ரீ ராமர் சூரிய பகவானை பார்த்தவாறே மூன்று முறைகள் ஜபித்து ராவணனை வென்ற இந்த மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்ததும், நம் பாவங்களையெல்லாம் போக்க வல்ல சிறந்த பரிகார மந்திரமான இந்த ஆதித்ய ஹ்ருதயம் என்ற மஹா மந்திரத்தை நாமும் துதித்து நன்மை அடைவோமாக!

    சூரியன் ஒவ்வொரு ராசியிலும் சஞ்சரிக்கும் அந்தந்த மாதங்களில், கர்நாடகா சாரதாம்பாள் ஆலயத்தில் உள்ள ராசிக்கான அதிபதிகளின் உருவத்தின் மீது சூரிய ஒளிபடுகிறது.
    கர்நாடக மாநிலம் சிருங்கேரி என்ற இடத்தில் சாரதாம்பாள் கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் மூலவர் கருவறையின் முன்பாக ஒரு மண்டபம் இருக்கிறது. அந்த மண்டபத்தின் 12 தூண்களிலும், 12 ராசிகளுக்கான அதிபதிகளின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

    இந்த ஆலயத்தில் என்ன விசேஷம் என்றால், சூரியன் ஒவ்வொரு ராசியிலும் சஞ்சரிக்கும் அந்தந்த மாதங்களில், ஆலயத்தில் உள்ள ராசிக்கான அதிபதிகளின் உருவத்தின் மீது சூரிய ஒளிபடுகிறது. இதனைக் காண்பதற்காகவே இந்த ஆலயத்திற்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
    பொங்கல் தினத்தன்று சூரியனைப் பார்த்து நாம் சொல்லி வழிபடும் போது அவரை போற்றும் வகையிலான பாடலைப் பாடி வழிபடுவது நன்மைகளை வாரி வழங்கும்.
    பொங்கல் தினத்தன்று சூரியனைப் பார்த்து நாம் சொல்லி வழிபடும் போது அவரை போற்றும் வகையிலான பாடலைப் பாடி வழிபடுவது நன்மைகளை வாரி வழங்கும்.

    சுகத்தைக் கொடுக்கும் சூரியா போற்றி!
    செல்வம் வழங்கும் செங்கதிர் போற்றி!
    பயிர்களை வளர்க்கும் பகலவா போற்றி!
    உயிர்களைக் காக்கும் உத்தமா போற்றி!
    நலங்களை வழங்கும் ஞாயிறே போற்றி!
    குலம் தழைக்க வைக்கும் கோவே போற்றி!
    ஆற்றலை வழங்கும் ஆதவா போற்றி!
    நவக்கிரகத்தின் நாயகா போற்றி!
    நாளும் வரம் தரும் கதிரவா போற்றி!
    ஒளியைக் கொடுக்கும் உத்தமா போற்றி!
    ஏழு குதிரை பூட்டிய தேரில்
    எழிலாய் வலம்வரும் இறைவா போற்றி!
    பொங்கல் நாளில் போற்றித் துதித்தோம்!
    மங்கல நிகழ்ச்சி மனையில் நடக்கவும்
    எங்கும் மகிழ்ச்சி பொங்கிப் பெருகவும்
    செல்வச் செழிப்புடன் சிறப்பாய் வாழ்ந்திட
    சூரிய தேவே! துதித்தோம் அருள்க!
    காரிய வெற்றியைக் கதிரவா தருக!

    என்று துதிப்பாடல்களைப் பாடினால் மதிப்பும், மரியாதையும் உயரும். பிரகாசமான எதிர்காலமும் அமையும். இந்த பாடலைப் பொங்கல் தினம் மட்டுமல்லாது, மற்ற கிழமைகளிலும் குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய நமஸ்காரம் செய்யும் போது அந்த பாடலைப் படிக்கலாம்.
    ஒருவரது ஜாதகத்தில் சூரியதோஷம் இருந்தால் என்னென்ன பிரச்சனைகள் வரும். அந்த பிரச்சனைகள் தீர என்ன பரிகாரம் என்பதை தெரிந்து கொள்வோம்.
    சூரியன் பிதுர்காரகன். அதாவது தந்தைவழி உறவுகளின் அமைப்பில் சாதக பாதகங்களை ஏற்படுத்தக் கூடியவன். அரசு, அரசியல் துறை அமைப்புகள், ஆரோக்கியம் இதற்கெல்லாமும் சூரியனோட அமைப்பே காரணம்.

    உங்க ஜாதகப்படியோ அல்லது தசாபுக்திப்படியோ சூரியனோட அமைப்பு கெட்டிருந்தால், தந்தை வழி உறவுகளோடான ஒற்றுமை பாதிக்கப்படும். பூர்வீக சொத்தில் வில்லங்கம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் தலை, கண்கள், வயிறு, ரத்த மாறுபாடு, பித்தம் அதிகரிப்பு இப்படிப்பட்ட உபாதைகள் மாறி வரும்.

    சட்டப்புறம்பான நபர்களால் மிரட்டல், அரசுவழி அனுமதிகள் கிடைப்பதில் தாமதம், சிலருக்குத் திருமண தாமதம் இப்படிப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் சூரியன் அமைப்பு சரியில்லையாதலால், அதாவது சூரியதோஷத்தால் வரும்.

    சூரியதோஷத்தில் இருந்து பாதுகாப்பது எப்படி?

    சூரியதோஷம் இருந்தால், அடிக்கடி அனுமன் கோயிலுக்குப் போய் வழிபடுங்கள்.

    தாமிரத்தால் செய்த இஷ்டதெய்வ டாலர் அல்லது அனுமன் டாலரை அணிந்து கொள்ளுங்கள்.

    ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியோதயத்தின் போது உங்கள் வீட்டு பூஜையறையில் பசுநெய் தீபம் 5 அகலில் ஏற்றிவைத்து வழிபடுங்கள்.

    பசுமாட்டுக்கு கோதுமை அல்லது கோதுமைத்தவிடு வாங்கிக் கொடுங்கள்.

    சூரியனுக்குரிய ஆதித்ய ஹ்ருதயம், அனுமன் சாலீசா துதிகளை தினமும் கேளுங்கள்.

    முடியாதவர் மாணிக்கக் கல்லில் டாலர் செய்து கழுத்தில் அணியுங்கள். அல்லது மாணிக்கத்தால் செய்த விநாயகரை பூஜியுங்கள். அடிக்கடி பிரசித்தி பெற்ற அனுமன் கோயிலுக்குப் போய் தரிசனம் செய்துவிட்டு

    சூரியனுக்குரிய தானியமான கோதுமையால் ஆன இனிப்பு வகைகளை இயன்ற அளவு தானம் செய்யுங்கள். சூரியனார் கோயிலுக்குப் போவதும் நல்லது.

    தினமும் சூரிய உதயத்திற்கு முன் எழுந்து உங்களது பணிகளை செய்ய ஆரம்பியுங்கள்.

    ஞாயிற்றுக்கிழமைகளில் நவகிரகத்தில் உள்ள சூரியனை வழிபடுங்கள். இதில் உங்களால் முடிந்ததை செய்யுங்கள். சூரியதோஷம் சுலபமாக விலகும்.
    ஆவணி மாதத்தில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமைகளில், விரதம் இருந்து சூரிய பகவானை வழிபட்டால் கண் நோயால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று புராணங்கள் கூறுகின்றன.
    காலம் காலமாக நடைபெற்று வரும் வழிபாடுகளில் ஒன்று, சூரியனை வழிபடும் முறை. தைப் பொங்கல் திருநாளன்று, பயிர்களையும், உயிர்களையும் காக்கும் கதிரவனுக்கு விழா எடுக்கின்றோம். ஆனால் மற்ற நாட்களில் மறந்து விடுகின்றோம். ராஜகிரகம் என்று அழைக்கப்படும் சூரியனை, நாம் நாளும் நமஸ்கரித்து வழிபட்டால் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். அரசாளும் யோகமும் வரும். ஆரோக்கியமும் சீராகும்.

    ஆவணி மாதம் என்றாலே விநாயகர் சதுர்த்திதான் நம் நினைவிற்கு வரும். ஆவணி மாதத்தில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமைகளில், தவறாமல் சர்க்கரைப் பொங்கல் வைத்து சூரிய பகவானை வழிபட்டால் கண் நோயால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று புராணங்கள் கூறுகின்றன. நாம் நமது சொந்த வீட்டில் இருப்பதற்கும், வாடகை வீட்டில் இருப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. சொந்த வீட்டில் சுதந்திரமாக வாழலாம். வாடகை வீட்டில் வீட்டு உரிமையாளரின் கட்டுப்பாடுகளை சுமந்து வசிக்கவேண்டும். இல்லையென்றால் வீட்டைக் காலிசெய்யச் சொல்லிவிடுவார்கள். நம்முடைய வீட்டை நாம் மற்றவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கும் பொழுது இது ஹால், இது சமையலறை, இது பூஜையறை என்று மற்றவர்களிடம் சொல்லி மகிழ்கிறோம் அல்லவா?

    நவக்கிரகங்களில் ராஜ கிரகமாக விளங்கும் சூரியனுக்கு, சிம்மம் சொந்த வீடாகும். சிம்மத்தில் சூரியன் உலாவரும் மாதத்தில் ஒருவர் பிறந்தால் ஜெகத்தை ஆளும் யோகம் வாய்க்கும். செல்வ வளர்ச்சியில் மற்றவர் வியக்கும் அளவு வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும் என்று முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

    மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் வரை அடங்கிய ராசி தான் சிம்ம ராசி. அதற்குள் அடியெடுத்து வைக்கும் சூரியன் மகத்தின் காலில் சஞ்சரிக்கும் பொழுது பிறந்தால், ஜெகத்தை ஆளலாம். பஞ்சாயத்து தலைவர் முதல் பாராளுமன்ற உறுப்பினர் வரை பதவி வாய்ப்பைப் பெற்று, புகழ் ஏணியின் உச்சிக்குச் செல்ல இயலும். பூர நட்சத்திரக் காலில் சூரியன் சஞ்சரிக்கும் பொழுது பிறந்தால், தாரத்தால் தொல்லைகள் ஏற்படாமல் இருக்க பொருத்தம் பார்ப்பது அவசியமாகும். உத்திர நட்சத்திரக் காலில் சூரியன் சஞ்சரிக்கும் பொழுது பிறந்தால் அத்தனை பேரும் பாராட்டும் அளவிற்கு வாழ்க்கை அமையும்.

    எனவே ஆவணியில் பிறந்தவர்கள் எல்லாம் அதிர்ஷ்டசாலிகள் என்றே சொல்லலாம். கோபம் அதிகம் வந்தாலும் குணத்தில் சிறந்தவர்களாக இருப்பார்கள். அதிக பாவங்களைச் செய்ய மாட்டார்கள். பரம்பரைப் பெருமையைக் காப்பாற்றுவார்கள். தேசபக்தியுடன், தெய்வ பக்தியையும் கொண்டு விளங்குவர். உதவி செய்ய ஓடோடி வருபவர்களாகவும் இருப்பார்கள். சட்டத்தை மதிப்பவர்களாகவும், திட்டம் தீட்டுபவர்களாகவும் விளங்குவர். கொட்டமடிப்பவர்களைக் கொஞ்சநேரத்தில் அடிபணிய வைத்துவிடுவர். கட்டிடத் தொழில் முதல் கமிஷன் தொழில் வரை எதைச் செய்தாலும் கணிசமான ஆதாயத்தைப் பெறுவர். அரசாங்க ஆதரவு அதிகம் பெற்றிருப்பர்.

    அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த ஆவணி மாதத்தில் சூரிய பலம் அதிகமாக இருப்பதால், முப்பது நாட்களிலும் அதிகாலையில் கீழ்க்கண்ட சூரிய கவசம் பாடி சூரியனை வழிபட்டால் துன்பங்கள் துள்ளி ஓடும். சோர்வில்லாத வாழ்வு அமையும்.

    ‘காசினி இருளை நீக்கிக் கதிரொளியாகி யெங்கும்
    பூசனை உலகோர் போற்றப் புசிப்பொடு சுகத்தை நல்க
    வாசி ஏழுடைய தேரின்மேல் மகா கிரிவலமாகி வந்த
    தேசிகா எனை ரட்சிப்பாய் செங்கதிரவனே போற்றி! போற்றி!’

    என்று சூரியனுக்குரிய பாடல் எடுத்துரைக்கின்றது. ‘காசினி’ என்றால் இந்த உலகம் என்று பொருள். இந்த உலகின் இருளைப் போக்கி ஒளியைப் பாய்ச்சும் ஒரே கிரகம் சூரியன் தான். எனவே இருள்மயமான வாழ்வு அமைந்தவர் களும், ஒளிமயமான வாழ்வு அமைய விரும்புபவர்களும் இந்த ஆவணி மாதம் முழுவதும் இல்லத்தில் சூரியனை வழிபடுவதோடு சூரியனுக்குரிய ஆலயமான சூரியனார் கோவில் சென்றும் வழிபட்டு வரலாம்.

    கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா? என்று சொல் லுவர். அதாவது கண்ணிற்கு பலம் கூட்டுவது சூரிய ஒளி என்பர். அதனால் காலையில் சூரிய வழிபாட்டை மேற்கொள்வதோடு, மாலையில் சூரியக்குளியல் செய்வதும் நமது ஆரோக்கியத்தைச் சீராக்கும்.

    ஆவணி மாதம் சூரியனுக்கு உகந்த மாதமாகும் என்பதால், ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் கதிரவனுக்கு பொங்கல் வைத்து வழிபடுவது நல்லது. சூரிய நமஸ்காரம் செய்யும்போது சூரியனுக்குரிய துதிப்பாடல்கள், ஆதித்யனுக்குரிய கவசங்களைப் படித்து வழிபட்டால் அன்றாட வாழ்க்கை அமைதியாக மாறும். கண்நோய் நீங்கும், புகழ்பெருகும், அரசியல் செல்வாக்கு மேலோங்கும். கதிரவன் வழிபாட்டால் அதிசயிக்கும் வாழ்க்கை அமையும்.
    கிருத்திகை தோஷம் உடையோர் ஞாயிற்றுக்கிழமைகளில் விரதம் இருந்து சூரிய பகவானே எனது தோஷத்தைப் போக்கியருளும் என வேண்டி வணங்கவும்.
    கிருத்திகை நட்சத்திரத்திற்குரிய தெய்வம் முருகப்பெருமான், உரிய கிரகம் சூரியன். இந்த கிரகத்திற்குரிய அதிதேவதை சிவன். சிவனை வழிபட்டால் பல்வேறு செல்வ வளங்களை பெற்று மகிழ்ச்சி பெறலாம்.

    சூரிய வழிபாடு மிகவும் தொன்மையான வழிபாடு. கிருத்திகை நட்சத்திரகாரர்கள் சூரிய வழிபாடு செய்தால் சகல செல்வங்களும் பெறலாம். மயிலாடுதுறை அருகே உள்ள காத்ர சுந்தரேஸ்வரர் கோவில் கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய தலம்.

    கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் கிருத்திகை நட்சத்திரத் தன்றோ, பிரதோஷ நாட்களிலோ இந்தக் கோவிலில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் வளம் பெறலாம் என்பது நம்பிக்கை. திருமணத்தடை உள்ள கிருத்திகை நட்சத்திரப் பெண்கள் புண்ணிய நதிகள் தீர்த்தத்தால் இத்தல அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், சுமங்கலி பூஜை செய்தும் வழிபட்டால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.

    கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் வெள்ளிக்கிழமை அல்லது கிருத்திகை நட்சத்திர நாட்களில் இந்தக்கோவிலில் தரிசனம் செய்தால் சிறந்த மணவாழ்க்கை அமையும். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெள்ளிக்கிழமை அதிக நன்மைகள் தரும் தினமாக அமைந்திருக்கின்றது.

    இந்நாட்களில் கிருத்திகை நட்சத்திரத்தின் நல்ல மின் காந்த கதிர்வீச்சுகள் பூமியில் படரும் அது மிகவும் நல்லது. அத்தி மரம் கிருத்திகை நட்சத்திரத்திற்கு உரிய மரமாகும். இந்த மரத்தின் உடலில் பால் நிரம்பி இருக்கும். அந்தப் பால் கார்மேகங்களை தன் பக்கம் இழுக்கும் குணம் கொண்டது. இதன் குச்சிகளை எரித்தால் அதன் புகை மழை பொழியும் கருமேங்களை வரவழைக்கும் என்று வானவியல் மூலிகை சாஸ்திரம் கூறுகிறது.

    கிருத்திகை நட்சத்திரத்தின் கெட்ட கதிர் வீச்சுகள் மனித உடலில் படும் போது பல வகையான உடல் மாற்றம், மன மாற்றம் நோய்கள் உண்டாகின்றன. இதற்கு கிருத்திகை நட்சத்திர தோஷம் என்பார்கள். இந்த தோஷத்தையும், நோய்களையும் நீக்க இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அத்தி மரத்தை 20 நிமிடம் கட்டிப்பிடிக்கலாம் அல்லது அதன் நிழலில் உட்காரலாம்.

    கிருத்திகை தோஷம் உடையோர் ஞாயிற்றுக்கிழமைகளில் விரதம் இருந்து காலையிலே வீட்டில் இருந்தவாறு சிவப்புப் பூவும் நீரும் கைகளில் ஏந்தி சூரிய பகவானே எனது தோஷத்தைப் போக்கியருளும் என வேண்டி பூவையும் நீரையும் சூரியனைப் பார்த்தவாறு பூமரத்தடியில் போட்டு வணங்கவும். 108 தடவைகள் இதனை செய்யலாம்.

    கோவிலில் சூரியனுக்கு அபிஷேகம் செய்யலாம். சர்க்கரைப் பொங்கல் நைவேதிக்கலாம். கோதுமைத் தானம் கொடுக்கலாம். சிவப்புப்பட்டு சிவப்புப் பூமாலை அணியலாம். சிவப்புப் பூவால் அர்ச்சித்து வழிபடலாம். தினமும் சூரிய கவசம் படிப்பது மிக்க பலனைத்தரும். 
    ×