search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Suriya"

    • 67வது தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளில் சூர்யாவின் சூரரைப் போற்று மற்றும் ஜெய்பீம் திரைப்படம் பல விருதுகளை குவித்துள்ளது.
    • இதில் கலந்துக் கொண்ட சூர்யா ரோலக்ஸ் கேரக்டர் குறித்து பேசியுள்ளார்.

    67வது தென்னிந்திய பிலிம்பேர் விருது வழங்கும் விழா நேற்று முன்தினம் பெங்களூரில் நடைபெற்றது. இதில் சூர்யா நடிப்பில் வெளியான 'சூரரைப் போற்று' திரைப்படம் 8 விருதுகளை பெற்றது. இதில் சிறந்த இயக்குனர் (சுதா கொங்கரா), சிறந்த நடிகர் (சூர்யா), சிறந்த நடிகை (அபர்ணா பாலமுரளி), சிறந்த இசை ஆல்பம் (ஜி.வி.பிரகாஷ்), சிறந்த துணை நடிகை (ஊர்வசி), சிறந்த பின்னணி பாடகர் (கோவிந்த் வசந்தா, கிறிஸ்டின் ஜோஸ்), சிறந்த பின்னணி பாடகி (தீ), சிறந்த ஒளிப்பதிவு (நிகோத் பொம்மி) ஆகிய பிரிவுகளில் விருதுகளை அள்ளி சென்றுள்ளது. மேலும் 'ஜெய்பீம்' திரைப்படம் 2 விருதுகளையும் பெற்றது.

     

    விக்ரம் - ரோலக்ஸ்

    விக்ரம் - ரோலக்ஸ்

    இந்நிலையில் இவ்விழாவில் மனைவி ஜோதிகாவுடன் கலந்துகொண்ட சூர்யாவிடம், ரோலக்ஸ் கேரக்டர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சூர்யா, "நான் இன்று என்னவாக இருந்தாலும் அதற்கு ஊக்கமாக இருந்தவர் கமல்ஹாசன். அவர் இப்படி ஒரு வாய்ப்பு இருக்கிறது என்று சொன்னதும் மறுக்க முடியவில்லை. அவருக்காகவே அந்த ரோலக்ஸ் கேரக்டரில் நடித்தேன்" என்றார். 'ரோலக்ஸ் மீண்டும் வருவாரா?' என்ற கேள்விக்கு, "இதற்கு காலம் பதில் சொல்லும். படம் உருவானால் அந்த கேரக்டரில் நிச்சயம் மீண்டும் நடிப்பேன்" என்றார். 

    • இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
    • இப்படம் 67வது தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளில் பல விருதுகளை குவித்துள்ளது.

    இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, கருணாஸ் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் 'சூரரைப் போற்று'. இத்திரைப்படம் கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் ஏராளமான விருதுகளை குவித்ததோடு, 5 தேசிய விருதுகளையும் தட்டி சென்றது.

     

    சூரரைப் போற்று

    சூரரைப் போற்று

    இந்நிலையில், 67வது தென்னிந்திய பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் 'சூரரைப் போற்று' திரைப்படம் 8 விருதுகளை குவித்துள்ளது. இதில் சிறந்த இயக்குனர் (சுதா கொங்கரா), சிறந்த நடிகர் (சூர்யா), சிறந்த நடிகை (அபர்ணா பாலமுரளி), சிறந்த இசை ஆல்பம் (ஜி.வி.பிரகாஷ்), சிறந்த துணை நடிகை (ஊர்வசி), சிறந்த பின்னணி பாடகர் (கோவிந்த் வசந்தா, கிறிஸ்டின் ஜோஸ்), சிறந்த பின்னணி பாடகி (தீ), சிறந்த ஒளிப்பதிவு (நிகோத் பொம்மி) ஆகிய பிரிவுகளில் விருதுகளை அள்ளி சென்றுள்ளது.

     

    சார்ப்பட்டா பரம்பரை

    சார்ப்பட்டா பரம்பரை

    மேலும் இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்ப்பட்டா பரம்பரை படத்திற்கு சிறந்த நடிகர் (ஆர்யா), சிறந்த பாடலாசிரியர் (அறிவு), சிறந்த துணை நடிகர் (பசுபதி) ஆகிய 3 விருதுகளை இப்படம் கைப்பற்றியுள்ளது.

    • 68-வது தேசிய திரைப்பட விருதுகள் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.
    • இதில் சிறந்த நடிகருக்கான விருதை சூர்யாவும் சிறந்த திரைப்படத்திற்கான விருதை ஜோதிகாவும் பெற்றுக் கொண்டனர்.

    இந்திய அரசு சார்பில் திரைத்துறை மற்றும் திரைத்துறை கலைஞர்களுக்கு தேசிய விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த 2020-ஆம் ஆண்டிற்கான 68-வது தேசிய விருது பட்டியல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படத்திற்கு ஐந்து விருதுகளும், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்திற்கு மூன்று விருதுகளும், மண்டேலா படத்திற்கு 2 விருதுகளும் அறிவிக்கப்பட்டது.

    குழந்தைகளுடன் சூர்யா-ஜோதிகா

    குழந்தைகளுடன் சூர்யா-ஜோதிகா

     

    இதையடுத்து 2020-ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை சூரரை போற்று படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை சூர்யாவும், சிறந்த திரைப்படத்திற்கான விருதை தயாரிப்பாளர் ஜோதிகாவும் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து பெற்றுக் கொண்டனர்.

     

    குடும்பத்துடன் சூர்யா-ஜோதிகா

    குடும்பத்துடன் சூர்யா-ஜோதிகா

    இந்நிலையில் இதுகுறித்து சூர்யா நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு அதனுடன் இரு புகைப்படங்களையும் இணைத்துள்ளார். அதில், என்றும் நன்றியுள்ளவள் சுதா! வெற்றி பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். இது அன்பான ரசிகர்களுக்காக!! என்று பதிவிட்டுள்ளார். அவர் இணைத்துள்ள அந்த புகைப்படத்தில் சூர்யா மற்றும் ஜோதிகா பெற்று கொண்ட பதக்கத்தை சூர்யாவின் தந்தை சிவகுமார் மற்றும் தாய் லஷ்மி குமாரி இருவரின் கழுத்தில் அணிய வைத்து அழகு பார்த்துள்ளனர். இந்த புகைப்படங்களை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறனர். 

    • 68-வது தேசிய திரைப்பட விருதுகள் விழா இன்று நடைபெற்றது.
    • இதில் சிறந்த நடிகருக்கான விருதை சூர்யாவும் சிறந்த திரைப்படத்திற்கான விருதை ஜோதிகாவும் பெற்றுக் கொண்டனர்.

    இந்திய அரசு சார்பில் திரைத்துறை மற்றும் திரைத்துறை கலைஞர்களுக்கு தேசிய விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த 2020-ஆம் ஆண்டிற்கான 68-வது தேசிய விருது பட்டியல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.


    சூரரைப்போற்று 

    இதில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படத்திற்கு ஐந்து விருதுகளும், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்திற்கு மூன்று விருதுகளும், மண்டேலா படத்திற்கு 2 விருதுகளும் அறிவிக்கப்பட்டது.


    திரௌபதி முர்மு - சூர்யா

    இதையடுத்து 2020-ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை சூரரை போற்று படத்திற்காக குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து சூர்யா பெற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து சூரரை போற்றுக்காக சிறந்த திரைப்படத்திற்கான விருதை தயாரிப்பாளர் ஜோதிகா பெற்றுக் கொண்டார்.


    திரௌபதி முர்மு - ஜோதிகா

    இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சூர்யா பேசியதாவது, "இந்திய அரசாங்கத்திற்கும் ஜூரிக்கும் என் நன்றி. என் மனதில் நிறைய உணர்ச்சிகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. நான் நன்றி சொல்ல நிறைய பேர் உள்ளனர். உண்மையிலேயே மறக்க முடியாத தருணம்" என்று பேசினார்.

    • 68-வது தேசிய திரைப்பட விருதுகள் விழா இன்று நடைபெற்றது.
    • இதில் சிறந்த நடிகருக்கான விருதை சூர்யாவும் சிறந்த திரைப்படத்திற்கான விருதை ஜோதிகாவும் பெற்றுக் கொண்டனர்.

    இந்திய அரசு சார்பில் திரைத்துறை மற்றும் திரைத்துறை கலைஞர்களுக்கு தேசிய விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த 2020-ஆம் ஆண்டிற்கான 68-வது தேசிய விருது பட்டியல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.


    திரௌபதி முர்மு - சூர்யா

    இதில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படத்திற்கு ஐந்து விருதுகளும், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்திற்கு மூன்று விருதுகளும், மண்டேலா படத்திற்கு 2 விருதுகளும் அறிவிக்கப்பட்டது.


    திரௌபதி முர்மு  - ஜோதிகா

     இந்நிலையில் 2020-ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை சூரரை போற்று படத்திற்காக குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து சூர்யா பெற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து சூரரை போற்றுக்காக சிறந்த திரைப்படத்திற்கான விருதை தயாரிப்பாளர் ஜோதிகா பெற்றுக் கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • 68-வது தேசிய திரைப்பட விருதுகள் விழா இன்று நடைபெறவுள்ளது.
    • இவ்விழாவில் கலந்துக் கொள்வதற்காக நடிகர் சூர்யா தனது குடும்பத்தினருடன் டெல்லி சென்றுள்ளார்.

    இந்திய அரசு சார்பில் திரைத்துறை மற்றும் திரைத்துறை கலைஞர்களுக்கு தேசிய விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த 2020-ஆம் ஆண்டிற்கான 68-வது தேசிய விருது பட்டியல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

     

    இதில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படத்திற்கு ஐந்து விருதுகளும், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்திற்கு மூன்று விருதுகளும், மண்டேலா படத்திற்கு 2 விருதுகளும் அறிவிக்கப்பட்டது. டெல்லியில் இன்று இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தலைமையில் 68-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெறுகிறது.இந்நிலையில் நடிகர் சூர்யா தனது குடும்பத்தினருடன் விருது வாங்குவதற்காக டெல்லி சென்றுள்ளார். அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

    • இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சமீபத்தில் தொடங்கப்பட்டது.
    • இப்படத்தின் படக்குழு எச்சரிக்கை விடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது.

    'சிறுத்தை', 'வீரம்', 'விஸ்வாசம்', 'அண்ணாத்த' உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார். சூர்யா 42 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.

     

    சிறுத்தை சிவா -  சூர்யா - தேவி ஸ்ரீ பிரசாத்

    சிறுத்தை சிவா -  சூர்யா - தேவி ஸ்ரீ பிரசாத்

    இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது.

     

    சூர்யா 42

    சூர்யா 42

    இப்படத்தில் சூர்யா அரத்தர், வெண்காட்டார், மண்டாங்கர், முக்காட்டர், பெருமணத்தார் என ஐந்து கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பு சூர்யா 42 படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

     

    சூர்யா 42 படக்குழு அறிவிப்பு

    சூர்யா 42 படக்குழு அறிவிப்பு

    இந்நிலையில் சூர்யா 42 படக்குழு சமூக வலைத்தளத்தில் கசியும் வீடியோக்கள் குறித்து பதிவிட்டுள்ளது. அதில், "சமூக வலைதளங்களில் 'சூர்யா 42' படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பகிர்வதை கவனித்து வருகிறோம். நாங்கள் செய்யும் ஒவ்வொரு வேலையும் இரத்தம் மற்றும் வியர்வையை உள்ளடக்கியது. இந்த படத்தை பிரமாண்டமான அனுபவமாக உங்களிடம் தருவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். அதனால் தயவு செய்து சூர்யா 42 சம்பந்தமான வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர வேண்டாம். அப்படி பகிர்ந்தால் அதனை உடனடியாக நீக்கி விடுங்கள். இதனை மீறினால் உரிமை மீறல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்" என அறிக்கை வெளியிட்டுள்ளது. 

    • இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சமீபத்தில் தொடங்கப்பட்டது.
    • இப்படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோ சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

    'சிறுத்தை', 'வீரம்', 'விஸ்வாசம்', 'அண்ணாத்த' உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார். சூர்யா 42 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.

     

    சூர்யா 42

    சூர்யா 42

    இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது.

     

    சூர்யா 42

    சூர்யா 42

    இந்நிலையில் சூர்யா இப்படத்தில் 5 கதாபாத்திரங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் வெளியான இப்படத்தின் மோஷன் போஸ்டரில் அரத்தர், வெண்காட்டார், மண்டாங்கர், முக்காட்டர், பெருமணத்தார் என்ற பெயர்கள் இடம்பெற்றிருந்தது. இந்த பெயர்கள்தான் சூர்யா நடிக்கும் 5 கதாபாத்திரங்களின் பெயர் என கூறப்படுகிறது. இதனை ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்து காத்திருப்பதாக பதிவிட்டு வருகின்றனர்.

    • இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சமீபத்தில் தொடங்கப்பட்டது.
    • இப்படத்தின் புதிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

    'சிறுத்தை', 'வீரம்', 'விஸ்வாசம்', 'அண்ணாத்த' உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார். சூர்யா 42 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கியது. சூர்யா 42 படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகும் என்றும் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் உள்ளது என்றும் படக்குழு அறிவித்திருந்தது.

     

    சூர்யா 42

    சூர்யா 42

    இந்நிலையில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் அரத்தர், வெண்காட்டர், மண்டாங்கர், முக்காட்டர், பெருமனத்தார் என்று குறிப்பிட்டு இப்படம் 3டி-யில் 10 மொழிகளில் வெளியாகவுள்ளது என்றும் மோஷன் வீடியோ வெளியிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

    • இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா புதிய படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சமீபத்தில் தொடங்கப்பட்டது.

    'சிறுத்தை', 'வீரம்', 'விஸ்வாசம்', 'அண்ணாத்த' உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார். சூர்யா 42 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கியது.

     

    சூர்யா 42

    சூர்யா 42

    இந்நிலையில் சூர்யா 42 படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் மோஷன் போஸ்டர் குறித்த அறிவிப்பு நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ஒன்று இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

    • சூர்யாவின் தீவிர ரசிகர்களான கணேஷ் மற்றும் லாவண்யா இருவருக்கும் கடந்த 1-ந் தேதி திருமணம் நடைப்பெற்றது.
    • தனது ரசிகர், ரசிகையின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா மணமக்களை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து கூறினார்.

    நடிகர் சூர்யாவின் தீவிர ரசிகர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் கணேஷ். இவருக்கும், அவரைப் போலவே சூர்யாவின் தீவிர ரசிகையான லாவண்யா என்பவருக்கும் கடந்த 1-ந்தேதி கோவிலில் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு நேற்று திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மணமக்களுக்கு குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், ரசிகர் மன்ற நிர்வாகிகள் என அனைத்து தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

     

    மணமக்கள் கணேஷ்-லாவண்யா

    மணமக்கள் கணேஷ்-லாவண்யா

    அப்போது திடீரென கணேசின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதனை எடுத்து பார்த்த போது நடிகர் சூர்யா மணமக்கள் இருவருக்கும் திருமண வாழ்த்து சொல்லி இன்ப அதிர்ச்சி ஏற்படுத்தினார். மேலும் மணமக்கள் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு மனம் விட்டு பேசிக்கொள்ள வேண்டும் என்ற அறிவுரை கூறிய சூர்யா அவர்களுக்கு திருமண வாழ்த்து கூறினார்.

    மணமக்கள் கணேஷ்-லாவண்யா

    மணமக்கள் கணேஷ்-லாவண்யா

     

    மேலும் தான் ஒரு மாத காலம் வெளியூரில் இருப்பதால் பிறகு வந்து சந்திப்பதாக கூறினார். திருமண வரவேற்பு நடக்கும் பொழுதே சூர்யா வாழ்த்து கூறிய சம்பவத்தால் மணமக்கள் இருவரும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடினார்கள். தனது தீவிர ரசிகர்-ரசிகையின் திருமணத்திற்கு நடிகர் சூர்யா வாழ்த்து கூறியது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா புதிய படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சமீபத்தில் தொடங்கப்பட்டது.

    'சிறுத்தை', 'வீரம்', 'விஸ்வாசம்', 'அண்ணாத்த' உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார். சூர்யா 42 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கியது.

     

    சூர்யா 42

    சூர்யா 42

    இந்நிலையில் சூர்யா 42 படத்தில் 3 கதாபாத்திரங்களில் சூர்யா நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தில் சூர்யா இதுவரை அவர் ஏற்காத கதாப்பாத்திரத்தை வடிவமைத்து வருவதாகவும் இதற்காக சூர்யா சிறப்பு பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இப்படம் குறித்த அடுத்தடுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    ×