சூர்யா படத்தின் புதிய அறிவிப்பு.. கொண்டாடத்தில் ரசிகர்கள்

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா புதிய படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சமீபத்தில் தொடங்கப்பட்டது.
சூர்யா 42
சூர்யா 42
Published on

'சிறுத்தை', 'வீரம்', 'விஸ்வாசம்', 'அண்ணாத்த' உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார். சூர்யா 42 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கியது.

சூர்யா 42
சூர்யா 42

சூர்யா 42

இந்நிலையில் சூர்யா 42 படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் மோஷன் போஸ்டர் குறித்த அறிவிப்பு நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ஒன்று இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com